கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கௌசல்யனின் சாவறிந்த தினம் எழுதப்பட்ட கவிதை. இன்று கௌசல்யனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு மீளவும் பதிவாகிறது. சதி கொன்ற சாவு. 'கௌசல்யன்" சத்தமின்றி இருந்த வீரன் சத்தமின்றி எங்கள் மனங்களை வென்று போன சத்தியன். மோப்பர்களை மீட்பர்களாய் நம்பிய பாவம் எங்கள் மீட்பர்களே உங்களை நாம் இழந்து போக அரச மோப்பரே சாட்சியாக..... கண்காணிப்போர் கண்களில் உங்கள் சாவு குழு மோதல் என்பதாக..... சார்ந்து நின்று நீதி சொல்லும் பணிசெய்ய வந்த பிணியரே இவர்களெல்லாம். கருணாவின் சதியென்று கதைபூசி கௌசல்யன், புகழன், செந்தோழன், நிதிமாறன் சாவிதனை விதியென்றா எழுதிவிட....? இல்லையில்லை, சதிகொன்று போனதெங்கள் சந்ததியின் விதிம…
-
- 7 replies
- 2.1k views
-
-
உன் நினைவுகள் * உன் பெயர் எழுத என் பேனா ஓடும் போதெல்லாம் கேலிச் சிரிப்போடு வந்து பிள்ளைக் குறும்பாய் பிடுங்கி எரிந்தாய்! * உன் மெல்லிய உதடுகளால் புன்னகையிட்டு மேனியெங்கும் மின்சாரம் பாய்ச்சி என் போர்வைக்குள் புகுந்து நித்திரை கலைத்தாய்! * என் ஜன்னல் வழி நழுவி வந்து சில்மிஷக் கணங்களில் என் பெண்மை பூக்கச் செய்து உயிரை உருக்கி உலையிலிட்டு ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்! * உன் முத்தங்களை பொக்கிஷமாய் மார்புக்குள் பொத்தி வைத்தேன் பிரிவின் துயரில் அவை கரைந்து போயின! * ஞாபகச் சின்னமான நம் நிழல்படம் சிதிலமாகி சிதைந்து கிடக்கிறது! * வீத…
-
- 8 replies
- 3.6k views
-
-
எம் இல்லங்கள் மீது - இடி இறங்கும் ஒரு நாளில்- இலங்கையின் - சுதந்திரம் பற்றி- ஏன் ஒரு கவலை-உனக்கு? புறங்கையால் அதை தள்ளிவிடு சோதரா! உன் கண்களில் ஊசி தைத்துபோனதை கண்டு சொல்ல இன்னொருவன் வேணுமா? என்ன நீ? சொத்து-சுகம்- சொந்தம் பந்தம்- ஒட்டுமொத்தமாய் கூட்டியள்ளி கொளுத்திவிட்டு வந்து- கட்டிடகாட்டின் மத்தியில் நின்று- உன் கண்ணீரை பிறர் காணுமுன் துடைக்கிறாயே - அது பொய்யா-? சிங்கத்தின் வால் கொண்டு முகம் துடைப்பவன் எவனாயிருந்தாலும் வாழட்டும்- இரு ஒரு விநாடி- உன் முழங்கையை ஒரு தடவை முகர்ந்து பார்- நண்பா! சிதறி போன உன் உறவுகளை - துண்டம் துண்டமாய் பொறுக்கி சென்று கொள்ளி வைத்துவிட்டு வந்தாயே- ரத்தவாடை இன்னும் உன் நாசி துவாரங்களில் க…
-
- 2 replies
- 1.4k views
-
-
சாதிவெறி இன்னும் சத்தியமாய் தீரவில்லை எங்கள் தமிழ் போராட்டமும் அவ்வெறியை தீர்க்கவில்லை பலநூறு மைல்கள் பறந்து வந்தும் ஐயையோ பார்கின்றோமே சாதியது இங்குமல்லோ ஆதியிலே சாதியில்லை பாதியிலே வந்ததென்று சேதியாகச் சொல்லுறாங்க ஓதியே வைச்சாங்க மோதித்தான் சாகிறாங்க கோதித்ததான் பார்க்கிறாங்க மீதியாய் ஒன்றும் இல்லை சாதியால் அழிவுதாங்க. பார்பனரோ கொண்டு வந்தார் ஏற்பவரோ ஏற்றி விட்டார் தீர்ப்பவரோ இன்று இங்கு திண்டாட்டப் படுறாங்க மோர்மிளகாய் செய்து தந்தால் முட்டி மோதித் தின்னுவாங்க ஊர்காரர் உள்ளே வந்தால் எட்ட நில்லு என்கிறாங்க சாதியில்லை என்று தான் அம்பேத்கர் சொன்னாங்க வாதியாக பெரியாரும் அதைத்தானே சொன்னாங்க நாதி…
-
- 14 replies
- 2.4k views
-
-
சுதந்திரக்காற்று... வீசத்தொடங்கிற்று 58 வருடங்களுக்கு முன்னால்.... ஆனாலும் நாம் சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!! நன்றி.. கார்ட்டூன் உரிமையாளருக்கும், தேடி உதவியவருக்கும்
-
- 6 replies
- 1.9k views
-
-
பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..! மலர்வது மலர் மட்டுந்தானா..! மனிதர்களுந்தான்..! நகரமே சிரித்தது யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது சிரித்துக் களித்தது இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க மலராய்த் தெரிந்தது குட்டைப் பாவாடைகளும் கட்டை ரீசேர்ட்டுகளும் தலை காட்டா விட்டாலும் சிட்டுக் குருவிகளாய் இளசுகள் உதட்டோடு உதடுரசி மூக்கோடு மூக்குரசி கெஞ்சலும் கொஞ்சலுமாய்..... வட்ட மேசைகளைச் சுற்றி வட்ட மிட்ட கதிரைகளில் பெரிசுகளும் சிறிசுகளும் கண் பார்த்துக் கதை பேசி மெல்லுதட்டில் தமை மறந்து ஐஸ் சுவைத்து...... கை கோர்த்து நடக்கையிலும் காதலுடன் இடை தழுவி …
-
- 2 replies
- 1.6k views
-
-
குழந்தை தொழிலாளர்கள் குழந்தை தொழிலாளர்கள் இருக்கக்கூடாதென்று அவனை பள்ளிக்கு அனுப்பினேன்.. அவனை ஆசிரியர் அனுப்பினார் டீ வாங்கி வர.. கோபம் எப்ப வரும் என்று தெரியாது வந்தா என்ன நடக்கும் என்று தெரியாது எச்சரிக்கை..
