வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
"யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா? கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதற்காக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா' இந்தியாவின் சந்தோஷம்! இந்தியாவின் ஆனந்தம்!! இந்தியாவின் பேருணர்ச்சி!!! ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது. எல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்ப…
-
- 16 replies
- 4.4k views
-
-
பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திமிங்கலத்தின் வாயில் சிக்கியதைப் போன்ற நிலையில் இன்று இருக்கிறது சினிமாவில் தமிழ் படும் பாடு. பெரும்பாலான நடிகைகள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள். அதேபோல பின்னணி பாடும் பெரும்பாலான பாடகர், பாடகிகளும் கூட தமிழுக்கு முற்றிலும் அந்நியர்கள். அந்தக் காலத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களது தாய் மொழி தமிழ் இல்லாவிட்டாலும் கூட மிக அருமையாக வார்த்தைகளை உச்சரித்து, அழகாக பாடினார்கள். அதிலும் ல, ள, ழ வித்தியாசத்தை மிகத் துல்லியமாக அவர்கள…
-
- 24 replies
- 4.4k views
-
-
''நிறையக் காயங்கள்...அதான் யார்கூடவும் நெருங்கிப் பழகுறதில்லை!'' - கோவை சரளா பர்சனல் #VikatanExclusive நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா. தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம்வருபவர். அது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. "சினிமா ஆர்வம் எப்போது ஏற்பட்டுச்சு?" "அஞ்சு வயசுலேயே, 'எப்படியாச்சும் என்னை சினிமாவில் சேர்த்துவிடுங்க'னு வீட்டில் அடம்பிடிப்பேன். எனக்கு நாலு அக்கா, ஓர் அண்ணன். வீட்டின் கடைக்குட்டி நான். அப்பா மிலிட்டரி ஆபீஸர். கா…
-
- 0 replies
- 4.4k views
-
-
தமிழ்வானத்தின் ஆதரவில் இன்று வெற்றிகரமாக நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம் திரையிடப்பட்டது.;
-
- 18 replies
- 4.4k views
-
-
ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு இந்த செய்தி எரிச்சலாகதான் இருக்கும். நடிகைகளில் ஸ்ரீதேவிக்குதான் ஒருகாலத்தில் அதிக ரசிகர்கள் இருந்தார்கள். அமிதாப்பச்சனின் வீட்டுமுன் அதிகாலையிலேயே ரசிகர்கள் காத்திருப்பது போல், ஸ்ரீதேவியை காணவும் ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஸ்ரீதேவிக்குப் பிறகு அப்படியொரு ரசிகர் கூட்டம் மாதுரி தீட்சித்திற்கு ஓரளவு கிடைத்தது. அதன் பிறகு...? இந்த கேள்விக்குறிக்கு ஆச்சரியக்குறியாக வந்திருக்கிறார் சன்னி லியோன். ஜிஸம் 2 படத்தில் அறிமுகமான சன்னி லியோன் முன்னாள் நீலப்பட நடிகை. தனி இணையம் ஆரம்பித்து இப்போதும் தனது ட்ரிபிள் எக்ஸ் வீடியோக்களை விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவரை முழுமையாக வீடியோவில் தரிசித்தவர்களுக்கு நேரில் பார்க்க வேண்டும் என்று க…
-
- 11 replies
- 4.4k views
-
-
காலம் சென்ற நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள், மீனாவுடனான செவ்வி
-
- 0 replies
- 4.4k views
-
-
பிரபல நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணமடைந்தார். சூரியன், ஜென்டில்மேன், முதல்வன் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ஓமகுச்சி நரசிம்மன் (வயது 73). எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். குறிப்பாக சூரியன் படத்தில், கவுண்டமணி, 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா' என ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்துச்சொல்லும் வசனம் மிகப் பிரபலம். ஓமக்குச்சி நரசிம்மன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஓமகுச்சி நரசிம்மன் மரணம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் திரை உலகை சேர்…
-
- 9 replies
- 4.3k views
- 1 follower
-
-
