Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழனும் சினிமாவும் தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தை திரையரங்குகளில் ஓராண்டு ஓடச்செய்து வரலாற்றில் இடம்பிடித்த பெருமைக்குரியவன் தமிழன். ஆனால், அண்மைக்காலமாக தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் அதிகபட்சமாக 30 நாள்களுக்குமேல் ஓடுவதில்லை. என்ன ஆயிற்று? திரைப்படங்களின் தரம் குறைந்துவிட்டதா அல்லது தமிழன் திருந்திவிட்டானா? திரையரங்குகளில் கட்டணம் அதிகம், புதிய திரைப்படங்கள் வெளிவந்த சில நாள்களிலேயே திருட்டு சி.டி. வெளிவந்துவிடுகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்கு பரிகாரமாகத்தானோ என்னவோ திரைப்படங்களை சின்னத்திரையில் ஓடவைக்கிறான் தமிழன். தமிழனின் ரசனையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் இப்ப…

    • 0 replies
    • 925 views
  2. சற்று முன் ஏழாம் அறிவு படத்தை பார்த்துவிட்டு வந்தேன்.. பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது.. சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான் ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம் சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீர…

  3. தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!…

  4. தமிழரான "கொட்டாலங்கோ லியோன்" வை கொண்டாடுவோம். டி கார்ப்பியோ அவார்ட் வாங்கியதை எதோ நம் பங்காளி அவார்ட் வாங்கியது போல் கட் அவுட் வைத்து எல்லாம் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவல் இருக்கும் உலக சினிமா ரசிர்கள். இதே போல் நேற்று நடந்த 88வது ஆஸ்கர் நிகழ்ச்சியில் விருது வாங்கிய மேலும் சில இந்திய வம்சாவளிகளை இந்த கொண்டாட்டத்தில் மறந்து விட்டோம்.. அவர்களை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.. ஆசிப் கபாடியா: இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர் இயக்கிய 'எமி வைன்ஹாவுஸ்' எனும் ஆவணப்படம், இந்த வருடத்தின் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011'ல் இறந்த புகழ் பெற்ற ஜாஸ் பாடகி எமி வைன்ஹாவுஸ்'ன் சுய சரிதை தான் இந்த ஆவண படம். இதே படம் கிராமி விருது விழாவில் சிறந்த இசை பட…

  5. தமிழர் திருநாளில் "மேதகு 2" இரண்டாவது முன்னோட்டக் காட்சி தைப்பொங்கல் தமிழர் திருநாளில் தலைவரின் காவியம் உலகத்தமிழர்களின் படைப்பான “மேதகு-II” ஒப்பாரும்...மிக்காருமில்லா தமிழீழ தேசியத்தலைவரின் தியாக வரலாற்றின் சிறுதுளியான "மேதகு 2" இரண்டாவது முன்னோட்டக் காட்சியை,தைப்பொங்கல் தமிழர் திருநாளில் வெளியிடுவதில் பேருவுவகை அடைகின்றோம்... https://www.thaarakam.com/news/9c796ea1-3298-4b5c-9461-04bdc1f25e89

  6. தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். குரு ராஜேந்திரா மூவிஸ் சார்பில், டைரக்டர் வி.எஸ்.கருணாகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகி வரும் புதிய படம் உங்கள் விருப்பம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கலந்து கொண்டு இசையை வெளியீட்டு பேசினார். அவர் பேசுகையில், நேற்று நான் மலையாள தொலைக்காட்சி சேனல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழ் ச…

    • 1 reply
    • 1.1k views
  7. தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி…. விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை. அதிலும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர். குறிப்பாக, இசை மீது நாட்டம் உள்ள அனைவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க உள்ள தமிழ்மக்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவுற்றது. சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபரீதா, கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரதீப்,…

