வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அரசியலுக்குள் நுழையத் தயாராகிவிட்டாராம் நமீதா. அவர் அரசியல் சேவையாற்றப் போகும் கட்சி பாஜக. படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டாத நமீதா சொந்தப் படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் என்று ஓரமாக வைத்துவிட்டு, வேறொரு முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் நமீதா. அது அரசியல். சமீபத்தில் இரு பெரிய தேசிய கட்சிகள் அவரிடம் இதுகுறித்து பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது. அவற்றில் காவிக் கட்சிதான் நமீதாவை அள்ளிக் கொண்டு போவதில் அதிக ஆர்வம் காட்டுகிறதாம். தமிழக பாஜகவை வலுப்படுத்தப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஐடியா இது என்கிறார்கள். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதாவும், சீக்கிரமே தமிழக மேடைகளில் தோன்றி மச்சான்ஸ்…
-
- 0 replies
- 332 views
-
-
சென்னை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக இசையமைக்கக் கோரி தன்னிடம் வந்த இயக்குநர் மிஷ்கினை முதலில் வெளியே போகச் சொன்னாராம் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் -இளையராஜா இணைந்த முதல் படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு அருமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் தந்திருந்தார் ராஜா. ஆனால் இரண்டு பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மீதியை சிடியில் மட்டும் வைத்துக் கொண்டார் மிஷ்கின். இடையில் யுத்தம் செய், முகமூடி என இரண்டு படங்களைச் செய்திருந்தார் மிஷ்கின். இவற்றுக்கு இசையமைத்தவர் கே எனும் இளைஞர். இவரும் ராஜா ரசிகர்தான். முகமூடி படத்தில் வரும் ஒரு பாட்டில், 'ராஜா இல்லாத சங்கீதமா' என ஒரு வரியே இடம்பெற்றிர…
-
- 0 replies
- 617 views
-
-
இந்திபட நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் இலங்கையில் 70 வயது சிரானி சமரசேகராவும் ஒருவர். ஷாருக்கான் மீது சிரானி பைத்தியமாக இருப்பதை அறிந்த அவரது மகன், தனது தாயின் 70 வது பிறந்தநாள் அன்று ஷாருக்கானை சந்திக்க வைத்து இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பினர். இதற்காக அவர் ஷாருக்கானின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம், ஷாருக்கை சந்திப்பதற்காக அவர் இலங்கையிலிருந்து தனது தாயார் சிரானி சமரசேகராவுடன் இந்தியா வந்தார். ஷாருக்கான் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது ஷாருக்கான் தனது 70 வயது இலங்கை ரசிகையை சந்தித்து தனது வாழ்த்துக்களை…
-
- 7 replies
- 729 views
-
-
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன. அவரது காமெடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது காமெடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து காமெடி செய்திருந்தார் வடிவேலு. தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.http://www.dinaithal.com/index.php?option=com_…
-
- 0 replies
- 379 views
-
-
பொதுவாக தமிழ் திரையுலகில் ஹீரோயினுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார். அல்லது டிவி சீரியல், அக்கா, அண்ணி வேடங்களில் நடிகக் போய்விடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் திருமணம் ஆனாலும் ஹீரோயின்களாக வலம் வருவார்கள். இந்த கலாச்சாரம் பாலிவுட்டில் வந்துவிட்டது. கரீனாகபூர், ஐஸ்வர்யாராய் போன்றோர் திருமணம் ஆனபின்பும் ஹீரோயின்களாக அதுவும் கிளாமராக நடிக்க தயங்கியதில்லை. தற்போது இந்த கலாச்சாரத்தை சினேகா கோலிவுட்டில் முதன்முதலாக ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கவர்ச்சி வேடங்களில் அக்கறை காட்டாத சினேகா, தற்போது படு கவர்ச்சியாக நடிக்க முன்வந்துள்ளார். இவரது முடிவு பிரசன்னாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மிகவும் …
-
- 2 replies
- 1k views
-
-
