வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா தம்பதியின் மகள் த்ரிஷா. மகள் மீது அதிக பாசம் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் பள்ளிக்குச் செல்லும்போது ஏற்படும் சிறு பிரிவைக்கூட தாங்க முடியாமல் பரிதவிப்பவர். தந்தையும், மகளும் இணைபிரியாத நண்பர்களாகப் பழகுகின்றனர். த்ரிஷாவுக்கு டெல்லியில் எம்.பி.ஏ படிக்க இடம் கிடைத்து, விஷயத்தைச் சொன்னதும், ‘பொண்ணை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது’ என்று பிரகாஷ்ராஜ் குதிக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவின் வார்த்தைகளால் மனம் மாறி டெல்லிக்கு அனுப்புகிறார். இரு வருடங்கள் கழித்து திரும்பி வந்த த்ரிஷா, பஞ்சாப் இளைஞன் கணேஷ் வெங்கட்ராமைக் காதலிப்பதாக வெடிகுண்டு வீசுகிறார். மகள் மீது கொண்ட அதீத பாசத்தால், மனம் உடைந்து சிதறும் பிரகாஷ்ராஜ், திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறார். பிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=5]தமிழ் சினிமாவின் கற்பனை வறட்சியும் அக்கறைப் பஞ்சமும்[/size] அரவிந்த கிருஷ்ணா ஏன் தமிழ் சினிமாவில் மாற்று முயற்சிகள் வருவதில்லை? வந்தாலும் அவை ஏன் நேர்த்தியான ஆக்கங்களாக இருப்பதில்லை? அப்படியே இருந்தாலும் அவை ஏன் ஓடுவதில்லை? த்ரீ இடியட்ஸ், பீப்ளி லைவ், மை நேம் இஸ் கான் முதலான இந்திப் படங்கள் சமூக அக்கறையுடன் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுகின்றன. பா, பிளாக், பர்ஃபி, தாரே ஜமீன் பர் முதலான சில படங்கள் தனி மனிதர்களின் அதிகம் கவனிக்கப்படாத சில உடல் நல மன நலப் பிரச்சினைகளைப் பற்றி அக்கறையுடன் பேசுகின்றன. இவை வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் ஒரு முன்னணி இயக்குநர், நட்சத்திர ஹீரோ, நட்சத்திர ஹீரோயின் ஆகியோர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
படித்த புத்தகம் : டான் பிரவுன் (Dan brown) எழுதிய தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol) நாவல். செம த்ரில்லிங்கான மறக்க முடியாத க்ரைம் கதை. மறக்க முடியாத பயணம் : ஜூலை,ஆகஸ்டில் அமெரிக்காவில் தங்கியிருந்த இருபது நாட்கள். அங்குள்ள தமிழர்களின் கவனிப்பும் உபசரிப்பும் ரொம்பவே பிரமிக்க வச்சது.ஊர் விட்டு ஊர் போய் வாழ்றவங்களோட உண்மையான ஏக்கத்தை உணர்ந்தேன். உங்களை ஆச்சரியப்பட வைத்த திரைப்படம்: இன்செப்ஷன் (Inception) ஹாலிவுட் படம். கிரிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) டைரக்ட் பண்ண படம். ரொம்பவே மனசை பாதிச்சதுன்னு சொல்லலாம்.ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத ஆச்சரியங்களை தந்துச்சு. அறிமுகமான நண்பர்கள் : நாகார்ஜுனா, சூர்யா, தமன்னா, சுமந்த், சுதீப் எல்லோ ரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வித்யா பாலன் இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு…
-
- 3 replies
- 1.1k views
-
-
இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு! விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடக பிரிவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. இலங்கையில் நடந்த இறுதி போரில் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வருகிறார்கள். கன்னட மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். படத்தின் பூஜையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புலவர் புலமைப்பித்தன் இளையராஜா கலந்து கொண்டனர். அனு என்ற புதுமுகம் இசைப்பிரியவாக நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் வேகமாக …
-
- 1 reply
- 1.1k views
-
-
ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன் -கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி *மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், களி என வெவ்வேறு உணர்வுநிலைகளை பாடல்களில் வழங்கியிருக்கிறீர்கள். ஆயிரம் பாடல்களில் உங்கள் சொந்த மனநிலைகளும் பிரதிபலித்திருக்கும். அதுபற்றி யோசிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? கவிதை என்பது பொது உணர்ச்சி என்றும் பாட்டு என்பது தன்னுணர்ச்சி என்றும் கருதப்படுகிறது. இதைத்தான் ஆயிரம் பாடல்கள் முன்னுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். லிரிக் என்பது ஓர் ஆங்கிலச் சொல். இந்த லிரிக் என்பதற்கு தன்னுணர்ச்சிப் பாட்டு என்றுதான் பொருள். இந்த லிரிக் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தபோது கிரேக்க மொழியிலிருந்து இந்தச் சொல் பிறந்ததாக அறியமுடிந்தது. கிரேக்கத்தில் ல…
-
- 2 replies
- 1.1k views
-
-
இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராம…
-
- 2 replies
- 1.1k views
-
-
மரணத்துக்கு முன், வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது. தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கறுப்பர்களின் உரிமைக்காக நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆபிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆபிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத…
-
- 2 replies
- 1.1k views
-
-
ரஜினியின் தொலைநோக்கு பார்வை... ஹி... ஹி... :-)
-
- 0 replies
- 1.1k views
-
-
2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை. 1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான். எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலு…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது படத்திற்கு ஷாருக்கானும் சல்மான்கானும் தேவையில்லை தனது படத்தை வெளியிட பொலிவுட் ஹீரோக்களான சல்மான்கானும், ஷாருக்கானும் தேவையில்லை என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் தற்போது விஸ்வரூபம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ஊழலை மையமாக வைத்து அமர் ஹை என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் பொலிவுட் ஜாம்பவான்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின். ஆனால் இதை கமல் மறுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், நான் இரு கான்களையும் சரி, ஜாக்கி சான், டாம் க்ரூஸையும் சரி எனது புதிய படத்திற்காக அணுகவில்லை. அது வெறும் வதந்தி. எனது படத்தை வெளியிட சல…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடிவேலுவின் சம்பளம், மீனாவுக்குப் பதில் ரேவதி! ‘தேவர் மகன்’ ஃப்ளாஷ்பேக் #25YearsOfThevarMagan ‘தேவர் மகன்’ படம் ரிலீஸாகி கால்நூற்றாண்டு கடந்தும் அந்தப்படம் உருவாக்கிய அதிர்வலைகளும் பெரிய தேவர், சக்தி, மாயன், இசக்கி... என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் நம் மனங்களில் பசுமையாக உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக அப்போது பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். கமல்ஹாசன்மீது இயல்பிலேயே அன்புள்ளவர். கமலின் அம்மாவான ராஜலட்சுமியின் பெயரையே தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்து இருப்பவர். அந்த ‘ராஜலட்சுமி ஃபிலிம்ஸ்’ மூலம் 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்', 'வல்லவன்' உள்பட பல படங்களைத் தயாரித்தார். சமீபத்தில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் நடிகராகவும் பல…
-
- 0 replies
- 1.1k views
-
-
கரீனா கபூரின் மாமியார் அதாவது சைப் அலிகானின் தாயார் கரீனா கபூரிடம் சில அன்புக்கட்டளைகளை பிறப்பித்துள்ளாராம். அவற்றில் ஒன்று சினிமாவில் கூட வேறு நடிகர்களுக்கு முத்தம் தரக்கூடாது, படுக்கையறை காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பதுதானாம் அது. மாமியார் ஷர்மிளா தாகூர் மீது கரினாவுக்கு அளவில்லாத மரியாதை. அவருக்கு உடன்பாடில்லாத எதையும் செய்வதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறாராம் கரீனா கபூர். இதனால் பாதிக்கப்பட்டது ரசிகர்களும் பாலிவுட் நடிகர்களும்தான் என்கிறார்கள். சத்யகிரஹா படத்தில் அஜய் தேவ்கானுக்கும், கரினா கபூருக்கும் நெருக்கமான காட்சி. முத்தமிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. ஆனால் முடியாது என தீர்க்கமாக சொல்லிவிட்டார் கரினா. இதற்கு முன் …