'இடியட்' ரெஜினா மறைந்த தேங்காய் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறது. முதலில் அவரது பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். நெடு நெடுவென்ற உயரம், தேங்காயின் அதே பூனைக் கண்கள் மற்றும் இன்ன பிற அட்டகாச ஐயிட்டங்ளோடு இருந்த ஸ்ருத்திகா ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அடுத்து ஆல்பம் படத்தில் நடித்தோடு சரி, அத்தோடு ஆளைக் காணோம். அந்தப் படம் தெலுங்குக்கும் போனது. ஜேப்பியார் காலேஜில் விசுவல் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்த ஸ்ருத்திகா அதை விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்தார். அது கை கொடுக்காததால் மீண்டும் படிக்கப் போனார். இடையில் விருமாண்டி படத்தில் ஸ்ருதிகாவை கமல் ஹீ…
-
- 5 replies
- 4.3k views
-
-
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட முக்கிய திரையுலகங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை நயன்தாரா பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவர். பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நடிக்க வந்த நயன்தாரா, மற்ற திரைநட்சத்திரங்களை விட்டு தள்ளியே இருந்தாலும் ஆர்யாவோடு மட்டும் நல்ல விதமாக பழகியதால், ஆர்யா- நயன்தாரா இடையேயான உறவு பற்றி பலவிதமாக பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் ஆர்யாவுக்கும் - நயன்தாராவுக்கும் திருமணம் நடந்துவிட்டது என ஒரு செய்தி சில நாட்களாக திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனேவில் திருமணம் நடந்தது உண்மை என்றார்கள். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் நடித்துவரும் ’ராஜா ராணி’ திரைப்படத்தின் ஒரு முக்க…
-
- 23 replies
- 4.3k views
-
-
சூர்யா - ஸ்ருதி கமல் இணையும் ஏழாம் அறிவு on 04-08-2010 22:14 சூர்யாவும் ஸ்ருதி கமலும் இணைந்து நடிக்கும் படம் 7 ஆம் அறிவு. இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சூர்யாவும், முருகதாஸும் இணையும் இரண்டாவது படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது ஏழாம் அறிவு படக்குழு. ஏழாம் அறிவு - க்கு இசையமைக்க இருப்பது ஹாரீஸ் ஜெயராஜ். படத்தின் அதிகபட்சக் காட்சிகளை சீனாவில் படம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் முருகதாஸ். இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் சர்க்கஸ் கம்பெனியில் விலங்குகளுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் கதாபாத்திரம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. இதுபற்றித் தெரிவித்த ஏ.ஆர்.முருகதாஸ், இந்தப்படம் உலகையே திரும்பிப் பா…
-
- 26 replies
- 4.3k views
-
-
- நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது. - இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார். - இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (171 விருதுகள்) பெற்ற ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே. - டாக்டர் க…
-
- 21 replies
- 4.3k views
-
-
போர்ப்ஸ் என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தற்போது 62 வயதாகும் ரஜினிகாந்த், சுமார் 24 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று பட எண்ணிக்கையை குறைத்து வருகிறார். அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய், அஜீத் இருவரும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள். யாருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவரை சூப்பர்…
-
- 11 replies
- 4.3k views
-
-
பிரபல தமிழ் நடிகை கோவாவில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒரு காலத்தில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சின்னக்கவுண்டர் நடிகை, கோவாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார் என மலையாள இணைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அந்த நடிகை தனக்கு கீழே பல இளம்பெண்களை வைத்துக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும்,பணத்தேவைக்காகவே இந்த தொழிலில் இறங்கியதாக காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன. ஒரு அறையில் குடிபோதையில் இருந்த சில நபர்களுடன் அந்த நடிகை காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும்,தான் பிரபல நடிகை என்று கூறியும், தேவையான பணத்தை கொடுத்தும்…