  8. தமிழர்கள்... வெள்ளை தோல் மோகத்தினை குறைக்குக... மலையாளிகளின் கொட்டத்தினை அடக்குக... நடிக்க வந்து விட்டால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது தவறு. (இவர்கள் எல்லாத்துக்கும் ரெடியாகவெ வந்து தமிழ்நாட்டில் டேரா போடுகிற கோஸ்டி... :D ) இயக்குநர் சொல்வதை கேட்பதே நல்ல நடிகையின் குணம். நான் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்கிறார் அரவான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் கேரளத்து அர்ச்சனா கவி. தடுக்கி விழுந்தால் பாலக்காடு, தெரியாமல் இடித்தால் திருவல்லா என்ற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மலையாள நடிகைகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில் ]தற்போது புதிதாக ஒரு நட்சத்திரம்…

    • 2 replies
    • 1.2k views
  9. ஷாருக்கான் நடித்து சூப்பர்ஹிட் படமாக பேசப்பட்ட `ஓம் சாந்தி ஓம்' படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வற்கு பலத்த போட்டி இருக்கிறது. தமிழில் ரீ-மேக் பண்ணுகிற ஐடியாவில் மாதவன், ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். ரைட்சுக்காக அவர் கேட்ட தொகையில் மாதவன் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை. ஆனாலும் படத்தை வாங்கி தமிழில் எடுப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாராம் மாதவன். காரணம் சமீபத்தில் அவர் நடித்த நேரடிப் படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது ரீ-மேக் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், அதுபோன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று மாதவன் தீர்மானித்திருப்பதுதானாம்.

  10. தமிழில் 5 படங்களில் நாயகியாக நடிக்கும் அமலாபால் அமலா பால் | கோப்பு படம் தமிழில் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2' உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் அமலா பால். கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹெப்புலி'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து தற்போது அதிகமான திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். தமிழில் மட்டும் சுமார் 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2', 'மின்மினி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்று…

  11. தமிழில் அறிமுகமாகும் பிரான்ஸ் அழகி புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் 'மேல்நாட்டு' மருமகன் திரைப்படத்தில் பிரான்ஸ் நாட்டின் மொடல் அழகியும் நடிகையுமான என்ட்ரியன் நடிக்கிறார். ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தை எம்.எஸ்.எஸ் இயக்குகிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவர்களை பற்றிய கதை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தமிழ் கலாசாரத்தை விரும்பி, நேசித்து தமிழ் இளைஞனை திருமணம் செய்து கிராமத்தில் வாழ விரும்பும் வெளிநாட்டு பெண்ணின் கதை. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல வெளிநாட்டு நடிகையை தேடிய…

  12. 'ஃபர்ஸ்ட் டைம்' என்ற பெயரில், அட்டகாசமான ஒரு 'அப்பர் கிளாஸ்' படம் தமிழில் வருகிறது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கில டைட்டில் கூடாது என்ற குரல்களுக்குப் பின்னர் தமிழக அரசு தமிழில் பெயர் வைத்தால் சலுகை என்று உத்தரவு போட்டது. இதைத் தொடர்ந்து ஆய், ஊய் என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த படங்கள் எல்லாம் தமிழுக்கு மாறத் தொடங்கின. இந்த உத்தரவு அமலுக்கு வந்த பின்னர் ஆங்கில டைட்டிலில் ஒரு படமும் வரவில்லை. இந்தநிலையில் ஃபர்ஸ்ட் டைம் என்ற சுத்தமான ஆங்கிலப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. மணிரத்தினம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிருஷ்ணன் சேஷாத்ரி கோமதம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவமு…

