வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
குசேலன் படத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது குறித்த கேள்வி-பதில் வசனத்தை ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீக்க முடிவு செய்துள்ளனராம். ரஜினிகாந்த்-நயனதாரா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் குசேலன் படத்தில் ஆர்.சுந்தரராஜன் ரஜினியிடம் கேள்விகள் கேட்பது போலவும், அதற்கு ரஜினி பதிலளிப்பது போலவும் ஒரு பகுதி உள்ளது. அதில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, மாட்டீர்களா என்று சுந்தரராஜன் கேட்பார். அதற்கு ரஜினி, நான் அரசியலுக்கு வருவது தொடர்பாக பேசிய வசனங்களை வசனகர்த்தா எழுதினார். அதை நான் பேசினேன். அதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பதிலளிப்பார். இந்த வசனம் ரஜினி ரசிகர்களுக்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சினிமா விமர்சனம்: ஸ்பைடர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் திரைப்படம் ஸ்பைடர் நடிகர்கள் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பரத், ஆர்.ஜே. பாலாஜி, ஜெயபிரகாஷ் இசை …
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம் Star Cast: பா விஜய், கே பாக்யராஜ், ராஜேந்திரன், எஸ் எ சந்திரசேகரன் Director: பா விஜய் சென்னை: குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது ஆருத்ரா திரைப்படம் கதை சென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்…
-
- 1 reply
- 1.6k views
-
-
கடந்த 2 வருடம்களில் விகடனில் 50 மார்க்ஸ் பெற்ற 3 ஆவது படம் 1 ) பசங்க 2 ) தெய்வ திருமகள் 3)எங்கேயும் எப்போதும் காதலும் விபத்தும் 'எங்கேயும் எப்போ தும்’ நிகழலாம்! எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக் கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்! சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் அனன்யா. ஒரு நாள் சிநேகிதத்தில் காதல் பூத்த காதலனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தன் ஊருக்கே திரும்புகிறார். காதலன் சர்வாவோ (அறிமுக…
-
- 4 replies
- 1.6k views
-
-
கேரளாவில் தமிழகத்தின் தாக்கம் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் தமிழ் திரையிசை மலையாளிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு ஆழமானது. இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானுமே இன்றும் அவர்களின் மனதுக்குகந்த இசையமைப்பாளர்கள். சமீபகாலமாக தமிழ் சினிமாவும் மலையாளிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. உண்மையில் இந்த ஆதிக்கம் சிவாஜி, எம்.ஜி.ஆர். காலகட்டத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அன்றிலிருந்தே தொடர்ச்சியாக பல சாதனைகளை கேரள மண்ணில் நிகழ்த்தி வருகிறது தமிழி சினிமா. கே. பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு', கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்', சரத்குமாரின் 'சூரியன்', ஷங்கரின் 'ஜென்டில்மேன்', 'காதலன்', மணிரத்னத்தின் 'தளபதி', 'ரோஜா', 'மும்பை' என தொடர்ச்சியாக தமிழ் சினிமா கே…
-
- 1 reply
- 1.6k views
-
-
எந்திரன் படத்தின் பாடல்கள் வீடியோ பார்க்க http://www.thedipaar.com/enthiran/
-
- 2 replies
- 1.6k views
-
-
திருச்சியில் நடிகை நமீதாவை கடத்த முயற்சி நடிகை நமீதாவை திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ் பட உலகில் கவர்ச்சி புயல் என்றும், ரசிகர்களின் கனவுக்கன்னி என்றும் அழைக்கப்படுபவர் நமீதா. சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார். முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றன…
-
- 7 replies
- 1.6k views
-
-
குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே சான்று. அந்தக் கட்டுரை என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து 'சார்... நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?' என தழுதழுத்த குரல் கேட்டது. அந்தக் குரல் ஒலித்த தொனி, ஏதோ நடக்க இருக்கும் ஓர் அசம்பாவிதத்தை உணர்த்துவதுபோல தோன்றியது எனக்கு. மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன் டிரைவரிடம். என் மனத் தடுமாற்றத்தின் வேகத்தைவிட வண்டியின் வேகம் குறைவாக இருந்ததுபோல் தோன்றியது. ஒருவழியாக மருத்துவமனையை அடைந்து அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்…
