வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
குறை சொல்வதோ, குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல – பிரசன்னா by : Benitlas நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உங்களில் எத்தனை பேருக்கு தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பினார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்…
-
- 0 replies
- 544 views
-
-
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பா…
-
- 0 replies
- 551 views
-
-
படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூ…
-
- 0 replies
- 266 views
-
-
37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’ உலகின் ஆகச் சிறந்த ஆச்சரியமும் சோகமும் என்ன தெரியுமா? காதலில் யாரெல்லாம் தோற்றுப்போனார்களோ அவர்களையெல்ல்லாம் பட்டியலிட்டு, பட்டயமாய் வைத்து சொல்லிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் கலையில் தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமலேயே புறந்தள்ளியிருக்கிறது. தோற்றுவிட்ட கலைஞனின் வாழ்வை, வலிக்க வலிக்கச் சொல்லிப் பதிவு செய்து, நம்மைப் பதறடித்த, சிதறடித்த, கலங்கடித்த.. சலங்கையின் ஒலி... அவ்வளவு சீக்கிரத்தில் மனக்காதுகளில் இருந்து தள்ளிப்போய்விடாது! ஹிட் கொடுத்த நடிகர்களையே சினிமா சுற்றிவரும். வெற்றி அடைந்த கலைஞனுக்கே பரிசுகள் வழங்குவார்கள். சாதனை படைத்தவனையேக் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் இயக்குநர் கே.விஸ்வநாத், அந…
-
- 0 replies
- 524 views
-
-
ஆதரவு கரம் கொடுத்த நடிகர் ஷாருக்கான் :பிஹாரில் ரயில்வே நடைமேடையில் இறந்துகிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு உதவி நடிகர் ஷாருக்கான்: கோப்புப்படம் புதுடெல்லி பிஹாரில் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் இறந்துகிடந்த தனது தாயை எழுப்ப முயலும் குழந்தை தொடர்பான வீடியோ கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதைப்பார்த்த நடிகர் ஷாருக்கான் அந்த குழந்தைக்கு ஆதரவு கொடுத்து உதவியுள்ளார். நடிகர் ஷாருக்கான் நடத்தும் மீர் அறக்கட்டளை அந்த குழந்தைக்கு தேவையான உதவிகளையும், நிதியுதவியும் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார் கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த இரு மாதங்களாக ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வே…
-
- 0 replies
- 294 views
-
-
தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல் திரைப்படமாகிறது! ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கின்ற தீபச்செல்வன் திரைத்துறையிலும் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்கின்றார். அவரது பல்வேறு சிறுகதைகள் ஏற்கனவே குறும்படங்களாக மாறியுள்ளன. கனடாவைச் சேர்ந்த ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள “சினம் கொள்” திரைப்படத்திலும் பாடலாசிரியர் மற்றும் வசன கர்த்தா என தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார். அண்மையில், அவரது மற்றுமொரு சிறுகதையான “யாழ் சுமந்த சிறுவன்” கதையையும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் திரைப்படமாக்கப்போகின்றார் என்ற செய்தியையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தீபச்செல்வன் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிந்துள்ளார்…
-
- 0 replies
- 606 views
-
-
நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார் நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் ம…
-
- 1 reply
- 2.2k views
-
-
முதல் பார்வை: பொன்மகள் வந்தாள் ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே 'பொன்மகள் வந்தாள்'. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் …
-
- 1 reply
- 631 views
-
-
திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்! ராஜாவுடன் புரு ஆர்.சி.ஜெயந்தன் சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன். …
-
- 0 replies
- 593 views
-
-
இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் சென்னை : ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர்…
-
- 0 replies
- 461 views
-
-
ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.
-
- 17 replies
- 2.6k views
-
-
தத்தளிக்கும் தமிழ் சினிமா – 1000 கோடி இழப்பு! 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு மாதத்துக்குப் பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து அன்றாட தேவைகளுக்குத் தவித்து வருகின்றனர். 50 படங்கள் விஜய்யின் மாஸ்டர் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் ஜெயம் ரவியின் பூமி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என பெரிய பட்ஜெட் பட…
-
- 0 replies
- 411 views
-
-
அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…
-
- 0 replies
- 623 views
-
-
வித்யா பாலன் இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு…
-
- 3 replies
- 1.1k views
-
-