  13. தமிழில் கவர்ச்சி மோகம் விரைவில் மாறும் என்றார் டைரக்டர் விக்ரமன். அவர் கூறியதாவது:பொள்ளாச்சியை தொடர்ந்து மூணாறு, மற்றும் கேரள பகுதிகளில் மரியாதை படப்பிடிப்பு முடிந்து இப்போது காரைக்குடியில் நடக்கிறது. Ôவானத்தை போல, சூர்ய வம்சம் படத்துக்கும், மரியாதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக வானத்தை போலபடத்தில் அமைதியாக வருவார் விஜயகாந்த். இப்படத்தில் கம்பீரமான தந்தையாக வருகிறார். எல்லா இளைஞர்களுக்கும் இந்த அப்பாவை பிடிக்கும். கதையுடன் நகைச்சுவையும் இணைந்து வரும். நாயகி மீரா ஜாஸ்மின், ரமேஷ் கண்ணா, ஹீரோ விஜயகாந்த் என எல்லா கேரக்டர்களுமே காமெடியில் கலக்குவார்கள். இப்போதெல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் ஓடுகிறது என்கி…

  14. தமிழில் குரு திரைப்படம் அபிஷேக் பச்சன் ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க, முக்கிய வேடத்தில் மாதவன் நடித்துள்ள குரு திரைப்படம், தமிழில் வெளியாக உள்ளது. 2007 பொங்கல் அன்று வெளியாக உள்ள இந்தப் படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தொழிலதிபர் அமரர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை இந்தப் படம் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது. பகல் நிலவு, மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவரும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவருமான மணிரத்னம், புதிய படம் ஒன்றை இந்தியிலும் தமிழிலும் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்க…

    • 3 replies
    • 3.6k views
  15. தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமாகிறது! மின்னம்பலம் சில்ஸ் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை தமிழில் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் படமாகிறது. 1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. பல்வேறு படங்களில், தனிப் பாடல்களில் நடனத்தாலும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார். இப்போதும் சில்க் ஸ்மிதாவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் மிகவும் சிரமப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். பல்வேறு திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘தி டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் படமாக்கினார்க…

  16. தமிழில் தான் பேசுவேன் : மேடையை விட்டு இறங்கிய ரகுமான்

  17. வாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம். சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. படமும் அந்தரத்தில் நிற்கிறது. இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். தான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள் என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு 70 இலட்சம் சம்பளம் பேசி அதில் 55 இலட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15…

  18. தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா பரபரப்பு புகார். சென்னை: தமிழ்ப் படங்களில் என்னை நடிக்க விடாமல் செய்ய பெரிய சதி நடக்கிறது என்று நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளார். 'கேடி' படம் மூலம் 2005-ல் அறிமுகமானார் தமன்னா. அப்போது அவருக்கு வயது 16தான். முதல் படம் தோற்றாலும் அடுத்த படமான கல்லூரியில் அவர் தேர்ந்த நடிகையாக பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த "அயன்" படம் அவரை முதல் நிலை நாயகியாக்கியது. 2011-ல் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெற்றிப் படங்களின் நாயகியாகத் திகழ்ந்தார். கார்த்தியுடன் பையா. சிறுத்தை என இரு படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பத…

    • 2 replies
    • 1.5k views
  19. இதைத்தான் பெரியவர்கள் 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை குற்றம்' என்று அழகாக சொல்லியிருக்கிறார்கள். தமிழ், மலையாளப் படங்களில் நடிக்காததற்கு நல்ல கேரக்டர்கள் கிடைக்காததுதான் காரணம் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. மலையாள சினிமாவில் பத்தோடு மலையாள சினிமாவில் பத்தோடு பதினொன்றாக அறிமுகமாகி, பெரிய ஹீரோக்களின் தங்கையாக, ஹீரோயின் தோழியாக கூட்டத்தோடு கும்மாளம் போட்டவரை, தேடிப் பிடித்து கிரேனில் வைத்தது தமிழ் சினிமா. நயன்தாரா தமிழில் அறிமுகமான 'ஐயா' படமே உண்மையில் இவருக்கு சரியான சினிமா விலாசமாக அமைந்தது. ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததால், ஒரே படத்தில் தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகையாக உயர்ந்தார். 'வல்லவன்' படத்துக்குப் பிறகு சிம்புவுடன் ஏற்பட்ட மோதலும், தெலுங்கு தேசத்தில் கொட்டி…

