வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
குசேலன் படம் நஷ்டம் அடைந்துள்ளதால் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வந்தது. தமிழகத்தில் 375 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. எதிர்பார்த்த அளவு இப்படம் ஓடாததால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்தை கண்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இப்படத்தால் தங்களுக்கு ரூ. 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் என கோரியுள்ளனர். குசேலன் படத்தை…
-
- 0 replies
- 1.4k views
-
-
கர்நாடகாவில் ரஜினிக்கு எதிரான கன்னட அமைப்பினரின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. ரஜினியின் உருவபொம்மையை கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒகேனக்கல் பிரச்னைக்காக தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது கன்னடர்களுக்கு ரஜினி பேசியதாக கூறி, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ரஜினி படம் ஓடிய தியேட்டர்கள் நொறுக்கப்பட்டன. இந்நிலையில், ரஜினி நடித்துள்ள குசேலன் படம் வரும் 30-ம் தேதி ரிலீசாகிறது. கர்நாடகாவில் இப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி கடந்த வாரம் கன்னட ரக்ஷண வேதிகே (பிரவீண்குமார் ஷெட்டி அணி) அமைப்பினர் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர். சித்ரதுர்கா நகரில் உள்ள காந்தி சிலை முன்பு நட…
-
- 0 replies
- 686 views
-
-
குசேலன் படப்பாடல்கள் நினைத்தமாதிரி இல்லை ஏதோ ரஜனிக்காகவே எழுதப்பட்டவை போலவே இருக்கின்றது. . . இதோ பாடலிற்கான இணைப்பு http://www.raaga.com/channels/tamil/movie/T0001326.html கேட்டுவிட்டு கருத்தெழுதுங்கள். யுகபாரதியின் வரிகளில் ஒரு பாடல் சற்று வித்தியாசமான வரிகளாக இருந்தாலும் . . .
-
- 5 replies
- 1.7k views
-
-
குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாய¢மீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வர…
-
- 0 replies
- 767 views
-
-
குடிப்பது போல நடிக்காதீர்கள். அது இளைஞர்களைப் பாதிக்கிறது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தி ஜெயந்தி நாளில் மது கொடுமைகளை நினைவு கூர்வது அவசியம். 16, 18 வயது சிறுவர்கள் உள்பட வயதானவர்கள் வரை இன்று மது அடிமைகளாக உள்ளனர். அதோடு பான்பராக், புகையிலை, கவுச்சி என எங்கும் நாறுகிறது. பள்ளியில் பட்டாணி சாப்பிடும் காலம் போய் பாருக்கு போகின்றனர். சாயா குடிப்பது போய் சாராயம் பழக்கத்துக்கு வந்துள்ளது. கட்சி மாநாடு, ஊர்வலம், சண்டை, பட ரிலீஸ், பண்டிகை, காதல் தோல்வி, கிரிக்கெட் வெற்றி-தோல்வி, மத கலவரம் என எல்லா வற்றுக்கும் குடிக்கிறார்கள். கால்கள் தள்ளாட, கண்கள் மங்க, இருமல், மண்டைக்கேற, சிறுநீரகம் சேதமாக, கணையம் வீங்…
-
- 0 replies
- 817 views
-
-
http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-family-converts-christian-193437.html அதில் ஒரு கமெண்ட் 1980 ல நான்தாண்டா மாஸு இப்போ எனக்கு புடிச்சது ஏசு எப்பவுமே புடிச்சது காசு... சிம்பு மேல போடுவாங்க அடிக்கடி கேசு இனிமே என் கிட்ட பாத்து பேசு நான் இப்போ திமூகாவில ஊறிட்டேன் லதிமுகா ஆரம்பிச்சி நாறிட்டேன் பெருமை கிடைக்க பலபேர் காலை வாரிட்டேன் கடைசியா கிறிஸ்துவத்துக்கு மாறிட்டேன் மக்களே இதை நான் தெளிவா உங்களுக்கு கூறிட்டேன் ஏ டண்டணக்கா இல்ல இல்ல ஏ அல்லேலூயா அல்லேலூயா
-
- 37 replies
- 5.6k views
-
-
குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க சன் பிக்சசின் புதிய தயாரிப்பு குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க நடிகர ஆ.ராசா நடிகை கனிமொழி இணை இயக்குநர் ஸ்ராலின் ஸ்டண்ட் அழகிரி காஸ்ட்யூம் தயாநிதி மீடியா கலாநிதி இயக்குநர் கருணாநிதி தயாரிப்பு மக்கள் நிதி. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து