-
- 17 replies
- 4.3k views
-
-
தொடர் சறுக்கலும் துப்பாக்கியின் ஒற்றை வெற்றியும் அரவிந்த கிருஷ்ணா மின்னத் தவறிய நட்சத்திரங்கள் துப்பாக்கி படம் வெற்றிபெற்றதும் கோலிவுட்டில் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். காரணம் தொடர்ந்து பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தோற்றுவருவதுதான். கடந்த ஆண்டு 'மயக்கம் என்ன' 'ஒஸ்தி' ஆகியவற்றிலிருந்து தொடங்கிய இந்தச் சறுக்கல் 'மாற்றான்' வரை மாற்றமில்லாமல் தொடர்ந்தது. பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட், வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், நாயக பிம்பங்கள் ஆகியவை படத்தின் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் தராது என்பதைக் காட்டிவிட்டன இந்தப் படங்கள். துப்பாக்கி இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. துப்பாக்கியைப் பற்றிப் பேசுமுன் இந்தச் சறுக்கலின் விவரங்களை அலசலாம்.…
-
- 0 replies
- 4.3k views
-
-
இன்ப அதிர்ச்சியா இல்லை கூச்ச உணர்ச்சியா? எதுவாக இருந்தாலும் ஆண் இனத்துக்கே ஓர் அழியாத வடுவை தேடிதந்து விட்டார் விஜய சிரஞ்சீவி. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன்தான் விஜய சிரஞ்சீவி. மீசை வளர்ந்தாலும் வயசுல விஜய சிரஞ்சீவி இன்னமும் பாலகாண்டம் தான். இவரை வைத்து 'சூர்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஜாக்குவார் தங்கம். விஜய சிரஞ்சீவியின் ஜோடி கீர்த்தி சாவ்லா. கராத்தே, கம்பி, மான்கொம்பு என சகல சண்டை வித்தைகளும் தெரிந்த விஜய சிரஞ்சீவிக்கு காதல் காட்சி என்றால் மட்டும் குலை நடுக்கம். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நாயகியின் வாயை அடைக்க நாயகன் திடீரென அவர் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுப்பதாக ஒரு காட்சி. ஏற்கனவே காதல் காட்சியில் மகன் கதகளி ஆடிக்கொண்டிருப்பதால…
-
- 21 replies
- 4.3k views
-
-
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை. விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்? கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில்…
-
- 19 replies
- 4.3k views
-
-
திங்கட்கிழமை, 10, ஜனவரி 2011 (18:47 IST) பிரபல நகைச்சுவை நடிகை தற்கொலை பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 32 வயதான சோபனா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடத்துள்ளார். 15 வயதில் நடிக்க தொடங்கிய சோபனா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சோபனாவின் தாயார் ராணியும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். வைரம் உள்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் வீட்டு வசதி க…
-
- 2 replies
- 4.3k views
-
-
வாழ்க்கையில் குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். – எயிட்ஸ் பிடித்த ஒரு பிரபல நடிகையின் கதை.. June 29, 2013 9:15 am பதிந்தவர் Supes கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார்…
-
- 11 replies
- 4.3k views
-
-
குசேலன் திரைப்படம் - குமுதம் விமர்சனம் ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்ஷன், அதிரடி, மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல். மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட `கத பறயும் போள்' கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல். சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதா…
-
- 6 replies
- 4.3k views
-
-
வெளியாகின, இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்! அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி. ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று வெளியாகியுள்ளன. பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தவர் பூஜா. அதற்கு முன் வரை சுமார் நடிகையாக இருந்தவரை, சூப்பர் நடிகையாக்கியது நான் கடவுள்தான். பின்னர் பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏனோ மறுத்துவிட்டார். ஆனால் பாலா எப்போது அழைத்தாலும் நடிப்பேன் என்று சமீப காலமாக சொல்லிக் கொண்டிருந்தார் பூஜா. இந்த முத்தச் சம்பவ…