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழன் - யாரோ? கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் - ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்! தமிழன் என்றால் யாரோ- ? முயற்சி செய்பவருக்கு தடையாய்- இலாபம் இல்லை என்று தெரிந்தும்..... ஏட்டிக்கு போட்டியாய் ஏதும் செய்ய நினைப்பவன்! தமிழன் எவரோ- தாயை தவிக்க விட்டு - பாயை சுருட்டி கொண்டு பரதேசம் ஓடுபவன்! தமிழன் என்ன செய்வானோ? உப்பு யாரும் அள்ளினால்- சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்! உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்! தமிழன் இன்னும் என்ன செய்வானோ-? கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் எழுதுவான் - கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் மூக்கை இடையில் நீட்டுவான்! தமிழனுக்கு வீரம் உ…
-
- 4 replies
- 1.7k views
-
-
இளைஞனின் ஊக்குவிப்பான விமர்சனத்தை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து இருக்கிறேன். மீண்டும் பகுத்தறிவு!! மனிதன் நான் என்று சொல்லிக்கொள்வாய்........... ஆறறிவு கொண்டேனென்று அழகாய் ஒரு கிரீடம் ........... உனக்கு நீயே சூட்டிக்கொள்வாய்!.......... கண்ணுக்கு முன்னாலொரு சிசு பாலின்றியழுது தன் ஜீவன் கரைக்கையில்..... கண்ணுக்கு தெரியா கடவுளுக்கதை குடம் குடமாய் கொண்டு சென்று.. ஊற்றி கும்பாபிஷேகம் செய்வாய்! ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு கல்வி தராய்............ எரிகின்றதொரு வீட்டில் தணல் எடுத்து உன் வீட்டு உலை மூட்டுவாய்......... மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில.......... "மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேட…
-
- 21 replies
- 3.7k views
-
-
திறக்கப்பட்ட கதவுகளின் வழியே... கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக திறக்கப்பட்ட கதவுகள் மூடப்பட்டும் மூடப்பட்ட கதவுகள் மறுபடி திறக்கப்பட்டும் சிலவேளைகளில் மட்டும் காற்று வருமென்ற எண்ணங்களோடுதான் காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...! எங்களின் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை விட்டால் நிகழ்காலம் குறித்த நாற்காலிகளின் கனவுகள் வெறும்... கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...! இதனால்தான் அன்போடு பேசலாமென அக்கறையோடு அவர்கள் இடைக்கிடையே வருவார்கள்...! வாருங்கள் ஊரெல்லாம் ஓடித்திரியலாமென அழைத்துப்போவார்கள் சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம் நெஞ்சிலே சுமந்துகொண்டு அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம் கடைசியாகக்கூட அவர்கள் ஒன்…
-
- 4 replies
- 1.8k views
-
-
பகுத்தறிவு ------------------- கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் ! அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.! மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் ! பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் ! பசி பசியென்றழுதிருக்கமாட்டோம் ! பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் ! விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்! வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்! கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் ! காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் ! பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே.......... நிமிடத்துக்க…
-
- 8 replies
- 4.2k views
-
-
-
சித்தப்பா அன்பின் உருவானவரே! பாசத்தின் உறைவிடமானவரே! தந்தைக்கு நிகர் அற்றவரே! தாய் போன்று எமை வளர்த்தவரே! தந்தையின் உடன் பிறப்பே!- தந்தை போன்றே எமை காத்தவரே! அறியா வயதில் அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என் அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால் தந்தையுடன் வாழ்ந்தாலும் தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை அன்னை மடி தேடியதில்லை அன்னை உருவில் உங்கள் அன்பு ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள் தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள் வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாக…
-
