வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…
-
- 0 replies
- 563 views
-
-
சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம…
-
- 2 replies
- 2.1k views
-
-
பட மூலாதாரம்,ACTOR VIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது, அப்போது எனும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன. விஜய் உடனான சந்திப்புகள், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், அன்னதானம் வழங்குதல் என அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் நடவடிக்கைகளும் வாடிக்கையாகி இருக்கின்றன. இதனால், வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவ…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்கள் அண்மையில் எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் எவ்வளவோ அதிர்ச்சிதரும் எம சமூகத்திற்கான தகவல்களும் பொதிந்து கிடக்கின்றது. யாழ்கள உறவுகளுக்காக இங்கே தருகின்றேன். இது தொடர்பாக அறிவுமதி அண்ணனோடு உரையாடினேன். இதோ உங்களுக்காக அதை வழங்குகின்றேன். நன்றி: கீற்று இணையம். பார்ப்பன வாத்தியார்கள் பாவலர் அறிவுமதி ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார். மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. மு…
-
- 9 replies
- 3.2k views
-
-
'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போது இருக்கும் இளம் உள்ளங்களை அள்ளிக் கொண்டவர் ரம்பா. விஜய், அஜித், பிரசாந்த் என ஒரு சுற்று வந்தவர், ரசிகர்களால் 'தொடையழகி' என்ற பட்டமும் பெற்றார். கசாப்புக் கடைகளில் 'ரம்பா ஸ்பெஷல்' என எழுதி வைத்துத் தொடை கறியை வியாபாரம் செய்து வந்தது ஒரு காலம். சிம்ரன், ஜோதிகா என புது முகங்கள் அறிமுகமாக, பழையமுகம் ஆனார் ரம்பா. பின் சத்யராஜ், பார்த்திபன் என சீனியர் நடிகர்களோடு காலம் தள்ளினார். அந்த காலமும் முடிவுக்கு வர ரம்பா ஓரம் கட்டப்பட்டார். அதை தொடர்ந்து குஜராத்தி படங்களிலும், மராத்திப் படங்களிலும் திறமை காட்டி வந்தவர் 'சின்ன வீடு' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இப்படத்தின் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் ரம்பா, வ…
-
- 2 replies
- 1.6k views
-
-
இத்திரைப்பட பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்ட பின் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்ததாக அனிருத்தின் ரசிகையும் ஆகிவிட்டேன்... அனைத்து பாடல்களும் கேட்க பிடித்திருக்கிறது... கண்ணழகா, இதழின் ஒரு ஓரம், நீ பார்த்த விழிகள் ஆகிய பாடல்கள் பார்ப்பதற்கு எனக்கு பிடித்திருக்கிறது... ஸ்ருதியை விட்டு தானாக விலத்தி விலத்தி செல்லும் தனுஷ் ஏதொ தான் காதலில் தோல்வியடைந்தது போல் "நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ" "என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ" போன்ற வரிகளை எழுதியிருப்பதால் போ நீ போ பாடல் கதையுடன் தொடர்பில்லாமல் வருகிறது... why this kolaveri பாடலும் கதையுடன் சம்பந்தமில்லாமல் வருகிறது.... ஸ்ருதி தனுஷை விட்டிட்டு வெளிநாடு போக போறேன் என்று சொன்ன பின் இ…
-
- 0 replies
- 731 views
-
-
மலையாள சினிமாவில் தமிழர் சித்தரிப்புகள்! செவ்வாய், 1 ஏப்ரல் 2008( 14:17 IST ) தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை. தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருதைப் பெறுகிறார் அஜித் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2025 ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டியக் கலைருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் இருந்தனர். டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். இது தவிர கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் தாமு ஆகியோரும் பத்மஸ்ரீ விரு…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