-
- 0 replies
- 1.6k views
-
-
நண்பனை திருமணம் செய்துகொண்டார் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி: [sunday 2014-06-29 22:00] விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியின் முக்கிய தூணாக விளங்கும் திவ்யதர்ஷினி (எ) டிடியை தெரியாத தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நிமிடம் கூட இடைவெளியில்லாமல் தனது கீச் குரலால் பேசிப் பேசி தமிழ்நாட்டு ரசிகர்களை கலங்கடித்தவர் டிடி. அப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின் வாழ்வில் இன்று முக்கிய தினம். டிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி இன்று திருமணம் நடைபெற்றது. திருமத…
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் போலி சாமியார்களும் உண்டு. ஹிந்து மதத்தில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், க்ரிஸ்தவர்கள், இன்னும் இருக்கும் எல்லா மதங்களிலும் இவர்களே அதிகம். இவர்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு இப்படிப்பட்டவர்களின் பணம் சேர்த்தல், இவர்களை நம்பும் மக்கள், அதனால் விளையும் பிரச்னைகள் என்பவற்றையெல்லாம் நகைச்சுவை கலந்த திரைக்கதையாகச் சொல்லியிருப்பதுதான் பீகே. நம்மூரில் பல படங்களில் வந்துவிட்ட சப்ஜெக்ட் இது. எம்.ஆர் ராதாவின் ஃபேவரைட் விஷயம். ஹிந்தியில் ‘Oh My God’ படத்துக்குப் பின்னர் இப்போது மறுபடியும் எழுந்திருக்கிறது. பீகேவின் கதை இதற்குள் எல்லாருக்கும் தெரியும் என்பதாலும், அதைப்பற்றிப் பேசினாலும் படம் பார்க்காதவர்களை அது பாதிக்காது என்பதாலும் – வேறு கிரகம் ஒன…
-
- 0 replies
- 1.6k views
-
-
சால்வைகளும், பூக்களும் நிரம்பிக் கிடக்க வேண்டிய அமீரின் அலுவலகம் கழுவி துடைத்த மாதிரி இருக்கிறது. பெர்லின் போய் தனது பருத்தி வீரன் படத்திற்காக சர்வதேச அளவிலான சிறப்பு விருதை வாங்கி வந்திருக்கும் அவரது முகத்தில் உற்சாகத்திற்கு பதிலாக ஒரு மூட்டை வருத்தம்! ஏர்போர்ட்டில் இறங்குவதற்கு முன்பாகவே ஓடி போய் வரவேற்க வேண்டிய திரையுலக அமைப்புகள் வெவ்வேறு வேலைகளில் பிஸியாகிவிட, தனது விரக்தி சிரிப்பை சிரமப்பட்டு ஒளித்துக் கொண்டு பேசத் துவங்குகிறார் அமீர். பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு அங்கு வந்திருந்த பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், "நாங்கள் இங்கு வந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை பார்த்ததும் எங்கள் மண்ணில் இரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது. திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில…
-
- 2 replies
- 1.6k views
-
-
7aum Arivu-2011ஏழாம் அறிவு...திரைவிமர்சனம். தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய.... பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...??? ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட முடிச…
-
- 0 replies
- 1.6k views
-
-
பெரியார் குறித்து ரூ 10 கோடியில் ஆங்கிலப்படம் திராவிடக் கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு ரூ 10 கோடியில் ஆங்கிலப் படமாகத் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பிரபல 'மிட்ஸ் பாய்ஸ்' நிறுவனமும், சென்னையில் உள்ள 'ஜே.கே.ஸ்டூடியோஸ்' பட நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பெரியார் ஒரு இந்தியத் தலைவர் (ஈ.வி.ராமசாமி அன் இன்டியன் லீடர்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரூ 10 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஆங்கில நடிக, நடிகையர்களும், இந்திய நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள். முதலில் ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இந்தப் படம் பின்னர் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் திரைக…
-
- 1 reply
- 1.6k views
-
-
