கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
புதியவள் ஒருத்தி என் அறையில் என்னோடு.. நடு நிசியை நோக்கி நேரம் ஆகிறது.. படுக்கைக்குப் போக.. விளக்கை அணைக்கவா இல்லை விடவா.. உள்ளம் தடுமாறுகிறது...! உள்ளூர ஒரு பயம் என்னை அணுகுவாளா உயர நகர்வாளா பின் என் உடல் மீது பாய்வாளா.. அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??! அனுபவமின்றியவன் நான் சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்... அவளோ என் அறைக்குள் துணிவோடு.. அனுமதி இன்றி நுழைந்தவளாய் சுவரோடு ஒட்டியவளாய் நகர்வின்றி... என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள் அதை அழைப்பு என்பதா எச்சரிக்கை என்பதா..??! சிந்தனை குழம்புகிறது..!! போனால் போகுது எனியும்.. விடுவதில்லை இவளை..! விட்டால் என் நித்திரை இன்றி இரவுகளுக்கு யார் பதில் சொல்வது..??! நொடிகளை வீணாக்காமல் …
-
- 20 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 749 views
-
-
மனமேடை ஊஞ்சலிலே நடனமிடும் இசையசுரா உனதோடு சொன்னதையே உதையாக ஏன் நினைத்தாய்? நினைவிடையே தினவெடுக்கும் நீஎந்தன் நட்பென்று எனையா நீஎண்ணிவிட்டாய் உனையிகழும் பிறப்பென்று? பணமேதும் பகைக்கவில்லை பிணமாக மணக்கவில்லை குணமாக்கும் சிறுவார்த்தை பாசாணம் ஆனதுவோ எழுத்தின் எதிர்வீச்சால் என்னெண்ணம் கன்றியதோ வழுக்கிய வார்த்தையில் அழுக்கும்வந்து அணைத்ததுவோ?! துரும்பும் தூணாகும் காற்று கனத்திடுமா புகையும் நெருப்பாகும் படத்தில் எரிந்திடுமா திசைகள் மாறிடுமா பசைகள் விலத்திடுமா விதிகள் இதுவென்றால் விலத்தல் எவ்வாறு?!
-
- 1 reply
- 834 views
-
-
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ... சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது .. மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் .. டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி .. ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே .. எல்லாம் மாமன் மச்சான் சித்தப்பன் .. நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் .. எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது .. கணக்கும் இல்லை வழக்கும் இல்லை .. கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் .. பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல .. சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் .. சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் .. சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் .. சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் .. சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில்…
-
- 3 replies
- 815 views
-
-
மலரோடு நேசம் வைக்க குருவிக்கு கற்றுத் தரத் தேவையில்லை.. நிலவோடு நேசம் வைக்க வானுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை.. இதழோடு நேசம் வைக்க முத்தத்துக்கு எச்சில்கள் தேவையில்லை.. சூரியனோடு நேசம் வைக்க சூரியகாந்திக்கு மின்னஞ்சல் தேவையில்லை.. தென்றலோடு நேசம் வைக்க தோப்புக்கு பேஸ்புக் தேவையில்லை.. காலத்தோடு நேசம் வைக்க வாழ்க்கைக்கு செல்போன் தேவையில்லை.. கருவோடு நேசம் வைக்க இலத்திரனுக்கு புவிஈர்ப்பு விசை தேவையில்லை.. என்னோடு நேசம் வைக்க.. மின்னணுக்களில் மின்னிய உன் காதலை அழிக்கத் தேவையில்லை.. காரணம்... உன் மின்னணுக்கள் என் உடலணுக்கள் எங்கும் நிலைபெற்று விட்டதால்..! Spoiler (யாவும் கற்பனை என்று சொல்ல முடியல்ல. பழைய மின்னஞ்சல்களை வாசித்த…
-
- 5 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 744 views
-
-
ஒரு நாளும் மழையில் நனையாத நான் நேற்று மட்டும் ஏன் நனைந்தேன்.....? மழைத்துளியில் குளித்தாவது உடல் வெப்பதை போக்கி கொள் என உள்மனம் சொல்லிச் சென்றது. ஒரு சிறு பொழுது மனிதர்களால் செய்ய முடியாத ஒன்று அந்த மழை கூட எனக்காக அழுதது போலும்.. நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்களாய் வண்ண வண்ணப் பூக்களாய் பூத்து நின்ற கனவுகள் காரணமின்றியே உலர்ந்து கொட்டி விட்டன.... என் ஒரு கனவாவது பலித்திடனும் என பகல் இரவாய் விரதம் இருந்தென்ன பயன்..... கண்ட கனவுகள் எல்லாம் பகல் கனவாகி போக என் கனவுகளும் காணாமல் போனோர் பட்டியலில் உரிமை கோர வழியின்றி விழி பிதிங்கி நிற்க ஒருவர் மட்டுமே நிழலாய் தோன்றினார். தூங்கும் போது காண்பது கனவு அல்ல தூங்க விடாமல் காண்பத…
-
- 11 replies
- 1.1k views
-
-
ஊனத்தின் வலியறியா மானிடா ஓரே ஒரு பொழுது உன் காலையோ கையையோ கட்டிப் போட்டு கிடந்து பார் . ஊனத்தின் வலியறிவாய்....
