வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
ஒருவேளை தாங்க முடியாத கஷ்டத்தில் எழும் மனிதக் குரல் கடவுளின் காதில் விழுந்தால்... ஒருவேளை அந்தக் கடவுள் பூமிக்கே வந்துவிட்டால்... ஒருவேளை அந்தக் கடவுள், தன் கடவுள் தன்மையை இழந்து மனிதனைப் போலவே திருவல்லிக்கேணி மேன்ஷனில் பத்துக்குப் பத்து இருட்டறையில் கஷ்டப்பட நேர்ந்தால்.... அடடா... 'ஒருவேளை' என்ற இந்த வார்த்தைதான் ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது பாருங்கள்! இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இயக்குநர் சிம்புதேவன் விளையாடி இருக்கும் 'சிலம்பாட்டம்தான்' அறை எண் 305-ல் கடவுள். இந்த சிலம்பத்தில் வேகம் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிற விவேகம் உள்ளது. கடவுள், அறை எண் 305-க்கு வந்த கதை: ராசுவும் (சந்தானம்), மொக்கைய…
-
- 5 replies
- 2.5k views
-
-
உலகில் முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரஷிய வீரர் யூரிககாரின் கூறியது... வானில் உயரப் பறந்தபோது பூமியில் இருந்த -மனிதனால் உருவாக்கப்பட்ட -சீனப் பெருஞ்சுவர் மட்டுமே ஒரு சிறு கோடு போல கண்களுக்குத் தெரிந்தது என்பதுதான். ஆதிக்க நாடுகளின் அழகு மிளிர் வானுயர் கட்டடங்களோ, கோபுரங்களோ, அடிமை தேசங்களின் அவலக் குடிசைகளோ அவர் கண்களுக்குத் தெரியவில்லை. பூமியில் இருந்தபோது புரியாத இந்த உண்மை வானில் உயரப் பறந்தபோதுதான் அவருக்குப் புலப்பட்டது. அது போல தன்னுடைய சமநோக்குப் பார்வையாலும், சீரிய சிந்தனையாலும் உயரப் பறந்த பெரியாரின் பார்வைக்கு ஏழை, பணக்காரன், கீழ் சாதி, மேல் சாதி, பால் பாகுபாடு போன்ற எவையும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் "மனிதன்' என்பது மட்டும்தான்.…
-
- 4 replies
- 2.5k views
-
-
திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பட்டாம்பூச்சியை விற்றவர் பாடலாசியராக உயர்ந்த கதை பற்றி.. ‘பட்டாம் பூச்சியை விற்பவன்’ அப்டினு தான் என்னுடைய கவிதைத் தொகுதிக்கு பேர் வச்சிருந்தேன். கவிதையினுடைய அடுத்த கட்ட விஞ்ஞானவளர்ச்சி என்பது திரைப்படப்பாடல்னு பார்க்கிறேன். ஒரு கவிதை எழுதும் போது ஒரு 5000 பேருக்கு மட்டும் தான் போய்ச்சேரும். அதுவும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச சிலருக்கு மட்டும்தான். திரைப்படப்பாடலா வரும் போது உலகெங்கும் இருக்குற தமிழர்களை சென்றடையும். திரைப்படங்கள் மேல காதல் உண்டு. கவிதையின் அடுத்த கட்ட இசைவடிவ கவிதைகளா திரைப்படப்பாடல நினைக்கிறேன். கவிஞர் அறிவுமதி மெட்டுக்கு எழுதுறதுக்கு பயிற்சி கொடுத்தாரு. ‘கண் பேசும் வார்த்தைகள்’ தொகுப்பு உருவான விதம் பற்றி சொல…
-
- 1 reply
- 2.5k views
-
-
லிரைவில் வெளிவரவிருக்கும் தனுசின் திரைப்படத்தில் அவரின் தந்தையாக ஈழத்துக்கவிஞன் வ.ச.ஜெயபாலன் நடிக்கின்றார்
-
- 10 replies
- 2.5k views
-
-
சினிமா விமர்சனம்: The Nun இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2016ல் வெளிவந்த The Conjuring 2 படத்தில் பேய் ஓட்டும் தம்பதியான எட் மற்றும் லோரைன் தம்பதி வாலக் என்ற ஒரு தீய சக்தியை எதிர்கொள்வார்கள். முடிவில் அந்த தீய சக்தி நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், அதற்கு முன்பாக, அந்த வாலக் எப்படி இங்கே வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் கதைதான் The Nun. அதாவது The Conju…
-
- 1 reply
- 2.5k views
-
-