சென்னை: இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கர்ரி இன் லவ் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பி வாசு இயக்கவிருக்கிறார். நடிகர் விஜய் - சோனம் கபூரை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கர்ரி இன் லவ் படத்தின் கதை திரைக்கதையை அமெரிக்க தமிழரான ராஜ் திருச்செல்வன் எழுதியுள்ளார். இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. Rea…
-
- 2 replies
- 454 views
-
-
Eyecatch Multimedia Inc. தயாரிப்பில் லெனின் எம்.சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் A Gun & A Ring திரைப்படம் ஷாங்ஹாய் திரைப்பட விழாவின் தங்கக் குவளை விருதுக்கான போட்டிப்பிரிவில் ஜூன் 19 பிற்பகல் திரையிடப்பட்டது. உலக அளவில் இத்திரைப்படத்தின் காட்சியுமாகும்(Official World Premiere). காட்சி தொடங்கமுன்னர், அரங்கு நிறைந்த பார்வையாளருக்கு திரைப்படக்குழுவினர் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். காட்சி முடிவடைந்த பின்னர் நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் A Gun & A Ring குழுவினர் கலந்துகொண்டனர். திரைப்படத்தில் தமது பாத்திரம் அல்லது பங்களிப்புப் பற்றியும் விளக்கமளித்தனர். கனடிய அரசின் சார்பில் ஷாங்ஹாய் நகரத்து, கனடியத் துணைத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். A Gun & A …
-
- 1 reply
- 369 views
-
-
செல்லப்பா தமிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும். நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப…
-
- 1 reply
- 718 views
-
-
"கண்ணா லட்டு தின்ன" ஆசையா படத்தின் வெற்றி காரணமாக பவர் ஸ்டாருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதனையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த இயக்குனர் இராம.நாராயணன் பவர் ஸ்டாரை நாயகனாக்கி “ஆர்யா சூர்யா” என்ற படத்தை இயக்கினார். படமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், மோசடி வழக்கில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார். இதனால் தற்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில் இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும் இதில் பவர் ஸ்டார் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டி.ஆருக்கு கிடைத்திருக்கிறது.…
-
- 3 replies
- 681 views
-
-
கடந்த 1993ம் ஆண்டில் வெளிவந்த மணிச்சித்திரத்தாளு என்ற படத்தின் இரண்டாம் பாகம் கீதாஞ்சலி என்ற பெயரில் வரவிருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்தனர். அந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி. வாசு ரீமேக் செய்தார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடித்தனர். தற்போது விஷ்ணுவர்தனும், சௌந்தர்யாவும் உயிருடன் இல்லை. ஆப்தமித்ரா படத்தை தமிழில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாராவை வைத்து பி.வாசு சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படமும் சூப்பர்ஹிட் வெற்றிப்படமானது. இந்நிலையில் பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் எடுக்கிறார். கீதாஞ்சலி என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ஷோபனா கௌரவ கதா…
-
- 0 replies
- 541 views
-
-
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்கு முன் 1981-ம் வருடம் வெளிவந்த தில்லுமுல்லு திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்கள் 32 பற்களும் தெரிய சிரித்து மகிழ, பத்ரி இயக்கத்தில் மிர்சி சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது! முருக பக்தரான பிரகாஷ்ராஜின் பிரபல மினரல் வாட்டர் கம்பெனியின் மூத்த வக்கீல் இளவரசு. மிர்சி சிவாவின் தாய்மாமா. ஒரு கேசில் இளவரசின் வ(வா)த திறமையால் தனக்கும் தன் தங்கைக்கும் சேரவேண்டிய 5 கோடி மதிப்பிலான பூர்வீக வீட்டை இடிக்கிறார் சிவா. அதனால் சிவாவிற்கும், அவரது தங்கைக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளவரசு. சிபாரிசு பிடிக்காத பிரகாஷ்ராஜின் வாட்டர் கம்பெனி முக்கிய பொறுப்…
