கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நாளைய உதயம் அதிகாலை வேளை அதன் கண்கள் இந்தக் குளிர்காற்றில் அழகாய் தெரிந்தன ஆழகிய வண்ணமாய் சிவப்பு,கறுப்பு,மஞ்சள் இயல்பாய் வந்து பதுங்கு குழியில் அரை குறை தூக்கத்தில் விழித்து இருக்கும் என் தாய்த்து வைக்கப்பட்ட துப்பாக்கி முனையில் அமர்ந்து சிறகசைத்து……………… அதன் வண்ணம் கொள்ளை அழகு என்னை என் குழந்தை பருவத்தையும் என் குடும்பத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது இன்னும் சூரியன் சுட்டெரிக்கவில்லை காய்ந்து போன புளுதி பூமியில் இன்னும் பனிச்சிவலைகள்;……………. நேற்றைய சண்டையில் என் தோழன் ஒருவன் வயிற்று காயத்துடன் கள மருத்துவமனையில் இன்னும் அந்த இரத்தம் புளுதியை கல்லாக்கி இருந்தது எங்களின் மனதை போல……………… தூரத்தே ஒரு முழக்கம்-நான் தளர்த்த…
-
- 0 replies
- 558 views
-
-
-
காலம் உலர்த்த மறந்த நீர் விரல்களில் ஒட்டிக் கொண்டது தன்னிலை பகிராமல்.. வலிந்த வெப்ப இழப்பினை உருவாக்கி, திரட்டத் தொடங்கியது ஆதிச் சிதைவுகளை, ஈமத்தாழிகளையும் வண்டல் படுகைகளையும் கிளறி, சூரிய நட்சத்திரங்களுடனும் கனியாத கருமேகங்களுடனும் உறவாடி, காற்றில் நெருப்பில் உப்பு நீரில் நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும், இழந்துபோன ஈரலிப்பை தேடி அலைந்தது.. வழியெங்கும்.. வர்ணக் கலவைகளாலும் நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக் கலையாடிக்கொண்டிருந்தன சில. அதீத மோகத்துடன் காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில. ஆதியின் அன்புப் போர்வைக்குள் சிக்கிப் பிணமாய் கிடந்தன சில. இன்னும் சில கௌரவ வெற்றிடங்களில் எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன. …
-
- 9 replies
- 988 views
-
-
இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ... கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் .. சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ... கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் .. ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ... கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ... பலமான இடத்தில் பலவீனம் தேடியவர்கள் .. தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் .. வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ... தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ... குண்டை கழட்டி தன்னுடன் அணைத்தவர் ... எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் .. தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ... தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் .. தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ... வெற்றி களிப்பிலும் இணையாது …
-
- 8 replies
- 1.7k views
-
-
புதைத்த இடத்தினிலே புழுதி அடங்கவில்லை விதைத்த வித்துடலில் குருதி காயவில்லை அதற்குள் சிதைத்த கல்லறையில் சிலிர்த்து நிற்குமெங்கள் ஆவி ஈழம் மீட்டெடுத்து தமிழ் இனத்தின் மானம் காக்கவென மார்தட்டி வா தமிழா எம் கல்லறையில் சத்தியம் தா தமிழா.. http://www.tnrf.co.uk/2010/11/05/%E0%AE%95%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/
-
- 0 replies
- 546 views
-
-
-