-
- 12 replies
- 4.3k views
-
-
விஜய் டிவியில் டிடி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா? சென்னை: விஜய் தொலைக்காட்சியில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். இந்த நிலையில், அண்மையில் விஜய் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் கோபிநாத், திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை சொதப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில…
-
- 27 replies
- 4.2k views
-
-
அழகு நிலைய அம்மா! சந்தியாவின் அம்மா மறுபடியும் தனது அழகு நிலையத்தைத் திறந்து தொழிலை ஆரம்பித்துவிட்டார். பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு வந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விட்டது. காதல் படம் அவருக்கு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முதல் படமே மெகா ஹிட் என்பதால் சந்தியாவுக்கு பல புதிய படங்கள் வந்து குவிந்தன. தமிழில் நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தும் அவற்றை விட்டு விட்டு தனது தாய் மொழியான மலையாளத்தில் வெளியான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படத்தைத் தேர்வு செய்து நடிக்கப் போனார் சந்தியா. ஆனால் அந்தப் படம் பெரும் தோல்விப் படமானதால் சந்தியா போன வேகத்தில் திரும்பி தமிழுக்கு ஓடிவந்தார். அவர் திரும…
-
- 0 replies
- 4.2k views
-
-
வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா: 1. பாப்புக் குட்டி! ‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி. ‘உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் டடடா டடடா டடடா டடடா... ’ ‘வாழ்க்கை’ சினிமா படப் பாடலின் ஆரவாரம் தென்னகமெங்கும்! மதராஸப் பட்டணத்தின் குடிமக்கள் அண்ணாந்து பார்த்து... பார்த்து, அவர்களின் கழுத்து வலித்தது. காரணம் ‘வாழ்க்கை’ டாக்கியின் விண் முட்டும் விளம்பரங்கள்! ‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை’ என்று கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட, லட்சக் கணக்கான வண்ண வண்ண பிரம்மாண்ட பல…
-
- 5 replies
- 4.2k views
-
-
நீ சைடா வந்து உரசு'!! சால்ட்டு கொட்டா சரசு சரசு நீ சைடா வந்து உரசு உரசு! பாட்டின் முதல் வரிரியே டாப்பை எகிற வைப்பது போல இருக்கிறதல்லவா? இந்தப் பாட்டுக்கு ஆடியவர்கள் யார் என்று தெரிந்தால் ஹார்ட் பீட்டே தாறுமாறாக தத்தளித்துப் போகும். 'குபுகுபு' மும்தாஜும், 'டண்டணக்கா' டி.ராஜேந்தரும்தான் இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். விஜய டி.ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வரும் வீராசாமி படத்தில்தான் இந்த கும்தலக்கா பாட்டு இடம் பெறுகிறது. பாட்டை டி.ஆரும், 'ஹஸ்கி செக்ஸி' குரல் அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து பாடியுள்ளனர். இப்படத்தில் டி.ஆரை, மும்தாஜ் ஒரு தலையாக காதலித்து மனசுக்குள் ராகம் பாடுகிறார். கனவில் அவரும், டி.ஆரும் கண்டபடி கட்டிப்புடித்து க…
-
- 1 reply
- 4.2k views
-
-
சமீபகால கமல்ஹாசன் குறித்த வலைப்பூ சர்ச்சைகளே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டியது. கமல்ஹாசன் பற்றி வெகுகாலமாக எழுதவேண்டும் என ஆவல் என்னை தூண்டினாலும் நேரம் கிடைக்காதது மட்டுமல்ல எழுதவேண்டியதின் அவசர அவசியமும் ஏதும் இல்லாமல் இருந்தது. பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு திறமைசாலி அவர். நடிப்பிலோ, இயக்கத்திலோ, நடனத்திலோ, வசன உச்சரிப்பிலோ, பாடகராகவோ அல்லது திரைக்கதை எழுதுவதிலேயோ, வசனம் எழுதுவதிலேயோ, அந்தந்த துறைகளில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க முடியும். ஆனாலும் எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் கமல்ஹாசனை விட பொருத்தமான ஒருவரை காண்பது அரிது.…
-
- 6 replies
- 4.2k views
-