வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ஏப்ரலில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் நிறைவடைகிறது. பிறகு போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள். ஜுன் - ஜுலையில் திரைக்கு வந்துவிடும் கமலின் 'தசாவதாரம்!' கமலுக்கும் சரி தமிழ் திரையுலகுக்கும் சரி இது மற்றுமொரு திரைப்படம் அல்ல, ஒரு சாதனை! உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் ஒரே படத்தில் பத்து வேடங்களை இதுவரை ஏற்று நடித்ததில்லை. 'தசாவதாரம்' அதனை உடைக்கிறது. இதில் கமலுக்கு பத்து வேடங்கள். படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே 'தசாவதாரம்.' இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கம…
-
- 0 replies
- 1.4k views
-
-
தசாவதாரம் - பலராலும் பல விதமாக விமர்சிக்கப்பட்டு விட்டது. என்னுடைய பங்கிற்கும் தசாவதாரம் படத்தைப் பார்த்த பொழுது, பார்த்து முடித்த பின்பு எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். கமல் மீது எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. தம்மைப் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்கின்ற பார்ப்பனர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு தம்முடைய உண்மையான பார்ப்பனிய முகத்தை காட்டி விட்டுப் போயிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகள் கமலைப் பார்க்கின்ற பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கும். ஆரம்பத்தில் முற்போக்குச் சிந்தனைகளோடு கதைகளை தந்த சுஜாதா கடைசியில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பொழுது பார்ப்பனிய சக்திகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டார். பார்ப்பன சங்கத்தில் மு…
-
- 0 replies
- 1.4k views
-
-
கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள். பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான். தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. பார்ப்பனர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். “அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் "பூவராகன்" பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம். வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் உய…
-
- 6 replies
- 3.5k views
-
-
விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். எனவே காமெடி கதையம்சத்தில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. காமெடி கேரக்டரில் விவேக் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இப்படத்தை முடித்து விட்டு உத்தம வில்லன் படத்துக்கு கமல் வருகிறார். Share this posthttp://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15588:kamal-s-ne…
-
- 2 replies
- 426 views
-
-
தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கமல் ஹாஸனின் புதிய படம் இந்த விஸ்வரூபம். சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி ஹோராவாக நடித்துள்ள படம். ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அமெரிக்கா என பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரூ 95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் என அடிக்கடி கமல் கூறி வருகிறார். உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம் பற்றிய கதை இது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது. வரும் ஜனவரி 11-ம் உலகமெங்கும் தமிழில் வெளியாகிறது. அதற்கும் 10 மணி நேரங்கள் முன்பு, இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச் எனும் வீட்டுக்கு வீடு உள்ள ஹோம் தியேட்டர்கள் அல்லது டிஷ் ஆன்டெனா கனெக்ஷன் வைத்திருப…
-
- 0 replies
- 516 views
-
-