ஒரு பாட்டுக்கு 13 மாதங்கள்! வியாழன், 10 ஜூலை 2008( 20:46 IST ) வருடக் கணக்கில் படம் எடுக்கும் இயக்குநர்கள் நம் தமிழ்த் திரையுலகில் உண்டு. கமல், பாலா, ஷங்கர், அமீர் என நீளும் இப்பட்டியலில் இயக்குநர் கலாபிரவுவையும் சேர்த்துவிடலாம். இவர் இயக்கி வெளிவர இருக்கும் 'சர்க்கரை கட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு 13 மாதங்களாய் கிராஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம். பாக்யராஜ் மகள் சாந்தனு ஹீரோவாக, வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக்கிற்காக பல மாதங்கள் காத்திருந்து, இசைப் புயலின் இசையமைப்பில்தான் படம் வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து கலாபிரபு சற்றும் பின்வாங்கவில்லையாம். இயக்குநரின் அன்பான காத்திருப்புக்கு நன்றி சொல்லும் வித…
-
- 0 replies
- 867 views
-
-
போர்க்களத்தில் ஒரு பூ: இசைப்பிரியாவின் தாயாருடன் பேசி சுமுகத்தீர்வு காண உத்தரவு இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போர் மற்றும் இலங்கை இராணுவத்தினரால் இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களை மையமாக வைத்து ‘போர்க் களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்தை இயக்குநர் கே.கணேசன் இயக்கினார். இப் படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் காட்சிகள் மற்றும் இந்திய, இலங்கை தொடர்பான பிரச்சினைகள் இடம்பெற்றிருப்பதால் அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கடந்த ஆண்டு மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இப்படத்தை வெளியிடஅனுமதிக்கக…
-
- 0 replies
- 373 views
-
-
சென்னையில் அடித்த மழையில் நனைந்த காஷ்மீர் ஆப்பிளைப் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் சமந்தா. ஜில்லென்று மாறிய க்ளைமேட்டுக்கு இதமான லுக்கில் இருந்த இந்த சென்னை ப்யூட்டியை பார்த்ததும், 'அப்பாடா.... வானிலை புகழ் ரமணன் கொடுத்த எச்சரிக்கையைத் தாண்டி மழையில் நீந்தி வந்தது வீண் போகவில்லை' என்று மனதுக்குள் தோன்றியது. மழை நான் _ ஸ்டாப்பாக வெளுத்துக் கட்ட, வேறுவழியே இல்லாமல் ஒரு 'குட்டி' ப்ரேக் கொடுத்தார் கெளதம் வாசுதேவ் மேனன். கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் சமந்தாவுடன் கேஷீவலாக சாட்டை ஆரம்பித்தோம். சமந்தாவின் இதழ்களைவிட கண்கள் அதிகம் துறுதுறுவென பேசுகின்றன. கெளதம் வாசுதேவ் மேனனோட சேர்ந்து ரெண்டாவது படமாக இப்ப ‘நீதானே என் பொன்வசந்தம்' படத்துல நடிக்கிறீங்க. அதனால பயமில்லாம அந்தப் படத்தை …
-
- 3 replies
- 2.1k views
-
-
'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு. நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.…
-
- 3 replies
- 669 views
-
-
ராசு மதுரவன் இயக்கும் படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. இதில் தருண்கோபி, பொன்வண்ணன், சீமான் உட்பட 10 இயக்குனர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக பூங்கொடி, தமிழரசி அறிமுகமாகின்றனர்.இப்படத்தில
-
- 1 reply
- 2.2k views
-
-
காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில்…
-
- 1 reply
- 881 views
-
-
ஹலிவூட் பட கதை சுருக்கமாக மரண பீதியுடன் பார்க்க வேண்டிய படம்
-
- 0 replies
- 388 views
-
-
அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் ரஜினி.! அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர்-14ம் திகதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் எட்டுப் பேருக்கு தொற்று உறுத…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட முக்கிய திரையுலகங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை நயன்தாரா பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவர். பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நடிக்க வந்த நயன்தாரா, மற்ற திரைநட்சத்திரங்களை விட்டு தள்ளியே இருந்தாலும் ஆர்யாவோடு மட்டும் நல்ல விதமாக பழகியதால், ஆர்யா- நயன்தாரா இடையேயான உறவு பற்றி பலவிதமாக பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் ஆர்யாவுக்கும் - நயன்தாராவுக்கும் திருமணம் நடந்துவிட்டது என ஒரு செய்தி சில நாட்களாக திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனேவில் திருமணம் நடந்தது உண்மை என்றார்கள். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் நடித்துவரும் ’ராஜா ராணி’ திரைப்படத்தின் ஒரு முக்க…