பதின்ம வயதுக்குப் பிறகு நிறைய படங்கள் பார்த்தாயிற்று. நிறைய என்றால் நிறைய…. அதில் பல படங்களைப் பார்த்ததும் இதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். நான் அனுபவித்ததை அப்படியே யாரிடமாவது சொல்லிவிட மாட்டோமாவென, இங்கே பதிவுகளில் கொட்டியிருக்கிறேன். முடிந்தவரை எனக்கு புரிந்த விஷயத்தை, என் அனுபவங்களை கூடுமானவரை எழுத்தில் கடத்தியுமிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். சில படங்கள் பசுமையாய் நினைவில் நின்றுகொண்டிருக்கும் (Children of Heaven மாதிரி), சில படங்கள் பெரிய அதிர்ச்சியை மனதில் விதைத்திருக்கும், அந்த அதிர்வுகள் குறைய பல வருடங்கள் பிடிக்கும் (Life is Beautiful மாதிரி), சில படங்கள் நெகிழ்ந்து அழ வைத்து தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன ( Pursuit of Happyness, Cast Awa…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை' Published By: PONMALAR 11 APR, 2023 | 01:02 PM தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் தென் திசையை குறிப்பிடும் சங்க கால சொல்லான 'யாத்திசை' எனும் பெயரில் தமிழில் புதிய படைப்பொன்று வரவிருக்கிறது. இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. எயினர்கள், ரணதீர பாண்டியன், போர்க்களம், சங்கக் கால தமிழில் உரையாடல், விறலியர் ஆட்டம் எனும் நாட்டியத்தை ஆடும் தேவரடியார்கள்... என பல விடயங்கள் இடம் பெற்றிருந்ததால், இந்த முன்னோட்டத்திற்கு உலக தமிழர்களிடையே ஆச்சரியப்படும் வகையிலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இந்நிலையில் வீனஸ் இன்ஃபோ…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் நார்த்தப் என்ற கறுப்பின இளைஞனின் 12 வருட அடிமை வாழக்கையை அடிப்படையாகக் கொண்டு 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் திரைப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் அடிமை வியாபாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் மீது நடத்திய குரூரமான வரலாறின் சிறு துளி என இந்தப் படத்தை சொல்லலாம். FILE சாலமன் நார்த்தப் நியூயார்க் நகரில் வசித்த சுதந்திரமான மனிதன். மனைவி இரு குழந்தைகளுடன் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்த வேளையில் இரு வெள்ளையர்கள் அவரை வாஷிங்டன் அழைத்துச் சென்று தந்திரமாக விற்று விடுகிறார்கள். தானொரு சுதந்திரமான மனிதன் என்று நார்த்தப் சொல்வதை அவனை வாங்கியவர்கள் கேட்க தயாராக இல்லை. நார்த்தப் லூசியானாவில் உள்ள பண…
-
- 0 replies
- 1.6k views
-
-
கமலுக்கு மட்டுமே இது சாத்தியம் : விஸ்வரூபம்2 டிவிட்டர் விமர்சனம் நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தை பற்றி ஏராளமான நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஆண்டிரியா, பூஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளிநாடுகளில் வெளியானது. அதேபோல், இன்று காலை தமிழகத்திலும் வெளியானது. இந்நிலையில், தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள் முதல் பாகம் பற்றியும், பார்த்து ம…
-
- 3 replies
- 1.6k views
-
-
கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் மற்றும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் ஆகியோர் நடிக்க போவதாக வந்த செய்தியை கமல்ஹாசன் மறுத்துள்ளார்.தற்போது கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். இதற்கு அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழியிலும் உருவாக இருக்கும் அமர் ஹாய் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதை ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. அமர் ஹாய் படம் குறித்து கமல் கூறுகையில், "இந்தப் படத்திற்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஆனால் இதற்கு கான்கள் பொருத்தமானவர்கள் அல்ல. அப்படியே ஒரு வேடம் இருந்தால் அதற்கு சைப் மற்றும் தான் பொருந்துவார். ஆனால் அவரிடம் இது பற்றி இன்…
-
- 8 replies
- 1.6k views
-
-
