கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நானும் அப்பா எனும் ஆணும் 01 திமிர் ஏறிக் களைத்த நரம்புகளுக்கிடையே இன்னும் மிச்சமிருக்கின்றது அப்பாவுக்காக அழும் சில கண்ணீர் துளிகள் வெப்பேறிய உணர்வுகளுக்கிடையே அப்பாவின் விரல் பற்றி இன்னொரு பயணம் செல்ல காத்து தவிக்கின்றன என் விரல்கள் அப்பா பற்றிய நினைவுகளில் எல்லாம் குரோதம் படரவிட்ட ஒரு மாலைப்பொழுதில் தான் அவரை இழந்திருந்தேன் ************************* 2. ஆண் உணர்வு புடைத்து நிமிர்ந்து தலை தெறிக்க ஓடும் போது அறுந்த முதல் முதல் நாடி என் அப்பாவுடனான நேசம் அவரது ஒவ்வொரு சொல்லிற்கும் எதிராக நீண்டு முழங்கி ஓங்காரமாக அறைந்தது என் ஆண் மெளனம் என் மெளனத்திற்கு பதில் சொன்ன அவரது ஒவ்வொரு விடைகளிலும்…
-
- 20 replies
- 2.2k views
-
-
என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய், என் வலிகளும் கூடவே வந்தன! எனக்கிந்த சாபம் எதுவரையென... எனக்குத் தெரியவில்லை இதுவரை! நம்பிக்கைகளை சாகடித்தபடியே... துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது! வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம் நேர்வழி மட்டுமே தொடரும்! இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன், தன்னம்பிக்கை எனக்கிருக்கு! சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை, விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்! வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில், இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்! பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள், முழுநிலவாய் சிரிக்கும்போது... நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும…
-
- 27 replies
- 3.6k views
-
-
தந்தை ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம் ஈரைந்து மாதங்கள் எனை சுமந்த அன்னைக்கு பின் இது வரைக்கும் என் வாழ்வை தோள் சுமந்த தோழன் என்னை கருவாக்க சில நேரம் இன்பம் கண்டார் .. என்னை உருவாக்க இன்று வரை எல்லாம் துறந்தார் இரவெல்லாம் கண்ணீர் இதழ் எல்லாம் உமிழ் நீர் அன்று மாடியில் தூங்கும் போது நிலவை ரசிதேன் _ அவர் மடியிலே தூங்கிய பின் நிலவை மறந்தேன் நான் கண்மூடி படுக்கும் வரை தூக்கம் இழந்தார் _ நான் கால் எடுத்து நடக்கும் வரை தோளில் சுமந்தார் மாலையில் கைபிடித்து மலையோரம் நட ப்போம் அவர் கை பிடித்து போனது வெறும் பாதை அல்ல நான் கால் வைத்த முதல் பள்ளிக்கூடம் அதுவே நிலவிலே மனிதன் போன கதைகள் சொன்…
-
- 4 replies
- 734 views
-
-
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" உன் வார்த்தைகள்.. என்னை உன் செல்லப் பிராணியாக்க.. நீ அழைத்த போதெல்லாம் அலுக்காமல் ஓடி வந்தேன்.. உன் காலடித் தடம் பார்த்தே பாதைகள் நடந்து வந்தேன்..! அப்பப்ப ஏதேதோ கோலம் கொண்டு.. நீ வார்த்தைகளால் எட்டி உதைகையில் உள்ளூர நொந்தாலும் வெளியூரா உன் காலடி சுற்றினேன்.. உன் பாதங்களே சரணெனக் கிடந்தேன்..! நான் வாங்கி வர நீ உண்ண.. வாய் பார்த்து எச்சில் வடித்தேன்.. அதில் அன்பின் உச்சம் நான் கண்டேன்..! இறுதியில்.. உன் கார் கதவடியில் தாவி ஏற நான் முயல்கையில் நீயோ.. அட நாயே Get out என்றாய்..! உன் காதல் காலநிலை போல என்றே அறியாமல்.... அது போட்ட அன்புப் பிச்சையில் உயிர் வாழ்ந்த …