-
- 0 replies
- 719 views
-
-
-
இனமான தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15895:mani-died-political-leaders,-actors,-actresses-tribute-150-pics&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 955 views
-
-
பட வாய்ப்ப்புகள் இல்லாமல் கிடைக்கிற படங்களை கமிட் செய்து நடித்து வரும் ஸ்ரேயா தற்போது பவித்ரா என்ற படத்தில் படு செக்ஸியாக நடித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த படம் தமிழில் "பவித்ரா பெயரில் மட்டும்" என்ற டைட்டிலில் டப் ஆகிறது. ஸ்ரேயாவை இதுவரை மாடர்ன் ட்ரெஸ்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தில் அவரது விலைமாது கேரக்டரும், படுக்கையறை காட்சிகளும் புதிய விருந்தாக அமையும் என்பதால் தமிழில் டப் செய்கிறார்கள். இதற்கிடையே இந்தப்படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்ததைப் பற்றி வாய் திறந்திருக்கும் ஸ்ரேயா “விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பாக பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். மேலும…
-
- 13 replies
- 1.2k views
-
-
சென்னை: காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் 'கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான்' என புகழப்படுபவர் வாலி. வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர். எந்த அரசியல்வாதியுடனும் இலக்கியவாதியுடனும் இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். தன்னை வளர்த்து விட்டவர்கள், வாழ்க்கை தந்தவர்கள் அனைவரிடத்திலும் இ…
-
- 10 replies
- 613 views
-
-
"துருவ நட்சத்திரத்தில்" சூர்யா ஜோடி த்ரிஷாவா... அமலாவா? கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் பரபரப்பான கதாநாயகியாகவே திகழ்கிறார் த்ரிஷா. துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார். இவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். …
-
- 0 replies
- 365 views
-
-
TALAASH (Hindi) - திரை விமர்சனம் அமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர். திரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையி…
-
- 0 replies
- 1k views
-
-
கலகலப்பு என்ற மாபெரும் காமெடி வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அளித்திருக்கும் படம் தீயா வேலை செய்யணும் குமாரு. கலகலப்பு அளவுக்கு கலகலப்பை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும். ஆனாலும் மொக்கை என்று சொல்ல முடியாத அளவுக்கு சுமாரான படம். காதல் பரமரையில் வந்த சித்தார்த்துக்கு காதல் என்றாலே சிறுவயது முதல் பிடிக்காத ஒன்று. ஏனெனில் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப்பருவம் வரை கிடைத்த கசப்பான அனுபவங்கள். அப்படிப்பட்ட சித்தார்த்துக்கு ஆபீஸில் புதிதாக வேலைக்கு சேரும் ஹன்சிகா மேல் ஈர்ப்பு வருகிறது. காதலுக்கு ஐடியா கொடுக்கும் சந்தானத்தின் உதவியோடு காதலை மெருகேற்ற சித்தார்த்த் முயலும்போது அவருக்கு வில்லனாக வருகிறார் கணேஷ் வெங்கட்ராம். நல்ல ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் கணேஷை …
-
- 0 replies
- 2.4k views
-
-
கமல் இயக்கி நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் காஜல் அகர்வாலிடம் கால்சீட் பேசி வந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை வெளியில் சொல்ல மறுக்கும் காஜல், தன்னிடம் அதுபற்றி விசாரிப்பவர்களிடம், அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு படம் இருப்பதால் என்னால் கால்சீட் தர முடியவில்லை என்று சொல்லி சமாளித்து வருகிறார். இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா(குத்து படத்தில் நடித்த ரம்யாதான் இந்த திவ்யா ஸ்பாந்தனா…
-
- 1 reply
- 680 views
-
-
