வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு, படு கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால். ஆடை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். நீங்கள் நினைப்பது சரியே, நயன்தாரா வழியில் சென்று கொண்டிருக்கிறார். அவர் மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அமலா நடித்து வரும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஆங்கில தலைப்பு கொண்ட போஸ்டரை பாகுபலி புகழ் நடிகர் ராணா வெளியிட்டார். அந்த போஸ்டரை... பார்த்த பலரு…
-
- 0 replies
- 470 views
-
-
இப்படியொரு அடியை சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்ததில்லை. வெளியான அனைத்து படங்களும் மண்ணை கவ்விய அவலம் கொஞ்சம் அதிசயம் தான். புத்தாண்டுக்கு முன்னால் வெளியான சீனு ராமசாமியின் 'கூடல்நகர்' சோபிக்கவில்லை. பத்திரிகைகள் தாராளமாக பாராட்டிய பிறகும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் எட்டிப் பார்க்காதது ஆச்சரியம். பி அண்டு சி யிலும் இதன் கலெக்ஷ்ன் சுமார் ரகம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது சேரனின் 'மாயக்கண்ணாடி', ஜீவாவின் 'உன்னாலே உன்னாலே.' நகரத்துக்கும் சேரனுக்கும் சம்பந்தமில்லை என்பதை போட்டு உடைத்திருக்கிறது 'மாயக்கண்ணாடி.' கலையும் இல்லாமல் கமர்ஷியலும் இல்லாமல் தியேட்டரில் ரசிகர்களை படம் பயமுறுத்துவதால் இன்டர்வெல்லிலேயே எகிறுகிறார்கள் ரசிகர்கள். 'உள்ளம் கேட்குமே' ஜீவாவின் …
-
- 2 replies
- 1.4k views
-
-
விவாகரத்துக்கு பிரபுதேவா - ரம்பலத் இருவரும் சம்மதம்?! : 7ம் திகதிக்கு வழக்கு ஒத்திவப்பு சென்னை குடும்ப நல நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நடிகர் பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து வழக்கின் போது நேரில் ஆஜரான இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரம்லத்துக்கு சென்னையில் இரண்டு வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு என மொத்தம் மூன்று வீடுகளும், 10 இலட்சம் ரூபாய் பணத்தொகையும், ஜீவனாம்சமாக கொடுப்பதற்கு பிரபுதேவா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், நயன் தரா - பிரபுதேவா திருமணம் உறுதியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் நடிப்பதற்க…
-
- 5 replies
- 1k views
-
-
Published : 25 Jan 2019 20:16 IST Updated : 25 Jan 2019 20:16 IST பிரபுதேவாவின் வாழ்வில் சாரா என்ற பெயரில் இருவர் குறுக்கிடுகிறார்கள். சந்தர்ப்ப சூழலால் இருவரையும் காதலிப்பதாகவே பிரபுதேவா கூறுகிறார். இறுதியில் யாரைக் கரம் பிடிக்கிறார் என்பதே 'சார்லி சாப்ளின் - 2'. மேட்ரிமோனியல் இணையதளம் நடத்துகிறார் பிரபுதேவா. 99 திருமணங்களை நடத்திய தன் மகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற ஏக்கமும் கவலையும் பிரபுதேவாவின் பெற்றோருக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் சாராவை (நிக்கி கல்ராணி) பார்க்கிறார். அவரது உதவும் உள்ளத்தால் காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் திருமணத்துக்க…
-
- 0 replies
- 432 views
-
-
