கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் எந்தத் தீர்வையும் ஈழத் தமிழனிடம் கேட்க்காமல் இந்தியா போட்ட பிச்சை இது இன்னும் கிடந்து இழுக்குது சேடம் ஆயிரம் தடவை இந்தியா சொல்லியும் இலங்கை இதுக்கு மசிவதாய் இல்லை ஏதோ புலி தான் மறுத்தினம் என்றால் இப்பவும் ஏன் தான் மறுக்கினம் கொடுக்க 13 ம் பெட்டியோடு வந்த பெரியண்ணை தலையில் பிறத்தாலே நின்று துவக்கால அடிச்சும் சிங்களம் சொன்னது இந்தத் தீவில் எந்தத் தீர்வும் எப்பவும் இல்லை என்று அப்பவே சொன்னது விக்கிரமாதித்தன் கதையைப் போல சற்றும் மனம் தளராத இந்தியா சந்திக்கும் பொழுதெல்லாம் 13 ம் கதையை பல தடவை சொல்லும் இதுக்கு மேலாய் கொடு…
-
- 4 replies
- 901 views
-
-
சிவனே.! கண் திறவாய்.!! - கவிஞர் நகுலேசன். குருந்த மலை ஆதி சிவனும் காணமல் போனார்.. தேடிப்போனவர் நமச்சிவாய சிவநாமம் உச்சரிக்கவும் தடையென்றானது… வாழும் வழிபாட்டு மரபுரிமையை நாளும் தின்னும் காட்டாட்சி சாது சாது என்றபடி சகல இடமும் விரிவாகும்.. சிவன் பெயரால் சீவியம் நடத்தும் சீவன்களும் சாமரம் வீச இன்று.. தையிட்டியில் இராணுவ புத்தரின் அதிகார அத்திவார தோண்டுதல் நடக்கும்.. கண் மூடியிருந்தால் சிவபூமியாவும் காணாமல் போகும் சிவனே.! கண் திறவாய்.!! சிவனடியர்களே ! விழித்தெழுவீர் !! https://vanakkamlondon.com/literature/2021/01/100588/
-
- 0 replies
- 516 views
-
-
இடி – பாவேல்! அவர் கொன்றவர்க்கும் இவர் கொன்றவர்க்கும் அயலவர் கொன்றவர்க்கும் இருளற்ற இதயம் கொண்டதனாற் எவரெவராலோ கொல்லப்பட்டவர்க்கும் அள்ளிச் செல்லப்பட்டவர்க்கும் தள்ளி நில்லென்று சொல்லப்பட்டவர்க்கும் இன்னும் எதற்கென்று தெரியாமலேயே கொல்லப்பட்டவர்க்கும் நினைவுத் துாபிகளை எழுப்பியே தீருவேன் . எங்கே என்றும் சொல்லி விடுகிறேன் கடல் என்றால் அலையிலும் கரை என்றால் நுரையிலும் நிலம் என்றால் புழுதியிலும் நீர் என்றால் வான் பாயும் வெள்ளத்திலும் வளி என்றால் அது வென்ற காற்றிலும் ஆறென்றால் அதில் மிதக்கும் இலையிலும் நெருப்பென்றால் அதுவுறங்கும் சாம்பலிலும் எதுவுமே இல்லையென்றால் துணை வேந்தரின் கவட்டிலும்…
-
- 0 replies
- 509 views
-
-
எழுப்பாமல் விடமாட்டார்கள் நீ மறந்தாலும் உறங்கினாலும் விலத்திப்போனாலும் குனிந்தாலும் கும்பிட்டாலும் அடிமையாக சேவகம் செய்தாலும் அவர்கள் உன்னை விடமாட்டார்கள் உனது உந்து சக்தியாக அவர்களே அன்றும் இன்றும் என்றும்....