பாலிவுட் நடிகை ஜியாகானின் மறைவிற்கு நீதி கிடைக்க வேண்டி போராட பேஸ்புக்கில் ஒரு பக்கம் உருவாக்க பட்டுள்ளது. சொந்த வாழ்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களால் மன விரக்திக்கு உள்ளான அவர் சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று "Justice for Jiah Khan", (URL:https://www.facebook.com/Justice.For.Jiah.Khan). என்ற பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. இது செய்தி மற்றும் இணையதளம் மூலம் எடுக்கப்படும் ஒரு முயற்சி ஆகும். அநேக திரை உலக கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இதனைப்பெரிதும் ஆதரிக்கின்றனர். ஜியா கானின் மரணமானது யாரும் எதிர் பாராதது என்றும், நொடியில் திடீர் என்று நடந்து முடிந்து விட்டது என்றும் அந்தப்பக்கத்தில் த…
-
- 1 reply
- 468 views
-
-
உடுமலை ஒன்றியப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், முதல்வகுப்பு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில், ஆங்கில வழி கல்வி வகுப்பு துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு ஒன்றியங்களுக்கு குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்து பட்டியல் வழங்க உத்தரவிட்டது. இதற்கான கருத்துரும் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டன. உடுமலையில், காமராஜ் நகர், கண்ணமநாயக்கனூர், பெரியவாளவாடி, எலையமுத்தூர், சிவசக்தி காலனி, சுண்டக்கம்பாளையம், சின்ன பூலாங்கிணர், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட ஒன்பது பள்ளிகளில…
-
- 0 replies
- 474 views
-
-
பெரும்பாளும் இயக்குநர் கவுதம் மேனனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தவியாய் தவிப்பார்கள் ஹீரோயின்கள். ஏன் எனில் அவரது திரைப்படங்கள் எல்லாம் கதநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையம்சமுள்ள படங்களாக இருக்கும். இந்நிலையில் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர அமலா பாலுடன் போட்டி போடுகிறார் த்ரிஷா. ஏற்கனவே கவுதம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து அசத்தியவர் த்ரிஷா, இதனால் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதில் த்ரிஷா நடிப்பது 50 சதவீதம்தான் உறுதியாகியுள்ளது. காரணம், பட ஹீரோயின் வேடத்துக்காக அமலா பால் பொருத்தமாக இருப்பார் என்றும் யூ…
-
- 0 replies
- 319 views
-
-
நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நாளை நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோத்வானி கலந்து கொள்ள இருக்கிறாராம். விழாவின் முக்கிய அம்சமாக சிம்புவின் திருமணம் குறித்தும் பேசப்படுகிறதாம். சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயரை இந்த விழாவில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாக சமீப காலமாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சிம்புவின் புதிய வீட்டின் கிர…
-
- 0 replies
- 438 views
-
-
ராம்சரண் தேசா மற்றும் ஸ்ருதி ஹாசன் மெயின் கேரக்டரில் நடிக்கும் ஏவடு என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க எமி ஜாக்சன் புக் ஆகியுள்ளார். சுவிட்சர்லாந்து கடற்கரையில் எமிஜாக்சன் மற்றும் ராம்சரண் இருவரும் கடற்கரையில் நடித்த பாடல் காட்சி ஒன்று சென்ற வாரம் படமாக்கபட்டது. இந்த பாடலில் படுகவர்ச்சியாக நீச்சலுடையில் நடித்து கலக்கியிருக்கிறார் எமி ஜாக்சன். அவருடைய காஸ்ட்யூமை பார்த்து ராம்சரணே அதிர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தனது கவர்ச்சியால் தெலுங்கு படவுலகை ஒரு கலக்கு கலக்கலாம் என்ற எண்ணத்தில் திடீரென மண் அள்ளிப்போட்டிருக்கிறார் எமிஜாக்சன். இதனால் தனக்கும் ஒரு கவர்ச்சியான பாடல் வைக்கும்படி இயக்குனர் வம்சியை இம்சித்து வருகிறார். எமிஜாக்சனின் சுவிஸ் …
-
- 9 replies
- 1.2k views
-
-
பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார். அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் திகழ்கின்றன. 1930 ஆம் ஆண்டு ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/04/130414_srivasdied.shtml
-
- 35 replies
- 6.2k views
-