-
- 38 replies
- 2.8k views
-
-
சாட்சியம் காலத்தின் கட்டாயம் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் சித்திரவதைகள் என எம்மினம் சின்னாபின்னப்படுத்தப்பட்டு எமது தேசமும் எரிக்கப்பட்டபோது உலகம் கண்மூடி நிற்க உண்மைகள் புதைக்கப்பட்டன. இப்போ சீமெந்துச் சுவரில் முளைவிட்ட சிறு விருட்சம்போல் உண்மை மெல்ல மெல்ல வெளியேறுகிறது. தன்கடமையை மறந்த ஐ. நா மன்று கதிகலங்கி நிற்க மனிதவுரிமை மனச்சாட்சியாய் வாய்திறக்கிறது. சாட்சியம் கோரி வாய்திறக்கும் மனிதவுரிமை ஆதரவில்லாமல் அனாதையாய்விடக் கூடாது. பார்த்ததை பகிர்ந்ததை பட்ட துன்பத்தை துணிவுடன் எடுத்துக் கூறி தமிழர் துயர் துடைக்க சாட்சியம் வழங்கு சாட்சியமில்லாவிடத்து உண்மையும் அனாதையாகிவிடும். மனச்சாட்சியும் மௌனமாகிவிடும். தயங்காதே! தமிழீழ விடுதலைக்காய் தன்ன…
-
- 4 replies
- 727 views
-
-
சிவரமணியின் கவிதைகள் சிலவற்றை எனது பாடசாலை நாட்களில் படித்திருக்கிறேன். நல்ல கவிதைகள்.இவர் எண்பதுகளில் புளொட் அல்லது ஈ.பி்.ஆர்.எல்.எவ். அமைப்பில் இணைந்து இயங்கியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்..சரி யாகத் தெரியாது இவரைப்பற்றிய விபரங்கள் தெரிந்த யாராவது யாழ் களத்தில்இருந்தால் தெரியப்படுத்தவும்..அறிய ஆவலாயிருக்கிறேன்..அவரிற்கு என்ன மனவிரக்தியோ தெரியாது 90ம் ஆண்டளவில் தன்னுடைய கவிதைகளையெல்லாம் கொழுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாராம்.இங்கு அவரின் கவிதை ஒன்றை இணைக்கிறேன் அவர் 83ம்ஆண்டு எழுதிய கவிதையொன்று இன்றை காலத்துடனும் ஒத்துப்போகின்றது எழுதிய ஆண்டு: 1983 எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன் புத்திசாலித்தனமான கடைசி மனி…
-
- 16 replies
- 5.9k views
-
-
உன் வலிகளின் பெறுமதி அறிவேன் கண்ணே! சிறகெனச் சொல்லி சிலுவை தந்து சுமக்கச் சொல்வர்! முத்துநகை சிதறிவிழ முள்முடி சூடி அழகு பார்ப்பர்! கருணையுடன் கைகளில் ஆணிகள் கடாவிக் களிப்புறுவர்! எட்டி நின்று எட்டி தந்து குடிக்கச் சொல்வர்! ஏனெனில் கடவுளின் மகள் நீ! என் அன்புச் சகோதரி யாயிக்காக 01 sep 2014
-
- 0 replies
- 748 views
-
-
-
- 1 reply
- 593 views
-
-
ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை வருடங்கள் பல ஓடிய பின்னரும் யாரைப் பார்த்தாலும் எங்காவது அண்ணாவைக் கண்டீர்க…
-
- 3 replies
- 768 views
-
-
தமிழ் ஹைகூ 1. தெருவில் இளைஞன். ஜீன்சில் ஓட்டை. தைச்சுப் பிச்சதா பிச்சுத் தைச்சதா? 2. போராளி மரணம்! செய்தி வந்தது ஆர்வலர் கேட்டார் அடிபட்டா பிடிபட்டா? 3. முக்கிய நபர் கைது. செய்தி. குழந்தை கேட்டது: முக்கினால் குற்றமா? 4. பசித்தது. றோல்ஸ் வாங்கினேன். வைத்திருந்தான்! முன்னுக்கொண்டு பின்னுக்கொண்டு இறைச்சித் துண்டு. 5. ஏமாற்றிவிட்ட முன்னாள் காதலி அகதிக்கு எழுதினாள்: 'தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்குதவாது.' ஏமாந்து போன அகதி எண்ணினான்: 'நீலநிற வான்கடிதம் வழங்கியது வாழ்க்கையல்ல' 6. எயார்ப் போட்டிலிறங்கிய ஊர்ப்பிள்ளை கேட்டாள்: 'உங்கள் படம் வேறாயிருந்ததே! 'மாப்பிள்ளை சொன்னான்: 'கவலைப் படாதே வழுக்கை வாழ்க்கையல்ல.' 7. போன் நம்பர் மறந்துவிட்டத…