கவிதை என்பது அறிவு சார்ந்தது அல்ல உணர்வு சார்ந்தது... கவிஞர் யுகபாரதியுடன் நேர்காணல் சந்திப்பு : முத்தையா வெள்ளையன் பாரத நாடு பழம் பெரும் நாடு நாம் அதன் புதல்வர் நாசமாய்ப் போவோம்" என எதார்த்தமான கவிதைகளோடு இலக்கிய உலகில் அறியப்படுகிறவர். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம். புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற அறிமுகப்பாடலோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழின் தனித்தன்மையோடும் அடையாளத்தோடும் அரசியலோடும் இயங்குபவர். இவரை ஒரு மாலை நேரத்தில் “கருஞ்சட்டைத் தமிழர்” இதழுக்காகச் சந்தித்தோம். உங்களுக்கு கவிதை ஏன் எழுதணும்னு தோனுச்சு. முதல் கவிதை எப்போது எழுதினீங்க... என்னுடைய குடும்ப சூழல்தான் என்னை…
-
- 0 replies
- 2.5k views
-
-
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களிலும் சின்னத்திரையிலும் நகைச்சுவையில் கலக்கியவர் சிட்டிபாபு. இருதய கோளாறு காரணமாக ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சிட்டி பாபுவுக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் 2 வருடங்களாக நடிக்காமல் ஓய்வில் இருந்தவர் அண்மைக்காலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது சுய நினைவை இழந்து, 'கோமா' நிலையில் உள்ளார…
-
- 3 replies
- 2.5k views
-
-
வைரமுத்துவிடம் 52 கேள்விகள். தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை? தமிழ் இப்போது 50kg. தாஜ்மகால் யார்? சானியா மிர்சா காதல் என்பது? காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு. பிடித்த நிறம்? வெள்ளை பச்சையப்பன் கல்லூரி? மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது. கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக? பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்; ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி உங்கள் இளமையின் ரகசியம் என்ன? மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது இளையராஜா _ பாரதிராஜா? மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள். வேட்டி பிடிக்காதா? காலைப் பிடிக்கும். தம்பி...? உடைய…
-
- 3 replies
- 2.5k views
-
-
மீண்டும் வடிவேலு : இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பாகம் 2 By AM. Rizath 2012-10-23 00:42:51 வடிவேலுவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாக வெளியான அனைத்து வதந்திகளையும் முடிவுக்கு கொண்டுவருவது போல நாயகனாக தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்கப்போகிறார் வடிவேலு. அரசியல் விவகாரங்களால் கடந்த ஓரண்டாக வாய்ப்புக்கள் எதுவுமின்றி இருந்த வடிவேலு தற்போது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் 2ஆம் பாகத்துடன் மீண்டும் சினிமாவுக்குள் பிரவேசிக்கின்றார். ஏற்கனவே இந்த 2ஆம் பாகம் தொடர்பாக சில தகவல்கள் கசிந்தது எனினும் தற்போதே உறுதிசெய்யும் வகையிலமைந்த செய்திகள் வெளியாகியுள்ளது. 2006ஆம் ஆண்டில் வெளியாகி வடிவேலுவின் கொமடியால் சுப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்த இ.அ. 23ஆம் புலிகேசி …
-
- 8 replies
- 2.5k views
-
-