-
- 1 reply
- 550 views
-
-
எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year .🙏 மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன் ——————————————————————————— மார்கழி மாதமடி கண்ணம்மா மழை சிந்தும் நேரமடி பொழுது புலர்ந்ததடி பூத்திருக்கு காலையடி கண்ணம்மா பாவை இன்னும் துயிலுவியோ பரம்தாமன் புகழ் பாடல்லையோ மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே மழை சிந்தும் நேரமடி மங்கை உன் கூந்தலை போல் கங்கை அணிந்தவனை காதல் செய்யல்லையோ கண்ணம்மா கன்னி நீயும் துயிலுவியோ கடும் குளிர் காலையடி காலைக் கதிரவனும் கண் விழிக்கும் நேரமடி காலைப் பூ சூடலையோ கண்ணம்மா கண் இமைகள் பாடல்லையோ காலை …
-
- 4 replies
- 790 views
-
-
கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன் 😂 —————————————————————- இஞ்சியும் உள்ளியும் ————————— இஞ்சியும் உள்ளியும் தன்னையா கொல்லுமாம் கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. பயம் ——- மனிதரை கண்டு மனிதர் பயந்ததை பார்க்க கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. முகம் தொலைந்த மனிதன் ———————————- முகத்தை எல்லாம் மூடிப் போகும் மனிதரை பார்த்து கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கடுகு சிறிது காரம் பெரிது ———————————- கண்ணுக்கே தெரியாத என்னைக் கண்டு வீட்டுக்க ஒழிக்கும் மனிதனைக் கண்டு கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கொல்ல முடியல்ல ————————- எத்தினை யுத்தம் செய்தீர் எவ்வளவு மனிதரை கொண்டீர் என்னை மட்டும் கொல்லவா முடி…
-
- 5 replies
- 1.1k views
-
-
வரலாற்றின் மகள் - கவிஞர் தீபச்செல்வன் தந்தையே.! வரலாறு முழுவதும் இப்படித்தான் இருந்ததா ? நாங்கள் எப்போதும் அடிமையாகவே இருந்தோமா ? என் சிறு குழந்தையே.! நீ ஆக்கிரமிப்பாளர்களையும் அறிவாய் .. பாதுகாவலர்களையும் அறிவாய்.. நம்முடைய மூதாதையர் தம்மைத் தாமே ஆண்டனர்.. எம் நிலத்தின் அரசுகளை அந்நியர்கள் விழுங்கிக் கொண்டனர்.. தந்தையே! போர்த்துக்கீசர்கள் போய்விட்டனர்.. ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்.. பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்.. ஆனாலும் இன்னும் ஏன் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம் ? அவர்கள் வெளியேற இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்.. அவர்கள் திருப்பித் தந்ததை பின்னர் இவர்கள் பறித்துக்கொண்டனர்.. இவர்களின் விடுதலை…
-
- 0 replies
- 553 views
-
-
பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய் 71 Views பிரம்மஞானியின் பாதச்சுவடுகள் பாதை காட்டிடும் புறப்பட்டு வா…. ஈழத்தை நோக்கிப் பயணித்த பாதங்கள் இடையினில் நிக்குது பாரடா இளைஞனே தேசத்தின் குரலாய் அகிலத்தில் ஒலித்த புரட்சிக் குரலது கேட்குதா உனக்கு… ஈரேழு வருடங்கள் கடந்திட்ட போதும் ஓயாமல் நின்று அழைக்குது பாரு அன்ரன் பாலசிங்கம் அண்ணணாய் … அரசியல் ஆசானாய் … தத்துவ மேதையாய்த் தமிழீழக் கனவுடன் ஓயாது உழைத்தவர் இன்றைக்குத் தானடா ஓய்ந்து போனதாய்… ஈரேழு வருடங்கள் கடந்து போகுதே… எண்ணத்தில் ஏற்றிப் புறப்பட்டு வா! தலைவரின் கரத்…
-
- 3 replies
- 594 views
-
-