-
- 11 replies
- 1.8k views
-
-
மனம் என்னும் மாயப் பிசாசு மறைந்திருந்து கொல்லும் எண்ணங்கள் எதிரிகளாக கடிவாளமற்ற குதிரைகளில் காததூரம் கடக்கும் சொற்களற்ற நிழல்களிநூடே சொல்லாது விடும் வார்த்தைகள் கோர்த்து சுவற்ற சிற்பங்களாய் கனவுகள் ஆயிரம் வடிக்கும் பகுத்தறிய முடியா உண்மைக்கும் பொய்க்கும் இடையே சஞ்சலம் மட்டும் கொண்டு சக்திகள் எல்லாம் அற சகலதும் துறக்கத் தோன்றும் ஏன் தான் மனிதற்கு மட்டும் இறைவன் ஒருமனம் தந்தான் விருப்பமற்றதை விலக்கி வேண்டாதவற்றை கழற்றி வில்லங்கம் கொண்டதை விடுத்து நின்மதியாய் நான் வாழ நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு
-
- 13 replies
- 1k views
-
-
நீண்ட நெடு மரங்களிநூடு நிதானமாய் நடக்கிறேன் நான் மழைத்தூறல் முகம் நனைக்க மகிழ்வாக மழையில் நனைந்த நாள் மனதில் வருகிறது. மனதின் ஓரங்களில் என்றும் ஒட்டிக்கொண்டே இருக்கும் காய்ந்துபோன சிலதும் பழுப்பாகிக் கொண்டிருக்கும் சில நினைவுகளுடனும் கவலையும் மகிழ்வுமாய் மனம் பயணிக்கிறது காததூரம் வந்துவிட்டோம் மீண்டும் வர முடியாத அந்த நாட்களின் நினைவுகளுடன் மட்டுமாய் என்பது மனம் கனக்க மாற்ற முடியாததான நாட்களின் வலுவிழந்த இறந்த காலத்தின் வரிகள் மட்டுமே நினைவில் எல்லாமும் எப்போதும் என் நினைவில் இல்லை சிறுபராயத்து சிதிலமடைந்த நினைவுகளில் சில மட்டும் செருக்கடையா மனதின் சிலும்பல்களாய் வந்துபோக மீட்டல் செய்ய முடியாத மறந்து போனவைகளுக்காக வருந்த மட்டுமே முடிகிறது
-
- 6 replies
- 712 views
-
-
தொலையும் நின்மதியே நிரந்தரமாகி நிற்கதியாக்கி விடுகின்றது உரிமையற்ற நிலைகளின் ஈடாட்டம் கண்டு ஏதுமற்றதாக ஆசை கொள்கிறது மனது மனதில் கூடுகட்டும் குப்பைகளும் ஆற்றாமைகளில் அழுந்தும் எண்ணங்களுமாய் எல்லாவற்றையும் எதிரியாய் நோக்க எந்நேரமும் எதுவுமாகிவிடாதிருக்க எனக்கே நான் எதிரியாகிறேன் செய்கைகளும் செயற்கையாய்க் கோர்க்கப்படும் வார்த்தைகளும் எந்நேரமும் செயல்களின் பிரதிபலிப்பை எதிர்மறை எண்ணங்களின் பிரதிநிதியாக்க பகுக்கப்படும் சிந்தனையின் செயல்களில் பக்கவிளைவாகின்றன வார்த்தைகள் உண்மையற்ற புரிதலற்ற அன்பும் காரணங்களுக்கானதான செயலும் எங்கோ ஓரிடத்தில் ஏதுமற்றதாகிவிடுகிறது உண்மை அன்பு எந்தவித எதிர்பார்த்தலுமின்றி என்றும் வற்றாத நதியாய் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறத…
-
- 3 replies
- 786 views
-
-
