வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
சென்னையில் நாளை ரஹ்மானின் இசை மழை! ஜெயா டிவிக்காக நாளை 29-ம் திகதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான். தாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முத…
-
- 0 replies
- 559 views
-
-
ஹிந்தியில் பிரபு தேவா நடிப்பில் வெளிவரவிருக்கும் ABCD மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .. இதன் முதல் கட்டமாக promo வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது..
-
- 0 replies
- 833 views
-
-
இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது "இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது. இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும். இளையராஜா தவிர இசைத் துறையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மன்சூர், அஜய் போகன்கர் (இந்துஸ்தானி இசைப் பாடல்), சபீர்கான் (தபேலா), பஹாஉத்தீன் தாகர் (ருத்ர வீணை), ஓ.எஸ். தியாகராஜன் (கர்நாடக இசை), மைசூர் எம். நாகராஜ…
-
- 0 replies
- 496 views
-
-
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆரின் நினைவுதினம்.எங்கள் தாயக விடுதலையை முன்னோக்கிப் பாய வைத்த முக்கிய சக்தி.அவருக்கு என் நினைவு வணக்கம்.புரட்சித் தலைவா!நீ பாடிய பாட்டெல்லாம் என்தேசியத்தலைவனுக்கும் பொருந்தும், http://4.bp.blogspot.com/_EEOvvAxs9sQ/Sw1yEoKuT1I/AAAAAAAAAJE/kErF0tQEd6Q/s1600/170.jpg
-
- 15 replies
- 991 views
-
-
திரைப்படம் "இனி அவன்": இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் ஈழ யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் மட்டுமல்ல மனிதர்களும் நடைப்பிணங்களாய் வாழும் நிலை தொடரும் சூழலில் “இனி அவன்” என்ற தமிழ் பேசும் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட முதல் தமிழ்த் திரைப்படத்தைத் தொடர்ந்து எழுபதுகளில் ஈழத்துத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய நிலை இருந்து, எடுத்த படங்களும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, ஆங்காங்கே எஞ்சியது என்று எண்ணிப்பார்த்தால் பத்துக்கும் குறைந்த படங்களே நம் ஈழ சினிமாவின் கதை சொல்லும். ஈழப்போராட்ட காலத்தில் நிதர்சனம் என்ற தொலைக்காட்சியை …
-
- 1 reply
- 832 views
-
-
http://youtu.be/SV4oEP4QUY8 எரியும் பனிக்காடு என்று Red Tea நாவலினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலை கடந்த ஆண்டு வாசித்தேன். தேனீரின் பின் இருக்கும் கண்ணீர் பற்றி மிகவும் முக்கியமான நாவல் அது. இத் திரைப்படத்தினை பார்க்க விரும்புகின்றவர்கள் முடிந்தால் எரியும் பனிக்காட்டினையும் ஒரு முறை வாசித்த பின் பாருங்கள். எரியும் பனிக்காடு: http://www.sramakrishnan.com/?p=435 வாங்குவதற்கு: http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
-
- 3 replies
- 1.6k views
-
-
கவுதம் மேனனின் காதோர நரைக்கு ஊரே சேர்ந்து ஒரு 'ஹேர் டை' வாங்கித் தர வேண்டிய நேரம் வந்தாச்சு. ஒரு காதல் படத்தில் இருக்க வேண்டிய எல்லாமே இப்படத்தில் இருந்தாலும், 'காதல் எங்கேப்பா?' என்று தேட வேண்டியிருக்கிறது. ஒரு ஃபீலிங்கும் இல்லாத காதல் படத்தோடு நமக்கென்ன டீலிங் வேண்டிக் கிடக்கு என்று நினைத்த அநேக ஜோடிகள், தியேட்டருக்கு வந்த கையோடு திகைக்க திகைக்க விழிப்பது காதலின் ஹோல்சேல் அத்தாரிடியாக விளங்கி வந்த கவுதம் மேனன் படத்திலா? அட கடவுளே... இது அந்த மன்மதனுக்கே வந்த பட்டினி மயக்கம்! அறியாப் பருவம், அறிந்த பருவம், ஆள் கிடைத்தால் அப்படியே அமுக்குகிற பருவம்... இப்படி மூன்று பருவத்திலும் இருவருக்குள் நடக்கும் காதல் மயக்கங்களும், சண்டைகளும், ஊடல்களும்தான் இப்படத்தின் முழுக்கதை. டய…