எந்திரனைப்’பற்றி மனம்திறந்த இயக்குநர் ஷங்கர்,இந்த வாரம் ரஜினியின் புது அவதாரத்திற்காக பயன்படுத்திய புதிய நுட்பங் களையும்,சுஜாதா பற்றியும், தனது வெற்றிக்கான தன்னம்பிக்கை ரகசியங்களைப் பற்றியும் தொடர்கிறார். எந்திரனைப் பொறுத்தவரை கமல்தானே உங்களின் முதல் சாய்ஸ், தற்போது சூழ்நிலைகளால் ரஜினி நடிக்கிறார்.இந்த இரு ஜாம்பவான்கள் பற்றி? ”‘ஜென்டில் மேன்’ படத்தை முதலில் சரத் குமாரை வைத்து எடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால், சில சூழ்நிலைகளால் அர்ஜுன் நடித்தார். இதனால் ஸ்கிரிப்டை, வசனங்களை அர்ஜுனுக் கேற்ற மாதிரி மாற்றிய பிறகே ஷூட் செய்தேன்.அதேபோல் எந்திரனை கமல் சாருக்காக தயார் பண்ணினாலும்,ரஜினி சார்தான் என்று முடிவானதும், அவருக்கேற்றபடி ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றி எடுத்திருக்க…
-
- 1 reply
- 963 views
-
-
பேசாமல் விருது நாயகன் என்ற பட்டத்தை கமலுக்கு கொடுக்கலாம். வருடத்திற்கு மூன்று விருதாவது இவர் பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது. பதினைந்து முறைக்குமேல் பிலிம்பேர் விருது. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது. கணக்கில் இல்லாத அளவுக்கு தமிழக அரசு விருதுகள். இவை தவிர டாக்டர் பட்டம் வேறு. அகில இந்திய வர்த்தக சங்கமான எப்.ஐ.சி.சி.ஐ. கமலுக்கு 'வாழும் வரலாறு' என்ற விருதை அறிவித்துள்ளது. இந்தியாவின் மெகா தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கம் இவ்விருதினை இம்மாதம் 28-ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் கமலுக்கு அளிக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள எப்.ஐ.சி.சி.ஐ., கமல் தனது வாழ்நாளில் ஒரு வரலாறாக திகழ்ந்து வருவதாக புகழ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கமல் சார் வணக்கம்...! மீடியா என்னும் அசுரனின் வளர்ச்சியை பல வருடங்களுக்கு முன்பே கண்டுகொண்ட நடிப்பின் அசுரன் நீங்கள். எனவே, இந்த கடிதம் உங்களை வந்து சேரும் என நம்புகிறேன், வந்து சேராமலும் போகலாம்... இந்த பதிவை படிக்கும் உங்களின் ரசிகர்கள் பாதியிலேயே இந்த பதிவை படிப்பதை நிறுத்தலாம்... ஆனாலும், நான் நினைத்ததை பதிவு செய்ய நினைக்கிறேன்.. ஈரோடு பாரதி தியேட்டரில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக இரண்டடி அகலமுள்ள டிக்கெட் கவுண்டரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு முட்ட காத்திருந்து, வேர்வையில் நனைந்து, கசங்கிய ஆடையுடன் அந்த படத்தை பார்த்தபோதும் தங்களின் மீதான ஆச்சரியம் குறையவில்லை ஈரோடு ஆனூர் தியேட்டரில் பெண்களைப்போல் கண்ணீர் சிந்தியபடி 'மகாநதி' படத்தை பார்த்தபோதும் தங்கள…
-
- 0 replies
- 938 views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.ஹெச் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் என பல்வேறு இடையூறுகளை சந்தித்துவருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி ரிலீஸ் பண்ணுகிற வேலையில் தியேட்டர்களை புக் பண்ணிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம் படக்குழு. எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பல தியேட்டர்கள் திரையிட முன்வந்துள்ளன. கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் என பெருமளவிலான ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இன்றைய விளம்பரங்களில் கூட தியேட்டர்களின் பெயர்கள் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென டிஜிபி அலுவலகம் வந்தார் கமல்ஹாசன். அங்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ட…
-
- 0 replies
- 327 views
-
-
கமலுக்கு சாதனையாளர் விருது மும்பையிலுள்ள யுஎப்ஓ டிஜிட்டல் சினிமா நிறுவனம் கமல்ஹாசனுக்கு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான வாழும் சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது. http://www.tamilvanan.com
-
- 6 replies
- 1.4k views
-
-
கமலுக்கு பதிலடி கொடுத்த வாணி கணபதி! கமல் ஹாசனின் திறமைகள், வெற்றிகள் என பல விஷயங்களை தவிர அந்தரங்க விஷயங்களை யாரும் தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள். அவருடைய முதல் திருமணம் 1978 இல் பிரபல நடன கலைஞர் வாணி கணபதியுடன் நடந்தது. பின் 1988 இல் விவாகரத்து. அதன் பின் இந்த விஷயம் காற்றோடு பறந்து போய்விட்டது. அந்த சமயத்தில் கமல் என்ன சொன்னார் தெரியுமா? ஸ்ருதி ஹாஸன் பிறந்தபோது நான் எல்லாபணத்தையும் இழந்த நிலையில் இருந்தேன். ஏனெனில் வாணியை விவாகரத்து செய்ததால் ஜீவனாம்சம் தர வேண்டி இருந்தது. மீண்டும் வாழ்க்கை ஜீரோவிலிருந்து துவங்கியது. அப்போது கூட வாடகை வீட்டில் தான் இருந்தேன் என்றார் கமல். வாணி கணபதியின் பதிலடி! இந்திய…