பள்ளிக்கூடம் - விமர்சனம் நரேன், சினேகா, தங்கர்பச்சான், ஸ்ரேயா ரெட்டி, சீமான் நடிப்பில் பரத்வாஜ் இசையில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். தயாரிப்பு விஸ்வாஸ் சுந்தர். நம் வாழ்க்கையில் பள்ளிப்பருவம் மறக்க முடியாதது. நம் வருங்கால வாழ்வுக்கு அடித்தளமிட்ட அந்தப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கவோ அந்த நினைவுகளை அசைபோடவோ யாருக்கும் நேரமில்லை. 'பள்ளிக்கூடம்' படம் நம்மை பின்னோக்கி கால வெளியில் இழுத்துச் செல்கிறது. வயதைக் குறைத்து நம்மை மலரும் நினைவுகளில் மூழ்கடிக்கிறது. ஒரு பள்ளிக்கூடம் வெறும் போதனைக் கூடமாக இல்லாமல் ஆண்டுதோறும் அங்கு படித்த, பழகிய, பகிர்ந்துகொண்ட பல மாணவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து கொண்ட மெளன சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்க…
-
- 8 replies
- 2.5k views
-
-
கெட்டவன் படத்தில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார். வழக்கமாகவே பெரிய ஹீரோயின்களுக்கு வலைவீசும் சிம்பு, ஜோதிகா, நயன்தாரா, ரீமாசென்னை தொடர்ந்து அசினை குறிவைத்துள்ளார். லேகா நீக்கப்பட்டுவிட்டதை தொடர்ந்து அந்த பாத்திரத்திற்கு அசினை கேட்டிருக்கிறார்களாம். ஆனால் அசினிடமிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். இந்தியில் பிசியாக இருக்கும் அசின், சிம்புவிற்கு ஜோடியாவாரா என்று தெரியவில்லை. சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க சினேகா மருத்துவிட்டதை தொடர்ந்து அவரைப் போலவே இருக்கும் புதுமுக நடிகையை தேர்வு செய்துள்ளார்கள். எதற்கும் அசினை போலவே ஒரு புதுமுக நடிகையை தேர்வுசெய்து வைப்பது நல்லது நன்றி நக்கீரன்
-
- 3 replies
- 2.5k views
-
-
“உலகத்தை தமிழன் ஆளுவான்” -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம் “உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால்இ உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும்இ திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர்இ தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல். உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செய…
-
- 10 replies
- 2.5k views
-
-
கண்ட நாள் முதல் நண்பனுக்கு மனைவியாகப்போகிறவள் சந்தர்ப்பவசத்தால் தனக்கு காதலியானால் அந்த நண்பன் - காதலன் - காதலி இம்மூவரின் மனநிலை எப்படி இருக்கும்? கண்ட நாள் முதலின் ஒருவரிக்கதை இதுதான். குழந்தை பருவத்திலிருந்தே சதா சண்டை போட்டுக்கொள்ளும் பிரசன்னா - லைலா மோதல் கல்லூரி காலத்திலும் தொடர்கிறது. பார்க்கும் போதெல்லாம் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை - சண்டை தான். இந்நிலையில் லைலாவை பெண் பார்க்க வருகிறார் பிரசன்னாவின் உயிர் நண்பனான கார்த்திக்குமார். லைலா தான் தன் நண்பன் பார்க்க வந்த பெண் என்பது தெரிந்தவுடன் லைலாவைப் பற்றி தன்னால் முடிந்தவரை எடக்கு மடக்காக பேசி கல்யாணத்தை நிறுத்தப்பார்க்கிறார் பிரசன்னா. ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டாசாக வெடிக்கும் லைலா இந்தக் கல்யா…
-
- 7 replies
- 2.5k views
-
-
நடிகர்கள் - ராகவா லாரன்ஸ், வேதிகா, ராஜ்கிரண், கோவை சரளா இயக்கம் - ராகவா லாரன்ஸ் இசை - பரத்வாஜ் தயாரிப்பு - சரண் சிரமமான ஒரு விஷயத்தை நடத்தி காட்டியிருக்கிறார் ராகவா.... இருட்ட ஆரம்பித்தால் போதும், உச்சா போக கூட அம்மா துணை கேட்பான் இந்த லாரன்ஸ்! வயசுப்பையன் இப்படி இருக்கலாமா என்று யோசிக்கிறீர்களா? லாரன்சின் வீக்னஸ் இது. இவரையே ஆவி பிடித்தால் எப்படியிருக்கும்? லாஜிக்காக படத்தை நடத்திக் கொண்டுபோக நினைத்திருக்கிறார் இயக்குனர் கம் நடிகர் லாரன்ஸ் ராகவா. லாரன்ஸ’ன் பயத்தை பற்றி அறிந்த ஒருவரும் அவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள். ஆனால் லாரன்ஸோ கிராமத்து பெண் வேதிகா மீது காதல் கொள்கிறார். வேதிகாவின் பெற்றோர்களை சம்மதிக்க வைத்து அவரை மணக்கிறார் லாரன்ஸ். இந்த சூழலில் …
