Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மரண வீடு எல்லா செத்த வீடுகளிலும் என் மனம் என் சாவுக்காக அழுகின்றது, தான் செத்த பின் தனக்காக அழ முடியாத் துயரம் அதுக்கு, பாவம். வளர்த்தப்பட்ட உடலில் தன் உடலை ஒட்டி அழும் மனிதர்களில் தன் மனிதர்களை ஒட்டி வேவு பார்க்கின்றது கள்ள மனசு ஒவ்வொரு சாவு வீடும் தனக்கான ஒரு ஒத்திகை பார்க்கும் இடம் என்று சொல்லுது மனம் எல்லாச் சாவுகளின் செய்திகளின் போதும் எல்லா மரணம் பற்றிய தகவல்களின் போதும் விக்கித்து தன் சாவை நினைத்து ஒரு கணம் தடுமாறுகின்றது எல்லா வீதி விபத்துகளும் என்னை அச்சுறுத்துவன போன்றுதான் எல்லாச் சாவுகளும் என்னை அச்சுறுத்துகின்றன செத்தவருக்காக அழும் கண்ணீர் துளிகளில் பல எனக்காக அழுவன என கண்க…

  2. [size=4]காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்![/size] [size=4]கனவுகள் தொலைந்து போன நாள்! கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,. காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்! நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்! நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம், நரிகளாக மாறிவிட்ட நாள்! உலகத் தமிழர்களின் இதயங்கள், ஊமைக் கண்ணீர் வடித்த நாள்! உலகத் தலைவர்களின் காலடிகளில், ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்! கையிழந்தும், காலிழந்தும், கட்டியணைத்த துணையிழந்தும், கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள், துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்! கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும், காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்…

  3. Started by கோமகன்,

    [size=5]கவிதையின் கவிதைகள் .[/size] வாழ நினைக்கும்போது வாடவைக்கும்! வாழ்வதற்காய் வாழ்வை தேடவைக்கும்! மணித்துளிகளில் நகரும் வாழ்வு, துளித்துளியாய் வளரும் நினைவு, கணப்பொழுதில் தோன்றி மறையும்... மின்னல்போல் மின்னி மறையும்! அனுபவங்கள் புரியவைக்கும் வாழ்வில், எல்லாமே ஒரு போராட்டம்! போராடி வெல்லும்போது... வாழ்வின் எல்லை முன்னால் நிற்கும்! பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நடக்கும் போரில்... கடந்து போகும்வரை கலக்கங்கள் சூழ்ந்தாலும், கலங்காத மானிடம் மட்டும் வெற்றிகொள்ளும் வாழ்வுதனை!

  4. கிரேக்கம் தந்த ஒலிம்பிக் கிறக்கம் தனில் உலகம்.. கிலோ கணக்கில் உலோக நாணயங்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று... முடிசூடிக் கொள்ளும் மன்னர்களோ அநேகர் பணக்கார வீட்டு செல்லக் குழந்தைகள்..! மனித உழைப்பும் திறமையும்.. அன்று கிரேக்கம் தனில் விளையாடி நிற்க பணமும் தொழில்நுட்பமும் இன்று... விளையாடும் வியாபாராமனது ஒலிம்பிக்..! இங்கிலாந்தின் பொருண்மியம் சரிந்து விழும் சங்கதி கூட செல்லாக் காசாச்சு.. சிரியாவின் இனப்படுகொலை சிந்தனை விட்டுப் போயாச்சு ராஜபக்சவின் மனிதப் படுகொலைக் குற்றங்கள் மன்னிக்கப்பட்டு மறந்தாச்சு.... இப்படி எத்தனையோ அநியாயங்களை அப்படியே மென்று விழுங்குது இன்றைய ஒலிம்பிக் அதற்கு தங்கப் பத…

  5. கவிதையின் கவிதைகள் அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள், உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும் கள்ளங்களை அறிந்துகொள்ள... கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது! செல்லக் கதைபேசி எண்ணங்கவரும், வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்! சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்... ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!? ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது! விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும் காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்! காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள் கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்! காரணமில்லாக…

