வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பாக்யராஜ் போட்ட ‘முந்தானை முடிச்சு’க்கு இன்றைக்கும் மவுசு! சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் முடிச்சுப் போடுகிற கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ‘எப்பவேணாலும் பாக்கலாம், எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்’ என்பதான படங்களும் நிறையவே உண்டு. இந்த இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு, ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடுகிற படங்களில், ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு! அப்படியொரு வெற்றி, எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. படம் பார்க்கப் போய்விட்டு, ஹவுஸ்புல் போர்டு மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பிவந்தவர்களை வைத்து, ஒரு ஷோவே நடத்தலாம். ஒவ்வொரு காட்சிக்கும் இதுதான் நிலைமை. அதுவும் ஆறேழு தடவையாகவும் இருபது முப்பது தடவையாகவும் அறுபது எண்பது முறையாகவும் படத்தைப் பார்த்தவர்கள…
-
- 0 replies
- 488 views
-
-
கொரோனா பாதிப்பு: 1.30 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நடிகர் விஜய் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 50 லட்சம், கேரள மாநிலத்திற்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி அமைப்பிற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் நடிகர் விஜய். அதேபோல பிரதமர் நிவாரண நிதிக்காக 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பல நடிகர்களும் உதவி செய்த நிலையில் நடிகர் விஜயும், அஜித்தும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை எனப் பலரும் ச…
-
- 0 replies
- 438 views
-
-
விஜய்யின் 'பிகிலை' மீண்டும் பார்த்த ராஜபக்சே மகனிடம் 'விஸ்வாசம்' பார்க்க சொன்ன அசித் ரசிகர்கள்.! சென்னை: தனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது .உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது, இந்த வைரஸ்.இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்…
-
- 1 reply
- 511 views
-
-
நான் ஆனது எப்படி? 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் வைரலான ‘ ஆத்தா உன் சேலை’ பாடல்! ஏழைகளின் வாழ்வியலை, தன் உருக்கமான பாடல் வரிகளாக வடிக்கும் ஒரு மார்க்ஸிய சிந்தனையாளர். தான் ஒரு ஏழையாக இருப்பதையே பெருமையாக நினைக்கும் ஒரு மனிதர்- இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் க.ஏகாதேசி, தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
-
- 0 replies
- 414 views
-
-
சில படங்கள் முந்தைய ஆண்டுகளில் வந்திருக்க கூடும் 2019 ல் தான் என்னால் பார்க்க கூடியதாக இருந்தவையும் இவற்றில் அடங்கும் ஹிந்தி 1)Andhadhun 2) Article 15 மலையாளம் 1)வைரஸ் 2)Under world 3)Uyare 4)Jomonte suvisheshangal 5)Lucifer 6)Vikramadithyan Telugu 1)maharshi English / other 1)Searching 2)The invisible guest 3) 7 days in ENTEBBE Series Game of throne-8 (HBO) Jack Ryan -1(Amazon prime) Hostages1&2, and Sacred Games-1 இன்னும் சில Netflix சீரியல்கள் ( பெயர் நினைவு இல்லை) உங்களின் ரசனைகளையும் பகிருங்கள்வ
-
- 4 replies
- 1k views
-
-
விக்ரம் பிறந்தநாள்: டப்பிங் கலைஞராக தொடங்கி முன்னணி நடிகரான ‘சீயான்’ விக்ரமின் கதை - பிறந்தநாள் பகிர்வு ACTOR VIKRAM OFFICIAL / FACEBOOK ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் 'விக்ரம்'. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அவர் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட்ர் இதோ! விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் பிறந்த ஊர் சென்னை. தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமிற்கு சி…
-
- 0 replies
- 390 views
-
-
சக மனிதனின் அழுகைதான் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதம் உயிரோடு கொன்று போடும். செத்த பின் இல்லாமல் செய்து விடும். இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அதே கதை தான் இந்தப் படத்தின் கதை. Train to Busan - Director : Yeon Sang-ho -South Korean- 2016 மனைவியை பார்க்க தன் 7 வயது பெண் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஹீரோ Busan க்கு பயணிக்கிறான். அதே ட்ரைனில்...ஒரு ஜோடி... அவள் நிறை மாத கர்ப்பிணி வேறு. கல்லூரி டீம் நண்பர்கள். அதிலும் ஒரு ஜோடி. வயதான அக்கா தங்கை...ஒரு பிச்சைக்காரன்.. என்று அந்த கப்பார்ட்மெண்ட் ஆட்கள். ட்ரெயின் கிளம்பிய நொடியில்..... கடைசி நேரத்தில் ஒரு பெண் ஓடி வந்து ஏறுகிறாள். வினை சொட்டும் குருதிப் பு…
