Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை" என்ற ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை ஒன்றில் இருந்த கவிதை.. இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை உங்களுக்கானதொரு சூரியன் பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக்கூடும் தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள் விகசிக்கும் அந்த ஒளியெடுத்து கண்களுக்குள் பாய்ச்சிக்கொள்வோம் நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை கடக்க வேண்டியவரன்றோ நாம்... சிறுகதையைப் படிக்க: http://www.uyirmei.com/2009/08/blog-post_3304.html

  2. தோழர் பாட்டு எட்டூரும் பாத்திருக்க என் ஆத்தா உச்சி மோர நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில் எங்கூட அவன் வளர்ந்தான் சிற்றோடை போல சிலுசிலுக்கும் தென்றல்போல பற்றாடை வரிசைபோல பஞ்சு வண்ண மேகம்போல பட்டாலே மனதிலே படபடக்கும் காலங்கள் சுட்டாலும் எரிக்கேலா சுவையான கனவுகள் வற்றாமல் வரிசையாய் வந்து குதிச்சு நெஞ்சார சுழன்றடிச்சு நினைவுகள் பறக்கிறதே சிற்றாடை கட்டி சிலிர்த்துக்கொண்டு பேசும் உற்றாரும் ஊராரும் உரிமை கொண்டாடா பொற்றாமரை குளத்தடி பொதிகை மர நிழலில் பொழுது விழும் நேரம் பொரி உறுண்டை வாங்கி வந்து பொத்திப்பொத்தி நீ திண்ண பொறுக்காமல் நான் பொங்க பத்திரமாய் மறைத்து பையிலே வாங்கி வந்து பரிவுடனே நீ தர பணிவுடன் நான் ஏற்க…

  3. "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பா…

  4. Started by vaithegi,

    முகத்திரை முத்தெனப் புன்னகை சிந்திடும் முகங்கள் முல்லைப் பூவெனத் திகழும் உள்மனதில் சோகங்கள் ஆயிரம் பேசா ஓவியமாய் ஏங்கித் தவிக்கும்..........

    • 0 replies
    • 675 views
  5. Started by Elugnajiru,

    பொங்குவோம் பகிர்ந்துண்டு வாழ்வோம் விடுதலைக்காய்ப் பசித்திருப்போம் புறம் சொல்லோம் போகியில் மனத்தீமையெல்லாம் விட்டொழித்து புதிதாய்ப்பிறப்பெடுப்போம் எமக்கிது விதியே என ஏங்காது எதிரிக்காய் விழித்திருப்போம் இனி ஒரு விதிசெய்வோம் வரும் கணங்கள் எல்லாம் மீண்டும் வாராக்கணங்களே அதனால் ஆயிரம் கதைகள் பேசி அடுக்குத் தமிழ்பேசி பெருவாழ்வு வருகுதென பொய்சொல்லி ஏய்ப்போரைப் புறமொதுக்கி ஒட விரட்டி முட்டிமோத வரும்போது எதிர்நின்று மோதிடும் கட்டுக்காளையை அடக்கும் காளையாய் சேர் இடம்போகுமட்டும் பொருதுவாய் புலியாய் தமிழ…

  6. Started by akootha,

    This is the middle way, this is the eightfold path This is the way to the end of suffering. Right view Right view is the forerunner of the entire path. Right view provides the right practice. Right view leads to a virtuous life. Right view comes at the end of the path. Right view requires you to know that the dying always look up to the sky and therefore get ready to shell hospitals. Right intention Birth is suffering, aging is suffering, Sickness is suffering, death is suffering, Sorrow, lamentation, pain, grief and despair are suffering, Association with the unpleasant is suffering, Separation from the pleasant is sufferin…

