கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............
-
- 0 replies
- 491 views
-
-
வானம் நீயானால் - நான் மேகமாக வரம் வேண்டும் விழிகள் நீயானால் - நான் இமைகளாக வரம் வேண்டும் தூக்கம் நீயானால் - நான் கனவாக வரம் வேண்டும் கவிதை நீயானால் - நான் நல்ல வரிகளாக வரம் வேண்டும் நிலம் நீயானால் - நான் உன்னுள் புதையும் பிணமாக வரம் வேண்டும்...
-
- 2 replies
- 718 views
-
-
உயிரை எரித்து காதல் வளர்த்தேன் கடைசியில் அவளை இழந்து தனியாக நிற்கிறேன்..
-
- 0 replies
- 552 views
-
-
சேரனின் காடாற்று கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக கனத்த அட்டையுடன் அழகான புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதிலிருந்து இரு கவிதைகள் . நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு தற்கொலை. காவற்பரணில் ஒரு கண்ணிழந்த போராளி.
-
- 8 replies
- 1.2k views
-
-
தன் தந்தையை நேசிக்கும் எல்லோருக்கும்...!!! இந்த கவிதை...!!! சமர்ப்பணம்..!!! அப்பா...! " நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." என் முதல் கதாநாயகன்.. நீங்கள் தான் அப்பா..! தலைகனத்தில் நான் ஆடும் போது குட்டு வைத்தது நீங்கள், தடுமாறி நான் விழுந்த போது தூக்கி நிறுத்தியதும் நீங்கள் அப்பா..! உங்கள் உயிரே என் மீது வைத்து இருந்தும், ஒரு சிறு இடைவெளியில்தான் நம் பந்தத்தை நீங்கள் வைத்து இருந்தீர்கள், அந்த இடைவெளிதான் உங்கள் பாசத்தை உணர வைத்தது எனக்கு, கம்பீர பார்வை, நேர் படும் பேச்சு, அஞ்சா நெஞ்சம், சில சமயம் ரௌத்திர குணம் இருந்தாலும் உங்கள் மனம் என்றும…
-
- 4 replies
- 883 views
-
-
விலைகொள்ளா எழிலே _எனை குலைத்த கோலமயிலே , நிலைகொள்ளா எண்ணங்கள் _நீ கலைநிலா வர்ணங்கள் . நாவுக்கும் என் பாவுக்கும் நான் வளத்த நாய்க்கும் ஆவுக்கும் இரவில் அலறுமந்த கோவுக்கும் ஏந்திழையே, ஏங்கியுன் கதசொன்னேன் . நெற்றிவகிடு கண்டு நெகிழ்ந்து வற்றிபோனதடி தொண்டதண்ணி ! சுற்றி நீபோட்ட கொண்டையில சுருண்டு கிடந்ததடி மஞ்சத்து பூனைமனது !! குடமெடுத்து நீவர நிரம்பிக்கொண்ட என்னுள்ளம் _போன தடமிருந்து அழுதது நீ(ர்) நிர(ம்)ப்பி போக வெறுமை சுமந்து தள்ளாடியது பாதம் கண்ட கணமதில் பாதியானவன் , மீதம் காணும் கனவில் சேதமானவன். யாதும் நன்றேயென்றே திமிரானவன் தோதாயிருப்பனோ யென்றே சோர்ந்துபோனவன் உம்மென்று சென்ற உன்னம்மாவுக்கும் என்னெ…
-
- 5 replies
- 914 views
-
-
பிரேமினி அமீரசிங்க எழுதிய ஒரு சிங்களக் கவிதையின் தமிழாக்கம் இது துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததில்லை பாடசாலை நாட்கள் இரட்டைச்சடைகள் பறக்க நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன் பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது அதைவிட வேறொன்றுமில்லை நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள் எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள் லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ண…
-
- 3 replies
- 745 views
-
-
இன்னும் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்க்கையின் மயானமாய் விரியும் சென்னை நடுகற் காட்டில் அணில்களின் ஒப்பாரியும் பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும் நிறைகிற மாலைப் பொழுது. இன்னும் பூந் தென்றல் பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி.. இன்னும் வங்கக் கடலிருந்து ஒரு தாய் ஆமை சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... . . இன்னும் எஞ்சியிருந்த அணில்கள் காகத்திடம் தங்கள் கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன். காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி.. மொட்டைக் கூரைகளில் சுவர் நசித்த மரங்களில் குப்பை மேடுகள் வளரும் தெருக்களில் கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய் நூல் இறங்கி ஊர ஆ…
-
- 6 replies
- 2.1k views
-
-
எல்லா அம்மாவிற்கும் தெரியும் தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று, ஆனால் 99% மகனிற்கு தெரியாது தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...
