வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
ஸ்ருதி ஹாசனுக்கு போட்டியாக தங்கை அக்ஷரா! கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். ஆனால் கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவோ நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கதாநாயகியாக பல வாய்ப்புகள் வந்தும் அவற்றை புறந்தள்ளிவிட்டு, இயக்குனராகி திரைக்கு பின்நிற்க ஆசைப்பட்ட அவருக்கு இப்போது திரையில் தோன்ற ஆசைவந்துள்ளதாம். அக்கா ஸ்ருதிஹாசனைபோல் தானும் நடிகையாக விரும்புகிறாராம். தெலுங்கு படத்தில் அறிமுகமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹிந்தியிலும் வாய்ப்புகள் வந்துள்ளன. தெலுங்கு படத்தை முடித்து விட்டு ஹிந்தி, தமிழ், படங்களில் நடிக்கும் முடிவில் இருக்…
-
- 27 replies
- 1.9k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்; இசை: கிருஷ்ண கிஷோர்; ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்; இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன். பேயையும் நகைச்சுவையையும் கலந்து Horror - Comedy என்ற பாணியில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த பாணியில் வெளிவந்திருக்கும் ஒரு படம்தான் 'அனபெல் சேதுபதி'. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும்…
-
- 0 replies
- 500 views
-
-
நவம்பர் 24-ம் தேதி நமீதாவுக்கு திருமணம் தமிழ் திரையுலகின் பல்வேறு படங்களில் நடித்த நமீதாவுக்கும், வீராவுக்கும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2016-ம் ஆண்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் நடித்திருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள 'பொட்டு' வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, சில …
-
- 8 replies
- 1.2k views
-
-
-
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி -------------------------------------------------------------------------------- சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும் சாந்தமும் சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள் பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர்; திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது. அல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கை…
-
- 0 replies
- 925 views
-
-
மாஸ்டர் டைரக்டர்! எஸ்.கலீல்ராஜா ஒரு சினிமா எப்போது தொடங்கும்? உண்மையில் ஒரு படம் முடிந்த பின்தான், அது ஆரம்பிக்கும்! ஜாக்கி சானின் பக்கா ஆக்ஷன் படத்தைப் பார்த்து முடித்தவுடன் பைக் திராட்டிலை வேகமாக முறுக்கினால்... 'தாரே ஜமீன் பர்’ பார்த்துவிட்டு கண் கலங்க வெளியே வந்தால்... 'சதுரங்க வேட்டை’ பார்த்துவிட்டு, 'ஊர்ல எம்புட்டு ஃப்ராடு இருக்காய்ங்க... சூதானமா இருக்கணும்’ என மனதுக்குள் நினைத்தால்... அது நல்ல சினிமா. இதெல்லாம் நமக்குத் தெரிந்த கமர்ஷியல் உதாரணங்கள். படம் முடிந்து வெளியே வந்ததும், 'மனுஷன் பின்னிருக்கான்யா... ஆனா, கிளைமாக்ஸில் என்ன சொல்ல வர்றாரு?’ எனப் பிரமிப்பு விலகாமல் பார்த்தால், 'அந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்’ என முடிவுசெய்தால்... அது 'கிறிஸ…
-
- 0 replies
- 1.7k views
-
-
கமல் - ஸ்ரீதேவி நடித்த 'மூன்றாம் பிறை'யில் மனதை கனக்கவைத்த முடிவையே 'தீபாவளி'யின் முன்னுரையாக்கி காதல் கமகமக்கும் அத்தியாயங்களை அடிகாக சொல்லியிருக்கிறார் எழில். சென்னை ராயபுரத்தில் அரசியல்வாதிகளே சலாம் போடுமளவிற்கு செல்வாக்கு மிக்கவர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம்ரவி. பெங்களுரில் கட்டபஞ்சாயத்தும் கன்ஸ்ட்ரக்ஸ்ன் என பண பலம், ஆள் பலத்துடன் இருக்கும் லாலின் மகள் பாவனா. வந்த இடத்தில் ரவியின் துறுதுறுப்பும் துடுக்குதனமும் பாவானாவின் மனசில் தூண்டில் போட அவ்வப்போது டூயட் ஆட ஆரம்பிக்கிறது காதல். இந்நிலையில் நடந்த சம்பங்களை அடிக்கடி மாந்துவிடும் மூளை குறைபாடு இருப்பது தெரியவருகிறது. ஒரு இடத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவுதான் இந்த நோய்க்கு காரணம் என்பதை ரவியிடம் ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
நண்பர்களே உங்களில்யார்யார் இவ் திரைப்படத்தை என்னை பொறுத்தவரை இது படமல்ல காவியம் பார்த்தநீர்கள் பார்காதவர்கள் தயவுசெய்து உடனே பார்க்கவும். http://blooddiamondmovie.warnerbros.com/
-
- 13 replies
- 2.3k views
-
-
நடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்! னி செய்திகள் தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். சண்டிகரில் நடந்த குத்துசண்டை போட்டியில் பெண் வீராங்கனையிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 வயதாகும் ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்தி டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை மணக்கிறார். வருகிற 30–ந் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்கள் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