    • 0 replies
    • 656 views
  7. நாளைய உதயம் அதிகாலை வேளை அதன் கண்கள் இந்தக் குளிர்காற்றில் அழகாய் தெரிந்தன ஆழகிய வண்ணமாய் சிவப்பு,கறுப்பு,மஞ்சள் இயல்பாய் வந்து பதுங்கு குழியில் அரை குறை தூக்கத்தில் விழித்து இருக்கும் என் தாய்த்து வைக்கப்பட்ட துப்பாக்கி முனையில் அமர்ந்து சிறகசைத்து……………… அதன் வண்ணம் கொள்ளை அழகு என்னை என் குழந்தை பருவத்தையும் என் குடும்பத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது இன்னும் சூரியன் சுட்டெரிக்கவில்லை காய்ந்து போன புளுதி பூமியில் இன்னும் பனிச்சிவலைகள்;……………. நேற்றைய சண்டையில் என் தோழன் ஒருவன் வயிற்று காயத்துடன் கள மருத்துவமனையில் இன்னும் அந்த இரத்தம் புளுதியை கல்லாக்கி இருந்தது எங்களின் மனதை போல……………… தூரத்தே ஒரு முழக்கம்-நான் தளர்த்த…

  8. மனதில் மறையாத பனித்துளிகள்..... காதலர் தினக்கவிதை - இளங்கவி சூரியன் திசை நோக்கும் சூரியகாந்தி போல இந்தக் சூரியன் போகும் திசையையும் நோக்கியது ஒர் சூரியகாந்திப் பூ.... ஆம்.. அவளும் ஓர் பூதான் அவள் பெயர் செவ்வந்தி..... அவளின் தரிசனத்துக்காய் காத்து நிற்கும் இடம் வண்ணங்களால் மனதைத வருடும் காகிதப்பூச் சோலையொன்று...... செவ்வந்தி வருகைக்காய் காத்து நிற்கும் ஒவ்வொரு கணங்களும் காகிதப் பூக்களைப் பார்த்து வண்ணங்கள் இருந்தென்ன என்னவள் போல உங்களுக்கு வாசமில்லையே என்று சொல்லிச் சிரிப்பதுண்டு...... காகிதப் பூக்களுக்கு என்னில் கோபமிருந்தாலும் என்னவள் வருகையறிந்தவுடன் சிறு சலசலப்புக் காட்டிவிட்டு தானாகவே மறுபக்கம…

  9. உன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய் முள்ளி வாய்க்காலெம் முடிவல்ல அறிந்திடு பள்ளிகொள்ள இது படியல்ல புரிந்திடு எள்ளி நகைப்போரை புறந்தள்ளி நடந்திடு துள்ளி எழுந்துமே தடைகளைக் கடந்திடு வெண்ணை திரண்டுமே தாழியில் வரும்கணம் கண்ணை மூடியே கரமதை விடுவதோ? மண்ணை காத்திட மடிந்தவர் சந்ததி திண்ணை குந்தியே தினங்களைப் போக்குமோ? விழுந்து எழுந்திடா மழலையும் உள்ளதோ? உயர்வு தாழ்விலா சாலையும் செல்லுமோ? அலைகள் ஓய்ந்ததோர் ஆழியும் உள்ளதோ? விலைகள் இன்றியே விடுதலை வெல்லுமோ? எந்தக் கையது உடைந்திடும் போதிலும் நம்பிக் கையது வா…

  10. முதுபெருந் தலைவர்கள் முன்னைநாள் முதல்வர்கள் வெட்டிப் பேச்சளக்கும் அரசியல் கனவான்கள் கோணங்கிகள் கோமளிகள் என்று வேற்று நாட்டவனிடமே சாட்டையடி வாங்கிய பழுத்த அரசியல் மேதைகள் களங் காணும் தருணம் இது... "பாதணிகள் கழிவு விலை *கொசு வலைகள் மலிவு விலை" விளம்பரங்கள் தூள் கிளப்பும் பிரசாரப் புறநகர்கள். கிட்ட நின்று பேசினால் எச்சிலால் உமிழலாம் என்ற பயத்தினால் பந்தல் வைத்து பக்கத்தில் வர மறுக்கும் பெருந்தலைமைக் கூட்டங்கள்.... மேடையேறும் நாடகங்கள் மீண்டும் தெருக்கள் தோறும். செருப்பால் எறிவார்கள் என்ற பயத்தினால் *கொசு வலையின் பின்புறத்தில் கூச்சலிடும் தலைமைகளே பதில் சொல்வீர் "நாளை பாதணிகள் போட்டுவந்தால் பாயுமா? உங்கள…

    • 0 replies
    • 797 views
  11. வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 அன்று உன் முன்னே குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த ஹெலிகெப்டர்கள் இன்றுன…

    • 0 replies
    • 1.1k views
  12. கல்லறை கருக்கள் கண்திறக்கும் காலம் காத்திருக்கின்றோம் வாருங்கள்.