-
- 23 replies
- 7.7k views
-
-
[size=4]உன் நினைவுகள் வரும் போது அழத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை கவிதைகளாக எழுதுகிறேன்...[/size]
-
- 2 replies
- 574 views
-
-
-
[size=4]கண்ணுக்குள்ளே சிக்க வைத்தேன் நெஞ்சுக்குள்ளே பொத்தி வைச்சேன் வலையில் மாட்டும் மீனாய் எனை காதல் வலையில் சிக்க வைத்தாய் உடம்பில் பட்ட ரணங்கள் வலிக்குதுடி...[/size]
-
- 2 replies
- 917 views
-
-
-
அதிகாலைப் பொழுதின், இருள் பிரியாத நேரத்தில், ஆயிரம் பயணங்களில், அதுவும் ஒரு பயணமாகியது! அப்பாவின் பனித்த கண்களும், அம்மாவின் அன்புத் தழுவலும், அந்தத் தேங்காய் உடைத்தலில், அமிழ்ந்து போனது! கலட்டிப் பிள்ளையாரின், கடவாயின் தந்தங்கள், கொஞ்சமாய் அசைந்த பிரமையில், சஞ்சலப் பட்டது மனம்! விரியும் கனவுகளில், வருங்காலக் கேள்விக்குறி, விரிந்து வளைந்து, பெருங் கோடாகியது! தூரத்தில் தெரிந்த நீரலைகள், கானல் நீரின் கோடுகளாய், ஈரம் காய்ந்து போயின! கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும், காற்றாடியாகியது பயணம்! புலம்பெயரும் புள்ளினங்களே!, போன பயணம் முடித்ததும், போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு! போகுமிடமெல்லாம் கூடு கட்டும், பயணமாகியது, எனத…
-
- 17 replies
- 1.9k views
-
-
[size=4]ஜென்மங்கள் மீண்டும் வந்து காதல் செய்வேன் நானே என் உயிரை எரிக்கும் காதல் தேவதையே என் மனசை குத்தி ரசிக்கின்றாயே எனை தவிக்க வைத்து தைக்கின்றாயே...[/size]
-
- 0 replies
- 533 views
-
-
முள்ளிவாய்க்கால் ஓரத்திலே விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவை சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களை சுமக்கிறது கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் - ஓவியா- முற்காலத்தில் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூன்யமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து …
-
- 6 replies
- 10.8k views
-
-
நண்பா! நீ இல்லை இருந்தும் கடிதம் எழுதுகிறேன் தமீழீழம் எங்கும் எம் சுவாசம் இருந்திருக்கிறது இன்று எங்கும் ஆக்கிரமிப்பு நண்பா ! உன் புதைகுழியில்க்கூட நீ இல்லை என் ஞாபகங்கள் கிளரும் மாவீரர் வீடுகள் முன் அவன் நிற்கிறான் இன்னும் கப்பல்கள் நிற்கின்றன கடல் இல்லை இருக்கிறோம்முகவரி அற்று உங்கள் இறுதி வாக்குமூலங்களை சேகரித்த நாம் இருக்கிறோம் வெற்றிடம் நிரப்ப காற்று வரும் நம்பிக்கையை விதைத்துவிதைத்து எம் உயிர் இழுபடுகிறது கண் மூடினால் உம் முகங்கள் வரும் இடைவேளை அற்று பார்க்க விரும்பினும் "குற்ற உணர்வு " ஏதோ செய்கிறது "இயலாமை " எமை சாகடிக்கிறது நண்பா! எதிலும் ஒன்றாய் இருந்…
-
- 11 replies
- 1.2k views
-
-
மாலை வேளை மூளை ஓய்வுக்காய்.. முகம் கழுவிக் குந்துகிறேன் முகநூலின் முன் பக்கம்..! முக்கி எழுகிறது முகநூல் "சாட்" யன்னல்... Hi ASL pls... முகமறியா ஒன்று கதை கேட்க.. நானும் ஏதோ பதில் போட தொடர்கிறது... Foto pls... பதிலுக்கு நான்.. L8R podi vesai.... திட்டிக் கொண்டே மறுமுனை யன்னல் மூடுகிறது..! யோசிச்சுப் பார்க்கிறேன்.. புரோபைலில் நடிகையின் முகம் காட்டும்.. என் முகவரிக்கே இக் கதி என்றால் உண்மையில்.. அவள் கணக்கிற்கு...???!