-
- 14 replies
- 2.5k views
-
-
கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார். விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன. ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், …
-
- 6 replies
- 2.5k views
-
-
தங்கர் பச்சானின் தாய் மண், பத்திரக்கோட்டை! மலைக் காற்றில் மணக்கிறது மல்லாக்கொட்டை வாசம். ஆட்டுமந்தைக்கிடையில் கோவணாண்டியாக, அதிரவைக்கிற இயல்பில் சத்யராஜ். செம்மண்ணும் சேற்று மனிதர்களு மாய் இழந்த வாழ்க்கையின் ஈரமான பதிவாக உருவாகிறது தங்கரின் புதிய படம். தன் கலை வாழ்வின் காவிய கட்டத்தில் நிற்கிற சத்யராஜுக்கு இது அசத்தலான அடுத்த கட்டம். ‘‘நான் மாதவ படையாட்சி. தங்கரோட ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல்தான் இப்போ படமாகுது. சினிமாதான் என் வாழ்க்கை. வில்லனா ஆரம்பிச்சு ஹீரோவாகி பரபரப்பா வாழ்ந்திருக்கேன். இத்தனை காலத்தில் உருப்படியா என்னடா பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்ப இடிக்குது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதி…
-
- 6 replies
- 2.5k views
-
-
மாமல்லபுரத்தில் குவிந்த திரையுலகினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்! கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் ‘ஐயா’ படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் தொடர்ந்து 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. எப்போது இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது திரைப்பட ரசிகர்களின் பேசுபொருளாக அமைந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். கடந்த ஆண்டி…
-
- 29 replies
- 2.5k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் ஆணிவேர் காட்சி விபரம் மெல்பனில் Monash University Clayton Campus நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி, 9.00 மணி சிட்னியில் Fairfield Forum Cinema நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆம் திகதிகளில் இரவு 8.15 மணி
-
- 14 replies
- 2.5k views
-
-
தேவயானிக்கு பெண்குழந்தை: பிரிந்திருந்த பெற்றோர் கூடினர்! காதல் கோட்டை கமலியாக திரையுலகில் நுழைந்து, கோலங்கள் அபிநயாவாக தாய்மார்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தவர் தேவயானி. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு இனியா என்ற குழந்தைக்கு தாயான தேவயானி, மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இக்குழந்தை பிறந்தது. மனைவியை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார் ராஜகுமாரன். குழந்தை பிறந்த மகிழ்ச்சியைவிட, அதிக மகிழ்ச்சி என்னவென்றால், திருமணம் ஆன நாளில் இருந்து தேவயானியை பிரிந்திருந்த அவரது பெற்றோர்கள் ஜெயதேவும், லட்சுமியும் தேவயானியை…
-
- 7 replies
- 2.5k views
-
-
பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார். பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் தனது 87வது வயதில் இன்று காலமானார். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல் ஆகும் கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடி…
-
- 13 replies
- 2.5k views
-
-
