கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
காத்திருப்பேன் அவள் வருவாள் ..பக்கத்தில் அவள் அண்ணன் ...சைக்கிளில் வருவார் ..அருகிலே செல்வேன் ..கண்ணால் கதைப்பேன் ..அவள் யாடையால் கதைப்பாள் ..அண்ணன் கிட்டவரும் போது..என் நடை வேகமாகும் ...பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..கொப்பியை பரிமாறும் போது ..கடிதமும் பரிமாறும் ...விழுந்தது கடிதம் நிலத்தில் ..கண்டார் ஆசிரியர் தந்தார் ..முதுகில் நல்ல பூசை ..நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் ..காலம் காதலாகியது ..கல்வி கரைக்கு வந்தது ..காதலும் கரைக்கு வந்தது ...^பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை --------------------------------------------------------------------------------------------------------- தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் க…
-
- 2 replies
- 1.7k views
-
-
பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்... பால பாடங்களில்... பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு...! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை... ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை.... தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்... புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் …
-
- 19 replies
- 2.3k views
-
-
தமிழ் மோகத்திலே செயல் வேகத்திலே கொண்ட நேசத்திலே நல்ல பாசத்திலே நெஞ்சின் ஈரத்திலே அன்பின் சாரத்திலே அகத்தின் இளமையிலே அறிவின் முதுமையிலே உள்ளத் தண்மையிலே பேசும் உண்மையிலே நாவின் வன்மையிலே செய்யும் நன்மையிலே உனக்கு நிகர் உலகில் உண்டோ ஈடு செய்ய ஏதும்வழி உண்டோ http://gkanthan.wordpress.com/index/nikar/
-
- 2 replies
- 820 views
-
-
என் இளவயதில் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் கனவுகள் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் ஆசைகள் எல்லேரையும் போலவே என் தேசத்தின் மீதான காதல் எல்லேரையும் போலவே எனக்குள்ளான மாற்றங்கள் எல்லேரையும் போலவே என்கைகளிலும் துப்பாக்கி எல்லேரையும் போலவே எனக்கும் நம்பிக்கை எல்லாமே சிதறிப்போன கணங்களில் எதுவுமே நடவாதது போல எல்லோரையும் போலவே நானும் வாழப் பழகிக் கொள்கிறேன்..
-
- 6 replies
- 1.4k views
-
-
This day, previous year, More than quarter a million innocent lives Butchered by the brutal force of Chemical bombs, Cluster bombs And the most cruel ammunition Barred by the U.N. Blood-thirsty barbarians Destroyed tiny babies, innocent children And helpless ladies; Genocide carried in broad daylight When the U.N. stood as a passive spectator! No big powers dare open their mouths! No peace-brokers wished to mediate! The biggest democracy, U.S. Failed to condemn the genocide The Land of Lincoln Swerved from protecting The rights of minority! The country of George Washington Decli…
-
- 0 replies
- 683 views
-
-
அரைக்கிலோ அரிசியில் கூட அரசியலாம் ஆணுறைகளின் விற்பனை அதிகரிப்பாம் உலகமயமாக்கல் பிராந்திய நலன் என்று புரியாத வார்த்தைகளாய் அடிபடுகின்றன பனையால் விழுந்த ஓலைகளைச் சப்பித்துப்பி விட்டுப் போகின்றன மாடுகள் வேலியடைக்கவும் வேலி தாண்டவும் முடியாமல் பாவம் ஓலைகள் இன்னும் எத்தனை மாடுகள் பசியாறப் போகிறதோ காட்சிகள் முடியும்முன்னர் சாட்சிகள் கலைக்கப்படுகின்றன நாளை கண்ணகி காவியமாம் காத்தவராயன் கோயிலில் அண்ணனின் துவசம் முடிவதற்குள் அய்யனாருக்காய் அறுக்கப்படும் ஆடுகள் அண்ணனும் ஆடுகளும் பலியெடுக்கப்படுகின்றன தர்மத்தின் பெயரில் கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகள…
-
- 20 replies
- 2.2k views
-
-
நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு... அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!! ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை ! நல்லூர்க் கந்தனும் கருணையற்றவனானான் !! இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி தியாக தீபமொன்றை அணைத்தது விதி சிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி அகிம்சையே அறமென்ற இந்திய தேசம்... ஈழத்தில் செய்த முதல் நாசம் ! பார்த்தீபனின் பட்டினிப்போரால்... வெளுத்துப்போனது... பாரதத்தின் அகிம்சை வேஷம்! 'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி... பார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும், கோட்சேயின் துப்பாக்கி…
-
- 5 replies
- 1.9k views
-
-
என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன். பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது ------------
-
- 14 replies
- 1.7k views
-
-
தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் மாவீரர் ஈழத்துக்காக மாவீரர் தம் உயிர் தந்தார் மாவீரர் தமிழீழம் வாழ தம் இனம் வாழ பினமாகினர் அவர் நினைவு அது நம் இன நிமிர்வு களம் கண்ட அவர் சிரம் சாயவில்லை அவர் உடல் மட்டும் மண்ணுக்கு தமிழீழ உரமானது அவர் தந்த கொடி இது அவர் உயிர் தந்து பறந்த கொடி இது தமிழ் மானம் காத்த கொடி அவர் நினைவு உரமாக்கி புலிக்கொடி நாட்டி தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2014/11/tamileelam.html
-
- 0 replies
- 3.3k views
-
-
குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று, இனிவரும், வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும், இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும், அந்தக் கணங்களில், அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும்...... கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ.. கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ.. கூடுமுடைந்து அங்கேயே தங்கிவிட துணியுமோ.. சாம்பல் பறவையின் கண்களில் இருந்து பெருவெளியில் கலந்தது அரூபமொன்று, கிளைகளில் இருந்து வழியத்தொடங்கிய காலத்தின் துயர் பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது. யாருக்குத் தெரியும் இனிவரும் வசந்தகாலத்தில் …
-
- 0 replies
- 635 views
-
-
-
கரைகளே... நெருப்பாய் இருந்தால் நதிக்கொன்றும் நஷ்டம் இல்லை... நண்பர் உனக்கு நம்பிக்கை இருந்தால் தடைகளொன்றும் கஷ்டம் இல்லை B)
-
- 3 replies
- 1.1k views
-
-
"என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" "அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" "ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!" "இன்பம் துன்பம் நீயே தேடியது இருப்பதைக் கொண்டு வழியை அமை இதயம் திறந்து வரவேற்க பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!" "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!" "உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க …
-
- 2 replies
- 335 views
-
-
தியாகத்தின் திரு விளக்குகளே தமிழீழத்தின் குல விளக்குகளே நியாய தேவைதையின் நீதியரசர்களே நீர் எமக்காய் மரணித்த முத்துக்களே தாயின் கை விலங் குடைக்கத் தானைத் தலைவ னொடிணைந்தவரே வாழும் வரை நாமுமை நினைந்து உம் கனவு பலித்திட கருமம் செய்வோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
-
- 0 replies
- 564 views
-
-
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருக்கின்றனர் தமிழனே! இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான் கண்ணீர் வடிப்பாயோ? விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே நரகிற் கிடந்துழலும் விதியை எவனடா எழுதினான் உன் தலையில்? விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம் கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும். நீ படை வைத்து அரசாண்ட காலத்தில் இன்று சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்தானே, அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான். செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன் இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான். கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும் மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய். நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது ஜப்…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறுவர்கள் பீரங்கிகளை முறிப்பார்கள் தீபச்செல்வன் சிறுவர்களுக்காக பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன? ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும் அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும் நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய் எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய் புரட்சியையும் எதிர்ப்பையும் கொல்ல முடியாது சனங்களை அடக்கும்பொழுது புரட்சி குருதியில் பெருக்கெடுக்கிறது வாழ்வின் பாடலை நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு அந்நியப்படைகளே! எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்? வாழ்வை மூடியிருக்கும் உங்கள் அதிகார நிழலை எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்? முதியவர்கள் …
-
- 0 replies
- 649 views
-
-
உரிமையுள்ள ஒன்றிற்காய் உளம் ஏங்கி உயிர் துடிக்கும் கருணையற்ற மனிதருக்கு காணும்வலி கணம்கூட உணராது நெஞ்சில் வெடித்தெழும் நேசத்து நிகழ்வுகளின் சொல்லொணாத் துயர் சுமந்து சொல்லி அழாச் சுமைகளுடன் காத்திருக்கும் கணங்கள் கவி சொல்லிட முடியாது காலாண்டு கூடவில்லை கடல்போல் அன்பு காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க காலத்தின் வரவுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி முடிவேதுமில்லா அண்டப் பெருவெளியில் அரவமற்று அனாதையாய் நிற்பதாய் உணர்கையில் உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில் உறக்கம் மட்டுமா தொலைந்து போவது???