  13. Started by akootha,

    பெண்ணிற்கு இலக்கணம் வகுத்தவன் அழுது கொண்டிருக்கிறான் ! பெண்ணையே தெய்வமென போற்றியவன் துடித்துக் கொண்டிருக்கிறான் ! பெண்ணையும் அவளின் அங்கங்களையும் விழி தராசுகளில் எடைபோட்டு களவாடப் பார்க்கும் கள்வர்களின் கைகளில் எப்போது தீப்பிடிக்கும்? நடந்தால் சிரித்தால் குனிந்து எதையாவது எடுத்தால் கூட போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில் ஓர் ஆணினம். இந்தியப் பெண்கள் அறிவில் - அழகில் வல்லவர்கள் தாம்! ஆனால்... நெறிதவறா சிற்பங்கள்! ஒவ்வொரு பெற்றோரும் பெண்ணைப் பிரசவித்து கூடவே ஒரு நெருப்பு வளையத்தையும் இட்டே வளர்க்கின்றனர்... பெண்ணினம் அடிமை என்பது பழையது ! பெண்ணினம் போர் வாள் என்பது புதியது ! ஓர் ஆணின் வாழ்வை விடவும் பெண்…

    • 0 replies
    • 335 views
  14. உலகை வளைத்து உள்ளே நாட்டை துளைத்து நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!! பவளப்பாறைகள் அதை உண்ணும் மீன்கள் மீன் பிடிக்கும் மீனவன் என ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!! கட்டுமரம் முதல் கப்பல் வரை கட்டிக் காத்திடும் கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!! நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும் பென்குவின்களும் நடந்து சென்றிடும் டிஸ்கவரி காட்டாத இன்னும் பல உயிரினங்களை உள்ளே வைத்து ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!! தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும் எல்லை என்றனர் சிலர்!! ஆனால் தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும் பாலம் என்றனர் பலர்!! கடலின் அழகை ரசிக்க நினைத்தால் மகிழ்ச்சி பொங்கிடும்!! மாசுபடுத்தி அழிக்க நினைத்தால் …

  15. நாங்கள் பொங்குவோம் பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... கல்லு மூண்டு வச்ச அடுப்பில கனதியான புது மண் பானை வச்சு முக்குறிகளை முழுசா அதற்கு வச்சு பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு புது நெல்லு மணி விளக்கி பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு பக்குவமா சக்கரை கலந்து பதமாக வெந்து வர முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும் ஏலத்தூளும் தூவி பொங்கல் பொங்கி வர வெடி சுட்டு பொங்கலோ பொங்கல் எண்டு பாட்டி குலவையிட பக்கத்துக்கு வீட்டிலும் முன் வீட்டிலும் கூட வெடியோசை வானைப் பிளத்தது பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... இது முன்பொரு காலம். ஆனால் இப்ப முன் வீட்டு குடும்பம் இன்னும் முகாம்ல இருந்து வரயில்ல முள்ளு கம்பிக்குள்ள முழுசா அடைபட்டு இருக்கினம்…

  16. காதல் பிரிவுகள் பலவகை .....!!! காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!! ----------------- கவிதை 01 ----------------- இரண்டு ரோஜாக்கள் அழகாக பூத்து ... உதிர்ந்து விழுவது .... காம்பு என்னும் பகுதி ... நினைவுகளோடு ... இருந்து கொண்டே இருக்கும் ...!!! +++++++ உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!! ------------- கவிதை 02 ------------- இரண்டு ரோஜாக்கள் .... அழகாக பூத்து .... ஒரு ரோஜா கருகிவிட .... மற்றைய ரோஜா .... வாடிக்கொண்டிருப்பது....!!! +++++++++++++ உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..? ------------- கவிதை 03…