-
- 0 replies
- 518 views
-
-
சென்னை: பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.. இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோ…
-
- 68 replies
- 12.1k views
-
-
கமலின் அதிரடி முடிவு - சாதகமா? பாதகமா? அரவிந்த கிருஷ்ணா கமல் ஹாஸன் அதிரடி ஆக்ஷன் படங்களுக்குப் பேர்போனவர் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கும் கதை விஷயத்திலும் படத்தைச் சந்தைப்படுத்துவதிலும் சில சமயம் அவர் மேற்கொள்ளும் முடிவுகள் பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உருது எழுத்தின் சாயலில் எழுதப்பட்ட தலைப்பையும் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிய படம் என்னும் பரபரப்பையும் கொண்ட விஸ்வரூபம் திரைப்படம் கதைக்காகவும் சந்தைப்படுத்தும் உத்திக்காகவும் பரபரப்பாகச் செய்தியில் அடிபடுகிறது. பொங்கலை ஒட்டித் திரைக்கு வரத் தயாராக இருக்கும் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் அதிரடியான ஒரு முடிவை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தினரின் கவனத்தைத் தன் வசம் திருப்பியிருக்கிறார் கமல். படத்தைத…
-
- 0 replies
- 653 views
-
-
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஜெயா பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் மணந்ததில் இருந்து குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்று இதுவரை எந்த செய்தியும் வெளியானதில்லை. விழாக்களில் மாமனார், மாமியார், கணவருடன் ஐஸ்வர்யா கலந்து கொண்டு குடும்த்தோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில் ஐஸுக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் சென்ற ஐஸ் அம்மாநிலத்தின் வளர்ச்சியையும், மோடியையும் புகழ்ந்து தள்ளிவிட்டு வந்தார். அமிதாப் குஜராத் மாநில …
-
- 9 replies
- 924 views
-
-
‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்‘ - விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள். “ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்ப…
-
- 0 replies
- 508 views
-
-
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமு…
-
- 4 replies
- 3.3k views
-
-
தலைப்பை பார்த்ததும் படத்தைப் பற்றிய விமர்சனம் என்று எண்ணி விடாதீர்கள் .ஏனெனில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யுமளவுக்கு எனக்கு திரைக்கதையின் வரைமுறையோ, ஒலிப்பதிவின் / ஒளிப்பதிவின் இலக்கணங்களோ தெரியாது. நேற்று படம் பர்ர்த்த் பின்னிரவில் குளிருக்கு இதமாக சாலையோரக் கடையில் தேநீர் அருந்தியபின் எழுந்த எண்ணப் பிறழ்வுகளை உங்களுடன் பகிர்கிறேன். அடிகடி எனக்குள் தோன்றும் ஒரு கேள்வி "சிந்தனைக்கும்" "கற்பனைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன? சில நிமிடங்கள் யோசித்து விட்டு பெரிதாக வித்தியாசம் ஏதும் கிடையாது என்று அடங்கி விடுவேன். திரைப் படத்தை பற்றிய வரைமுறை ஒவொருவருக்கும் ஒருவிதமாகக் இருக்கும். என்னைப் பொருத்த வரையில் "ஓர் தனி மனிதக் கற்பனையின் ஒழுங்கு படுத்தப் பட்ட திரைவடிவமே சினிமா" எ…
-
- 0 replies
- 768 views
-
-
சென்னை: தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வழக்கமாக தனது பிறந்த நாளன்று தனிமையில் கழிக்கும் ரஜினிகாந்த்,இன்று தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்தார். செய்தியாளர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார். அப்போது செய்தியாளகள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி நன்றி கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,"என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. எனது பிறந்த நா…