-
- 12 replies
- 1.6k views
-
-
உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாடிய இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் வீடு; நாங்கள் பிறந்து கத்திய போது அதன் அழுகையை துடைத்து சிரிப்பாக்கிய சுற்றம் சீவ சீவ பச்சைபிடித்த பசுமை உயிர் வார்த்த பூமியென - அனைத்தையும் பயந்து பயந்து தொலைத்த அனாதைகள்; தெரு தாண்டி தெரு தாண்டி நாடுகளை கடந்துநின்று தன் நாடுவேண்டி நிற்கையில் …
-
- 0 replies
- 533 views
-
-
வலிகளை தந்தவனே வரவேற்கும் இழிவுடன் வாசல்களை கடக்குமொரு கணத்தில் செத்து சூடடங்கிய பின்னும் புணரதுடித்தலைந்த மிருகங்கள், அம்மணமாக்கியெம் உறவுகளை கொன்றழித்த நாய்கள், பிஞ்சென்றும் பாராது தம்வெறி தீர்க்கஅலையும் தப்பாய்பிறந்த பேய்கள், வாசலில் கூடியிருக்க , எக்காளமிட்டு கொன்றவன் _எந்தை சோதரியின் கற்பை தின்றவன் முக்காலமும் முன்னிருக்க _சிந்தை யடக்கி தலைகுனிந்து செல்வதென்பது ....................... நினைவிடமிச்சங்களை , காவியநாயகர்களின் கல்லறை எச்சங்களை , சிதைக்கப்பட்ட காவல்தெய்வங்களின் சிலையுருவ மிகுதிகளை , குண்டுகளால் சிதைந்துபோன குடியிருந்த வீட்டை , கடந்துபோகையிலும் நேர்கொண்டு பாராமல் போவதென்பது ................ நேற்று…
-
- 6 replies
- 958 views
-
-
மன அழுத்தங்களும் வருத்தங்களும் மனம்விட்டு அகல, சிலநேரம் கற்பனைக் கடலில் நீந்துவது வழமை! அப்படியான இன்றைய பொழுதிலும், மனதில்தோன்றிய கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஒரு கவிதையாய் கிறுக்கினேன்! என் மனத்தின் மீது தேனாய் இனித்த உணர்வுகள் "சென்சார்" செய்யப்பட்டு கவிதையாய் உங்களுக்கு.......... (வயது வந்தவர்களுக்கு மட்டும்) உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ , உடல் முழுதும் பரவிச்செல்ல... கடல் மீது மிதக்கும் கப்பலானது, தேகங்கள் இரண்டும்...! மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக... அமைதியான கடலும், ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்... அடங்காக் குணங்கொண்டது...! நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்... வள்ளமும் கள்ளமாய் செல்லமாய், கொஞ்ச ... மோக வேகமெடுத…
-
- 27 replies
- 5.3k views
-
-
முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!! தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம், உன் எச்சில் பட்ட என் கண்ணங்கள் இன்னும் குளிருதாடா..!மகனே... உன் மழலை புன்னகையை பிச்சை கேட்டு பல நாட்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கிறேன் , என் செல்ல மகனே..., உன் பால் வாசத்தில் என் பாசம் உணர்ந்தேன், நீ கடித்து காயபடுத்திய என் கன்னத்து தழும்பை இன்னமும் முத்தமிடுகிறாள் உன் அம்மா...! என் கிழிந்த வேட்டியை மறைத்து,மடித்து கட்டி வேட்டி வாங்கும் பணத்தில் வாங்கியதுதான் உன் வெள்ளி பாலாடை...! என் அன்பு மகனே..! முதல் முறை நீ பள்ளி செல்லும்போது …
-
- 23 replies
- 2.2k views
-
-