ஐங்கரன் நிறுவனத்தை வாங்கியது ஈரோஸ் தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றின் வெளிநாட்டு உரிமையை வாங்கி அவற்றை ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியிட்டு வரும் ஐங்கரன் நிறுவனம் தாயகம் இணுவிலை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமானது. ஏறத்தாள 600 தமிழ் படங்கள் மற்றும் 25 தயாரிப்பில் உள்ள படங்களின் உரிமை அவர்கள் வசம் உள்ளது. இந்நிலையில் ஐங்கரன் நிறுவனத்தின் 51 வீத பங்குகளை ஈரோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஈரோஸ் நிறுவனம் நீண்டகாலமாக ஹிந்தி திரைப்படங்களை வெளிநாடியில் திரையிட்டு வந்ததுடன் திரைபட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் உள்ளிட்ட பலதுறைகளிலும் ஆட்சி செலுத்தியும் வந்துள்ளது. இப்போது ஐங்கரன் …
-
- 6 replies
- 3.2k views
-
-
ஒரு தாயின் மடிபோல, இலங்கை தமிழர்களுக்கு கலப்படமற்ற நேசம் காட்டி அடைக்கலம் கொடுத்த நாடு நார்வே. இங்கு குற்றம் குறைகள் எதுவுமின்றி சுத்தமாக இருந்த இலங்கை தமிழ்ர்களிடையே கடந்த மூன்று மாதத்திற்கு முன் நிகழ்ந்த ஒரு குரூர சம்பவம், நார்வே அரசாங்கத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. யாரோ இருவருக்கிடையே எழுந்த மனச்சிதைவு ஒரு கொலையில் போய் முடிந்தது. இந்த சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என்றும் அக்கறையில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. 'மீண்டும்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை N.T பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. நார்வே தபால்துறையில் அதிகாரியாக இருக்கும் துரூபன் சிலரது கூட்டுமுயற்சியில் உருவாகும் இப்படத்திற்கு துரூபனே ஒளிப்பதிவு செய்கிறார். கதை, வசனம் எழ…
-
- 1 reply
- 1.2k views
-
-
2015-ன் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்! வாசகர்களே, 2015-ல் தமிழ் சினிமாவின் தங்கத் தருணங்களை, எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களை, புது வரவுகள் உண்டாக்கிய மலர்ச்சிகளை ஒவ்வொன்றாக பார்க்கவிருக்கிறோம். இந்த வருடம் சந்தேகமே இல்லாமல் டிரெண்டிங் ஹிட் அடித்த டாப்-10 படங்களின் வரிசை இது. ரசிகர்களிடம் ரசனை அபிமானம், விநியோகஸ்தர்களிடம் வசூல் சந்தோஷம்.... இரண்டையும் ஒருசேரக் குவித்த தகுதியின் கீழ் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது! http://www.vikatan.com/cinema/article.php?aid=56667
-
- 0 replies
- 380 views
-
-
மங்காத்தாவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'பிரியாணி'. கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே வெற்றிதான். இந்நிலையில் 'பிரியாணி' திரைப்படம் யுவன் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் யுவன் தற்போதே இசையமைக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் மலேசியாவில் முகாமிட்டுள்ளார். அவருடன் பிரேம்ஜி மற்றும் வெகங்கட் பிரபும் விகடன் சினிமா
-
- 2 replies
- 630 views
-
-
நகைச்சுவை நடிகர் செல்வகுமார் விபத்தில் மரணம் நகைச்சுவை நடிகர் செல்வகுமார், வீதி விபத்தில் காயமடைந்து மரணமடைந்துள்ளார். ரமணா, அந்நியன், அலெக்ஸ் பாண்டியன், பூலோகம் ஆகிய திரைப்படங்களில் பெரிய கேரக்டர்களில் நடித்ததுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை தி.நகர் சீனிவாச தெருவில் மனைவி கீதா, மகள்கள் ரோகிணி, கார்த்திகாக ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் செல்வகுமார், தனது நண்பர் கோவை செந்திலுடன் பர்கிட் ரோட்டில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது தி…
-
- 2 replies
- 647 views
-
-