-
- 16 replies
- 1.3k views
-
-
நான் நல்ல நடிகன் நான் ஒரு நடிகன் அம்மாவுக்கு நல்ல மகன் ஆசானுக்கு வல்ல சீடன் பள்ளியில் நல்ல ஆசான் ஊருக்கு பேர்பெற்ற சமூகத் தொண்டன் மாமாவுக்கு நல்ல மருமகன் மனைவிக்கு ஏற்ற கணவன் என் குழந்தைக்கு செல்ல அப்பா பாட்டிக்கு அன்புப் பேரன் உற்ற தோழன் அவனுக்கு நல்ல நண்பன் தங்கைக்கு ஒரு அண்ணன் அண்ணாக்கு நான் தம்பி நான் நல்ல நடிகன்
-
- 0 replies
- 680 views
-
-
அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...! இளங்கவி - கவிதை பூக்களும் பூக்காத கந்தக பூமியாய்.... பிணங்களின் குவியலில் நிரம்பிட்ட பூமியாய்..... கரும்புலி வேட்டைகள் பல நடத்திட்ட பூமியாய்.... பாய்ந்த இரத்தத்தின் ஈரம் காயாத பூமியாய்..... நாம் வாழ்ந்த பூமியின்று நடுத்தெருவில் தத்தழிக்க நாய்களும் நரிகளும் நக்குத் தீனிக்கு அலைகிறது..... புத்தரின் சரித்திரம் புதைந்து கிடக்குதாம்..... அதை புனரமைத்துக் கட்டிவிட புத்த பிக்குகள் அலையுதாம்.... போய்விடுங்கள் இங்கிருந்து எங்கள் பிணங்கள் தான் கிடக்கிறது..... நீர் விதைத்துவிட்ட விதைகளின்று முளைப்பதற்காய் தவிக்கிறது..... அநியாயத்தின் வெற்றி அதிக நாள் நிலைக்காது…
-
- 18 replies
- 3.1k views
-
-
நாமொன்று நினைக்க தெய்வம் தானொன்று நினைக்கிறது !! எமக்கும், தமிழ் இனத்துக்கும் தலைவனாக தாயாக நண்பனாக சிறந்த வழிகாட்டியாக இருந்த உத்தமனே உலகத்தமிழரின் சூரியப்புதல்வனே எமை விட்டு எங்கு சென்றாய் ? உனக்கு நிகர் இவ்வுலகில் யாருமே இல்லார் என்று எண்ணியோ உலகமே திரண்டு உன்னை கொன்றோளித்ததொவோ ! மாவீரர் அழிவதில்லை, அவர்கள் காலத்தால் அழியாதவர்கள் என்று எமக்கு கற்று தந்தவன் நீ வருடந்தோறும் நவம்பர் 27 இல் அவர்களுக்கு நீ சுடர் ஏற்றிய பின்பே நாமும் எமது அக வணக்கத்தை செலுத்தினோம் இன்று எமை விட்டு பெரும் பயணம் ஏன் தொடர்ந்தாய்? நீ இன்னமும் எம்முடன் வாழ்வதனாலோ நீ சாகா வரம் பெற்றவன் ஆம் நீ ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் அவரவர் இல்லத்தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