  17. Started by Sembagan,

    துணிவு வானம் குளிர்ந்து மழை கொட்ட வயல் நிலங்கள் நீர் நிறைந்திருக்க நாற்று நடுகையிட்டு நன்றாய்; பொலிவு தரும் நம்பிக்கையில் பட்ட கடனோடு கடன்; பட்டு பகலிரவாய் பாடுபட்டு பயிர் வளர்த்தேன். கொத்துக் கொத்தாய் நெல் மணிகள.; மண்தந்த மட்டற்ற மகிழ்வோடு மனம் மகிழ்ந்து விற்ற கடன் அடைத்து மிஞ்சியதெமக்கென்ற நினைப்பதனில் நெஞ்சம் நிறைந்திருக்க விண்ணிடிந்து மண்ணில் வீழ்ததுபோல் சட்டென்று வீழ்ந்த விலையால் நட்ட கூலிக்கும் காணாத விற்று வந்த பணத்தில் வட்டி கட்டி வறுமையும் துரத்த வரும்போகம் நிமிர்வோம் என்ற துணிவோடு வாசல் வந்தேன். - வ.மனோகரன் - அகதி நானுமோர் அகதியென்ற நிலைமாறி வாழும் புலம் சொந்தமாச்சு. மாறிடும் நாட்க…

    • 0 replies
    • 1.4k views
  18. Started by வல்வையூரான்,

    பசித்ததால் திருடி புசித்தான் நஞ்சை வறுமை.

  19. கொஞ்சி பேசத்தான் தெரிகிறது சிறை பிடித்தவர்களிடமும் உனக்கு இனி போர் பறையாய் முழங்கு விடுதலை பிறக்கும் உனக்கு kaaraimainden.blogspot.com

    • 0 replies
    • 445 views
  20. நிசம் தரிசித்த நீலப் புலி வந்தழித்தான் பகைவன் நம் வாசல் வரை சொந்தம் முதல் எமதான உற்றம்,சுற்றம்,மற்றும்; அந்தம் முதல் ஆதிவரை அழிப்பதாய் ஆக்கிரமிப்பின் ஆக்கிரோசமாய் தொண்டைக் குழிவரை குண்டாய் பொழிந்தான் அக் கணத்திலும் ஆயிரமாய் அழிந்தே போயின தமிழான உறவுகள் ஆனதுதான் இழப்பிலான மெய்வருத்தம், என்றாயினும் இழக்கவில்லை வலியின் வலிமை கொள் தோன்றாத வீரமதை தோற்றுவித்த வல்லாளன்-உலக மன்றம் முன் மாவீரத்தை நீலப்; புலியால் நிமிர்த்தியே வைத்தான் வலிமையே வாழ்வு வையகத்து வாழ்வோரின் வகையறுப்படுத்த முடியாத வாழ்வதன் வாழ்வியல் ஏதிலியாய் வாழ்வதனால் உள்ள சுகம் யாதும் உண்டா? போதிலினிலே உந்தன் அகம் ஏற்ற சுகம் சாற்றுவாயா? மாற்று வழி ஒன்றே உண்டு மாவீரம் உரை பாதை ஒன்ற…

    • 0 replies
    • 1.5k views
  21. இப்படியான செய்திகள் இனி எங்கே எம் காதுகளை எட்டப் போகின்றன என்றிருந்தோம்! எட்டிவிட்டது...! என்ன சொல்வது? ஆனந்தம் தாழ முடியவில்லை! பொங்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...! நீண்ட நாட்களின் பின்னர் பாரம் குறைவதாய் உணர்கிறோம்! நெஞ்சின் கனம் எல்லாம் கரைந்து போனதாய் ஒரு உணர்வு...! நெடுநாள் தகித்த எரிமலை ஒன்று எகிறிப் பிளந்து வெடித்தது போல, எல்லாமும் கைகளில் வந்தது போல ஒரு எல்லை இல்லாத ஆனந்த உணர்வு...! என்றாலும் இந்த மகிழ்ச்சியிலும் கண்ணீரே வெள்ளம் போல வருகிறது..! ஏதோ ஒன்று எங்கோ தொலைந்ததாய் ஒரு வலி..! ஒருமுறை எல்லா உறவுகளும் ஒன்று கூடி ஓ என்று ஒப்பாரி வைத்து களைப்பாகும் வரை கதறி அழ வேண்டும் போல் உள்ளது. ஏன் அழுகிறோம்? எதற்காக அழுகிறோம்? யாரை நினைத்து அழு…