500 படங்கள் மேல் நடித்த ரங்கம்மா பாட்டி மெரினா பீச்சில் கர்ச்சீப் விற்கும் நிலை :நடிகர்சங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்… அஜீத்,விஜய் உட்பட 500 படங்களில் நடித்தும் மெரினா பீச்சில் கர்ச்சீப் விற்கும் நடிகை… சமீப காலங்களில் ரங்கம்மா பாட்டி அதிகம் காணப்பட்டது வடிவேலுவுடன் காமெடிக்காட்சிகளில்.சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக ஒரு திரைப் படத்தில் வடிவேலுவை, ‘போற வழியிலேயே அப்படியே இந்த நாயை ‘சூ’ வென விரட்டிட்டு போ’, என்று இவர் பேசிய வசனம் பிரபலமானது. அன்று முதல் ‘சூ பாட்டி’ என்ற அடையாளம் இவருக்கு…
-
- 0 replies
- 646 views
-
-
எந்த விஷயத்திலும் அதீத ஆர்வமும் தேடலும் கொண்ட இளைஞன் சந்திக்கும் எதிர்பாராத விளைவுகளே 'ஜீவி'. ஊரில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் வெற்றி பெற்றோரின் வற்புறுத்தலால் வேலை தேடி சென்னை வருகிறார். செக்யூரிட்டி வேலை உள்ளிட்ட சில பல வேலைகளைச் செய்த பிறகு ஜூஸ் போட்டுக் கொடுக்கும் வேலையில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். அதே கடையில் டீ போடும் கருணாகரனும் வெற்றியும் நண்பர்கள். இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்கள். எதிர்க்கடையில் வேலை செய்யும் பெண் வெற்றியின் காதலை நிராகரித்துவிட்டு இன்னொரு ஆணுடன் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இதனால் விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறார் வெற்றி. குடும்ப பாரம் அழுத்த, பொருளாதாரப் பிரச்சினையில் தவிக்கும…
-
- 0 replies
- 454 views
-
-
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது. விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் மனோரமா. கண்ணம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்த்திருந்தார் ஆச்சி. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கம்முன்னு கெட என்று அவர் பேசிய வசனம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் போன்று மிகவும் பிரபலமானது.வீட்டு முதலாளியின் மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணத்தில் தான் மனோரமா நடித்திருப்பார். முதலாளியின் சம்பந்தியை பார்த்து மனோரமா நறுக் நறுக்கென்று பேசுவார். அதை கேட்ட முதலாளியின் மனைவியும், மகளும் பதறிப் போய் கண்ணம்மா, கண்ணம்மா என்பார்கள். அதற்கு மனோரமாவோ அவர்களின் …
-
- 0 replies
- 659 views
-
-
விகடனில் படித்தது: பிரிக்க முடியாதது’ பட்டியலில் தமிழனுக்கும் தமிழ் சினிமா வுக்கும் நிரந்தர இடம் உண்டு. அந்த தமிழ் சினிமா வின் சில 'பிரிக்க முடியாத சங்கதி’கள் இவை... ஷங்கர் படங்களில் மலை, ரயில், ரோடு, லாரி, மனுஷன் (முக்கியமா தொப்பை!) ஆகிய பிராப்பர்ட்டிகளில் பெயின்ட் அடிக்கக் கூடாது. ஆதிவாசிகளுக்கே தெரியாத காட்டுக்குள் முதல்முறையா ஷூட் பண்ணிட்டு வந்து, 'அங்கே டிரக்கில் போனோம், கயிறு கட்டி இறங்குனோம், ப்ரீஸியா இருந்தது’னு பேட்டி கொடுக்கக் கூடாது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இனி, ரஜினியை ரஜினியே விரும்பினாலும் யூத்தா காட்டக் கூடாது! மிஷ்கின் படங்களில் இனியும் மஞ்சள் உடைத் தேவதை ஆடினால், ஒவ்வொரு தமிழனும் அறச் சீற்றத்தோடுபொங்கி எழ வேண்டும். 'ஒரு அட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
திரை விமர்சனம்: கோடை மழை பாரம்பரியமான திருட்டுத் தொழில் மிச்சமிருக்கும் கிராமம் ஒன்றின் முகத் தைக் குறைவான ஒப்பனையுடன் நமக்குக் காட்ட முயற்சிக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரவன் பல தலைமுறைகளைப் பின் தொடர்ந்த திருட்டுத் தொழிலில் ஒரு சிலர் மட்டும் ஆர்வம் காட்டிவரும் கிராமம் அது. அங்கே நேர்மையாகவும் கவுரவமாகவும் வாழ்கின்றன பல குடும்பங்கள். அந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் உள்ளூர்வாசியான களஞ்சியம். அவரது தங்கையான ஸ்ரீப்ரியங் காவைக் கண்டதும் காதலிக்கிறார் ராணுவ வீரரான கண்ணன். விடுமுறையில் ஊருக்கு வந் தால் நண்பன் பொடுங்குதான் அவரது உலகம். பொடுங்குவோ கண்ணனுக்குத் தெரியாமல் திருட்டுத் தொழிலைச் செய்து வருகிறான…
-
- 0 replies
- 282 views
-
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்! நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2025/1447695
-
- 12 replies
- 815 views
- 1 follower
-
-
கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் வீட்டுக்கு செல்லும் வரை அவர்களை அனுப்பிக் கொண்டே இருப்பேன் - சோனு சூட் நெகிழ்ச்சி கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் வசதியும் முடங்கியுள்ளதால் இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ‘சந்திரமுகி’, ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியு…
-