ஜீ தொலைக்காட்சி நடத்தி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் நடத்தவுள்ளார். திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தாலும், படங்களை இயக்கினாலும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திதான் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு குடும்பப் பெண்கள் சந்தித்த பிரச்சனைகளை அவர் அலசினார். அதனால், அந்த நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்ற வசனம் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது. இப்போதும் அந்த வசனம் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு லட்சுமி ர…
-
- 0 replies
- 938 views
-
-
திரை விமர்சனம்: பகடி ஆட்டம் பாலியல் வன்முறைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்றைத் திரைவிலக்கிக் காட்டுகிறது இந்தப் ‘பகடி ஆட்டம்’. செல்வச் செழிப்பு மிக்க குடும் பத்தின் ஒரே வாரிசு சூர்யா (சுரேந்தர்). தன் வசதியையும் வசீகரத் தையும் தூண்டிலாகப் பயன்படுத் திப் பெண்களுக்கு வலை வீசுவது அவன் பொழுதுபோக்கு. அப்படி அவனிடம் சிக்கிய ஒரு பெண் கவுசல்யா (மோனிகா). நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கவுசல்யா, முதல் தலைமுறைப் பட்டதாரியாக உருவாக வேண்டியவள். அவள் சூர்யாவின் வலையில் சிக்கிச் சின்னாபின்னம் ஆக, துடித்துப் போகிறது குடும்பம். அடுத்த பெண்ணுக்கு வலைவிரிக்கத் தயா ராகும் சூர்யாவோ திடீரென்று காணாமல் போகிறான். அ…
-
- 0 replies
- 439 views
-
-
‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம் எத்தனை ஆவிகள் வந்தாலும், உடம்புக்குள் அட்மிட் செய்து நடிப்பதில் கெட்டிக்காரரான ராகவா லாரன்ஸின் மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் படம் ‘சிவலிங்கா’. ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடக்கிறார் சக்தி. அது கொலையா தற்கொலையா என்று கண்டுபிடிக்கும் சிபிசிஐடி போலீஸ் தான் மொட்ட சிவா.... (ஐய்யோ.. அது போன படம்ல....) ஸாரி.. சிவலிங்கேஸ்வரன். இந்த விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு புறாவும், கொலை செய்யப்பட்டவரின் ஆவியுமே நேரடியாக வந்து உதவுகிறது. இதற்கு நடுவே ரித்திகாவிற்கு ஏன் பேய் பிடிக்கிறது, அந்த புறாவுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம், கொலையாளி யார…
-
- 1 reply
- 1.7k views
-
-
மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி! சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்திலும் புதுவையிலும் திரையிடாததால் ரூ 1கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம் அதன் விநியோகஸ்தருக்கு. ஜான் ஆப்ரஹாம், நர்கிஸ் ஃபக்கிர் ஆகியோர் நடிப்பில் உருவான ‘மெட்ராஸ் கபே' திரைப்படம் கடந்த 23-ந் தேதி தமிழகம் - புதுவையைத் தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார். ஜான் ஆபிரகாமே தயாரித்திருந்தார். இந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் தமிழருக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. படத்தை தமிழில் வெளியிட நீதிமன்றம் தடை செய்த நிலையில், திரையரங்கு உரிமைய…
-
- 0 replies
- 464 views
-
-
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 1 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 2
-
- 5 replies
- 888 views
-
-