அங்கோர் கூட்டம் தன்னில் அன்றொருநாள் பேசுகையில் ‘ஹல்துமுல்லை’ என்றாலும் ‘அழுத மலை’ இது என்றேன்.. ‘’கூனியடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அந்தா தெரியுது பார்…’’ என்று அழுதமலை இதுவென்றேன். இன்று அழுதழுதே எழுதுகின்றேன்…. இன்னல் செய்ய பலருண்டு இன்செய்ய யாருமில்லை வன் செயல்கள் பல கண்டு நாம் வாடிய நாள் பலவுண்டு செயற் கைதானே எங்களை சீண்டி வந்தது இயற்கையே நீயுமா இன்று ஏம்மீது விழுந்தது.. வன்முறைகளலால் தானே பன்முறைகள் காவுகொண்டோம் இம்முறை இயற்கையும் கூட எங்களை விட்டுவைக்கவில்லையே.. ஏனிந்த விந்தை எதனால் இந்த சோதனை மலையே…! உன்னை உரமாக்கி, உரமாக்கி உயர்த்திய அண்ணனை.. உன்மீது வலம் வந்தே நிறம் மாறிய எங்கள் அன்னையை.. அள்ளிக் கொண்டு போக அத்தனை …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஹலோவின் ஞாபகங்கள்..... சிவப்பும் மஞ்சளுமாய் காய்ந்து சிதறிக் கிடக்கிறது மேபிள் மரம் சொரிந்த உதிர்வுகளும் சருகுகளும் மழை விட்ட பின்னும் இலை சொட்டும் நீராய் ஞாபகத் தாலாட்டில் சாரல் அடிக்கிறது நினைவுத் தூறல்கள் சாளரத்தில் வழிகிறது கம்பிகளாய் மழைத்துளிகள் இதழ்கள் சிலிர்க்கின்றன ஈரமான ரோஜாக்கள் பேய் அலங்காரத்துடன் பிரியமாய் வாசல்களில் விதவிதமாய் மழலைகள் புத்தகப் பைகளுக்கு பதில் இன்று சொக்கிலட் பை இனிப்புப் பொதியுடன் இல்லம் திரும்பி வரவேற்பறையில் கடை விரித்து வகை வகையாய் பிரித்து பத்திரப் படுத்திய தம்பியைப் பார்த்து பெருமூச்சு விட்டான் பல்கலைக் கழகம் படிக்கும் அண்ணன் இன்னுமொரு முறை இப்படி இனிப்பு வாங்கி மகிழ மீண்டும் வருமா பள்ளிக் காலம்?
-
- 2 replies
- 781 views
-
-
கண்ணெதிரே காண்பவை கானல் நீராய்த் தெரிகிறது மனிதமற்ற மனங்களின் ஆசைகளின் ஓலங்களில் அகப்படும் உயிர்கள் உன்னதம் இழந்து உயிர்வதை பட்டு உழல்வதே வாழ்வாகி உடைந்து நொறுங்கி ஓட்டமுடியாததான ஓர்மத்துடன் ........... நகர்வின் அபிநயங்களில் நல்லவராய் முகம் காட்டி புறத்தே புழுவாய் பேய் முகம் காட்டும் பேடியராய்ப் பலர் பித்தர்களாக்கி எமை பரிதவிக்க வைத்து பரவசம் கொண்டிடுவர் வடிவங்கள் பலவெடுத்து வக்கணையாய்ப் பேசி வஞ்சப் புகழ்ச்சியுடன் வாசனை அற்றவராய் வன்மம் புடைசூழ வஞ்சனையே அவராய் வலிந்த விதியினதாய் வடமிழுக்க முன்னிற்பர் வகை தெரியா மனமே வாழ்வைப் புரிந்திட வண்ணங்கள் அல்ல வாழ்வு ...... மேடுகள் காடுகள் பகை நிறைத்த மாந்தர் பகிர்தலற்ற பாள்மணம் மிகைப்பட அனைத்தும்…
-
- 4 replies
- 705 views
-
-
மழையை என்றால் குடையும் கூடவே .. வானம் என்றால் முகிலும் கூடவே ... மரம் என்றால் காற்றும் கூடவே .. நிலா என்றால் நட்சத்திரம் கூடவே .. ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் .. என்னை விட்டு உன்னை தேடலில் .. உன் கண் கண்டபின் காதல் தேடலில் .. இருவரும் சேர்கையில் காமம் தேடலில் .. எல்லோரும் போல் உன்னை ரசிக்க .. எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல .. எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ... எல்லோரும் போல் நான் புலவன் இல்லை .. என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் .. என்னுள் என்னை தேடும் காதல் .. உன்னில் மட்டும் வராமால் போகுமோ .. எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் .. அதுவரை நம் காதல் கவிதையில் .. வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் .. எம் குடில் நாம் அமைக்கு…
-
- 10 replies
- 825 views
-
-
விரல் இடுக்கில் வீழ்ந்து கிடக்கிறது உயிரும் உலகமும் .. கடைசித் துளியினை இரசித்து விட்டு இறந்து போகலாம் நா . தேடுகிறது ... பொங்கி வழியும் சம்பெயின் விம்மி நிக்கும் நீ ..