  6. கவிதையின் கவிதைகள் http://3.bp.blogspot.../Photo-0052.jpg மனம் மாறும் மனங்கள் தினந்தோறும் மாறும்! உனைத்தேடும் இதயம் நிதமிங்கு ஏங்கும்! கரைதொடாத அலைகளுக்காய் கரைகள் காத்திருக்க, திசைமாறிய காற்றில் வழிமாறிய அலைகளாய்... பெண்கடல் ஆர்ப்பரிக்க, ஈரப்படாத கரைகள்... சுடுமணாலாய் உதிர்கிறது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 04 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105723

  7. Started by pakee,

    நிலவே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல மலரே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல பெண்ணே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல என் சுவாச மூச்சே நான் நேசிப்பது உன்னை கூட அல்ல எல்லாவற்றுக்கும் மேலான என் அன்னையை தான்...

    • 2 replies
    • 840 views
  8. நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? படித்துப்பிடித்தது . ஈழத்துக் கவிஞர் சேரன்.

  9. [size=4]காலை விடிந்து கண் விழித்தால் குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பான் எதிர்வீட்டுக்காரியின் கணவன் இவளைப் பார்த்தபடி[/size] [size=4]வீட்டு வாசலைக் குனிந்து வளைந்து கூட்டும்போது மாடியின் ஜன்னல் வழியே கிழட்டு விழியிரண்டு கீழே விழும்[/size] [size=4]ஏறிட்டுப் பார்த்தால் உதிர்ந்த விழிகள் உடனே சென்று ஒட்டிக் கொள்ளும்[/size] [size=4]நகரப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கும்போது தரிசனம் கேட்கும் வழியில் சில தடிமாடுகள்[/size] [size=4]அலுவலகம் போய் அடைந்தால் மின்விசிறி சுழல வீற்றிருக்கும் மேலதிகாரியின் கண் விசிறி சுழல… இளமைக் காகிதம் படபடக்கும்[/size] [size=4]உடன் பணியாற்றும் உத்தமக் கொக்குகளோ ஓடும…

  10. சிட்டு 15ம் வருட நினைவுகளோடு ‘சிட்டு’ சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ. நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும் நினது நினைவுகள் நிறைந்து மௌனித்துக் கிடக்கிறது. கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும் நீ நிறைந்த இசையும் பாடல்களும் உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்…… இசை நிறையும் திசையெல்லாம் உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்….. தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும் 01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச் சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….???? நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது….. அம…

  11. வயதான பின்பும் தாம்பத்தியம் இனிக்கின்றது வாய்க்கு பிடித்ததை ருசியாக சமைத்து அன்று உடம்பிற்கு பிடித்ததை மருந்தாக சமைப்பது இன்று அனத்துகின்ற போது அணைத்து கொள்வதும் சிடுசிடுத்தால் சீண்டிவிடாமல் சிரித்து கொள்வதும் தடக்கின்றபோது தள்ளாடாமல் தாங்கி கொள்வதும் அந்தநாள் நினைவுகளை அசை போட்டு பார்ப்பதும் நீ தான் உலகம் என்று பேசிக்கொள்ளும் பெரிசுகள் இரண்டும் பிள்ளைகளாகி சேர்ந்து போவதே தாம்பத்திய இறுதி ரகசியம் இதுவே வாழ்வின் ரகசியமும் கூட. -அம்மாவின் கவிதைகளில் பிடித்தது .

    • 3 replies
    • 1.4k views
  12. Started by pakee,

    [size=4]மனிதா நான் யாரு நீ யாரு சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு பண்போடு நல்ல அன்போடு நீ முன்னேறு நீதான் ஸ்டார் வாழ்க்கை ஒரு புதிர் போல எது எப்ப நடக்கும் தெரியாது கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில் நல்லது நடக்கும் நம்புங்கள் முயற்சி இல்லாமல் பலன் ஏது? குறைகளை சொல்வதினால் தடுமாற்றம் உனக்குள் ஒருவன் யார் அதை தேடு அதை நீ அறிந்தால் தான் வரலாறு போட்டி இல்லாமல் வெற்றி ஏது? பொறமை கொள்வதால்தான் தகறாரு நமக்கு தெரியாது பல உண்டு கற்றது கையளவு நீ என்னும் தேடு வா நண்பா மர்மமான வாழ்க்கையில் வாழ்த்துதான் பார்க்கலாம்...[/size]