-
- 0 replies
- 500 views
-
-
முத்த காட்சிகளுக்கு முற்று புள்ளி வைத்த கொரோனா..! கொரோனா உயிர்ப்பலிகளில் இருந்து மீள முடியாமல் உலகம் திக்குமுக்காடி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்த வைரஸ் தும்மல் மற்றும் மூச்சுகாற்றால் பரவும் என்றும், இதில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால் ஊரடங்கு முடிந்ததும் திரைப்படங்களில் நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த காட்சிகளை படமாக்குவதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. தற்போதையை படங்களில் காதல் காட்சிகளில் எல்லை மீறி…
-
- 0 replies
- 455 views
-
-
பொதுவாக பெரிய கெத்தான நடிகர்கள் நடித்த சினிமாக்களை பார்ப்பது வழமை. அப்படி பார்க்கும் பொழுது போக்கு படங்களிலும் ஒரு பலத்த அடிபிடி மற்றும் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகள் இருக்கும். அப்படிபட்ட ஒரு திரைப்படத்தை தடக்கி விழுந்த இடத்தில் பார்த்தேன். பொதுவாக அதிகமாக பொறியியல் படிப்பதும் பின்னர் வேலைகள் இல்லாமல் தடுமாறுவதும் வழமை. அதிலே, நேர்மையாக உழைத்து முன்னேறுவது என்பது கடினம். அவ்வாறான வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட ஒரு கதை. பல மேற்குலக தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்தும் நம்மை சிந்திக்கவும், குறிப்பாக தொழில்நுட்பங்களை பாவிப்போர் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கதையாக தெரிந்தது. ( மின்வலை களவுகள் மற்றும் அதியுயர் தொழில்நுட்ப களவுகள் வரை ...) காசு …
-
- 1 reply
- 547 views
-
-
நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3,577 ஆக உ…
-
- 1 reply
- 390 views
-
-
வில் றோமன் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ பயோடெக் கம்பெனியான ஜினிஸிஸ்சில் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் அல்ஸிமேர்ஸ் நோயைக்குணப்படுத்தக்கூடிய வைரல் பேஸ் மருந்து ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கின்றார்கள் ,இவர்கள் ALZ-112 என்ற பெயரைக்கொண்ட இந்த மருந்தை பிரைட் ஐ என்ற பெயரைக்கொண்ட சிம்பான்சி குரங்கு ஒன்றில் பரிசோதனை செய்துபார்க்கிறார்க்கின்றார்கள், இந்த மருந்து வெற்றியளித்தால் அடுத்ததாக மனிதர்கள் மீது இந்த மருந்தை பரிசோதனைசெய்வதுதான் இவர்களது திட்டம் இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பிரைட் ஐ என்ற குரங்கின் அறிவுத்திறமை அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றது ,தன் திட்டத்தில் வெற்றி அடைந்துவிட்டதாக கருதிய வில் றோமன் மற்ற விஞ்ஞானிகளின் முன் இதை பிறசண்டேசன் செய்யமுற்படும்போது பிரைட் ஐ கூண்டைவிட்டு வெளியே தப்…
-
- 0 replies
- 661 views
-
-
சென்னை: இந்தியாவில் முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தும்போது வெறும் 4 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு அவகாசம் தரப்பட்டது என்றும், பண மதிப்பிழப்பின் நடந்த தவறு இப்போதும் பெரிய அளவில் நடக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 571 பேருக்கு தொற்று பாதிப்புடன் இந்தியளவில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்து நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழ…
-
- 0 replies
- 229 views
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார். .. கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர். இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட…
-
- 2 replies
- 625 views
-
-
வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் பேச்சுதான் படத்தின் மையம். மனதை விட்டுப் பேசுங்கள், மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் – இதுதான் படத்தின் ஆதாரமான செய்தி. இந்தச் செய்தியைத் துளிக்கூட சீரியஸ் தன்மையோ வன்முறையோ இல்லாமல் அழகான மலைப் பிரதேசத்தின் பின்னணியில் மெல்லிய சாரலாய்த் தெளித்தி ருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். பேச வேண்டியதைப் பேசாமல் போனால் என்ன ஆகும்? தேவையே இல்லாமல் பேசினால் என்ன ஆகும்? சுத்தமாகப் பேசாமல் இருந்தால் என்ன நடக்கும்? - சில துணைக் கதைகளின் உதவியோடு இதையெல்லாம் பேசுகிறார் இயக்குநர். பனிமலை கிராமத்தில் ‘ஊமைக் காய்ச்சல்’ என்ற வித்தியாசமான நோய் பரவுகிறது. நோய்க்கு ஆ…