-
- 5 replies
- 737 views
-
-
உதட்டில் வழுக்கியதைக் கூட்டி விரல்களில் ஏந்திக் காற்றில் மிதந்ததில் ஏத்தினேன். மிதந்தது சுமந்ததன் நிறைவேறாத கனவோடு புணரமுயன்றதில் உருமாறிக்கொண்டது. மாறியதால் விழுந்திட மோகங்கொண்ட நட்சத்திரம் உடன் கட்டை ஏறியது, துகில் போர்த்தி வானம் அழுதது. கண்ணீரோடு கலந்து வேர்களால் நுழைந்து மலரொன்றில் உறங்கிட விளைகையில் ஒட்டிக்கொண்ட வாசனையால் வியாபிக்கத்தொடங்கியது எங்கும், யாரோ சிலரின் உரையாடலில் இதழ்களாய் பிரிபட இசையாகியது. இன்னும், சிலரின் சினத்துப்பலால் இறுகி உறைந்துபோனது. இப்போது உங்களிடம் வந்திருக்கிறது என்ன செய்யப்போகிறீர்கள்? * இது ஒரு முயற்சி. என்னனவில் நான் தோற்றுபோயும் இருக்கலாம். உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நண்பர்களே..
-
- 3 replies
- 647 views
-
-
இனிய இளகிய காலை ஒன்றில் மனவெளியில் மட்டற்று மயக்கங்கள் நீண்டு தெரியும் நெடுமரங்களோடு நட்பாய் நடக்கையில் நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில் நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும் நிழல் தந்த இலைகள் நெஞ்சமதை நெகிழ்க்கின்றன உதிர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க் கூடியிருந்த புலுனிகள் கூட்டம் கூடி ஒன்றாய் புல்லமர்ந்து கொற்றித் தின்றன எதையோ பின் கூடி எழுந்து கோலமிட்டபடி கண்ணிமை மூடித் திறக்குமுன்னே காணாமலும் போயின மீண்டும் அவை வந்து போகலாம் மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து மாயங்கள் செய்யலாம் காலம் மாறிக் கடும்பனி போனபின் குனிந்த மரங்கள் மீண்டும் குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம் நாம் மட்டும் தொலைந்த எம் இருப்பை எண்ணி தொலைவிலும் தெரியா துள…
-
- 10 replies
- 727 views
-
-
உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...! மூச்சு முட்டும்வரை... என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!! உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்! என்னை வெறியேற்றி... உன் வெறியை தீர்த்துக்கொள்ள முனைகிறாய்!!! அந்த ஆரவாரத்துக்குள்ளே.... என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது! சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து, சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்.... அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!! அது மயக்கமா....? அல்லது மரணமா....?? புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!! எச்சங்கள் மிச்சங்களை கொஞ்சங் கொஞ்சமாய்... சத்தமின்றி அழித்துவிட்டு, மீண்டுமொரு இரவுக்காய் அலையும்... இராக்கால ராட்சசியே! உன் சிற்றின்பத்துக்காய், என் குருதி குடிப்பதை... எப…
-
- 11 replies
- 1.5k views
-
-
என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன். பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது ------------
-
- 14 replies
- 1.7k views
-
-