-
- 23 replies
- 4.3k views
-
-
எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி. ஹைதராபாத்: என்னைச் சூழ்ந்திருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி. சித்தி கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து, பரபரப்பைக் கிளப்பி பின் போலீசில் ஆஜரானார். தமிழ் - தெலுங்குப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் தன் சித்தியுடன் சமரசமும் ஆகிவிட்டார். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவை குறித்து செய்தியாளர்களிடம் அஞ்சலி கூறுகையில், "இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை மறக்கவே விரும்புகிறேன். என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த முடிவுதான் என் பிரச்சினைகளுக்கு முற்றுப் …
-
- 7 replies
- 815 views
-
-
சில தினங்களுக்கு முன் “தெலுங்கு திரையுலகம்தான் என் வீடு!” என்று பேசிய ‘பாலிவுட் இயக்குனர்’ பிரபுதேவா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்த் திரையுலகில் நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் யார் யார் எனக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். உங்கள் பார்வையில் சிறப்பாக நடனமாடும் நடிகர்கள் யார் யார் ? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், “சிரஞ்சீவி, ஹிரித்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி. நடிகைகளில் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா” என பதிலளித்துள்ளார். See more at: http://vuin.com/news/tamil/vijay-skipped-by-prabhudeva
-
- 0 replies
- 419 views
-
-
ஈழத்தமிழர்களின் வலிகளை சொல்லும் ‘ஆறாம் நிலம்’ மின்னம்பலம்2021-09-25 இலங்கை தமிழர்கள் வாழ்க்கை, தமிழீழப் போராட்டம் இவற்றை பற்றிய திரைப்படங்கள், குறும்படங்கள் வெளி வந்திருக்கின்றன. உண்மை நிலையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நேர்மையான படைப்புகளாக இல்லை என்பதே இலங்கை தமிழர்கள் கூறிவரும் குற்றசாட்டு அதனை போக்கும் வகையில்" ஆறாம் நிலம்" எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஓடிடியில் செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது தமிழீழம் அமைய இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் …
-
- 8 replies
- 1k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு paris விடுதலை வேட்கை அதவது ..தீயில் கருகிய வேட்கை.. இறுவெட்டு இருந்தல் தந்து உதவுமறு கேட்கிறேன் அன்மையில் ..ஜீ.ரிவி செய்தி வீச்சில் ஒளி பரப்பப்பட்டது.. .
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணுற்றேன் விடுவேனா ! உடனே எழுதி முடித்துவிட்டேன் எனினும் ஏனைய திரைப்படங்களின் முழுமையான விபரம் கிடைக்கவில்ல 1 ) சமுதாயம் (1962) 2) தோட்டக்காரி (1963) 3) கடமையின் எல்லை (1966) இயக்குனர் : எம். வேதநாயகம் தயாரிப்பாளர் : எம். வேதநாயகம் கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர் திரைக்கதை : வ…
-
- 11 replies
- 2.8k views
-
-
பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே http://video.google.com/videoplay?docid=-3662048737353732425
-
- 0 replies
- 756 views
-
-
காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?! அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது. சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் [^] கட்சியில் சேரப் போகிறார்" என்பதே. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் சைதை துரைசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவ…
-
- 0 replies
- 548 views
-
-
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்…
-
- 0 replies
- 461 views
-