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பதை தப்பாக புரிந்து கொண்டுள்ளார் ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவரது அந்நிய குழந்தை ஆசை இவரவது குடும்ப வாழ்வுக்கே கோடாலியாகும் என பயப்படுகிறார்கள் ஜோலியின் நண்பர்கள். ஏஞ்சலினா ஜோலி ஹாலிவுட்டின் ஹாட் கேக். சில வருடம் முன்பு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் பிராட் பிட்டை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பே ஏஞ்சலினா ஜோலி ஒரு குழந்தைக்கு தாய். எப்படி? வேறு கல்யாணம் ஏதேனும்? இல்லை. ஜோலி அனாதை குழந்தைகளின் தேவதை. உலகம் முழுக்க உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு டாலர்களை அள்ளி வீசும் ஹாலிவுட் வள்ளல். கம்போடியா சென்ற போது அனாதை சிறுவன் ஒருவனை தத்தெடுத்து அம்மாவானார். வியட்நாம் சென்ற போது இன்னொரு குழந்தை. இதற்குப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: டைரக்டர் பாக்யராஜ் தேர்தல் முடிவுக்கு பிறகு `மைக்'கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று டைரக்டர் கே.பாக்யராஜ் பேசினார். `களவாணி' படத்தை டைரக்டு செய்த ஏ.சற்குணம் அடுத்து, `வாகை சூட வா' என்ற புதிய படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில், டைரக்டர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசும்போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ததையும், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இனிமேல் அதிகமாக பே…
-
- 2 replies
- 1.5k views
-
-
என்னைக் களங்கப்படுத்தவும் படிக்க விடாமல் தடுக்கவும் சதி நடக்கிறது. அதற்காகத்தான் என் முகத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டுள்ளனர். லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன்தான் என சிலர் கற்பூரம் அடிக்காத குறையாகக் கூறிவந்தனர். சிலர் போலிப் படம் என்றனர். இப்போது இந்த வீடியோ குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கு…
-
- 7 replies
- 5k views
-
-
மதுபோதையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முறையற்ற செயற்பாடுகளில் நடிகை ஊர்வசி ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் சங்க தொடக்க விழாவிற்கு ஊர்வசி குடித்துவிட்டு மதுபோதையில் நிதானமிழந்த நிலையில் வந்துள்ளார். அவர் போதையில் இருப்பது தெரியாத நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், மேடையில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து மைக் முன் வந்த ஊர்வசி, சரமாரியாக உளற ஆரம்பித்துள்ளார். 'இது பி.ஜே.பி. நடத்தும் கூட்டமா அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணி நடத்தும் கூட்டமா என அவர் உளறியதால் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். த…
-
- 5 replies
- 881 views
-
-
சொந்த கதையை வைத்து இன்னும் எத்தனை படம் எடுக்கப் போகிறார் சிம்பு? மன்மதன், வல்லவனை தொடர்ந்து சிம்புவின் முழுக் கட்டுபாட்டில் உருவாக இருக்கும் படம் 'கெட்டவன்.' படம் தொடங்கி 20 நாட்கள் படப்பிடிப்பும் முடிந்த நிலையில் ஹீரோயின் லேகா வாஷிங்டன்னை படத்திலிருந்து நீக்கினார். கூடவே படத்தின் கதையும் தயாரிப்பாளரும் மாறப் போகிறார்களாம். 'கெட்டவன்' படத்தை சிம்புவின் உதவியாளர் நந்து இயக்குவதாக இருந்தது. தன்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று நந்துவை நீக்கி விடடு கதை, திரைக்கதை, வசனத்துடன் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார் சிம்பு. படத்தின் கதை, சிம்பு - நயன்தாரா காதலை பின்னணியாகக் கொண்டது. இதனை வேறு மொழியில் சிம்புவே ஒப்புக் கொண்டுள்ளார். படத்துக்காக …
-
- 2 replies
- 2.7k views
-
-