நாலு நாள் சுற்றுலாவும் நரிகள் அடைந்த புளுகும்..! நரிகளை பரிகளாகினார் மாணிக்கவாசகர்,புலிகளை நரிகளாக் 19.10.2014-கினார் மகிந்தரும்,பிரபாவும்.அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு -துலாத்தன். இருந்திருந்து பார்த்தேன் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனசுக்குள் குபீர் என்று ஒரு சிரிப்பு குமைவதாய் பரபரப்பு. உலையில் அரிசி ஏறாவிட்டாலும் பரவாயில்லை. உலைக்களத்தை திறக்காமல் உட்கார முடியவில்லை. மன்னாதி மன்னர் வந்துபோன கொட்டகைகள் இன்னும் கழற்றி முடியவில்லை. கொஞ்ச நாளுக்கு முதல் ஒரே கொலைவெறி கோழிக் கூட்டுக்குள்ளும் புகுந்து பதிவெடுத்தார்கள் படைத்தம்பிகள். புலி இருந்த குகைக்கே இந்தனை பயமா? அங்குமிங்கும் பார்த்துவிட்டு எங்கள் சனம் எள்ளி நகையாடியது. கடித்து குதறி கபளீகரம் செ…
-
- 0 replies
- 726 views
-
-
வரலாற்றில் எங்களை அவர்கள் அரக்கன்கள்களாக சித்திரித்தனர் எங்கள் வரைபடத்திலும் எங்கள் கதைகளிலும் இருளை நிரப்பி தீபாவளி என்றனர் எங்களை அடக்கி எங்களை ஒடுக்கி எங்கள் அசுரர்கள் என்றழைத்து தாங்கள் செய்தனர் மாபெரும் அநீயை எங்கள் இனத்தை அழிக்க மகிந்த நடத்திய மனிதாபிமானப் போரைப்போலவே வீரன் என்றும் தர்மத்தின் தலைவன் என்றும் மகிந்த மார்தட்டுவதைப் போலவே வல்லமைகளைப் பயன்படுத்தி அதிகாரங்களை பயன்படுத்தி மக்களை கொடுமைப்படுத்துபவர்கள் கொல்பவர்கள்தான் அரக்கர்களாம்... அப்படி என்றால் எம்மை வதம் செய்து எம்மை கொன்று எம் இரத்தம் குடித்து சதை தின்று பேய்க் கூத்தாடுபவர்கள்தான் அரக்கர்கள் அந்த அரக்கர்கள் இன்னும் அழியவில்லை எங்கள் மண்ணில் இன்னும் எந்த ஒளியுமில்லை http://gl…
-
- 0 replies
- 612 views
-
-
கையில் நெருப்பிருக்கு என்னிடம் .. பற்றவைக்க தான் திரி இல்லை .. ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் .. ஆடை யாரு கொடுப்பார் இலவசம் .. ஆயிரம் கேள்வி எழும் மனதில் .. ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் .. என்னை துறந்து பார்க்க விரும்பி .. அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை .. வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் .. அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் .. ஆரியன் கொன்றது தமிழனை என்றால் .. முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி .. தமிழ் மொழியா அல்லது தனி இனமா .. யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை .. ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் .. நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது .. என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா .. எனக்கு மட்டும் எப்படி வந்தது …
-
- 6 replies