    • 0 replies
    • 562 views
  13. இன்னொரு பிரிவு வேண்டாமடா.... கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை...... நீ உன்னையே எரிக்கும் உரிமையை உனக்கு யார் தந்தது......... நம் தமிழ் தலைவனா.... இருக்கவே இருக்காது..... அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்...... ஆறுகோடி தமிழினம் தமிழ் நாட்டில் நீ தமிழுக்காக எரிந்து போ என்று அரசியல் வாதியா சொன்னான்..... ஆம் சொன்னாலும் சொல்லுவான்.... தான் வாழ எவனையும் எரிக்கத் தயங்காதவன்.... உன் தமிழ் பற்றா உன்னை நீயே எரிக்கத் தூண்டியது..... பற்றுள்ளவன் எரிந்து போனால் பற்றியெரியும் தமிழை யார் காப்பாற்றுவது? பற்றைக் காடெல்லாம் போட்டு உன் தொப்புள் கொடியுறவை பாழாய்ப் போனவன் எரிக்க நீயோ பற்றவைககும்…

  14. மின்னல்கள் கூட இடைபிரிந்து திசைவழியிறங்கி உனை தேடுகின்றன- என் தொலைந்து போன காதலை மீட்டுக்கொடுப்பதற்காய். - from my blog -

  15. கவிதையின் கவிதைகள் http://1.bp.blogspot...d-sad-poems.jpg என் அழுத விழிகளின் கண்ணீரிலும் ஓவியங்கள் தெரிகின்றதாய்... உணரும் மனதின், அப்பாவித்தனத்திற்குப் பெயர்தான்... "என்னைக் கடந்து சென்ற காதல் என்"பதா? இன்றுவரை விடைதெரியாத கேள்வி! அனுபவங்கள் பலவிதம்...!-அதில் இதுமட்டும் தனிரகம்! கவிதை அனுப்பிய கவிதை 03 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105542

  16. கண்ணயரும் நேரங்களில் காணுகின்ற கனவுகளும் கண்விழிக்கும் போதுகளில் மோதுகின்ற நினைவுகளும் அந்த நாள் நினைவுகளே அன்பான பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்ததுவும் பள்ளிப் பருவத்தில் பாடித்திருந்ததுவும் துள்ளித்திரிந்து துள்ளாட்டம் போட்டதுவும் அடம்பிடித்து அம்மாவிடம் அடிவாங்கி அழுததுவும் இந்த வயதினிலும் இனிக்கும் நினைவுகளே . கல்யாணம் கட்டி கணவனுடன் வாழ்ந்ததுவும் குழந்தை பல பெற்று குதூகலமாய் இருந்ததுவும் வாழ்க்கையில் போராடி நொந்ததுவும் வென்றதுவும் நெஞ்சில் இருந்தாலும் நிழல்களாய் தெரிவனவே பிள்ளைகள் வளர்ந்து கரைசேர்ந்து பேரப்பிள்ளைகளும் பிறந்தபின்னர் குடும்பமாய் புலம்பெயர்ந்து குடிபுகுந்தோம் குளிர்நாட்டில் குளிர்நாட்டில் இருந்தாலும் குறையேது…

    • 2 replies
    • 3.1k views
  17. எங்களது வாழ்க்கையின் அவலங்களை, அதன் வலிகளை, என்னைப்பாதிக்கும் நிகழ்வுகளை, நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். 1. இடப்பெயர்வு அவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும் உலையில் புட்டு வரும்போது அரையவியல் எரிந்துபோயிருக்கும் இப்போது யார் சோறுவைக்கப்போகிறார்கள் பூனைக்கும் , நாய்க்கும் வெட்டி அடுக்கியமாதிரி வேலிக்கான கதிகால்கள் வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள் வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல் பாழாய்ப்போன யுத்தம் வீடுகூடப் பூட்டவில்லை வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட மிஞ்சி இருப…

  18. முதுமை இரவுகள் களைப்பின் முடிவில் அடைபட்ட பின்னாலும் காத்திருந்து கனவை துணைக்கழைத்து பதறி விழிக்க வைத்துப் பறந்து விடுகின்றது பாதி இரவுகள் திறந்த கூடைக்குள் மாலை வந்தடையும் கோழிகள் போல் இனி என்றுதான் வசப்படுமோ இந்த உறக்கம் உயிரினும் மேலான சுகதையல்லவா இந்த முதுமை எடுத்து கொள்கின்றது வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள் பாராத விழிகளும் உடன்வராத கால்களும் ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில் முதுமை சுமைதனே .