'படியாத' பூமிகா ரோஜாக் கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் என சில ஜிலீர் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை குளிர்வித்தவர் பூமிகா. பூவினும் மெல்லிய தேகம், புயலையும் மீறும் காதல் பார்வை, வீணையையும் விஞ்சும் குரல் நாதம் என ரோஜாக் கூட்டத்திலும், சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் பூமிகா. இடையில் விஜய்யுடன் இணைந்து நடித்த பத்ரியில் அவரது பவித்ரமான காதலை வெளிப்படுத்தும் பாந்தமான நடிப்பு நல்ல நடிகை பூமிகா என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது. தமிழில் இப்படி அன்ன நடை போட்டு வந்த பூமிகா, இந்தியிலும், தெலுங்கிலும் கிளாமர் கோதாவில் குதித்தார். குறிப்பாக இந்தியில் பூமிகா சாவ்லா என்கிற தனது ஒரிஜினல் பெயரில் ஒய்யாரமாக களம் கண்ட பூமிகா, அங்கு கிளாமரி…
-
- 1 reply
- 1.7k views
-
-
ராஜபக்சே ஆதரவு படத்தில் இந்தி நடிகர் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதற்கு இந்தி நடிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஐஃபா விழாவை அமிதாப்பச்சன் புறக்கணித்த போது தாங்கிப் பிடித்தவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். தமிழர்களின் கண்டனத்தை மீறி இவர்கள் இலங்கையில் ஐஃபா விழாவை முன்னின்று நடத்தினர். பழங்கதையை மறப்போம். புதிதாக படம் எடுக்க இலங்கை செல்கிறார் ஜான் ஆபிரஹாம். ஈழப் போராளிகளுக்கும் சிங்களப் பேரினவாத அரசின் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரை இவர் திரைப்படமாக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் அமைதிப்படை இலங்கையில் இருந்த காலகட்டமும் பதிவு செய்யப்பட உள்ளதாம். ஜாஃப்னா என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தயாரித்து இந்திய புலனாய்வு அதிகா…
-
- 0 replies
- 779 views
-
-
ஒட்டுண்ணி கொரிய திரைப்படமான பரசைட் திரைப்படம் அண்மையில் ஆங்கில எழுத்துருவில் பார்த்தேன் பல தரப்பும் மிக சிறந்த படைப்பு என்ற கருத்திற்கமைய இத்திரைப்படத்தை பார்த்தேன் படம் முடிவில் படம் பார்க்கலாம் இரகம் ஆனால் இன்று இத்திரைப்படம் சிற்ந்த படத்திற்கான ஒஸ்கார் விருதினைப்பெற்றுள்ள தகவலை அறிந்தேன் இத்திரைப்படம் தொடர்பாக ஒரு புது திரி ஒன்றினை ஆரம்பித்த நோக்கம் இத்திரைப்படம் தொடர்பாக கள உறவுகள் என்னநினைக்கிறீர்கள் என்ற உங்கள் பார்வை என்ன என்பதே
-
- 2 replies
- 1.2k views
-
-
-
திவ்யராஜனின் சகா - யமுனா ராஜேந்திரன் 02 டிசம்பர் 2012 இன்னுமொரு ஈழத் தமிழ் கேங்ஸ்டர் திரைப்படம் திவ்யராஜனின் சகா. இங்கிலாந்துப் படமான ஸ்டில் லைப், பிரெஞ்சப் படமான இடிமுழக்கம் கனடியப் படமான 1999 போன்று பிறிதொரு கனடியப்படம் சகா. கேங்ஸ்டர் படங்கள் அந்தக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டு வேறு வேறு கோணங்களில் படமாக்கபபட்டிருக்கிறது. கேங்ஸ்டர் கலாச்சாரத்துக்கு உட்பட்ட குழுவினரின் பார்வையில், கேங்ஸ்டர்கள் பற்றி காவல்துறையினர் பார்வையில், கேங்ஸ்டர்களின் வன்முறைக்கு உள்ளான பொதுச் சமூகத்தவரின் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் குடும்பத்தவர் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் வன்முறைக்குப் பலியான இளைஞர்களின் பெற்றோர்களது பார்வையில் என கேங்க்ஸ்டர்கள் குறித்த திரைப்படங்கள் பல்வகையானவ…
-
- 0 replies
- 635 views
-
-
மீண்டும் சினிமாவில் முதல்வர் ஜெயலலிதா? 8 தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உடல்உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து மலையாளத்தில் "டிராபிக்" என்ற படம் வெளிவந்தது. பாப்பி-சஞ்சய் இயக்கினர். பெரிய வெற்றியும் பெற்றது. தற்போது டிராபிக்கை ராதிகா சரத்குமார் தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்ற பெயரில் தயாரித்து வருகிறார். பாப்பி-சஞ…
-
- 0 replies
- 604 views
-