’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை – ஆர். அபிலாஷ் May 16, 2020 - ஆர்.அபிலாஷ் · சினிமா தமிழில் “காட்ஃபாதரின்” தாக்கத்தில் ஏகப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் “தேவர் மகன்” மற்றும் “நாயகன்” நேரடியாகவே “காட்ஃபாதரை” நினைவுபடுத்துபவை; தமிழ் சினிமா வரலாற்றில் மைல்கல்களாக பாராட்டத்தக்கவை. இந்த இரு படங்களில் “தேவர் மகன்” மேலான கச்சிதமான திரைக்கதையை கொண்டது. ஒருவிதத்தில் “காட்ஃபாதரை” விட சிறந்தது “தேவர் மகன்” திரைக்கதை; ஒரு திரைக்கதையாளராக கமல் ஒரு மேதை. இதைப் பற்றி பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கம். “காட்ஃபாதருக்கும்” “தேவர் மகனுக்கும்” நாடகீய முரணும் (அமைதியான ஒருவன் தனக்குள் இருக்கும் வன்முறையாளனை எதிர்கொள்வது…
-
- 0 replies
- 552 views
-
-
ராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் காலமானார்! மின்னம்பலம் இளையராஜாவின் நீண்டகால கூட்டாளியாகவும் அவருடன் அன்னக்கிளி படத்திலிருந்து பணிபுரிந்தவருமான மூத்த இசைக்கலைஞர் புருஷோத்தமன்(65) காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். டிரம்மராகவும் மியூஸிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்தப் படங்களில் பணியாற்றி வந்துள்ளார். ஒரு இசையமைப்பாளருக்கு மியூஸிக் கண்டக்டராக இருப்பதென்பது எவ்வளவு முக்கியமானதென்று இசை குறித்தவர்களால் நன்கு உணர முடியும். ஒரு இசையமைப்பாளரின் தூதர் தான் மியூஸிக் கண்டக்டர் என மேற்குலகம் இ…
-
- 0 replies
- 930 views
-
-
-
“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது எல்லாருக்கும் கோரிக்கை ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அ…
-
- 116 replies
- 11.9k views
-
-
-
Pinned by OLIPARAPPU ஒளிபரப்பு S.t.a_ S.t3 weeks ago (edited) நான் இலங்கை தமிழர்களின் பல திரைப்பட படைப்புகளைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இதுபோன்று ஒரு இயற்கையான தத்ரூபமான நடிப்பில் சிறந்த திரைக்கதை அமைப்பிலும் ஒரு படம் பார்த்தது இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் பாராட்டத்தக்க விடயம் என்னவென்றால் நமது இலங்கை தமிழர்களின் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த . பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.👍👑 இவ்வாறு தமிழைக் கதைத்து நடிக்கக் கூடிய திறமை படைத்தவர்களாக இலங்கையில் கூட சிறுவர்கள்(. இளம் தலைமுறையினர்) இருக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகவும் திறமையாக நடித்திருக்…
-
- 1 reply
- 591 views
-
-
அடிக்கிற கைதான் அணைக்கும் என பாடி வளர்ந்த பெண்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் பெண்ணைப்பற்றிய கதை.. அம்ரிதா என்கிற அம்முவின் முடிவினால், தங்களது உண்மை முகங்களை, உணர்வுகளை அறிந்து கொள்ளும் அவளைச்சுற்றியுள்ள பெண்கள்.. அம்முவின் முடிவினால் தங்களது செயல்களை சற்று திரும்பி பார்க்கும் அவளைச்சுற்றியுள்ள ஆண்கள்.. பெரும்பாலும் ஒரு பெண்ணானவள் அவளது தாயைப்பார்த்தே வளர்கிறாள்.. அதனால்தான் அவளது தாய், பாட்டி, கொள்ளுபாட்டி செய்தது போல, தனது மகிழ்ச்சியை, கனவுகளை குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்கிறாள்.. ஆனால் ஆண்கள் அவர்களது தாயைப்பார்த்து வளர்வதில்லை.. அது அவர்களது துரதிர்ஷ்டமாகிவிடுகிறது. திருமனமாகிய பின் வேலைக்கு போகாமல் குடும்பத்தை கவனிக்கவேண்டும் என மனதார விரும்பி வா…
-
- 3 replies
- 922 views
- 1 follower
-
-
Nebraska (2013) - நெடுஞ்சாலையில் ஒரு கிழவர் வயதானவர்கள் இளைய தலைமுறையினரால் தேவையில்லாத லக்கேஜ் போல ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள். அனுபவம் என்கிற பலவருட மதிப்பு மிக்க சொத்து முதியவர்களிடம் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இது ஒரு புறம். வயதானவர்களின் சில எளிய ஆசைகளைக் குறித்து "பெரிசிற்கு வந்த ஆசையைப் பாருய்யா" என்று கிண்டலடிப்பது இன்னொரு புறம் . உழைக்கும் சமயத்தில் தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் பல ஆசைகளை துறந்து ஓடி ஓடி உழைத்த நபர், தன் இறுதிக்காலத்தில் நிறைவேறாத சில விருப்பங்களை அடைய ஆசைப்படும் போது இளையதலைமுறையினர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிழவர் குழந்தைத்தனமான விரு…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளி…
-
- 13 replies
- 2.3k views
- 1 follower
-
-
`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction? பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்! மாஃபியாவுக்கும் மாஃபியாவுக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என `எக்ஸ்ட்ராக்ஷன்' படத்தை சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இந்தியாவின் மிகப்பெரிய ட்ரக்லார்டான ஓவி மகாஜன் சீனியருக்கும் வங்கதேசத்தின் மிகப்பெரிய ட்ரக்லார்டான அமீர் ஆஷிஃபுக்கும் இடையே பலகாலமாகப் பகையுணர்வு பட்டறையைப் போட்டு படுத்திருக்க, ஒருநாள், ஓவியின்…
-
- 1 reply
- 563 views
-
-
TRAPPED - சினிமா ஒரு பார்வை இந்த உலகம் விளிம்பு நிலை மனிதனை ஒரு போதும் கவனிப்பதில்லை. விளிம்பு நிலை என்பது சொல்லுக்கு பழகிய சொற்றொடர் என்ற போதிலும். சொல்லில் அடங்காத பெரும்பாலும் வகைமையில் வரும் மனிதர்களுக்கும் அதே கதிதான். இந்த உலகம் விளிம்பில் நிற்கும் மனிதனையும் ஒருபோதும் கவனிப்பதில்லை. மூன்று பக்கம் மக்களால் சூழப்பட்டிருந்தாலும்.. ஒரு பக்கம் புறக்கணிப்பாலும்....வெறுமையாலும்... வெற்றிடமாகவுமே இந்த மானுட பிழைப்பு இருக்கிறது. 'Trapped' ஒரு சினிமா படம் தான். ஆனால்.. பார்க்க பார்க்கவே....பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் சக மனிதன் ஒருவனின் உச்ச பட்ச தவிப்பு. இரண்டு நாட்களில் காதலிக்கு கல்யாணம் என்ற பதட்டம்.. பரிதவிப்பு. "சீக்கிரம் …
-
- 0 replies
- 552 views
-