-
- 43 replies
- 4k views
-
-
குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமைக் குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்த இரைதனை குஞ்சு தின்னக் கொடுத்திடும் குருவி தந்த இரையினால் குஞ்சு மெல்ல வளர்ந்தன சின்ன இறகு இரண்டுமே சிறப்பாய் வளரத் தொடங்கின தனது குஞ்சு பறப்பதை தானும் பார்க்க ஆவலாய் தந்தை குருவி சொன்னது தனயன் பறக்க வேண்டுமாம் இப்ப என்ன அவசரம் இறக்கை நன்கு வளரட்டும் இயல்பாய் குஞ்சு பறப்பதை இரசிக்கும் காலம் வந்திடும் சின்ன இறகு வளர்ந்தபின் சிறப்பாய் பறக்க முடியுமே இன்றே பறக்க விரும்பினால் இறப்பில் முடியக் கூடுமே தாய்க் குருவி சொன்னதை தடுத்தே தந்தை சொன்னது எனக்குப் புத்த…
-
- 8 replies
- 4.3k views
-
-
மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் இவை. யாழ் வாசகர்களுக்காகத் தருகிறேன். நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க அரக்கன் பிடியில் அகப்படாத நாளில் அரைகுறை வயிறுதான் - ஆயினும் அழியவில்லை எங்கள் அழியாச் சின்னங்கள் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... வளம் கொழிக்கும் வன்னி மண்ணின் வாசல் வரை வந்தான் அன்று வாசமின்றி வாடுகின்றோம் நாமின்று நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... கடைசிவரை கலங்காத மக்கள் - தம் கச்சையும் இழந்து இன்று கயவன் பிடியில் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... பூசிக்க வேண்டியவர்களைப் பூவின்றிப் புதைத்தோம் பார் போற்றியவரை பாதையில் கைவிட்டோம் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... அழிந்து போன ஆத்மாக்களை அடக்…
-
- 36 replies
- 7.3k views
-
-
ஒரே ஒரு வெய்யில் காலம் எனக்கு கொடு! விதவைகளாய் இருந்த மரங்கள் பச்சை போர்க்க , ஊரெல்லாம் பண்பாடியே பறவைகள் பறக்க , சூரியனும் பனிக்கு பாய் ( bye ) சொல்லி ; சூட்டுக்கு ஹாய் (hi )சொல்ல , அது கண்டு என் மனம் உவகை பொங்கும் . மெலிதாகவே என் மனம் வருடும் மெல்லிய காட்சிகள் நிறைந்த ஒரே ஒரு வசந்தம் எனக்குக் கொடு ! அந்த காட்சிகளை நிரவிக் கொண்டபின் , சந்தோசத்துடன் என் இதயம் சத்தத்தை அடக்கத் தயார் .
-
- 6 replies
- 929 views
-
-
சாலை ஒரத்து குப்பைத்தொட்டிக்குள் துர் நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. போபவர்கள் வருபவர்கள் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டும்….; எச்சிலைத் துப்பிக் கொண்டும்…. சுயநலமாக நகர்கிறார்கள். ஒருவரேனும் நின்று நிதானித்துப் போவதாய் நான் அவதானிக்கவில்லை…நாற்றம் என் மூக்கையும் தைத்தது. நாக்கையும் பிய்த்தது. வாடிய வாழை இலையில் சுற்றப்பட்ட … எலும்புகள் தெரியும் படியான… போசாக்கு குறைந்து போனதான…ஒரு பிஞ்சுக் குழந்தையின் நிர்வாணமான காய்ந்த சடலம். தொப்பிள் கொடியின் துவாரத்திலும்…… உதடுகளின் ஈரத்திலும்…பால் உறுப்பிலும்… மல வாசலிலும்…ஈக்கள் இரை திரட்டிக் கொண்டிருந்தன. இரக்கமில்லாமல் ஏன் தானோ..? குழந்தை குப்பைத்த…
-
- 3 replies
- 656 views
-
-
சகோதரனே ! இன்று உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் ஒன்றாய் வளர்ந்தோம் ஓரணியில் விளையாடினோம் கால அழைப்பை ஏற்று இன விடுதலைக்காய் உழைத்தோம் உனக்கும் எனக்கும் ஏழு வயது இடைவெளி -ஆனால் ஒரே நாளில் பிறந்தோம் எங்கு நின்றாலும் நம் பிறந்த நாளில் உன்னை நினைப்பேன் நீயும் அப்படித்தான் ஒரு குழந்தையின் மனநிலை கருதி நீண்ட நாள் காத்திருந்த இலக்கு கையிற்கு எட்டியபோதும் கைவிட்டு வந்தவன் நீ மீண்டும் சென்று வென்றுவந்த செயலில் வாழ்ந்த வீரன் நீ உனது தாக்குதல்கள் எங்கும் பேசப்பட நீயோ ஏதும் அறியாதவனாய் நகர்வாய் வீரனே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் உன் வீடு வந்து திரும்பும் போது நீதான் என்னை சைக்கிளில் ஏற்…