- 17 replies
- 19.8k views
-
-
குருவி ஒன்று தான் வாழ தேடியது ஒரு தோப்பு வந்தது மாந்தோப்பு வரவினில் கண்டது ஓர் மலர் மலரிடை மலர்ந்தது வாழ்வெனும் வசந்தம் மலரதும் குருவியதும் படைக்குது ஒரு காவியம் அது... மாநிலத்தில் மானிடர் தாம் கண்டிடாத புனித காவியம். தோப்பருகே ஒரு குடிசை அங்கும் வாழுது ஒரு கூட்டம்..! வஞ்சகமும் பொறாமையும் அவர்தம் மனங்களில் கறுவும் மனதை அடக்க முடியா கலங்கி நிற்குது அவர் சித்தம்..! கற்பனையில் கூட அடுத்தவன் வீழ்ச்சியில் அகம் மகிழவே துடிக்குது..! பாவம் அவர் அறிவிருந்தும் அறியாமையில்...! தோப்பிருந்த குருவியது மனமிரங்கி மலருடனிணைந்து பாவப்பட்டவர் மீது ரட்சிக்கிறது மானிடா.... மனமதில் அமைதி கொள் வாழ்வதில் சிறப்பாய் மாற்றா…
-
- 20 replies
- 4.4k views
-
-
எது சுகம்? ---------------------- பட்டப்படிப்பு சுகமா? அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா? கட்டிக்காத்த சொத்து சுகமா? இல்லை கட்டிலறை என்னும் மனித இச்சை தான் சுகமா? அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா? அதனால் வரும் பகட்டு சுகமா? உண்மை சொல்லுங்க அம்மா இல்ல ராசா இல்ல சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே அதை விடவா இத்தனையும் சுகம்????
-
- 34 replies
- 4.1k views
-
-
:arrow: இங்கே கிலிக் >>> பாசம் என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவர் அடுத்த முகம்...? ----பா-ச-ம்........ பாசத்தை காட்டி என்னை கொல்லாதே செல்ஷ் வார்த்தை ஒன்றை சொல்லி..... பூமியின் பந்தையே சுற்றி விட்டாய் ஏன்டா பாசம் வளர்த்தேனோ உன் மேல்........ புரியுமுன்......... ... சுடும் இதையத்தில் முள் தைத்தாய் இன்று உன் நினைவை புதைத்து விட்டேன் ........சாம்பலாய் சொல்லிவிட்டு பிரிந்து போகிறேன்...... :cry: :cry: விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.2k views
-
-
"தமிழ் முரசு"(ஞாயிறு பதிப்பு){சிங்கப்பூர் தமிழ் தினசரி} இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை... மிக இலகுவான மொழி நடை... இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின... நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன் வேர் வாசிகள் - பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள். மண் சுதந்திரம் மானம் என்றவர்கள் வெடித்துச் சிதறினார்கள். களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள். கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன்
-
- 6 replies
- 1.7k views
-
-
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... ..... செல்லமே விடிய விடிய கண்விழித்து உன் காதலை சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன் நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி எனச்சொல்லிச் சென்ற நாளை உனக்கு பிடித்த என் - புன்னகையுடன் நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும், காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச..... காதல் தரும் இன்பதையும் ஆசை நினையுகளையும் ...... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 6 replies
- 1.7k views
-
-
இவள் முகம் பார்த்தால் இவனுக்குள் காதல் இல்லையேன்று மறுத்திட இதயமில்லை என்னிடம் இனியவளின் வார்த்தை இதமாய் தானிருக்கும் இடிகள் விழும் காலமும் இனியாய் தானிக்கும் இது என் காதலின் ஆரம்பம் இவள் முடிவின் இறுதியாகுமோ? இமை மூடி திறந்தால் -என் இமைகளை தாண்டி நீர் சொறியும் இசையதை கேட்டால்- அதில் இனிமையின்றி இருக்கும் இப்படியேன் ஆகிவிட்டேன் இறைவனிடம் கேட்டேன் இன்று வரை பதில்லை -அருகில் இருப்பவரிடம் கேட்டேன் இது என்ன கேள்வி என்றார் இப்படியேன்னை சாகவிட இனியவளே நான் என் செய்தேன் இதயமதை கேட்டதற்க்கு இறக்கும் வரம் தருவதா? இதிலுனக்கென்ன ஆனந்தம் இன்றும் நம்புகின்றேன் இறுதிவரை பார்க்கமாட்டேன் இன்னோருவள் முகமதை இருக்கிறேன் உனக்காக இவ்வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