உவகை கொ(ல்)ள் மனம் உன்னை நினைத்து .. உயிரில் கலந்து நீரில் கலந்த உப்புபோல் .. என்னுள் என்றும் உறைத்து இருக்கும் பனி நீ .. என் வெப்பம் தாங்காமல் .. விலக கூடாது பெண்ணே .. யான் நேசிப்பது உன் இதய அறையில் ஒரு இடம் .. கிடைக்குமா என் கல்லறை கட்ட அங்கு என்றே .. இறுதிவரை உன் மூச்சுப்பட்டவது சிலவேளை நான் .. உயிர்தெழகூடும் உறங்கிய ஒரு சிறு விதையாய் .. நீ சிந்தும் கண்ணீரில் இருந்து நான் மெதுவா வளர ... உன்னுடன் வாழ்த்த காலத்தை நிழலா உனக்கு தர ... இருவரும் அடிக்கடி சந்தித்த குளத்தடி ஆலமரம் போல் .. நான் மட்டும் போரில் மரணிக்காமல் இருந்திருந்தால் .. காதல் வாழ்த்து இருக்கும் மங்கலமா .. நீனு ஏன் இப்பொழுது வாழவேண்டும் அமங்கலமா .. நல்லவர்கள் நாலுபேர் வாழ்த்த…
-
- 5 replies
- 952 views
-
-
அறிவுமதி அண்ணனின் க(அ)ண்ணன் பாட்டு ------------------------------------------------------------------------------------------------ என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான்! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான்! நேர்க்கோடு வட்டம் ஆகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம்! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான்! அவன் வருவான் …
-
- 2 replies
- 1.5k views
-
-
விட்டில் பூச்சியே.... உனக்குத்தெரியமா? நீ நேசிப்பது நெருப்பின் ஒளியை எரிந்து போவாய் என அறியாமல் என் காதலும் அப்படித்தான் கடசியில் எரிந்து போவது ஆண்கள்தான் உன்னைப்போல ;)
-
- 2 replies
- 1.5k views
-
-
கண்ணெதிரே காண்பவை கானல் நீராய்த் தெரிகிறது மனிதமற்ற மனங்களின் ஆசைகளின் ஓலங்களில் அகப்படும் உயிர்கள் உன்னதம் இழந்து உயிர்வதை பட்டு உழல்வதே வாழ்வாகி உடைந்து நொறுங்கி ஓட்டமுடியாததான ஓர்மத்துடன் ........... நகர்வின் அபிநயங்களில் நல்லவராய் முகம் காட்டி புறத்தே புழுவாய் பேய் முகம் காட்டும் பேடியராய்ப் பலர் பித்தர்களாக்கி எமை பரிதவிக்க வைத்து பரவசம் கொண்டிடுவர் வடிவங்கள் பலவெடுத்து வக்கணையாய்ப் பேசி வஞ்சப் புகழ்ச்சியுடன் வாசனை அற்றவராய் வன்மம் புடைசூழ வஞ்சனையே அவராய் வலிந்த விதியினதாய் வடமிழுக்க முன்னிற்பர் வகை தெரியா மனமே வாழ்வைப் புரிந்திட வண்ணங்கள் அல்ல வாழ்வு ...... மேடுகள் காடுகள் பகை நிறைத்த மாந்தர் பகிர்தலற்ற பாள்மணம் மிகைப்பட அனைத்தும்…
-
- 4 replies
- 712 views
-
-
தேசத் தேர் நிலைக்கு வராமல் சிலருடைய சிலைக்குக் கீழே சிறைப்பட்டு விட்டது! எங்கள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு வடமிழுக்கச் சொல்கிறார்கள் இந்த வல்லவர்கள் தண்ரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தாய் நாடு- எங்களுக்கே தாகம் இன்னும் தணி‘யமல் இருக்கிறது! B)
-
- 3 replies
- 1k views
-