  22. அன்பின் சிறிய நிமிடங்கள் - கவிதை மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில் கடற்கரையில் தோளோடு தோளாகச் சாய்ந்துகொள்வதில் அப்படி என்ன கிடைத்துவிடும்? இருசக்கர வாகனப் பயணத்தில் தோளைப் பிடித்துக்கொள்வதில் என்ன நிறைந்துவிடும்? அவ்வளவு அவசரமாக பத்து விநாடிகள் கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில் எதை நாம் கடந்துவிடுவோம்? எல்லா கதவுகளும் திறந்துகிடக்கும் முற்றத்தில் மின்னலென அணைத்து விலகும் பொழுதில் அப்படியென்ன சாகசம் இருக்கிறது? லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு முத்தமிட்டுக்கொள்வதில் என்னதான் நிகழ்ந்துவிடும்? அன்பின் சிறிய நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கின்றன அவை நிகழ்கிறபோது அப்படியொன்றும் அவை அவ்வளவு சி…

  23. வர்ணப் பட்டதாரி சிலந்திகள் கூடு கட்டி கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன பட்டத் தொப்பியில் தூசி பிடித்துக் கிடக்கிறது பட்டச்சான்றிதழ் பிரதியெடுத்து களைத்துப்போய்க்கிடக்கிறது பெறுபேற்றுப் பத்திரங்கள் வாசிக்கப்படாதிருக்கும் சுயவிபரத்துடன் இனி சேர்த்துக்கொள்ளலாம் சுவருக்கு வர்ணம் பூசும் அனுபவத்தையும் நாட்கூலி செய்து பல்கலைக்கழகம் அனுப்பிய பிள்ளை நாட்கூலியுடன் வீடு திரும்புவதை பார்திருக்கும் வயதான தந்தைக்கு அதிகரித்தது நெஞ்சுவலி தோய்த்து அயன் செய்து மடிப்புக்குலையாமலருக்கும் மேற்சட்டையை …

    • 0 replies
    • 750 views
  24. ஆடுகளுக்காக... அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம் விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக சலனமின்றி மூப்படைகிறது சந்ததிகளின் ஆயுள். விடியலைப் பறைசாற்றும் நோக்கில் ஆர்ப்பரித்த சேவல்களால் வாழ்தலின் வேட்கை அதிகரித்து உயிர்த்தெழுந்த போதெல்லாம் சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன. சிறை மீட்பாளர்கள் சிந்திக்கும் அவகாசத்தில் கூண்டுக்குள் வேட்டையாடல்கள் விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும். கசாப்புக் கடைக்காரனின் நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள பிடியளவு தழைகளையும் ருசித்துத் தின்னும் ஆட்டின் இறுதி நிமிட வாழ்தலின் நிதானத்திற்கு நிகரானது ஆதிக்குடிகளின் நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்…

  25. அவர்கள் மன்னம்பேரியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை உயிருடன் புதைத்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது. பின்னர் அவர்கள் ககவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல. நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் நுரிவத்தவில் வாழவில்லை. பின்னர் அவர்கள் வடக்கின் மகளீரிடம் வந்தார்கள் நான் பேசவில்லை கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா இவர்கள் என் சகோதரிகளல்ல. பின்னர் அவர்கள் வேறு தோல் நிறம்கொண்ட பெண்ணிடம் வந்தார்கள் கூட்டாய் எட்டுப்பேர் விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் அவள் வெளிநாட்டவள் என்பதால். அந்தக கோரக் கும…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.