  19. கவிதையின் கவிதைகள் [size=5][/size] http://www.desicomme...9692/696921.gif இத்தனை சித்திரவதைகளின் பின்னரும்... நான் உயிருடன் இருக்கின்றேன்... ஆச்சரியந்தான்! நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் என்னிடமில்லை... அவை உன்னிடந்தான்! நீ மறந்துபோனதாய்க் காட்டிக்கொள்ளும் எம் பழைய நினைவுகளை மீட்டிப்பார்... அனைத்துக்கும் விடை கிடைக்கும்! உன்னிடமும் நான் கேட்கவேண்டியவை, நிறையவே இருக்கின்றது... அதுவரையும், என்னுயிர் பிரியாது! உண்மையான நேர்மையான பதில்கள் உன்னிடமிருந்து வரும்வரைக்கும்... என்னுயிர் போனாலும் உனைத் தொடர்வேன்...! ஒரு கெட்டவனை நல்லவனாக்கவும் ஒரு பெண்ணால் முடிகிறது! ஒரு நல்லவனை கெட்டவனாக்கவும் அதே பெண்ணால் முடிகிறதே!! இ…

  20. Started by nochchi,

    வெட்டி வீழ்த்தப்பட்டடிருப்பது நாங்கள் மட்டுமல்ல நீங்களும்தான். எங்களால் எழும்ப முடியாது – ஆனால் உங்களால் .................... எப்போது?

    • 7 replies
    • 945 views
  21. பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும் நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும் கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்.. விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம் வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்.. அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது.. பருத்துக் கொழுப்பதற்காய் கிளிசறியாக்குழையும் பூவரசங்குழையும் பருத்திப்புண்ணாக்கும் முத்தர் வீட்டு நல்ல தண்ணியும் குடுத்து நலமெடுத்துக் கிலோ ஏத்தி நல்ல நாள்ப் பார்த்து நாற்பது பேர் சேர்ந்து சுத்தி நிக்க வெட்டி இரத்தம் மூளை மார்பு,தொடை,வயிறு குடல் என்று பங்கு நல்ல விலை அதிலும் நல்ல வியாபாரம்.. மயிலற்றை ஆடு நல்ல விலையாம…

    • 24 replies
    • 2.9k views
  22. கவிதையின் கவிதைகள் http://eluthu.com/ka...image/51704.gif எண்ணங்களும் நினைவுகளும் அதிகமாகப் பயணிக்கும் இரவுவெளிகளின் இறுதியில் கண்களின் ஈரங்களோடு... உறங்கிப்போகின்றது "நேற்று" ! நாளைய அதிகாலையின் இறுதிகள் மீண்டும் மீண்டும்... இரவுகளையே கொடுத்துவிட்டுச் செல்கின்றன! விடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என... ஏங்குகின்றது மனம் இப்போது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105253

    • 16 replies
    • 1.3k views
  23. கவிதையின் கவிதைகள் http://crisedangoiss...eux-300x200.jpg [size=4]என் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள், அதியுச்ச நம்பிக்கைகள் கூட... என் மிச்சம் மீதிகளையும் மிதித்துக்கொண்டு எனைக் கடந்து தொலைந்து போயின...! இனியொன்றும் இல்லை...! எதுவுமே தேவையில்லை...! என்ற மனநிலைகள் நிலைமாறும் காலவோட்டத்தில் தடுமாறலாம் - ஆனால், என் நினைவுகளில் பதிந்துபோன வலிகளின் தடங்களென்றும் மாறாது... மறையாது! தொடரும் என் பயணங்களும்... என் எதிர்பார்ப்புக்களோடு, தொலைந்துபோன நம்பிக்கைகளை தேடியலைந்துகொண்டிருக்கும்... இறுதிவரை![/size]

  24. குறிஞ்சிப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் இந்தக் கொடிய நள்ளிரவில் ஏன் பூத்தாய் காட்டு முல்லை. நான் மண்ணுக்கு பழசு கவிஞா பொறுத்திரு என்று நகைத்த முது முல்லை சுட்டும் திசையில் …

    • 2 replies
    • 628 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.