-
- 4 replies
- 1.7k views
-
-
’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம். ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கி…
-
-
- 16 replies
- 778 views
-
-
குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி. பெங்களூர்: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என நடிகையும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ரம்யா கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போ…
-
- 8 replies
- 1.7k views
-
-
குட்பை சில்ட்ரன் - உலக சினிமா அது இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம். ஜூலியன் குவிண்டன் என்கிற பதினோரு வயது சிறுவன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்துவிட்டு, திரும்பவும் விடுதியுடன் கூடிய தனது பள்ளிக்கு செல்ல ரயிலேறுகிறான். ஆனால் வேண்டா வெறுப்பாக இருந்த அவனை, அவனுடைய அம்மா மேடம் குவிண்டன் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறாள். பள்ளிக்கூடம் இருப்பது பிரான்ஸ் நாட்டில்! ஆனால் அந்தப்பகுதி ஹிட்லரின்நாஜிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. சிறுவன் பள்ளிக்கு வந்து சேருகிறான். வகுப்புகளும் துவங்குகின்றன. அச்சமயத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் புதிதாக நான்கு சிறுவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். அவர்களில் ஒருவன்தான் ழான் பானட் (lean bonnet) என்கிற ஜூலியனின் வயதையத்த …
-
- 0 replies
- 649 views
-
-
குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்! தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார். கங்கை அமரனின் 'கரகாட்டகாரன்' படத்தில் கனகாவின் தந்தையாக நடித்தவர் சண்முகசுந்தரம். 77 வயதான இவர் சிவாஜி முதல் ஜி.வி.பிரகாஷ் குமார் வரை பலருடனும் நடித்துப் பெயர் வாங்கியவர். 'சென்னை 28', 'கோவா', 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சாலிகிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தார். சிறிது நாள்களாகவே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், தனது வீட்டில் இன்று காலமானார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் கடைசியாக சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத…
-
- 7 replies
- 476 views
-
-
குணச்சித்திர நடிகர் பாலு ஆனந்த் திடீர் மரணம் கோவையை சேர்ந்த திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான பாலு ஆனந்த், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காகப் பிறந்தேன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். இன்றைய தலைமுறைக்கு நடிகராகவும் அறிமுகமானவர் பாலு ஆனந்த். 'வானத்தைப் போல', 'உன்னை நினைத்து' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். கோவையை அடுத்த காளம்பாளையத்தைச் சேர்ந்த பாலு ஆனந்த், இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் உதவியாளராக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார். ஆர்.சுந்தர்ராஜனிடம் …
-
- 0 replies
- 673 views
-
-
-
- 4 replies
- 263 views
- 1 follower
-
-