-
- 3 replies
- 1.1k views
-
-
மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம். தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை. நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி. படத்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம் ’நாய்’ சேகர், ‘ஏட்டு’ ஏகாம்பரம் என வடிவேலுவின் ஹிட் வெர்ஷன் கொடுத்த இயக்குநர் சுராஜுடன் வடிவேலு ‘கம்-பேக்’ கூட்டணி வைத்திருக்கும் படம், வடிவேலு - சூரி ஒரே படத்தில் காமெடி செய்திருக்கும் படம் என்று எதிர்பார்ப்புகள் சிலவற்றோடு வெளியாகியிருக்கிறது கத்தி சண்டை. காது கிழிந்ததா.. இல்லை கைதட்டலால் அரங்கம் அதிர்ந்ததா? ’6 மாதங்களுக்கு முன்’ என்றொரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். கண்டெய்னர் லாரி, கோடி கோடியாய்ப் பணம், மடக்கிப்பிடிக்கும் ஏ.சி. ஜெகபதி பாபு என்று டைட்டில் கார்டு வரும் வரை கொஞ்சம் விறுவிறுப்பு காட்டிவிட்டு, டைட்டிலுக்குப் பிறகு புளித்துப்போன பூர்வஜென்ம புரூடா விட்டு தமன்னாவை கரெக…
-
- 3 replies
- 1.1k views
-
-
பழம்பெரும் நகைச்சுவை நடிகை எம்.சரோஜா காலமானார். நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் மனைவியான இவர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 'கல்யாண பரிசு' படத்தில் இந்த ஜோடியின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது https://www.facebook.com/#!/Cinemavikatan
-
- 1 reply
- 1.1k views
-
-
நேரத்தில் எந்த சேனலை அழுத்தினாலும் ஏதோ ஒரு ஜீன்ஸ் யுவதி அல்லது யுவன் ‘தொலைதூரத்தில் வெளிச்சம் நீ’ என்று ஏதோ ஒரு பாட்டின் சரணத்தை பதற்றத்துடன் மேல் ஸ்தாயியில் இழுத்துக் கொண்டிருக்க.. எதிரே அரை இன்ச் மேக்-அப்புடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும் இசையுலக பிரபலம். இந்த நடுவர்கள் (பெரும்பாலும் பெண்கள்-தோற்கும் பையன்களின் எரிச்சலைக் குறைக்கவோ!) சுகமாக பாட்டை கேட்டபடி சிவப்பு, மஞ்சள், பச்சை பட்டன்களை அழுத்திக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். உங்களுக்குத் தெரியாதது, இதற்கு இவர்கள் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது! தினமும் இந்த ஜட்ஜ் பிரபலங்கள் எவ்வளவு கல்லா கட்டுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட சிலரிடம் விசாரித்தோம். இதோ வட்டங்களில் அவர்களின் ஒரு நாள் - அதாவது…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். https://jvpnews.com/article/popular-playback-singer-jayachandran-passed-away-1736438344
-
-
- 19 replies
- 1.1k views
- 1 follower
-
-
[size=1] ”[size=4]என்னைத் தெரியுமா?,உலகறிந்த உன்னத மக்களிடம் தன்னைப் பற்றி கேட்கிறார் ஒரு படத்தில். அதே பாட்டின் மற்றொரு வரியில் “நான் ரசிகன்... உங்கள் ரசிகன்” என்று சொல்லுகிறார் தன் ரசிகர்களிடம். சுமார் முக்கால் கோடி இளைஞர்கள் செம்மலின் ரசிகர்களாக உலகில் மூலை முடுக்கெல்லாம் இருந்தும் அவர்களிடம் தன்னை ரசிகர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். செம்மல் பெயரில் ரசிகர் மன்றம் துவக்கியவர் கல்யாணம். ஒரு நடிகருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டதே, மக்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்ட செம்மலுக்கே, பிறகு அம்மன்றம் முசிறிபுத்தன் கைக்கு வந்ததும் கல்யாணம் அஸ்திவாரமாகிவிட்டார். புராணப்படி பிரம்மாவுக்கு கோயில் இல்லை. படைப்பவனின் மதிப்பும் அடிப்படையில் தானிருக்கும். …
-
- 2 replies
- 1.1k views
-
-