(A9 in 2006) கொக்காவில் தனில்.. கொடும் பகைவர் விதி முடித்து.. சீறும் அந்தப் புலி - நடுவே பதிந்து நிற்க பறந்த அந்தச் செங்கொடி... மாங்குளந்தனிலும் ஏற அண்ணன் போர்க் கரும்புலியாய் வாகனம் ஏறி ஏக வழிவிட்ட வீதி..! ஆகாய கடல் வெளியில் எம் சொந்தங்கள் சுகமாற..சுமந்த வீதி பால்ராஜும் சூசையும் களம் பார்க்க பாதை காட்டிய சுதந்திர வீதி..! யாழ் தேவி கொண்டு பகை.. புறப்பட புலி வீரர் காட்டிய தீரத்தில் அது தடம்புரள.. சத்ஜெயவால் அது தொடர.. அடிக்கு அடி எம் சொந்தங்களின் தசைகளின் சிதறலில் பசி தீர்த்து ஜெயசிக்குறுவில் மிச்ச இரத்தம் குடித்து ஏப்பம் விட்டு.. சிங்களம் கேடயம் தந்து வெற்றி விழா எடுக்க... சினங் கொண்ட எம் பு…
-
- 12 replies
- 1.4k views
-
-
பஸ்சில் போனாலும் - எனக்கு கப்பலில் போவது போலவே இருந்தது. அலைகள் இருக்கவில்லை - ஆனால் ஆட்டம் இருந்தது. குன்றும் குழியுமான அந்த வீதிகளில் மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு ஒன்று சேர்ந்து குளக்கரையை...நோக்கி சலசலக்கிறது. லொறிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே புரண்டு கவிண்டு கிடந்தன. இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து புது வர்ணம் பூசப்பட்டிருந்தது. இடையிடையே "நன்றி மீண்டும் வருக " என்பது மட்டும் மகுட வாக்கியமாக... பொறிக்கப்பட்டிருந்தது. குலுக்கிற குலுக்கலில் குடல் வெளியே வந்து.. விடும் போல் இருந்தது. சாளரம் ஊடாக சிலர் கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள். பலர் இருக்க முடியாமல் துள்ளித்துள்ளி…
-
- 6 replies
- 966 views
-
-
பாலைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன். அன்பே மஞ்சத்தில் தனித்த என்மீதுன் பஞ்சு விரல்களாய் சன்னல் வேம்பின் பொற் சருகுகள் புரள்கிறது. இனி வசந்தம் உன்போல பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும். கண்னே நீ பறை ஒலித்து ஆட்டம் பயிலும் முன்றிலிலும் வேம்பு உதிருதா? உன் மனசிலும் நானா? இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை இனி இளவேனில் முதற் குயிலையும் துயில் எழுப்புமடி. நாளை விழா மேடையில் இடியாய்ப் பறை அதிர கொடி மின்னலாய் படருவாய் என் முகில் வண்ணத் தேவதை. உன் பறையின் சொற்படிக்கு பிரபஞ்சத் தட்டாமாலையாய் சிவ நடனம் தொடரும். காத்தவரா…
-
- 4 replies
- 1.7k views
-
-
காணாமல் போனதாகவே முடிவு கட்டிவிட்டார்கள் காணவில்லையென்று விளம்பரமும் கொடுத்து விட்டார்கள் (காணாமல் போக அவனென்ன ஆடா மாடா பாலுசார்) சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம் சும்மா இருந்தான் நிலவரம் மோசமென நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான் சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான் அதற்காக ஓய்ந்து விட்டானென்று அர்த்தமில்லை சரிந்து விட்டானென்று கருதி விட முடியாது அருகிப் போனாலும் காணமற்போவதில்லை புலிகள். விக்ரமாதித்யன் நம்பி (via fb) ‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச்
-
- 0 replies
- 564 views
-
-