Dedicated to the farmers of India 🇮🇳 எங்கள் துயர் நீங்க வேண்டும்-பா.உதயன் எம் துயர் நீங்குமோ எம் துன்பம் நீங்குமோ எங்கள் நிலம் வாழ அந்த மழை தூவுமோ இப்போ உன் பசி தீரவில்லை உதவுவார் யாருமில்லை பச்சை போல் வயல்வெளியில் உன் பாடல் இசைக்கவில்லை வானம் இன்னும் இரங்கவில்லை வந்து மழை நனைக்கவில்லை தேனருவி பாயவில்லை பேச ஒன்றும் வார்த்தையில்லை உழுதுண்ட உன் வாழ்வு தொழுதுண்டு போவதுவோ உனையே நம்பி வாழும் உயிர்கள் எங்கு போவதுவோ காலம் எல்லாம் மாற வேண்டும் கடந்து இது போகவேண்டும் எங்கள் கண்ணீர் மழையாய் தூவ வேண்டும் வானம் பொழிய வேண்டும் வயல்கள் சிரிக்க வேண்டும் விதைகள் முளைக்க வேண்டும் இனி விடிவு பிற…
-
- 3 replies
- 1.2k views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் -விடையதைச் சொல்லு…! 76 Views விடையதைச் சொல்லு…! ********** சர்வதேசம் சொல்லுது இன்று மனித உரிமைகள் நாளாம் எமக்கு…அட இல்லாத ஒன்றை இருக்கெனச் சொல்ல இந்த நாளும் இருக்குது இப்போ… மனிதரின் உரிமை என்ன என்று எழுதி வைச்சவர் ஆரப்பா சொல்லு…? விடுதலைப் போரில் செத்தவர் யாரு…? நினைச்சுப் பார்க்க உரிமை இருக்கா….? கைதியாய் பிடிச்ச உறவுகள் எங்கே…? அவர்களின் நிலையதை அறிய உரிமை இருக்கா….? புனர்வாழ்வு பெற்ற எம்மவர் எல்லாம் நல்வாழ்வு வாழ உரிமை இருக்கா…? ஈழ மண்ணில் வாழும் எங்கள் இனத்துக்கு என்ன அடிப்படை …
-
- 0 replies
- 556 views
-
-
பேராற்றல் மிகு தீரங்கள் - தே. பிரியன் கவிதை வாழ்தலில் உயர்ந்து நிற்கின்றது பேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்க காலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன, ” யார் நாங்கள் “ ஏன்? எங்களை வேறாக்கிப்பார்க்கின்றீர்கள்…? அப்போது தான் மேலும் வலிக்கின்றது, உடைந்த மனச்சுவர்களை ஒருங்கிணைத்து எழும் போது உக்கிய வார்த்தைகளை எம்மீது தெளிக்காதீர்கள், உங்கள் இயலாமைகளை எம்மீது திணிக்காதீர்கள் உயிர் சிதைந்து வெளிப்புறப்பட்டு வாழ்வின் ஒவ்வோரு நிமிடங்களையும் வலிமையாக்கி உலகத்தை நேசிக்கின்றோம். “சற்று நிதானியுங்கள்” நாங்கள் சளைத்தவர்கள் அல்ல சாகா வரம் பெற்ற புனிதமும் விவேகமும் கொண்டவ…
-
- 0 replies
- 650 views
-
-
மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய் 90 Views ‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ என்கிறார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தமிழீழ மண் மீட்பு போரில் தங்களின் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை தன்னகத்தே சுமந்து நிற்கும் இந்த கார்த்திகை மாதத்தில், அவர்கள் விட்டுச் சென்ற கனவுகளைத் தாங்கி, உரிமைக்கான குரலை உலக…
-
- 13 replies
- 2.2k views
-
-
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் ”நிவர் புயல்” பற்றிய கவிதை நிவர் புயல் உருவாகியதில் இருந்தே அது விவாதப் பொருளாகவே இருக்கிறது. இருக்கையின் நுணியிலேயே இருக்க வைக்கும் நிவர் புயல் பற்றி பொதுமக்கள் பேசாத நேரம் கிடையாது என்று சொல்லலாம். பொதுவாக மழைக்காலங்களில் மீம்ஸ்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த காலமே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடுவதாக இருக்கும். ஆனால் நிவர் புயல் உருவெடுத்த பின்பு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதுதொடர்பான மீம்ஸ்களே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன. அந்தவகையில் நிவர் புயல் பற்றிய அடுக்குமொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது வலைதளவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த கவிதை வருமாறு:- …