-
- 0 replies
- 268 views
-
-
மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜோலிடம் தேதிகள் கேட்டிருந்த கமல், இப்போது அந்த எண்ணத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, நயனிடம் தேதிகள் கேட்டுள்ளாராம். மர்மயோகியில் நடிக்கப்போவதாக மூன்று நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. காஜோல், ராணி முகர்ஜி மற்றும் பத்மப்ரியாதான் அந்த மூவரும். இவர்களில் முதல் இருவரும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால் பத்மப்ரியா மட்டும், இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகவும், கமல்ஹாசனே போனில் தன்னிடம் பேசியதாகவும் கூறி வருகிறார். இந்நிலையில், இன்றைக்கு தென்மாநில மொழிப் படங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நாயகியான நயன்தாராவிடம் மர்மயோகி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குமாறு உலகநாயகன் கேட்டுக் கொண்டிருப்பதாக நம்பத் …
-
- 1 reply
- 811 views
-
-
கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் மர்மயோகி படத்தில் நடிக்கவில்லை என்றார் ஸ்ரேயா. இதுகுறித்து அவர் கூறியதாவது: கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது நடிகைகளின் ஆசை. எனக்கும் அந்த ஆசை உள்ளது. மர்மயோகி படத்தில் அவர் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக உள்ளதால் அதில் நடிக்க முடியவில்லை. மேலும் புதுப் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=175
-
- 0 replies
- 906 views
-
-
கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏர்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:- எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
சுனாமி என்ற சொல்லையும் அதன் விஸ்பரூபத்தையும் பலருக்கு அன்பே சிவம் சினிமா மூலம் இந்தியாவிற்கு சுனாமி வர முதலே தெரியப்படுத்தியவர் கமல் . அதே போல் தசவராரத்தில் இபோலா பற்றி எச்சரிக்கின்றார்
-
- 1 reply
- 578 views
-
-
கமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா ? முதலில் ஒருவிளக்கம் இது கமலுக்கு துதிபாடும் கட்டுரை அல்ல... கமலின் பல கொள்கைகளுக்கு நமக்கு உடன்பாடு இல்லை...அதே போல் இந்த கட்டுரையில் சாதி சாயத்தை தொடபோவதில்லை.... வேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்.... நம்மைப் பொறுத்தவரை எல்லோரும் காப்பி அடிக்கும் போது கமலை மட்டும் குற்றாவளி கூண்டில் நிறுத்தி யூவர் ஆனர் என்று ஆரம்பிப்பதில் உடன்பாடு இல்லை.... அப்படி ஆரம்பித்தால் இந்தியாவில் 90 சதம் பேர் குற்றாவரிளிக் கூண்டில் இருப்பார்கள்... உலகத்தில் கணக்கு எடுத்துக்கொண்டால்... அதன் சதவிகிதம் மி…
-
- 3 replies
- 1.8k views
-
-
கமலை படமெடுக்கும் அக்ஷரா! -வாரிசுகளால் பெருமைப்படும் அப்பாக்கள்! ரஜினியின் பாபா படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் தன் வீடியோ கேமிராவில் பதிவு செய்திருந்தார் அவரது மகள் ஐஸ்வர்யா. அந்த படம் எப்படி உருவானது என்பதை தனி வீடியோ தொகுப்பாக போடவும் திட்டம் வைத்திருந்தார் அவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்படவே இல்லை. அது போலவே தன் அப்பா கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பை வீடியோவில் படம் பிடித்து வருகிறார் அக்ஷரா! பத்து கெட்டப்புகளில் தோன்றும் கமல், மேக்கப்புக்காக செலவிடும் நேரம், சிரமம் எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணுகிறாராம். இதுவாவது வீடியோ பதிவாக வெளிவருமா? அதிருக்கட்டும்.... கமலின் மற்றொரு மகள் ஸ்ருதி இசையை முறையாக படித்து வருகிறார். தமிழில் …
-
- 0 replies
- 777 views
-
-
இன்னும் 100 நாட்களுக்கு கமல் சாரோடு இருக்கம் போகும் அனுபவத்தை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்கிறார் மர்மயோகி நாயகிகளுள் ஒருவரான த்ரிஷா. கமல்ஹாசன்எழுதி இயக்கி நடிக்கும் மெகா திரைப்படமான மர்மயோகியில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் பத்மப்ரியா (இவர் மட்டும் இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில்!) ஆகிய நால்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் த்ரிஷாவிடம் மட்டும் 100 நாட்களுக்கு கால்ஷீட் வாங்கியுள்ளார் கமல். இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், கமல் சாருடன் நடிப்பதை நினைத்தாலே த்ரில்லிங்காக உள்ளது. படம் ஆரம்பித்த பிறகு 100 நாட்கள் அவரோடு இருக்கப் போகிறேன். நிச்சயம் நடிப்பில் புதுப்புது அனுபவங்களை எதிர்பார்க்கிறேன். சின்ன வயதி…
