வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஓடிடியில் ‘இனம்’ ! மின்னம்பலம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியானது 'இனம்' திரைப்படம். சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓடிடியில் வெளியாக உள்ளது 'இனம்' தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவை மூன்றும் கடந்த மார்ச் முதல் இன்றுவரை அபாய கட்டத்திலேயே இருக்கிறது. எப்போது சினிமா தொழில் இயல்புநிலைக்கு வரும் என்பதை எவராலும் அறுதியிட்டு கூற முடியாத நிலைதான். இனம், மொழி, சாதி கட்டமைப்புகளில் ஊறிப்ப…
-
- 0 replies
- 535 views
-
-
இயேசு உயிர்த்தெழுதல் குறித்த இளையராஜா கருத்தால் சர்ச்சை! (விடியோ) அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சமீபத்தில் வருகை தந்த இளையராஜா, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார்கள் என்று சொல்வார்கள். அடிக்கடி ஆவணப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்பது நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒருவருக்குத்தான். 16 வயதில் …
-
- 1 reply
- 535 views
-
-
டைரக்டர் களஞ்சியம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வந்தார். அப்போதுதான் அவர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார். இதுநாள் வரை அவர் அம்மா என்று அழைத்து வந்த பாரதி தேவி தனது அம்மா அல்ல, சித்தி என்றும், வீட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பரபரப்பான தகவல்களை அஞ்சலி வெளியிட்டார். இதனால், ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஞ்சலி நடிக்க வராததால் தனது படப்பிடிப்பு பாதிப்பட்டிருப்பதாக டைரக்டர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் களஞ்சியம் புகார் செய்தார். இந்த நிலையில், அஞ்சலி சில நாட்கள் ஐதராபாத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் அவர், புனேயில் நடந்த ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து க…
-
- 0 replies
- 535 views
-
-
கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்! 'காக்கும் கரங்கள்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அனைவராலும் புகழப்படுபவர். பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சிவகுமார், சென்னையில் முதல் முறையாக தி.நகர் பகுதியில் தனக்கான வீட்டைக் கட்டினார். கடந்த 40 வருடங்களாக அந்த வீட்டில்தான் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். இவரின் பிள்ளைகளாக சூர்யா, கார்த்தி, பிருந்தா இந்த வீட்டில்தான் பிறந்தார்கள். தன் பேரப் பிள்ளைகளையும் இந்த வீட்டில்தான் கொஞ்சி மகிழ்ந்தார். இன்று தன் மகன் சூர்யாவுக்காக அவர் வசித்த வீட்டை விட்டுக்கொடுத்துள்ளார் சிவகுமார். சிவகுமார்…
-
- 0 replies
- 535 views
-
-
ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்! ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா…
-
- 0 replies
- 535 views
-
-
கொஞ்சம் கொஞ்சம் திரை விமர்சனம் பெட்டி சி.கே. மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா , அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரதீப் கோட்டயம் , ஜெயன் செர்தாலா, பிரியா மோகன், நீனு , ஆகியோர் நடிக்க, உதய் சங்கரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் கொஞ்சம் கொஞ்சம் . முழுசா பார்க்க முடியுமா ? பார்க்கலாம் . கேரளாவில் பழைய பேப்பர் கடை வைத்து இருக்கும் தமிழ் நாட்டு நபர் ஒருவரின் (அப்புக்குட்டி ) கடையில், வேலை பார்க்கும் தமிழ் நாட்டு இளைஞன் திரு என்கிற திருநாவுக்கரசு (கோகுல் கிருஷ்ணா) அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த மலையாள பெண் குட்டி திவ்யாவுக்கும் (நீனு ) காதல…
-
- 0 replies
- 535 views
-
-
Published : 21 Dec 2018 15:50 IST Updated : 21 Dec 2018 15:51 IST சாகடிக்கவே முடியாத ஒருவனும் சாவுக்கே கடவுளான ஒருவனும் மோதினால் அதுவே 'மாரி 2'. சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார் மாரி (தனுஷ்). அவரின் நண்பன் கலையை (கிருஷ்ணா) போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கிறார். எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதில் மாரி தீர்மானமாக இருக்கிறார். இடையில் வளவன் தன் அண்ணன் கலையிடம் மாரி போதைப்பொருள் கடத்துவதாகவும், அதற்கு ஆட்டோ டிரைவரான அராத்து ஆனந்தி (சாய் பல்லவி) உதவுவதாகவும் கூறுகிறார். இதை கலை நம்ப, இருவரின் நட்புக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது. …
-
- 0 replies
- 534 views
-
-