அந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்! - #HBDGoundamani கவுண்டமணி - தமிழ் சினிமாவின் சிரிப்பு சரித்திரம். 'சின்ராசு பாட ஆரம்பிச்சுட்டா குழந்தை அழுகுறதை நிறுத்திடும்' என ஒரு வசனம் வருமே. அதன் நிஜ வெர்ஷன் கவுண்டமணி. கல்லையே கரைத்துக் குடித்த சிடுமூஞ்சிக்காரர்களையும் லேசாக்கும் வித்தை இவருக்கு மட்டுமே சாத்தியம். 'மனசே சரியில்லை. யாராவது கவுண்டமணி காமெடி போடுங்கப்பா' என உச்ச நட்சத்திரம் சிவாஜி சொன்னது இதன் ஒரு சோறு பதம். இளையராஜாவோ இன்னும் ஒரு படி மேலே. ரீ-ரெக்காடிங்கின்போது வெடிச் சிரிப்போடு வெளியேறுவார். இப்படி சகலரையும் சிரிக்க வைத்த அந்த காமெடி அரசருக்கு இன்று பிறந்தநாள்! யோசித்துப் பார்த்தால் வாழ்த்துகளோடு எழுத அவ்வளவு விஷயங்கள் இருக்கின்ற…
-
- 2 replies
- 2.5k views
-
-
எரியும் கொப்பரையில் குடம் குடமாய் எண்ணெய் ஊற்றியதுபோல இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கள். கார்ததிக்-அனிதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது. பாடல்களை ஜெயம்ரவி வெளியிட, இயக்குனர்கள் மிஸ்கின், ராஜா, கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்தியவர்கள் எல்லாம் படத்தை பற்றி பேசி அமர்ந்துவிட, கடைசியாக பேசவந்த தங்கர்பச்சானின் உரை ஈழப் பிரச்சனைக்கு தாவியது. அவரது உணர்ச்சிகுவியலான பேச்சு அரங்கத்தில் அனல் மூட்டியது. "நான் இப்போ பேசக்கூடிய மனநிலையில் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளான் தூத்துக்குடி முத்துக்குமரன். அவனுக்கு எனது வீர வணக்கங்கள். அவன் கடைசியாக எழுதியுள்ள …
-
- 1 reply
- 2.5k views
-
-
தமிழ் திரையுலகில் 950 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. சென்னை தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன்சங்கர்ராஜா என்று இரு மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இளையராஜா மனைவி ஜீவாவிற்கு திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த ம்ருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இசையமைப்பதற்காக ஹைதராபாத் சென்று இருந்த இளையராஜாவிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று காலை சென்னை வருவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளையராஜா பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிற…
-
- 21 replies
- 2.5k views
-
-
'பொறி' வைக்கும் பூஜா திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா. அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்) பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார். தமிழில் அவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
நான் எந்த ஒரு நடிகையுடனும் டேட்டிங்கில் இல்லை என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இணையத்தை வட்டம் அடித்த செய்தி இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா - கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலிக்கிறார்கள் என்பது தான். இச்செய்தி குறித்து ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கருத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிடவில்லை. நீண்ட நாட்களாகவே இந்த செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. பலரும் அந்த செய்தியில் ஸ்ருதிஹாசனின் ட்விட்டர் தளத்தினை குறிப்பிட்டார்கள். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் ஸ்ருதி வெளியிடாத காரணத்தினால் செய்தி உண்மையாக தான் இருக்கும் என்று கூறிவந்தார்கள். ஆனால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இச்செய்தி குறித்து தனது ட்விட்டர் …
-
- 0 replies
- 2.4k views
-