- 5 replies
- 1.3k views
-
-
படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூ…
-
- 0 replies
- 262 views
-
-
என்னை பார் யோகம் வரும்’ ஜமீன்ராஜ் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் படம் ‘பேட்டை முதல் கோட்டைவரை’. இதில் சத்யராஜ் ஜோடியாக லட்சுமி நடிக்கிறார். இவர் பழைய ஹீரோயின் லட்சுமி அல்ல. புதுமுகம். இவர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் ஜோடியாக ‘தமிழ்தேசம்’ படத்தில் நடித்து வருகிறார். தன் நண்பருடைய மகனுக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி, இப்போது தனக்கே ஜோடியாக நடிப்பது பற்றி சந்தோஷப்படும் சத்யராஜ், உடனே ரகுவுக்கு போன் செய்து, “நான் இன்னும் யூத் ஹீரோதாம்பா. பாரேன், உன் ஜோடி இப்ப என் ஜோடியா நடிச்சுகிட்டிருக்கு” என்று குசும்பு செய்திருக்கிறார். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=411
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம். கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்… காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்… தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே… பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே… நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு… புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
விஷால் - வரலெட்சுமி காதல் முறிந்தது? பிறந்தநாளன்று வரலெட்சுமியுடன் விஷால். (கோப்புப் படம்) நடிகை வரலெட்சுமி நேற்று வெளியிட்ட ஒரு ட்வீட்டைத் தொடர்ந்து அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இதனை வரலெட்சுமி மறுத்துள்ளார். விஷால் - வரலெட்சுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்தார்கள். சமீபத்தில் நடந்த விஷாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் வரலெட்சுமி பங்கேற்றிருந்தார். சமீபத்தில் விஷால் அளித்திருந்த ஒரு பேட்டியில், “லெட்சுமிகரமான பெண்ணுடன் என் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கல்யாண மண்டபத்…
-
- 1 reply
- 351 views
-
-
மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலு.. ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ என்ற முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார்.. முதல் கட்டப்படப்பிடிப்பில் மன்னர் குதிரையில் நகர்வலம் வருவது, குதிரையில் பயணம் செய்வது, போரில் பங்குபெறுவது, பாடல்காட்சியில் குதிரையில் வருவது போன்ற பல காட்சிகளை தேனியில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். See more at: http://vuin.com/news/tamil/vadivelu-beaten-by-a-horse
-
- 0 replies
- 450 views
-
-
உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 " தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைக்களத்தின் இரண்டாம் படைப்பான, மேதகு-2 தமிழ்த்திரைப்படத்தின் முதல் பார்வை படவடித்தை இயக்குனர் சசிகுமார் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் இணைந்து வெளியிட்டனர். மேதகு-2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, நவம்பர்-26 அன்று வெளியிடப்படவிருப்பதாக மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.thaarakam.com/news/91e70aa2-60b7-4f5e-88ac-03ec399de5fc
-
- 31 replies
- 2.3k views
-
-
இந்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஜனவரி, 2014 - 16:43 ஜிஎம்டி இந்திய அரசின் பத்மா விருதுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி எச் விநாயக்ராம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், டாக்டர். அஜய் குமார் பரிடா, மல்லிகா சிறினிவாசன், தீபக் ரெபேக்கா பள்ளிக்கள், பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா மற்றும் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகை வித்யா பாலனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டிருப…
-
- 1 reply
- 670 views
-
-
தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை. அது என்னைப் போன்ற கவிஞர்களை நம்பியில்லை. தானே வளரும் என்று கவிஞர் வாலி கூறினார். விஷ்ணு - பியா நடிக்க, சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள பலே பாண்டியா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் இன்று நடந்தது. பின்னணிப் பாடகர் தேவன் ஏகாம்பரம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். தமிழ் சினிமா இசை வெளியீட்டு விழாக்களில் வழக்கமாக பங்கேற்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்ஸி தலைவர் விசி குகநாதன், கலைப்புலி சேகரன் உள்ளிட்டோர் இந்த விழாவிலும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். ஒரு மாறுதலுக்காக படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களை வைத்தே ஆடியோவை வெளியிட்டனர். ந…
-
- 0 replies
- 866 views
-