-
- 28 replies
- 2.1k views
-
-
தமிழைக் கற்றுக் கொண்டு பாட வாருங்கள் - வேற்று மொழி பாடகர்களுக்கு வைரமுத்து அட்வைஸ் தமிழில் பாடவரும் வேறுமொழிக்காரர்கள் தமிழைக் கற்றுக் கொண்டு பாடவர வேண்டும் என்று இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார். கர்நாடக இசைப் பாடகி எஸ்.ஜே.ஜனனி இசையில் மகாகவி பாரதியாரின் வந்தே மாதரம் என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த ஆல்பத்தை வைரமுத்து வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக் கொண்டார். விழாவில் வைரமுத்து பேசுகையில், "இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இத்தனை தலைமுறைகள் கடந்த பின்னும் பின்னும் பாரதி பாடல்களின் தணல் குறையாமல் இருக்கிறது. அதன் தேவை தீரவில்லை. பாரதியின் பாடல்களுக்கு எத்தனையோ பேர் இசையமைத்துள்ளார…
-
- 0 replies
- 613 views
-
-
-
- 2 replies
- 559 views
-
-
சென்னையில் அடித்த மழையில் நனைந்த காஷ்மீர் ஆப்பிளைப் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் சமந்தா. ஜில்லென்று மாறிய க்ளைமேட்டுக்கு இதமான லுக்கில் இருந்த இந்த சென்னை ப்யூட்டியை பார்த்ததும், 'அப்பாடா.... வானிலை புகழ் ரமணன் கொடுத்த எச்சரிக்கையைத் தாண்டி மழையில் நீந்தி வந்தது வீண் போகவில்லை' என்று மனதுக்குள் தோன்றியது. மழை நான் _ ஸ்டாப்பாக வெளுத்துக் கட்ட, வேறுவழியே இல்லாமல் ஒரு 'குட்டி' ப்ரேக் கொடுத்தார் கெளதம் வாசுதேவ் மேனன். கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் சமந்தாவுடன் கேஷீவலாக சாட்டை ஆரம்பித்தோம். சமந்தாவின் இதழ்களைவிட கண்கள் அதிகம் துறுதுறுவென பேசுகின்றன. கெளதம் வாசுதேவ் மேனனோட சேர்ந்து ரெண்டாவது படமாக இப்ப ‘நீதானே என் பொன்வசந்தம்' படத்துல நடிக்கிறீங்க. அதனால பயமில்லாம அந்தப் படத்தை …
-
- 3 replies
- 2.2k views
-
-
தமிழ்திரைப்படத்துறையின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிகளுக்கு ஒளிப்பரப்பும் முடிவை எதிர்த்து அந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்பப்போவதாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் ஒளிப்பரப்பும் கமலஹாசனின் முடிவை தமிழ்நாட்டின் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கெனவே எதிர்த்து வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து இப்போது தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கமும் கமலஹாசனின் முயற்சியை எதிர்த்திருக்கிறது. கமலஹாசனின் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி. எச்.சில் ஒளிப…
-
- 0 replies
- 543 views
-
-
தொழில் தேடி இடம் பெயர்ந்து தனியனாக வந்தாயிற்று. குடும்பம் ஸ்கைப் புண்ணியத்தில் சில அங்குலங்களே தூர இருப்பதாக உணர்ந்தாலும், வீட்டிலும் வாகனத்திலும் நிரம்பிக் கிடக்கும் வெறுமையையும் அமைதியையும் விரட்ட சில பொழுது போக்குகள் தேவையாய் இருக்கின்றன. நடுத்தர வயது ஆண்களுக்கு வேறென்ன பொழுது போக்கு வாய்க்கப் போகிறது? சினிமாவும் தொலைக்காட்சியும் நிசப்தத்தைக் கலைக்க இப்பொழுது துணையாய் இருக்கின்றன. ஹொலிவூட் பொலிவூட் கோடம்பாக்கம் சினிமா தவிர்த்து வேற்று மொழி/ நாட்டுத் திரைப் படங்கள் பக்கமான எனது ஆர்வம் பேராதனைப் பல்கலையில் ஏ.ரி எனச் செல்லமாக அழைக்கப் படும் கலைப் பீட சினிமா அரங்கில் பல வருடங்கள் முன்பு ஆரம்பமானது. ஒரு ம…
-
- 3 replies
- 490 views
-
-