-
- 0 replies
- 753 views
-
-
கார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020 உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள் உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள் உன்னுடைய நண்பன் யாரிடம்சரணடைந்தானோ அவனிடமே வேலை செய்கிறான் விதைக்கப்பட்டயாரும் முளைக்கக் கூடாது என்று ஒவ்வொரு நாளும் கடவுளைப் பிரார்த்திக்கிறவன் உனது மக்களின் பிரதிநிதியாகி விட்டான் நிறைவேறாத கனவு நீ நீண்ட கடல் எல்லைகளின் சொந்தக்காரன் நீ எல்லாப்போகங்களிலும்விற்கப்படும்நினைவும் நீ எல்லா நீதிமன்றங்களிலும் அவமதிக்கப்படுகிறாய் ஈமத்தாழிஒன்றுதான் உனக்கிப்பொழுதுபாதுகாப்பான இடம் இல்லாத நடுகல்லின் மீது சிந்தும் சூடான துளிக்கண்ணீரில் இளைப்பாறு பீட்சாவுக்காகயாருமிங்கேபோர…
-
- 0 replies
- 488 views
-
-
போ புயலே.. போய்விடு... ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?..நிவர் புயல் - வைரமுத்து கவிதை சென்னை : நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல் வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் பாமர உடல்களைப் பட்டம் விடாமல் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? ” என்று பதிவிட்டுள்ளார் https://m.dinakaran.com/article/news-detail/633780
-
- 0 replies
- 527 views
-
-
ஈமத்தாழி - கவிஞர் தீபச்செல்வன் மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன தடைசெய்யப்பட்ட முகங்கள் சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்…
-
- 0 replies
- 591 views
-
-
பிறப்புக்கும் இறப்புக்குமான மானுட உனது உரிமைகளை கொண்டாடுவதும் நினைவு கூறுவதும் போன்றே எனது பிறப்புக்கும் இறப்புக்குமான நினைவுகளை நான் கொண்டாடுவதை நினைவு கூறுவதை மறுக்கும் உரிமை உனக்கில்லை. All human beings are born free and equal in dignity and rights
-
- 2 replies
- 957 views
-
-
நோய் எதிப்பு சக்தி குறைகிறது விலை விண்ணை தொடுகிறது மஞ்சள் ......................... வியக்க வைக்கும் சிகிக்சைகள் மார்புதட்டி பெருமைபேசும் மருத்துவ ர் சிரிக்கிறது கொரோனா .......................... மறந்த வாழ்வியல் முறை தண்டனை கொடுத்து வருகிறது கொரோனா .......................... உயிர் கொல்லி நோய் சற்று நம்பிக்கை தருகிறது மிளகு ரசம் @ கவிப்புயல் இனியவன்
-
- 7 replies
- 968 views
-
-
கஸல் கவிதைகள் 1) கடவுளே என்னை மன்னித்துவிடு நான் காதலை கும்பிடுகிறேன் 2) நீ அழகுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் 3) உனக்கான அரிதாரத்தை மான்களே கொண்டுவருகின்றன 4) உண்மையாகச் சொல் நீ தேவதைகளின் அசலா! நகலா! 5) உன்னை சுவைபட சொல்ல வேண்டும் என்றால் நான் சோகப்பட வேண்டும் 6) இரவு நதியில் உன் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது 7) நீ தாவணி அணிந்தபோதுதான் என்னில் பிரபலமானாய் 😎 உன் ரகசியத்தை அறிந்ததால் நான் அம்பலமானேன் 9) என் இதயத்தில் நீ தங்காவிட்டாலும் பரவாயில்லை வந்தாவது போ 10) விளக்குகள் அணைக்கப்பட்டால் நீ எரிகிறாய் 11) அவளைப் பிரிந்துவிட்டாயா பரவாயில்லை தேடாதே நீ கவிஞன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு முறை பாருங்கள் ................ என்.... கருத்துக்கள்.....! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ...... ! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதைகள் தொடரும் சிலுவை சுமக்கும் மனிதன்... ----------------------------------------- மனிதனின் ...... எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... விளைவுகள் ஆணியாக.... அறையப்படுகின்றன....! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்பட…
-
- 2 replies
- 740 views
-
-
மதம் பிடித்த மனிதன் மனிதனையும் அவன் நாகரிகத்தையும் கொலை செய்துகொண்டிருக்கிறான் எந்தப் படுகொலைகளையும் நான் ஏற்க மாட்டேனென அவன் கன்னத்தில் அறைந்து சொல்கிறது மனிதம் எனக்கான உரிமையை நீ பறிப்பதென்பதும் உனக்கான உரிமையை நான் கொல்லுவதென்பதும் எனக்கானதும் எனது குழந்தைக்கானதுமான வழியை நீ விடாமலிருப்பதும் எல்லா மதமும் மனிதனும் சமம் என்பதை நீயோ நானோ மறுப்பதென்பதும் என் மதத்தை விட உன் மதம் தான் உயர்ந்ததென்பதும் உனக்காக மட்டும் நிச்சயிக்கப்பட்ட சொர்க்க வாசல் திறந்திருக்குமென்பதும் இறைவனால் எழுதப்பட்ட நியதி என்று எந்த வேதமும் எந்தக் கடவுளும் எந்தத் தூதரும் எமக்கு அருளவில்லை …
-
- 3 replies
- 826 views
-
-
நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை… நவம்பர் 11, 2020/தேசக்காற்று/உலைக்களம்/0 கருத்து நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை கைகளால் பொத்தலாம் என்றா நினைத்தாய்? மின்னாமல் ஒரு இடி எதிரியின் மடியிலே – விழுந்தது. பகைவனின் சிம்மாசனத்தின் பட்டு பட்டுத்துணியில் பொத்தல் விழுந்தது. கண்டியில் எண்கோண மண்டபத்தின் சுவர்கள் வெடித்துச் சிதறிக் கொண்டன. ஜெயவர்த்தனபுரத்தின் பாராளுமன்றப் படிக்கற்கள் மந்திரி;களின் பாதம்படுவதற்கு கண்டனம் தெரிவித்தன. ‘இலங்கை இராணுவம் அணிவகுப்புக்கு மட்டுமே அழகானது’ சிங்கள மக்கள் தெரிந்து கொண்டனர். “சிசில்” வெறும் விசில் என்பதை பூநகரிக்குள்ளே புலிகள் புகுந்தபோது கூலிப்படைகள் க…
-
- 0 replies
- 677 views
-
-
உன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய் முள்ளி வாய்க்காலெம் முடிவல்ல அறிந்திடு பள்ளிகொள்ள இது படியல்ல புரிந்திடு எள்ளி நகைப்போரை புறந்தள்ளி நடந்திடு துள்ளி எழுந்துமே தடைகளைக் கடந்திடு வெண்ணை திரண்டுமே தாழியில் வரும்கணம் கண்ணை மூடியே கரமதை விடுவதோ? மண்ணை காத்திட மடிந்தவர் சந்ததி திண்ணை குந்தியே தினங்களைப் போக்குமோ? விழுந்து எழுந்திடா மழலையும் உள்ளதோ? உயர்வு தாழ்விலா சாலையும் செல்லுமோ? அலைகள் ஓய்ந்ததோர் ஆழியும் உள்ளதோ? விலைகள் இன்றியே விடுதலை வெல்லுமோ? எந்தக் கையது உடைந்திடும் போதிலும் நம்பிக் கையது வா…
-
- 0 replies
- 579 views
-
-
-
மனிதம் இறந்து கிடந்த போது கண்ணை மூடி இருந்தவர்களுக்கு ஏதோ காய் நகர்த்தல்களில் கணக்குப் பிழைத்து விட்டது கட்டிப் போட வருகிறார்கள் ஜனநாயகவாதிகள் இந்து சமுத்திரத்தில் வந்து குதித்த கம்யூனிச றகனை. பா.உதயன் ✍️
-
- 3 replies
- 806 views
-