[size=2] கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மாற்றான் வரும் 12ம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். [/size] [size=2] இது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பை குஷிப்படுத்தி இருக்கிறது. அடுத்த கட்டமாக உலகமெங்கும் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.[/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-041012.html
-
- 2 replies
- 534 views
-
-
இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம் சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (ல…
-
- 2 replies
- 534 views
-
-
'உனக்கென்ன வேணும் சொல்லு' என்றொரு படம். பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள். பேய் படம்தான். ஆனால், அற்புதமான பிலிம் மேக்கிங். படத்தொகுப்பும், பின்னணி இசையும் பிரமாதம். படம் முடிந்தவுடன் காத்திருந்த எடிட்டர் ஹரிஹரனுடன் கை கொடுத்து 'எடிட்டிங் பிரமாதம் பிரதர். நம்பர் கொடுங்க நிறையப் பேசணும்' என்றேன். 'தற்காலிகமான இந்தியன் எண்தான் இருக்கு. நான் ஸ்ரீலங்கன்' என்றார். 'நம்ம பசங்க டிசிப்பிளினான படம் பண்றாங்க' என அந்தக் கணம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நின்று நிதானமாகப் பேசினால், படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் கூட இலங்கைத் தமிழர்தான். கொழும்பு, கொட்டஹனாவை சேர்ந்த இருவருக்குமே, சிறுவயது முதலே ஒரே கனவு, அது சினிமா. இயக்குநர் ஸ்ரீநாத் எப்படியோ அமெரிக்க…
-
- 1 reply
- 534 views
-
-
“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: “சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை? போனவர் எத்தனை? கண்டது எத்தனை? கொண்டது எத…
-
- 0 replies
- 533 views
-
-
சந்தானம் ஜோடியாக மாராத்தி நடிகை தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்,அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி theatre மூலம் அறிமுகமாகி , தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புது முக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா films தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார். 'வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதா நாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இ…
-
- 3 replies
- 532 views
-
-
யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பாத்து குசலம் விசாரிக்குமாம்... இந்தப் பழமொழி சினிமாவில் அடிக்கடி அரங்கேறுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம். அரசியல், சினிமா துறையினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள நேரமாகப் பார்த்து, அவரது வாழ்க்கைக் கதையைப் படமாக்கப் போவதாக ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. படத்துக்குத் தலைப்பு அம்மா! இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறதாம். ஒரு இளம்பெண் எப்படி சினிமாவுக்குள் நுழைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு எப்படி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறார் என்பதுதான்…
-
- 0 replies
- 532 views
-
-
அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார். நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளு…
-
- 0 replies
- 532 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: நாசர் ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. தமிழ் சினிமாவில் அரிதாரம் அற்ற அரிதான கலைஞர்களில் முக்கியமானவர் ம.நாசர். கதாபாத்திரத்தின் குண இயல்புகளை ஆழமாக உள்வாங்கி, அதை அளவான, இயல்பான உணர்ச்சிகளாக வெளிப்படுத்தி ‘நடிப்புக்கொரு நாசர்’ என்று பெயர் பெற்றவர். 05.03.1958-ல் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகேயுள்ள மேலேரிப்பாக்கம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, மகபூப் பாட்ஷா- மும்தாஜ் பேகம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். 2. கிராமத்திலிருந்து செங்கல்பட்டு நகருக்குக் குடிபெயர்ந்த நாசரின் பெற்றோர், அங்கிருந்த புனித மேரிஸ் தொடக்கப்பள்ளி, பின்னர் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அவரைப் படி…
-
- 0 replies
- 532 views
-
-
பிரபலமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அவர்களது ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இருக்காது. அதிலும் ரஜினி படம் வெளியானால் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமகவே கொண்டாடுவார்கள். தங்கள் விருப்பமான நடிகர்களை தெய்வமாகவும் அவர்களது படத்திற்கு அபிஷேகங்கள் செய்வதும் ரசிகர்களின் வாடிக்கையாகி விட்டது. இப்படி ரஜினி ரசிகர்கள் அவரது கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தது ரஜினிக்கு எதிராக திரும்பி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கன்னட தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் பெங்களூர் மேயோ ஹால் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில், ரஜினி ரசிகர்கள் கட்-அவுட், பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்க…
-
- 0 replies
- 532 views
-
-
சண்டக்கோழி-2 முதல் சாமி-2 வரை: சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். சாமி ஸ்கொயர் - முதல் பார்வை விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படம் சாமி ஸ்கொயர். இதில் விக்ரம் முதல் பாகத்தில் வந்…
-
- 0 replies
- 532 views
-
-
சந்தப் பேழையில் நிரம்பிய திராட்சை இசை: கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி மறக்க முடியாத இணைகள்: எம்.எஸ்.வி கண்ணதாசன் முப்பத்தைந்து ஆண்டுகளாக முன்னணியில் வீற்றிருக்கும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் திரைப்படப் பாடல்களின் மூலம் பாட்டுப் பந்தி வைத்த கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி மேற்கொண்ட உரையாடல். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்குமான இணக்கம் இருக்கிறதல்லவா, அது எப்படி ஒரு காவிய அழகாகப் பரிணமித்தது? இந்தக் கேள்வியில் இருக்கிற இணக்கம் என்கிற வார்த்தையை மிகவும் ரசிக்கிறேன். ஓர் இசையமைப்பாளர் ஒரே காலகட்டத்தில் பல பாடலாசியர்களைக் கொண்டு எழுதுகிறார். ஒரு கவிஞர் ஒரே காலகட்…
-
- 0 replies
- 531 views
-
-
மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெறுவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு ஆபத்தா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 22 ஜனவரி 2023 பட மூலாதாரம்,TWITTER/DISNEYPLUSHSMAL படக்குறிப்பு, ஜெயஜெயஜெயஜெயஹே பட போஸ்டர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓடிடி தளங்களின் வளர்ச்சி பட மூலாதாரம்,G…
-
- 3 replies
- 531 views
- 1 follower
-
-
ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் மதராசப்பட்டினம் தெய்வதிருமகள் படத்தை தொடர்ந்து தாண்டவம் படம் உருவாகிறது. படத்திற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழில் கதைப்பதாக நினைத்து தமிழையே கொச்சைப்படுத்தி கொல்றாங்களப்பா..... :( http://www.youtube.com/watch?v=oB1T-iLZ0G8&feature=player_embedded - மூலம்: முகநூல் -
-
- 1 reply
- 530 views
-
-
சிவாஜிக்கு மணிமண்டபம்.. முதல்வருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு மற்றும் தமிழ்த்திரையுலகம் பாராட்டு. சென்னை : மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைசசர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரி…
-
- 3 replies
- 530 views
-
-
படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது. வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த …
-
- 0 replies
- 530 views
-
-
மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி? ஆணவப் படுகொலையின் தோலுரித்த #Sairat படத்தின் ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் அறிமுகப் படம்! #Dhadak படம் எப்படி? சாதிய கொடுமைகளால் இறந்து போன காதல்கள், காதலர்களின் கதைகள் சினிமாவுக்கும் புதிதல்ல, நிஜ வாழ்க்கைக்கும் புதிதல்ல. செல்லுலாய்டில் இத்தகைய கதைகளுக்கு உயிர் கொடுக்கும்போது, வியாபார சமரசமின்றி, இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக ஆணவப் படுகொலைகள், கௌரவப் படுகொலைகள் அதன் காரணிகள் மற்றும் அதன் கோரத்தைப் பதிவு செய்யும்போது, அத்தகைய படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிடும். 2015-ம் ஆண்டு வெளிவந்த மராத்தி…
-
- 0 replies
- 530 views
-
-
மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்க…
-
- 2 replies
- 529 views
-
-
தமிழ் சினிமாவின் பீஷ்மர்... கே.பாலசந்தர்! தமிழ் சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள். தஞ்சைத் தரணியின் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜுலை 1930ல். ஆம், 84 வயது கே.பி.யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்! சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். 'மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்! கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பா…
-
- 0 replies
- 529 views
-