  20. தமிழில் பாலுறவு சினிமா - யமுனா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இன்று உலக சினிமாவிலும் முக்கியமான பிரச்சினை பள்ளிக் கூட விடலைப் பிள்ளைகளின் காமம் தொடர்பான பிரச்சினைதான். இங்கிலாந்தில் பள்ளிக் கூட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தமது மாணவ மாணவிகளோடு பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் பிரச்சினை வெகுஜன ஊடகங்களில் பரவலான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்திலும் இவ்வாறான நடத்தை தவறிய ஆசிரியர்கள், மாணவிகளைப் பாலுறவுக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள் எனும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் மாறிவரும் பாலுறவு மதிப்பீடுகள் தொடர்பாக இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு சிறப்பிதழும் வெளியிட்டது. …

  21. தமிழின் முதல் பின்னணிப்பாட்டு முதல் இரவல் குரல் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாயிருக்கும். தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலத்தில், சரீர அழகும் சாரீர அழகும் உடையவர்களே வெள்ளித்திரையில் முன்னணியில் மின்னினார்கள். அப்படியோர் புதிய வரவே கே.அஸ்வத்தம்மா ஒரு நடிகையின் தேவைக்கு மிஞ்சிய சரீர அழகும், பாட்டுத்திறனும், கீச்சுக் குரல் தமிழ்ப்பேச்சுத் திறனுமான சாரீர அழகும் இவருக்குமிருந்தன. ”கன்னடத்துப் பைங்குயில்” என்று தாரளமாக அழைத்திருந்திருக்கலாம்... பாகவதரின் மூன்றாவது படமான ‘சிந்தாமணியி’ல், அவருக்கு ஜோடியாக சிந்தாமணியாக நடித்து பலரைப் பைத்தியமாகியவர் இவர். ஒருவருடத்திற்கும் மேலாக வெற்றிவாகை சூடிக்கொண்டு ஓடிய சிந்தாமணியின் புகழ் வெளிச்சத்தோடு கே.அஸ்வத்தம்மா நடி…

    • 1 reply
    • 550 views
  22. திரைப்படப் பிரிவு தமிழீழம் தமிழீழத்தின் முதலாவது முழு நீள திரைப்படத் தொடக்க விழா இடம்பெற்றுள்ளது. தமிழ்மக்களின் போராட்டவாழ்வை போரின் பாதிப்புகளை உலகசமுகத்தின் மனத்தை தட்டியெழுப்பும் வகையில் திரைப்படங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நெடும் படத்தொடக்கம் அமைகின்றது என்று தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாழ்த்துரையை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன்,மகளீர் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் தமிழினி,கிளிநொச்சி அரசஅதிபர் தி.இராசநாயகம் ஆகியோர் வழங்கினர். சிறப்புரையை தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு.ப.…

  23. ஐயா பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் டைரக்டர் வ.கெளதமன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் உயிருக்கு நிகரான தமிழ் மக்களுக்கு என் வணக்கம். உலகம் தோன்றிய காலத்தில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பெய்த கடும் மழையால் மூன்று பகுதி நீரும் ஒரு பகுதி நிலமும் உருவானதாக கூறுகிறது அறிவியல் செய்தி. இந்த பூமிப் பந்து உருவான காலத்திலிருந்து எந்த இனமும் சிந்தாத பெருமளவு இரத்தத்தை நம் தமிழ் இனம் சிந்தியிருக்கிறது என்கின்றது வரலாற்றுச்செய்தி. அப்படி ஈழத்திலே சொல்லமுடியாத துயரங்களை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனபவித்துள்ளார்கள். நம் வீரத்தின் அடையாளம் தங்கள் உரிமைக்கு விடுதலை…

  24. தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைப்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்திய படங்களில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியாற்றுவது வழக்கமாகி இருந்தது. சில படங்களில் கிராபிக்ஸ், ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துவருகின்றனர். இதையடுத்து இப்போது ஹாலிவுட் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக்குவது பே…

    • 0 replies
    • 412 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.