பேசவேண்டும் யார் இருக்கிறீர்கள் வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில் நிறைகிறது என் குரல். நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால் தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம் என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும். எதைப்பற்றி பேசுவீர்கள்.. வழிக்காத என் தாடியைப் பற்றி கசங்கிப்போன என் ஆடையைப் பற்றி கிழிந்துபோன காலனி பற்றி அருகில் இருப்பவரைப் பற்றி.. ஓ, நீங்கள் என்னைப்பற்றி பேசவே மாட்டீர்களா? ஓசைகளை கழற்றி எறிந்துவிட்டு சொற்களை கொட்டுவீர்கள் பின் எப்போது சிதை ஏற்றுவீர்கள் நான் செத்தபின்பா அப்போதாவது என்னைப் பற்றி பேசுவீர்களா என்ன. எப்போதுதான் பேசுவீர்கள் என்னைப்பற்றி? எனக்குத் தெரியும் உங்களால் பேசவே முடியாது. ஏனென்றால், நீங்கள் உங்க…
-
- 5 replies
- 873 views
-
-
கட்டிளம் காளை இது... தலைக்கனம் இருந்தது நேற்று வரை..!! கண்கள் செய்த சதியால் சித்தம் குழம்பிய காளை.. காலை ஒன்றில் சுபமுகூர்த்த வேளையொன்றில் கறவை ஒன்றின் கழுத்தில் ஏற்றியது நாண்.!! அடுத்த நொடியே காளையது... நான் எனும்.. திமிரிழந்தது. அடுத்த மணியில் காளை எனும் உணர்விழந்தது. அடுத்த நாளில் அடிமாடாய் போனது அதன் நிலை..! காலக் கழிவினில் அடிமாடு நிலையும் கழிய பூம்பூம் மாடாக.. கூடிப் பெருத்த கறவைக் கூட்டம் கூட்டமாகிப் பெருகி நின்று துரத்துது..!! தனித்துவிட்ட நேற்றைய காளை.. கிழடாகி தோலுக்கும் தசைக்கும் பெறுமதியற்று சுடலை ஏகுது..! இதுவே கலியுகத்தில் காளைகளாய் திமிரெடுத்த உயிர்களின் வாழ்க்கை எனும் வட்டமாகும்..!!! வேண்டுமா எனியும் இந்த நிலை.. புதிதாய் ஓர் விதி செய்…
-
- 33 replies
- 2.8k views
-
-
எல்லா காலங்களினது உழைப்பையும் ஒன்று திரட்டி சேகரித்த விதைகளை பயிரிடும் சற்றுமுன் தீர்ந்துபோன விதைப்புக் காலத்தின் கடைசி பின்மாலைப் பொழுதில் அஸ்தமன சூரியனின் இளஞ்சூட்டில் நெளிவெடுத்து வருடும் காற்றில் தலையசைத்து சிரிக்கும் நெற்பயிருக்கு தீங்கொன்றும் நேரா வண்ணம் வழிநெடுகிலும் கையில் உள்ளதை சிந்திச் சிதறியபடி செலகிறேன் பசித்திருக்கும் பறவையின் கூடுவரை.., நகரத்தின் பல்லிடைச் சக்கரத்தில் சக்கையாய் சிதறுண்ட வாழ்க்கையின் எஞ்சிய சிறுதுரும்பின் உயிர்நீட்சிக்காய் கனவுச் சிறகுகளை களைந்துவிட்டு மீண்டுமொரு விதைப்பு காலத்திற்காக தேடல் துவங்குகிறது..... ~ராஜன் விஷ்வா
-
- 9 replies
- 926 views
-
-
-
காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் குளித்தென்னை மகிழென்று கூவி அழைக்கின்றன இதமான சூடற்ற காலை வெயில் எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள் பசுமையும் அழகு கூட்ட பார்க்கும் இடமெங்கும் பரவசம் தருகின்றன குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை கூம்பான இதழ் கழற்றிக் கொள்ளைச் சிரிப்புடனே நிலம் பார்க்க நிற்கிறது வாசனைப் பூக்களெல்லாம் வாடியவை காற்றில் கழித்து வசதியாய்ப் பார்த்தபடி வகைக்கொன்றாய் இருக்கின்றன வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில் கண்மலர்ந்து மடல்கள் விரித்தே கதிரவன் கண்பார்க்க காதலுடன் நிற்கின்றாள் கடமை என் காட்சிகள் கலைக்க கவிந்த மனம் கட்டறுத்து வீழ கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி காலத்தின் கணக்கில் கரைந்த…