-
- 1 reply
- 373 views
-
-
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பலர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- “இது அனைவருக்குமே கஷ்டமான காலம் என்பது எனக்கு தெரியும். எல்லோரும் கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்தானது. இந்த நேரத்தில் அனைவரும் வீட்டில் இருந்து கொரோனாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்.…
-
- 0 replies
- 245 views
-
-
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள். நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறாராம். ஊரடங்கு தள்ள…
-
- 0 replies
- 301 views
-
-
போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் அறிவுரை கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீட…
-
- 0 replies
- 385 views
-
-
சைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன. ‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பி…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை கூடும் என்ற அச்சம் உண்டு அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம், வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும். வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற, சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய படங்கள். காந்தி இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் …
-
- 1 reply
- 574 views
-
-
யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு.! சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு மிகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் . இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார். இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து போராடி வருகிறார்கள் .இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று க…
-
- 4 replies
- 1.2k views
-
-
போன வார இறுதிகளில் பார்ப்பதற்கு என்ன புதிய தமிழ் படம் வந்து இருக்கு என என் ஐ. பி ரிவி யில் வந்த புதிதாக வந்த படங்களின் வரிசையை பார்த்துக் கொண்டு இருக்கும் போது இரண்டு படங்களின் பெயர்கள் கண்களில் தட்டுப்பட்டன. அப் படங்களின் பெயர்களை இதற்கு முதல் கேள்விப்பட்டும் இருக்கவில்லை. சிறியளவில் கூட இவை பற்றி வாசித்து இருக்கவும் இல்லை. ஆனால் பெயர்களில் இருக்கும் வழக்கத்துக்கு மாறான சொற்கள் என்னை கொஞ்சம் கவர்ந்திழுக்க 'சரி பார்ப்பம்' என்று பார்க்கத் தொடங்கினேன். ஊரிலிருக்கும் போது சீனி, மா, பருப்பு போன்றவற்றை சுற்றி வரும் பேப்பர்களில் எதிர்பாராவிதமாக நல்லதொரு கவிதையோ மனசுக்கு பிடிக்கும் ஒரு கதையின் சிறு பகுதியோ வந்து இருக்கும். வாசித்து பார்க்கும் போது மனசுக்குள் அப்படி ஒரு இனிய…
-
- 28 replies
- 3.5k views
- 1 follower
-
-
சென்னை: சென்னையில் டைரக்டர் விசு(74) உடல்நல குறைவு காரணமாக இன்று(மார்ச் 22) காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த விசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். விசு தமிழ்த் திரைப்பட டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆவார். 1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரேவற்பு பெற்றது. இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந…
-
- 1 reply
- 435 views
-
-
'ஆபாச படங்கள் எடுக்க பயப்படத் தேவையில்ல’ ரா.பார்த்திபன் 360° | ஒத்த செருப்பு
-
- 0 replies
- 374 views
-
-
அரியவகை கேன்சர், 1 வருட போராட்டம், தொடர் கீமோ, வாழ ஓர் வாய்ப்பு: மீண்டும் நடிக்க வந்த இர்ஃபான் கான்! ‘என் உடல் சில நாட்கள் நன்றாகவும், சில நாட்கள் நரகமாக இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்’ - இர்ஃபான் கான் By Gajalakshmi Mahalingam 18th Mar 2020 எதிர்பாராதது எதிர்பார்க்காத நேரத்தில் நிகழும் போதே வாழ்க்கையின் அர்த்தம் புரியும். நடிப்புத் துறையில் கோலோச்சும் நடிகர், பணம், பெயர், புகழுக்குப் பஞ்சமில்லை வாழ்வில் இன்னும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்த இர்ஃபான் கானுக்கு 20…
-
- 0 replies
- 352 views
-
-