வெங்காயம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சங்ககிரி ராசகுமார். இவர் இப்போது உலக சாதனைக்காக ஒரு படம் இயக்கி உள்ளார். படத்தின் பெயர் ஒன். ஆங்கிலத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் இவரே செய்திருக்கிறார். நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார் என்பதை தனியாக மேக்கிங் ஆப் ஒன் என்ற பெயரில் எடுத்து வைத்திருக்கிறார். மர்ம காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்குபேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் கதை. இந்தப் படத்தை உருவாக்க இவருக்கு 9 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் அறிமுக விழா விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. உல…
-
- 0 replies
- 511 views
-
-
டிசம்பர் மாதம் பல்வேறு படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் 3Dல் தயாராகியிருக்கும் 'சிவாஜி 3D' படம் வெளியாக இருக்கிறதாம். ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'சிவாஜி 3D' படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம். ரஜினி, ஸ்ரேயா, சுமன் நடித்த சிவாஜி படத்தினை ஷங்கர் இயக்கி இருந்தார். இப்படம் 2007-ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜி படத்தினை 3Dல் வெளியிடலாம் என்று தீர்மானித்து அதற்கான பணிகளை ஏ.வி.எம் நிறுவனம் மேற்கொண்டு இருந்தது. அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் தீபாவளி அன்று வெளியிடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அதனைத் தள்ளி வைத்து, படத்தினை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு …
-
- 1 reply
- 469 views
-
-
முதலில் மாமனார், இப்போ மருமகனுடன் குத்தாட்டம் போட்ட நயன். சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். நடிகர் தனுஷ் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் ஆகியோரை வைத்து செந்தில் இயக்கியுள்ள எதிர் நீச்சல் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு கொலவெறி பாடல் புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். இசை உரிமையை சோனி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்று தெரிகிறது. இந்த படத்தில் தயாரிப்பாளர் தனுஷ் ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார் என்று கூறப்பட்டது. அவர் ஒன்றும் தனியாக ஆடவில்லை. நயன்தாராவுடன் சேர்ந்து தனுஷ் குத்தாட்டம் போட்டுள்ளார். முன்னதாக சிவகாசி படத்தில் விஜயுடன் நயன் ஆடிய கோடம்பாக்கம் ஏரியா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1 எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின் கதையான "திக்கற்ற பார்வதியை" தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர். திக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து " தரம்மாறிந்தி " என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 582 views
-
-
திவ்யராஜனின் சகா - யமுனா ராஜேந்திரன் 02 டிசம்பர் 2012 இன்னுமொரு ஈழத் தமிழ் கேங்ஸ்டர் திரைப்படம் திவ்யராஜனின் சகா. இங்கிலாந்துப் படமான ஸ்டில் லைப், பிரெஞ்சப் படமான இடிமுழக்கம் கனடியப் படமான 1999 போன்று பிறிதொரு கனடியப்படம் சகா. கேங்ஸ்டர் படங்கள் அந்தக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டு வேறு வேறு கோணங்களில் படமாக்கபபட்டிருக்கிறது. கேங்ஸ்டர் கலாச்சாரத்துக்கு உட்பட்ட குழுவினரின் பார்வையில், கேங்ஸ்டர்கள் பற்றி காவல்துறையினர் பார்வையில், கேங்ஸ்டர்களின் வன்முறைக்கு உள்ளான பொதுச் சமூகத்தவரின் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் குடும்பத்தவர் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் வன்முறைக்குப் பலியான இளைஞர்களின் பெற்றோர்களது பார்வையில் என கேங்க்ஸ்டர்கள் குறித்த திரைப்படங்கள் பல்வகையானவ…
-
- 0 replies
- 641 views
-