அது ஒரு - நிலக் கீழ் இரயில் பயணம்.. கண்கள் அழகிய விளம்பரங்களோடு - தான் பேச.. மனம் - பல கணக்குப் போட்டு களைத்துப் போக.. கழுத்துத் தசைநார்கள் - ஓய்வுக்காக இழகித் தொங்க.. எதிரே.... வெள்ளை வான்வெளியில் நீல நிலவாய் உருண்டோடும்.. அவள் கண்கள்..! நின்று நிலைத்து - நிலை நிறுத்த வைத்து... பார்வைகள் சந்தித்து கணங்கள் கூட ஆகவில்லை.. விழியோ நட்பின்.. மொழி பேசுகிறது..! என் விழி... நியுற்றினோவின் வேகம் தாண்டி.. நிறப் பேதம் வென்று... செய்த சாதனையது..! "நியூட்டனின்" நிறப்பிரிக்கை கூட - அங்கு இல்லை..! அவள் தான் - அப்பொழுது என் தனிமை போக்கும் நண்பி..! விழிகளின் - மொழிப் புரிதலில் அவளும் இணங்க.. தொட்டிழுத்து …
-
- 7 replies
- 771 views
-
-
பத்துபொருத்தம் பார்த்து பத்தும் பொருந்தி இருக்கும் யார் என்று கூட தெரியாத என் பெற்றோர் பார்த்த மணமகள் ஒருபக்கம் பத்து பொருத்தம் வேண்டாம் நீ மட்டும் போதும் என்று சொல்லும் பத்து வித்தியாசங்களை எம்மிடையே கொண்ட நீ மறுபக்கம் இப்போது நான் என்ன செய்ய...
-
- 0 replies
- 1.1k views
-
-
-
நெய்தல் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு நாம் நொந்தழ மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான். ஆனாலும் காதல் அவனை உன் காலில் விழ வைத்ததல்லவா. ஆளரவ…
-
- 10 replies
- 1.4k views
-
-
'' உடன்பிறப்பு '' ~~~~~~~~~~~~~ நம் தானைத்தலைவனின் நெஞ்சத்தில் இடம்பிடித்த எம் உடன்பிறப்பே ....... ! நம் தேசத்தின் விடியலுக்காய் வழிகாட்டிய எம் உடன்பிறப்பே .......! நம் விடுதலை தேசம் வரவில்லையோ என்று ஏங்கி தவிக்கும் எம் உடன்பிறப்பே .........! நம் எதிர்காலச்சந்ததிக்காய் உயிரை நீத்த எம் உடன்பிறப்பே .........! நம் தேசத்துக்கான உறவுகளை தலை சாய்த்து வணங்குகின்றோம் எம் உடன்பிப்புகளே !!!!!!!!!
-
- 0 replies
- 685 views
-
-
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..! நக்கலும் நளினமுமல்ல நாள் நடப்புச்சொல்கின்றேன் நாமெல்லாம் நல்ல மனிதர்களே..! முட்கம்பி வேலிகளில் ஊஞ்சலிடும் முல்லைகள் ரிப்பன்களோடு சேர்ந்து நெய்துவிட்ட தாவணியோடு சில்வண்டு இரையும் இசையில் மூன்று நாள் உணவை இரைமீட்கும் கட்டுண்ட கால்நடைகளாய் கனவுகள் தொலைத்து... தலைப்பிள்ளை தொலைத்து தாரமும் தொலைத்து தலையணை தொலைத்து உறக்கமும் தொலைத்து உண்ணாதுறங்கும் உயிரற்ற உயிர்நாடிகள்.. ஆறு பேருக்கு அரைக்கொத்து அவியல் அதில்தான் மூன்று வேளை பங்கு மிஞ்சினால் அடுத்தநாள் பழங்கஞ்சி பழகிப்போச்சு இது ரொம்ப நாளா.. தொழில் இன்று தொழில் தேடல் கனவின்று கனவுகாண உறக்கம் நனவின்று உசிராச்சும் நிலைச்சிடுச்சே உணவின்…
-
- 5 replies
- 713 views
-
-
பொய் சொல்ல வேண்டியதில்லை எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை கவலையால் தூக்கம்கெட தேவையில்லை முகத்திற்குமுன் சிரித்துப்பேசி முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...
-
- 0 replies
- 558 views
-
-
உனது துணைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரிய தொரு பரிசாகும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே...
-
- 8 replies
- 1.2k views
-