-
- 14 replies
- 1.5k views
-
-
ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது என் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அத்திவாரங்கள் தாங்குவது போல் நான் பிறந்ததின் பயனை ஊரறியச் செய்வேன்
-
- 20 replies
- 1.7k views
-
-
பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. …
-
- 26 replies
- 7.5k views
-
-
என்னவளுக்கு ! இன்று தொழிலாளர் /உழைப்பாளர் தினம் இன்றுதான் உன் பிறந்த தினமும் "எட்டு மணி நேர வேலை "என்று தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது என்னவளே ! எந்த புரட்சியும் இல்லாமல் இன்னும் இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் ஒற்றையாய் ஒரு தசாப்தம் குடும்ப சுமை உன்மீது இரட்டையாய் ஒன்றானோம் புலம் பெயர்ந்து விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு எனக்கு எல்லாமே போனஸ் தான் நீயும் எனக்காய் மாறிப்போனாய் குழந்தைகளுக்காய் புதிய மண்ணில் மீண்டுமொரு போராடியவாழ்வு அத்திவாரத்திலிருந்து அலைகளில் அசைந்தவாழ்வு சுனாமியாய் அடித்து ஓய்ந்தது உயிரால் வரைந்த ஓவியம் உலகால் கலைந்த சீவியம் மனிதர்களுக்கு கடின வாழ்வு பச்சோ…
-
- 2 replies
- 770 views
-
-
உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்.............. உன்னிரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்................... உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன் எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத்தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்.............. -எங்கேயோ படித்தது
-
- 18 replies
- 2.3k views
-
-
பார்வைகள் பார்க்கின்றேன் தொலைதூர இருள் வானில் . சிலசமயம் , சுவர்களையும் சுவாரசியமாய் ஊடுருவிக் காண்கின்றேன். என் கையின் ரேகைகள் ஏனோ இன்னும் புரியவில்லை ........... ஆண்கள் பெண்களை காவல் புரிவதால் , பெண்மை தாழ்ந்தது இல்லை . வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை , என்றும் காப்பாற்றுகிறது. தங்கம் தாழ்ந்ததென கருதுகிறதா உலகம் ???????? புரியவில்லை இன்னும் ஏனோ புரியவில்லை.......... ****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .
-
- 55 replies
- 5.8k views
-
-
நெய்தல் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு நாம் நொந்தழ மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான். ஆனாலும் காதல் அவனை உன் காலில் விழ வைத்ததல்லவா. ஆளரவ…
-
- 10 replies
- 1.4k views
-
-
கேதா ஊருக்கு போய்விட்டு வந்தவுடனேயே “தொதல் கொண்டுவந்தியா? பருத்தித்துறை வடை கொண்டுவந்தியா?” என்று கேட்காமல், நல்ல போட்டோ எடுத்துக்கொண்டு வந்தியா? என்று தான் கேட்டேன். எல்லோர் கையிலும் இருக்கும் அதே கமரா தான், அவன் எடுக்கும் போது மட்டும் கவிதை பாடும். விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை பார்த்து “நீ அழகா இருக்கே, நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே” என்று கேட்க பதிலுக்கு அவள் “ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னை பாக்கலியோ என்னவோ” என்பாள். கேதாவின் கமரா கண்கள்! படம் கவிதை சொல்லுது. பதில் கவிதை சொல்ல, படலையின் அரசவைக்கவிஞரும் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடும் மன்மதகுஞ்சுவுக்கு அழைப்பு விடுத்தேன். தல ஐந்து நொடியில் கவிதை ஒன்றை துப்பினார். வைரமுத்து கூட “வெட்ட…
-
- 1 reply
- 756 views
-