பட்டம் என்பது நடிகர்களுக்கு - குறிப்பாக தமிழ் நடிகர்களுக்கு - ஹெட்லைட் மாதிரி.அது இல்லையென்றால், இவர்களின் சினிமா வண்டி முன்னோக்கி போகாது. புரட்சி தமிழன், புரட்சி கலைஞர் வரிசையில் விஷாலும் புரட்சி தளபதி என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பரத் வைத்துக் கொண்டது சின்ன தளபதி. இந்த இருவர் வைத்த பட்டங்களும் அரசியல் தளபதி தரப்பையும், இளைய தளபதி தரப்பையும் சூடாக்கின. இந்த பட்டம் மோகம் காமெடி நடிகர்களையும் விடவில்லை. ஆளுக்கு அரைடஜன் பட்டங்கள் இருந்தாலும் புதிது புதிதாக பெயருக்குமுன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'லொடுக்கு' கருணாசின் பெயர் 'சாது மிரண்டா' படத்துக்குப் பிறகு காமெடி கிங் கருணாஸ் என மாறுகிறது. வடிவேலு தனது வைகைப்புயல் பட்டத்துடன் நகைச்சுவை திலகம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், ‘வேணல் கினாவுகல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனரிடம் அஞ்சு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தக…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘எந்திரன்‘ படத்தின் படப்பிடிப்பு பெரு நாட்டில் நடக்க இருக்கிறது. சிவாஜி படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எந்திரன்’ என்று பெயரி டப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு 8-ம் தேதி பெரு நாட்டில் தொடங்குகிறது. இங்குள்ள புராதான மலையான மச்சு பிச்சுவில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக வியாழக்கிழமை ரஜினி, ஷங்கர் உட்பட படக்குழுவினர் பெரு நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். மனிஷ் மல்ஹோத்ரா உடை அலங்காரம் செய்கிறார். ஹாலிவுட் படங்களான மென் இன் பிளாக், பேட்மேன் ரிட்டர்ன்ஸ் படங்களில் பணியாற…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி: நமீதாவை வைத்து அடுத்து படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி சிதம்பரம். ஷக்தியின் சினிமா 'சக்தியாக' நமீதா விளங்குகிறார். அவர் இயக்கும், தயாரிக்கும் படங்களில் நமீதா 'டிபால்ட் பிராப்பர்டி' ஆகி விட்டார். கதை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு நமீதாவுக்கும், ஷக்திக்கும் இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. சமீபத்தில் வெளியான சண்டை படத்திலும் நமீதா நீக்கமற நிறைந்திருந்தார். கரகாட்டக்காரியாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஏற்படுத்திய பதைபதைப்பு இன்னும் கூட போயிருக்காது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி. இதில் நமீதாதான் நாயகி. அதேபோல ஹீரோவாக சுந்தர்.சியையே புக் செய்து விட்டார். இப்படத்திற்கு சுந்தர்.சிக்கு பெரும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கேரளாவின் காசர்கோடுக்கு வந்த கன்னட நடிகையை துரத்தியடித்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அந்த நடிகை ஜெயமாலா! அய்யப்பனை தொட்டேன் என்று கூறி ஆண்டவனையே ஆடம் டீஸிங் செய்த அதே ஜெயமாலா! சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் இளம் பெண்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகளும் வயதான பெண்களுமே அனுமதிக்கப்படுவர். மகளிர் மறைவுப் பிரதேசமான அய்யப்பன் சன்னிதியில், அய்யப்பன் சிலையை தொட்டு வணங்கியதாக பேட்டியளித்தார் ஜெயமாலா. இந்த சின்ன வெடி கேரள அரசியலில் யானை வெடியாக வெடித்தது. ஜெயமாலாவை கைது செய்ய போராட்டம் நடந்தது. தீட்டுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. ஜெயமாலா சொன்ன அய்யப்பன் டச்சிங் வெறும் அல்வா என்பது விரைவில் வெட்ட வெளிச்சமானது. ஆனாலும், கேரள போலீஸ் ஏனோ அவர்மீது நடவடிக்கை எடுக்கவில…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் மும்பை: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் காதல் விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. அபிஷேக் பச்சன் வீட்டில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது. முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் முதலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மானை விட்டு பிரிந்தார். பிறகு விவேக் ஓபராயைக் காதலித்தார். தங்கள் காதலைப் பற்றி பகிரங்கமாக செய்தி வெளியிட வேண்டும் என்று விவேக் கேட்டதால் அவரை விட்டும் ஐஸ்வர்யா பிரிந்தார். அதன் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை…
-
- 0 replies
- 1.1k views
-