- 854 views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழன் இராவணன் ஆண்ட புரி ஹிந்திய இராமன் ஆக்கிரமித்த புரி தமிழிச்சி குவேனி பூர்வீகமாய் குடியேறிய புரி கள்வன் விஜயன் குடி அமர்ந்த புரி..! மொழிப் பிசையல் சிங்களம் உதித்த புரி செந்தமிழ் உதிர்ந்த புரி சிங்கம் - மனிதக் கலப்பு கதை தலையெடுத்த புரி சோழப் பரம்பரை புலி தலை சரிந்த புரி..!! மேற்கு ஐரோப்பியர் விரும்பிய புரி வடக்கு ஹிந்தியர் அரவணைத்த புரி பெருஞ்சுவர் தாண்டி சீனர் கொண்டாடும் புரி கிரம்ளின் கண்ட ரஷ்சியர் அதிசயத்த புரி..!!! கடலலை கொட்டும் மணற்திட்டால் இணைந்த புரி பல கடற்கோள் கண்ட புரி மகிந்த எனும் மந்தியால் சிதையும் புரி ஆண்ட தமிழர்களுக்கு புதைகுழியாகி நிற்கும் புரி..!!!! கழனியும் காடும் கண்ட புரி மலையும் மடுவும் கொண்ட புரி இனக் குரோதம் வளர்த்…
-
- 13 replies
- 1.6k views
-
-
நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில் தனிமையின் பயத்தால் உனைப் பற்றிப் பேசத்தொடங்குகிறேன். பிரிய தோழி, நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி அறியப்படாத வர்ணமொன்றாகி அறையெங்கும் நிறைகிறாய். வெட்கமகற்றிக் கூந்தல் கலைத்து இயல்பாயென் போர்வைக்குள் நுழைகிறாய். பரவும் வெப்பம் பெருமூச்சினை நினைவூட்ட என் தனிமை நிர்வாணத்துள் ஒளிந்து கொள்கிறது. குறிப்புணரா பொழுதொன்றில் நிறைகாமம் அழிந்துபோக ஆழியின் பெருமௌனத்துடன் அடங்கி விழித்துக்கிடக்கிறேன். அன்றொருநாள் உன், இதழ்களிலிருந்து இறங்கிய சாத்தான் மூன்றாம் இரவிலும் உயிர்த்தெழ, எதிர்கொள்ளத் துணிகிறேன் தற்கொலை ஒன்றுக்கு முன்னான அமைதியுடன்.
-
- 9 replies
- 873 views
-
-
மழை பின்னிப் பெருமழையெனப் பொழிகிறது மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம் பூசத் தொடங்கிவிட்ட இம்மண்ணில் இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின் அன்னியமாகி தொலைந்தேவிடுவோம் என்னும் துயராய் வாழ்வு அசைகிறது சலனமின்றி மழையை ரசித்தலில் காற்றில் துகள்களாகி கரைந்துபோகும் தேசம் அது ஒரு கோடைத் துலம்பலில் பிரிந்துவந்த என் மண்ணில் இன்னமும் புதைந்திருக்கிறது மௌனத்துள் மழை தடுமாறிக் கருக்கொள்ளும் மேகங்களும் காற்றள்ளப் போய்த் தொலைகிறது... வெள்ளிகள் முளைக்காத இருண்ட இரவுகளில் கடந்துபோகிறது துயர நிலவு தடுமாறி உயிராகும் வார்த்தைகளை கண்களில் நீர் அள்ள, கடந்துபோகும் காலத்துடன் மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன். ஆழக்கடலில் கலந…
-
- 4 replies
- 646 views
-
-
-
மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கபடியாடுகின்றன கண் மூடும் வேளைகளில் கூட பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…
-
- 1 reply
- 634 views
-
-
வானம் இன்று வண்ணமிழந்து அழுகிறது மேகம் கூட நிறமிழந்து பொழிகிறது ஊசிக் காற்று உடலை வருத்த உணர்வுகள் எல்லாம் உடல் சுருக்கி ஒன்றுமற்று ஓடியே செல்கின்றன இளவேனில் மழை இதமாய் நனைத்திடும் கோடையில் மழை குதூகலம் தந்திடும் மாலை மழை மனதை மயக்கிடும் குளிர்கால மழையோ குலை நடுங்கிக் கூதல் ஓடக் கொட்டமடக்கிடும் கோடையை நனைக்க மழை வேண்டும் குழந்தைகள் நனைய மழை வேண்டும் காதலர்களுக்கும் மழை வேண்டும் கனவுகள் கடந்து காலம் காட்டவும் நினைவுகள் களைந்து நின்மதியுறவும் நினைந்து நினைந்து நீ வாராது மழையே நினைக்கும் பொழுதில் மட்டும் நீ வா
-
- 3 replies
- 648 views
-