-
- 6 replies
- 6.8k views
-
-
செஞ்சோலை சொந்தங்களே ! என்சோலை பந்தங்களே !!! யார் கொடுத்தார் சாபம் எமை பிரிந்தீரே ஏன் கொடுத்தார் சோகம் புரியவில்லை நஞ்சாகி நீங்கள் எமை பிரிந்தீரே நெஞ்சோடு நீங்கள் தொடர்ந்தீரே பிஞ்சான நீங்கள் பினமாகிநீரே பிணமாலை கண்டு நீர் அழுதீரோ? மகிந்தாவின் சதியில் மாண்டு மடிந்தீரே மண்ணோடு மண்ணாகி எம்மை மறந்தீரே அந்நாளில் அநியாய சாவை அடைந்தீரே அப்பாவி உயிராக வாழ்வை துறந்தீரே கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே. வித்தான நீங்கள் மீண்டும் வளர்வீரே எம்மோடு ஒன்றாகி வாழ்வை பெறுவீரே எந்நாளும் உம்மை எண்ணி விழிநீரே எம் கண்கள் நீர் வந்து துடைப்பீரோ? கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே.
-
- 2 replies
- 759 views
-
-
கடலேறி பொருள்கொண்டு கரையேற சென்றாய்-புரியாத கரியாரால் கைதாகி நின்றாய்.... உடலினுள் நோய்வந்து வாட்டையில் கூட துவளாது அவையேறி நோன்பது இருந்தாய்... பகை வந்து தமிழ் உயிரை பலியது கொள்ள பார்த்தே தான் நின்றதே பாரத தேசம்.. சதியோடு விளையாடி சதியாணை புரிந்தார் அரியணை காத்திட அவரைதான் தடுத்தார்... எதிரென்ன வரிகினும் எழுந்தேதான் நடந்தார் ஆவிதான் துறக்கினும் அவைகாக்க துணிந்தார்... இவரது ஆற்றலை இதயமா மறக்கும்...?? தமிழீழ தேசமே தலையிலே தூக்கும்... அண்ணனே உனக்காக அணியாக திரள்வோம் தூங்காது உன்னரு தூணாகி நிற்போம்... கலங்காதே அண்ணனே கண்ணீர் துடை உண்ணாமல் நீ வேண்டாம் உடல்தேறி நீ வேண்டும்....
-
- 13 replies
- 4.2k views
-
-
அமர்த்து இருக்கிறார் நடுவில்.. ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் .. கன்னியர்கள் கூட்டமாக விசியபடி .. நீதியை காக்கும் சபையாம் அது .. அன்றில் இருந்து இன்றுவரை உலகில் .. ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் .. ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி .. தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ... இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது .. இசையும் மாற்றம் இல்லை அவர்கள் .. இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ .. கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் .. அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் .. அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக .. அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் .. தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் .. வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து .. பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் .. சினம் காட்டி மீறல் என…
-
- 6 replies
- 1.1k views
-