-
- 11 replies
- 2.7k views
-
-
கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு - டிடிஎச்சில் வெளியிடும் திட்டம் ரத்து? Posted by: Shankar Updated: Tuesday, January 8, 2013, 10:17 [iST] சென்னை: கமலுடன் திரையரங்க உரிமையாளர்கள் நேற்றி இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமி…
-
- 0 replies
- 360 views
-
-
ரஜினியும், விஜய்யும் மட்டுமே சினிமா உலகத்தை காப்பாற்றுபவர்களும் போலவும், கமல்ஹாசனை சினிமாவுக்கே எதிரி போலவும் சித்தரித்து ,தியேட்டர் உரிமையாளர்கள் வில்லங்கமான அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள்.விஜய் நடித்த சுறா,வேட்டைக்காரன்,வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களின் வசூலை தியேட்டர் அதிபர்கள் மறந்துவிட்டார்களா? என தெரியவில்லை. இதே தியேட்டர் அதிபர்கள்தான் குசேலன் படம் பிளாப் ஆனதும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து பணத்தை திருப்பி தரவேண்டும் என போராட்டம் செய்தார்கள். கமல்ஹாசனின் தசவதாரம்,வேட்டையாடு விளையாடு, போன்ற படங்களின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டிய தியேட்டர் அதிபர்கள் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது அவர் ஏதோ சினிமாவுக்கே எதிரி போல சித்தரித்து அறிக்கை வெளியிட்ட…
-
- 0 replies
- 600 views
-
-
கமல் - ஷங்கர் கூட்டணியில் 'இந்தியன்' இரண்டாவது பாகம்! அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் 'இந்தியன்'. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும் இளமையான ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் படம் பட்டிதொட்டி எங்கும் தெறி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடித்ததுக்காக கமல்ஹாசனுக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று வெகுநாள்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் படத்துக்குச் சம்பந்தப்பட்ட தரப்பு இதுநாள் வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்ப…
-
- 0 replies
- 185 views
-
-
'அழைக்கிறேன் என்றார்... அழைப்பாரா தெரியலையே'...., ஏதோ படத்தின் பாட்டு வரியோ என நினைக்க வேண்டாம். பத்மப்ரியா அடிக்கடி முணுக்கும் வார்த்தைகள் இவைதான். தசாவதாரத்துக்குப் பிறகு கமல்ஹாசன், இயக்கி நடிக்கும் மர்மயோகியின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. பிரமிட் சாய்மிரா ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள். ஹேமமாலினி, த்ரிஷா, ஷ்ரியா என இதற்கு ஏற்கெனவே நாயகிகளும் முடிவாகிவிட்ட நிலையில், நான்காவதாக பத்மப்ரியாவும் ஜோடி சேரப் போவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுக்கள் தொடங்கிய போதே, கமல் பத்மப்ரியாவிடம் பேசியிருந்தாராம். தொடர்ந்து 90 நாட்கள் கால்ஷீட் தர முடியுமா என்றும் கேட்டுக் கொண்டாராம். ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
பேரிஆஸ்பனுடன் கமல் இணையும் ஹாலிவுட் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். தடைகள் பலவற்றை கடந்து கமலின் பிரமாண்ட படைப்பாற்றலில் உருவான விஸ்வரூபம் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுதல்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து வருகிறது. முன்னதாக இப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பனிடம், விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டினார் கமல். கமலின் படைப்பாற்றலை பார்த்து வியந்து போன ஆஸ்பன், தனக்கு ஒரு படம் இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கமலும் நிச்சயம் படம் இயக்குவதாகவும், இதுதனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் கூறியிருந்தார். தற்போது விஸ்வரூபம் படத்தை தொடர்…
-
- 0 replies
- 435 views
-