http://youtu.be/SV4oEP4QUY8 எரியும் பனிக்காடு என்று Red Tea நாவலினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலை கடந்த ஆண்டு வாசித்தேன். தேனீரின் பின் இருக்கும் கண்ணீர் பற்றி மிகவும் முக்கியமான நாவல் அது. இத் திரைப்படத்தினை பார்க்க விரும்புகின்றவர்கள் முடிந்தால் எரியும் பனிக்காட்டினையும் ஒரு முறை வாசித்த பின் பாருங்கள். எரியும் பனிக்காடு: http://www.sramakrishnan.com/?p=435 வாங்குவதற்கு: http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
-
- 3 replies
- 1.6k views
-
-
நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம் கேமராக்கள் சூழ் உலகு இது. இங்கு எவ்வளவு பத்திரமாக இருந்தாலும், ஓடி ஒளிந்தாலும் ஆயிரமாயிரம் கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள், பழிவாங்கல்களைப் பதிவுசெய்திருக்கிறது ‘புரியாத புதிர்.’ வளரும் இசைக் கலைஞன் கதிர் (விஜய் சேதுபதி). பப் ஒன்றில் டிஜே-வாக இருக்கும் அர்ஜுனன் மற்றும் டிவி சேனல் ஒன்றில் வேலைசெய்யும் நண்பனுடன் வசித்துவருகிறார். மழை நாளொன்றில் விஜய் சேதுபதியின் கண்ணில்படும் காயத்ரிக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல். எல்லாம் சரியாக நகரும்போது, காதலியின் அந்தரங்க வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் …
-
- 4 replies
- 1.6k views
-
-
கமல் ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட நம்மவர் என்கிற பெயர், வெறும் சாதாரண சொல்லோ பெயரோ அல்ல. அது ஓர் உணர்வு. பொதுவாக சினிமாவில் 'ஹீரோ' என்பவருக்கு ஓர் அங்கீகாரமும், பிம்பமும் உண்டு. படத்துடைய கதாநாயகனுக்கு முக்கியமான குணாதிசியமாகக் கருதப்படுவது, 'தப்பை தட்டிக் கேட்கும் ஒருவர்'. இதுதான் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் உச்சக்கட்ட அங்கீகாரம். ஆனால் அதைத் தகர்தெறிந்து நம்மவரானவர், கமல். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் அந்த வார்தையிலே உள்ளது. 'உலக நாயகன்' என்ற பட்டத்தைவிட 'நம்மவர்' என்பதுதான் அவருக்கான சரியான அடையாளம். கதாநாயகனுடைய பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவனாக சினிமாவில் இவர் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன! நம்மைத் திரையில் காணும்போது எந்தளவிற்கு ஒரு சந்தோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகை ராணி முகர்ஜி- நடிகர் ஹிருத்திக்ரோஷன் புதுடெல்லி, ஜுன். 10- வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சேர்ந்து `சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தி விருது வழங்குகிறார்கள். இதன் 8-வது திரைப்பட விழா இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் நகரில் நடந்தது. இதில் சிறந்த படம், டைரக்டர், நடிகர், நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த படமாக ராங்தே பசந்தி தேர்வு செய்யப்பட்டது. லேகேராகோ முன்னாபாய் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹீரானி சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகராக `கிரிஸ்' படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக்ரோஷன் தேர்வு…
-
- 7 replies
- 1.6k views
-
-
சினிமா விமர்சனம் - ஜூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK திரைப்படம் ஜூங்கா நடிகர்கள் விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி …
-
- 2 replies
- 1.6k views
-
-
டாக்சியில் பயணிக்கும் கோடீஸ்வரன் ஒருவனுக்கு அந்த டாக்சிக்காரன் கொடுக்கிற டார்ச்சர்தான் கதை! காலையில் துவங்கி இரவில் முடிவதாக கதை அமைந்தாலும், இரண்டே மணி நேரத்தில் 'சுருக்' என்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் லட்சுமிகாந்தன். அதற்காகவே மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கலாம் (16 ரீலில் படம் எடுத்து பாடாய் படுத்தும் இயக்குனர்கள் இவரிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்க!) தன்னை எல்ஐசி ஏஜென்ட் என்று மனைவி சிம்ரனிடம் பொய் சொல்லும் பசுபதி, பார்க்கும் தொழிலோ கால் டாக்சி ஓட்டுகிற டிரைவர் வேலை. சவாரிக்கு வரும் அஜ்மல், 'வேகமா போ வேகமா போ' என்று துரத்த, ஆக்சிலேட்டர்.... சிக்னல்... ஆக்சிடென்ட்! தன்னை காப்பாற்ற வேண்டிய பயணி கூச்சல் குழப்பத்துக்கு நடுவே காணாமல் போக, கம்பி எண்ணுகிறார் ப…
-
- 0 replies
- 1.5k views
-