கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஏங்கும் மனதாலும் தாங்கும் செயலாலும் தூங்கும் நிலை மறந்து தூயதான விடியலிற்காய் தூய்மைகள் அங்கே வியூகமாய் பொங்கும் நாள் தேடி பூம்புனல் தானாகி எங்கும் மங்களமாய் எங்கள் மண் எமதாக்க துய்ப்பதற்காய் சுதந்திரத்தை தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர் களம் காண நோக்குகையில், புலம் பெயர்ந்து நிலம் நோக்கும் பலம் வேர்க்க உளம் நோகும் இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும் இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.
-
- 0 replies
- 734 views
-
-
ஆயிரம் தான் கவி சொன்னேன்--அன்னையருக்கு சமர்ப்பணம் https://www.facebook.com/photo.php?v=864189466928913
-
- 0 replies
- 965 views
-
-
தேசத்தின் புன்னகை - இன்குலாப் மறுகரையில் தேற்றுதலின் தணியாத விசும்பல் கேட்கும் மரத்துப் போகாத செவிகளில். மாவீரர் விரும்பாத ஒப்பாரி காலம் காலமாய் மக்களின் மனசிலிருக்கிறது. இன்றென் சொல்லும் கண்ணீரில் நனையட்டும்! பகைநடந்ததற்குச் சாட்சியங்களான கருகிய பனை தென்னை ஊடாக நாங்களும் நடந்திருந்தோம். சிதைந்து கிடந்த டாங்கியும் சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும் பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும் முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ? கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே புதைந்து கிடக்கும் விதைகள் பசுமையாய் முளைவிடும் என்ற எல்லோருக்குமான எனது நம்பிக்கையும் துளிர்க்குமோ? கருகுமோ? உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட ஆயுதமாய்த் தடைப்பட்ட …
-
- 0 replies
- 982 views
-
-
கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன் March 29, 2020 - மனுஷ்ய புத்திரன் · இலக்கியம் கவிதை கொரோனோ கொள்ளை நோய் அகதிகள் மனுஷ்ய புத்திரன் அங்கு கைவிடப்பட்டவர்களின் மிகப்பெரிய ஊர்வலமொன்று சென்றுகொண்டிருக்கிறது போர்கள் வருவதற்கு முன்பு அகதிகள் வந்து விடுகிறார்கள் கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பு கொள்ளை நோய் அகதிகள் புறப்பட்டு விட்டார்கள் பெரியவர்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் சுமந்துகொண்டு அவர்கள் கடக்க முடியாத விதியின் தொலைவொன்றைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும் தட்டு முட்டுச் சாமான்களை சுமந்தபடி நடந்துகொண்டிருக்கிறார்கள் கால்முறிந்த மனைவியை சுமந்துகொண்டு …
-
- 0 replies
- 660 views
-
-
கனத்த இதயம் இன்று கனத்த இதயத்துடன் கண்விழித்த எனக்கு, என் இதயம் அடிபட்டு நொந்து கிடப்பதையும், அதன் வலியையும் உணரக்கூடியதாக இருந்தது. எதுவரை இது தொடரப்போகிறது. ஈழத்தமிழனின் வலிமையை அழித்துத் துடைக்கவும், உலகத் தமிழனின் ஆற்றலை முடமாக்கவும் எங்கள் பிராந்திய வல்லரசு சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வித்தை காட்டிவிட்டது. இதையும் ஒரு சுனாமியாக உலகத் தமிழினம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விசேடமாக இந்திய இலங்கையின் கூற்றுப்படி நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இந்த வல்லரசுகள் செய்த, செய்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை மறைக்க இப்போதும் பிரபாகரனின் கதை என்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு நல்ல படம் காட்டிய அநேகர…
-
- 0 replies
- 1.7k views
-
-
உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்
-
- 0 replies
- 655 views
-
-
மனிதம் மரங்களின் மனிதம் மரங்கள் அறிவதில்லை மனிதர்கள் தம்மைக் கண்டு அச்சமுறுவதை மரங்கள் அறிவதில்லை மனிதர் ஆதிக்கம் நிலைநாட்ட தம்மை வளர்த்து வருவதை மரங்கள் அறிவதில்லை தம்மைத் துளிரிலேயே இல்லாதாக்கிவிடும் மனித அச்சத்தின் பின்புலங்களை மரங்கள் அறிவதில்லை மரங்கள் அறிவதில்லை இவை எதையுமே மரங்கள் அறிவதில்லை ஆயினும் ஆயினும் மரங்கள் குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி மனிதர்கள் ஆறவும் அமரவும் குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி சி. ஜெயசங்கர் 31.10.2017 இலங்கை என்பது எம் தாய்த் திருநாடு மொழிகள் இனியவை அர்த்தம் நிறைந்தவை உணர்வும் அறிவும் கலந…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்ட கனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே அந்த அருவருத்த பாம்பு அது எங்கே. உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை …
-
- 0 replies
- 1.1k views
-
-
கல்லறை காயாது - தணிகைச் செல்வன் சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் - புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக் குறிவைக்கக் காரணம் உன் பெயரின…
-
- 0 replies
- 925 views
-
-
கவிதை: அகல் விளக்கு சேரன் கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் நிறையாது மழை பெய்து தீபத்தை இருளாக்கும் அலைகளிலா ஒலியில் ஓலம் எழுந்து புலம்பெயர் உலகின் காற…
-
- 0 replies
- 696 views
-
-
கண்ணீர்ப் பொங்கலை….. ------------------------------------------- கண்ணீர்ப் பொங்கலுமாய் செந்நீர்ப் பொங்கலுமாய் எம் தாயக தேசமன்றோ ! நகரும் மக்களை நரபலி எடுக்கின்றது சிங்களப் படைகளன்றோ ! நாங்கள் சர்க்கரை போட்ட பொங்கலைப் பொங்குவதா எம் தேசம் காத்திடப் பொங்கி எழுவதா ! பொங்கி எழுந்து நாம் எம் தேச மக்களின் துயரினை துடைப்போமா இல்லை இன்னும் கதைகள் பேசியே காலத்தை கழிப்போமா ! எங்களின் உறவுகள் ஏதிலியாகியே தங்கள் வாழ்வினை தொலைத்து விட்டாரே ! தங்கள் வாழ்வைத் தொலைத்தது ஏனோ தாயகம் மீட்டெழும் முடிவினில் தானே ! கண்ணீர்ப் பொங்கலும் செந்நீர்ப் பொங்கலும் கடக்கும் பலமென்றும் உலகத் தமிழர் கைகளில் தானே உலகெங்கும் எழுவோம் பொங்கி எழ…
-
- 0 replies
- 814 views
-
-
-
செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் - மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் - சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் - முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை திருப்பி அடிக்கும் வரை அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே; செத்தவன் செத்தவளெல்லாம் வெறும் சுப்பனும் குப்பனுமல்ல; எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் - அவர் உறைந்த மண்ணில் மீண்டும் புடைச…
-
- 0 replies
- 714 views
-
-
ஒப்பிலாது நீ உலவினை உலகிடை!- பாவலர். பரணன் குழந்தை யோவெனுஞ் சுபதமிழ்ச் செல்வனே குழைந்த தோவுடல் கோழையர் குண்டினால் விழுந்தை யோநிலம் வென்றிடப் போகையில் இழந்த மேமதி யென்செய்கு வாமினி ஒப்பி லாதுநீ யுலவினை யுலகிடை ஒப்பி யேற்கிலா நாட்டினர் கூடவுன் செப்பு வாயதன் சிரிப்பினா லொப்பியே எப்ப வுந்துணை யாகுவம் என்றரே! அண்ணன் பாலசிங் கத்தையி ழந்தபுண் இன்னும் ஆறவில் லையதற் குளேயுமே அன்ன ரோடுநீ கலந்துமே சூழவும் பின்னர் அங்குதான் பெயர்ந்துந டந்தையோ! அண்ணன் பாலாவின் அரசியல் வடிவமே கண்ணைப் பிசையவே கடந்துமேன் சென்றனை மண்ணிற் புதைந்துநீ மறுபடி யெழுவையோ? விண்ணிற் பாலாவிடம் வெற்றிவி ரிப்பையோ? முங்கி னாரவர் மூழ்கடித் தோமெனச் சிங்கள நாய்களும் சிர…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 785 views
-
-
அம்மாவுக்கு - வ,ஐ,ச,ஜெயபாலன் (1985) . அம்மா தங்கக் கனவுகளை இழந்த என் அம்மா. எனக்கென வரலாற்று நதியின் படுக்கையில் நீ கட்டிய அரண்மனை யாவும் நீருடன் போனது. . இன்று கோவில்கள் தோறும் கைகளைக் கூப்பி "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என இறைவனை வேண்டும் என்னுடைய அம்மா. .. யாழ்ப்பாணத்து செம்மண் தெருக்களில் வன்னிக் காட்டின் வயல்வெளிப் புறங்களில் கீழ் மாகாணத்து ஏரிக்கரைகளில் முகம் அழிந்த பாதி எரிந்த பிணங்களைப் புரட்டி தங்கள் தங்கள் பிள்ளையைத் தேடும் அன்னையர் நடுவில் . தமிழகத்தில் இன்றுநான் உயிருடன் இருப்பதை அறிந்து பாக்கியம் செய்தவள் என மனசு நிறையும் என்னுடைய அம்மா! . இப்படியுமொரு காலம் வந்ததே நம்முடைய மண்ணில் . இன்று உனக்கு நான் கதைகள் சொல்வேன் மரணம் பற்றிய கதை…
-
- 0 replies
- 914 views
-
-