எனது பிரத்தியேக கோவையை நேற்று இரவு சரிபார்த்தபோது அதனுள் இருந்த சில "நிழற் பிரதி"களுல் ஒன்றாய் பின்வரும் கவிதையும் இருந்தது... ஆழமான அர்த்தமும் உணர்வுகளும் நிரம்பிய இக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.. "நிலா"என்ற பெயரிலான பெண்போராளி எழுதியிருக்கிறார்..... நீங்களும் இரவும் நாங்களும் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து உங்களின் கரங்கள் நீளும் நிற்போம் "அண்ணை நானும் வரட்டா?" என்பீர்கள் வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம். ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள் ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால் "டிம்" இல்லையோடா? என்று திட்டுவீர்கள். சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும். …
-
- 9 replies
- 2.1k views
-
-
ஆராரோ பாடிய தாய்க்கு நிகர் ஆனவரே தாய் இறந்தால் தகப்பன் சித்தப்பன் என்ற நிலையை மாற்றியவரே தாய்க்கு பதிலாக பாச மழையில் எம்மை நனைத்தவரே உமது வாழ்வின் இனிமையை எமக்காக துறந்தவரே கண்டிப்புடன் பாசத்தையையும் ஊட்டியது நீங்கள் தானே நாம் தப்பு செய்த போதிலும் உங்களைத் தண்டித்து நம்மைத் திருத்தினீர்களே அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள் அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள் அன்போடு பழகு என்று குட்டும் போட்டீர்கள் அறிவு பசியை நமக்கு உணர செய்தீர்கள் தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம் கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும் நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம் ஆயிரம் கனவுக…
-
- 43 replies
- 6.8k views
-
-
புரட்சி அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம் உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப் பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம் விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம் Inthuja Mahendrarajah நன்றி இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
-
- 7 replies
- 2k views
-
-
மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம் .................................................. அன்னை ஒரு பிறவி தருவாள் அடுத்தடுத்து பல பிறவி.... உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள். மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை உன்னை சுத்தி சுத்தியே வந்து.. உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... தரணியே நீதான் என்று வழ்பவளை.. தருணம் கிடைக்கும் போதெல்லாம் நாய் பேய் என்று நாக்கிழந்து பேசும் மனிதா ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்! போ.. போ....? நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!
-
- 40 replies
- 8.6k views
-
-
கீழேயுள்ளது தூயாவின் கற்பனை காதலிக்கு ஒரு மன்மதராசா இருந்தா எப்பிடியிருக்கும் என்று ஒரு கற்பனை உலா... ---------------------------------------------- ¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø... ------------------------------------------- ¸ñ§½.. §À¨¾ô ¦Àñ§½... §¸û! ¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý ±¾ü¸¡¸? ¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢ þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É, º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ ¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý. ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö... «ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä ¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡? ¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷ §À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡? ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É §¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö ¯É째 ¦¾Ã¢Ôõ ¿£ ÀÊôÀ¢ø 'நெஅக்' ±ýÚõ, ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ «Ð¾¡ý §¸¡Àò¾¢ø …
-
- 8 replies
- 2.5k views
-
-
ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன் மேதினிதழைக்க வேர்வை சிந்தி- ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட - வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள- பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு! சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி- சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்! ஊர்மனையாவிலும் பால் …
-
- 7 replies
- 2.5k views
-