தண்ணியில் இருக்கும்போது முதலைக்கு பலம் ஈழத்தில் இருக்கும்போது அண்ணனின் பலம் என் மண்ணில் நான் இருந்தால் தான் எனக்கு பலம் என் உறவுகள் அக்கம் பக்கம் கூட இருக்கும் பலம் ... அகதியா வந்தபின் எனக்கு ஏது பலம் அசூல் கிடைத்த பின் இரட்டிப்பு பலம் அங்கின இங்கின உரக்க பேசும் பலம் யாரு கேட்பார் என்னும் நினைப்பு பலம் .. எவரையும் கேள்வி கேட்பேன் என்னும் திமிர் எழுந்தமானமா கருத்து சொல்லும் என் திமிர் தேசியத்தில் புதைத்து போனவர் கொடுத்த திமிர் எம் தேகம் எல்லாம் தீயை மூட்டியோர் விட்டு போன திமிர் ... எல்லாம் இன்றுதான் பார்த்தேன் அவர் முகம் சோகமா என்ன கதைப்பது எதை கதைப்பது என ஏங்கும் முகம் பாவமா தேசியம் பேசவா புரட்சி பேசவா சமத்துவம் பேசவா வேகமா கேட்பவர்களுக்கு தெரியும…
-
- 0 replies
- 642 views
-
-
தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும் மாசியில் மங்களம் சூடிடும் புது வரவுகள் பொங்கிடும் பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம் சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும் வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும் ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும் ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும் புரட்டாசி விரதம் மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும் ஐப்பசி மழை அடை மழை ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும் கார்த்திகையில் இல்லம…
-
- 0 replies
- 500 views
-
-
போ புயலே.. போய்விடு... ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?..நிவர் புயல் - வைரமுத்து கவிதை சென்னை : நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல் வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் பாமர உடல்களைப் பட்டம் விடாமல் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? ” என்று பதிவிட்டுள்ளார் https://m.dinakaran.com/article/news-detail/633780
-
- 0 replies
- 527 views
-
-
புத்தம் புதியதோர் இராம கதை.....! முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும் முழுமையாய்க் கிடைக்கப் பெற்று ஒப்பரும் பதவியைத் துறந்து ஓதரும் கலைஞர் சென்றார் கட்டிய காவியோடு அன்னார் கால்நடை ஆகச் செல்ல கனிமொழி கண்ணீர் சிந்தி கதாநாயகன் பின்னே செல்ல சண்டையிட்ட மைந்தர்களும் சரிவரப் பின்னே செல்ல உற்ற நல் மனைவி மாரும் உளம் நொந்து வழி அனுப்ப காவியம் பாடிய கவிஞர் எல்லாம் கண்ணீர் சொரிந்து நிற்க சோனியா அம்மையாரும் இதை சோர்வுற்று பார்த்து நிற்க புத்தம் புதியதோர் இராமகாதை புவி மீது அரங்கேறிற்றன்றோ? இப்படித் தீர்ப்பை மக்கள் இணைத் தொன்றாய் அளிப்பாரென்று கற்பனைக் கனவில் கூட கண்டிரார் கலைஞர் அன்றோ? வித…
-
- 0 replies
- 1k views
-
-
CMR கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்/கவிஞர் ஒளவை விக்னேஸ்வரன்
-
- 0 replies
- 575 views
-
-
முள்ளிவாய்க்கால் காற்றிடை வாழும் உயிர் பேசியது.. உலோகத் துகள்களிடை உடல் துகள்களாகி சிதறி நிற்க காற்றுக் கூட அவதிப் பட்டது அகதியாகி சன்னங்களிடை தன் இடம் பிடிக்க. இட நெருக்கடியில் உயிர்கள் உரசிக் கொண்டன செல்லுமிடம் சொர்க்கமோ நரகமோ திசைகள் தெரியாமல் சன்னங்களில் அவை படுத்துறங்கின. ஊழியக் காலமோ கலி காலமோ அல்ல அல்ல.. தமிழர் அழிப்புக் காலமாய் அது நிகழ்ந்து கொண்டிருந்தது..! சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன சதா மரண ஓலங்கள் உலகை ஆளும் அலைகளின் ஊளைகளை தாண்ட வழியின்றி களைத்தே மெளனித்தன. உலக மானுட மனச்சாட்சி கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...! மீண்டும்.. காற்றிடை வாழும் உயிர் பேசிக் கொண்டது.. அந்தக் கொடுமையின் தாண்டவம் கண்டு ஆண்டுகள் …
-
- 0 replies
- 586 views
-
-
ஆண்களின் நட்பு உதை பந்து போல எவ்வளவு உதைத்தாலும் உடையாது பெண்களின் நட்பு கண்ணாடி போல அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது...♥♥
-
- 0 replies
- 857 views
-
-
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்...... பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...... இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்... கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்... நான் இங்கே நல்லா…
-
- 0 replies
- 3.7k views
-