சிலருக்கு ‘அபிராமி' எனும் காரணத்தால், சிலருக்கு 'கமல்' எனும் காரணத்தால், சிலருக்கு ‘ரோஷினி' எனும் காரணத்தால், சிலருக்கு 'மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல' எனும் காரணத்தால்... இப்படி, நம்மில் பலருக்கு வெவ்வேறு காரணங்களால், ‘குணா' திரைப்படம் நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்! 90-களின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய உத்வேகத்தைத் தந்த காலம். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதைகளுடன் பல இயக்குநர்கள் வந்தனர். அந்தக் கதைகளுக்காக நாயகர்களும் தங்களின் ‘ஸ்டார் வேல்யூ' பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிக்க ஆரம்பித்தனர். அந்தக் கணக்கை கமல் ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னால் அதில் மிகையில்லை. மனநலம் பிறழ்ந்த நாயகன், …
-
- 0 replies
- 433 views
-
-
குண்டான கீர்த்திசுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்ற பெயரில் திரைப்படமாக தெலுங்கில் எடுத்து வருகின்றனர். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் மூன்று மொழிகளில் “மகாநதி” திரைப்படம் வெளியாக உள்ளது. மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சாவித்திரியிடம் பேட்டி எடுப்பதன் மூலம் அவரது கடந்த காலத்தை ப்ளாஷ்பேக்கில் கொண்டு வருவதற்கு உதவும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்…
-
- 0 replies
- 344 views
-
-
ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 816 views
-
-
மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலு.. ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ என்ற முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார்.. முதல் கட்டப்படப்பிடிப்பில் மன்னர் குதிரையில் நகர்வலம் வருவது, குதிரையில் பயணம் செய்வது, போரில் பங்குபெறுவது, பாடல்காட்சியில் குதிரையில் வருவது போன்ற பல காட்சிகளை தேனியில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். See more at: http://vuin.com/news/tamil/vadivelu-beaten-by-a-horse
-
- 0 replies
- 450 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SuuypjzzqRw#at=55 ஆட்டத்துக்கு நல்ல பாட்டு!!! அர்த்தமில்லா குத்துப்பாட்டு!!! யாரும் பொழிப்புரை எழுதத் தேவையில்லை. அவங்களே எழுதிட்டாங்க!!!!
-
- 1 reply
- 688 views
-
-
நண்பர் செந்தில் தான் புதிதாகத் துவங்க இருக்கிற மின்னிதழுக்காக பொறுப்பான வேலையொன்றைத் தந்து செய்துதரச் சொன்னார். அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன். ஆகவே “பொறுப்பற்ற வேலையொன்றை“ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன்.அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்டுரை. அவற்றுடன் இடையறாத புழக்கத்தில் இருப்பவன் என்பதால் சொந்த மண்ணில் சதமடித்து விட்டு ஸ்டைலாக மட்டையைத் தூக்கிக் காட்டிக்கொள்ளலாம் என்பது என் தந்திரமாக இருந்தது. ஆனால் “தகதக தகதக வென ஆடவா… “ , “சித்தாடை கட்டிக்கிட்டு…” எனத் துவங்கி “ வா மச்சா ..வா வண்ணாரப்பேட்டை…” , “பல்ல இளிக்கிறவ.. தொல்ல கொடுக்குறவ ..” என சுற்றித்திரிந்து “ டாங்காமாரி ஊதாரி…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
குபேரா : விமர்சனம்! 20 Jun 2025, 6:11 PM ஹீரோயிசம் காட்டுவது நாகார்ஜுனாவா, தனுஷா? ’ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே தன்னால தீப்பிடிக்கும்’ என்று கதை சொல்கிற தெலுங்கு மசாலா பட இயக்குனர்களில் இருந்து நிறையவே வேறுபட்டவர் சேகர் கம்முலா. இவரது திரைப்படங்களில் ஹீரோயிசம் ‘அதீதமாக’த் தென்படாது. அதேநேரத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை நகர்த்துவதில் பெயர் பெற்றவர். இப்படியொரு இயக்குனரின் கையில் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இரண்டு நாயகர்கள் கிடைத்தால் என்னவாகும்? அவர்களில் ஒருவர் சீனியராகவும் இன்னொருவர் ஜுனியராகவும் இருந்தால் கதை சொல்லலில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்? அப்படியொரு படமானது முழுக்க இயக்குனரின் பாணியில் அமையுமா அல்லது வழக்கமான ‘கமர…
-
- 0 replies
- 129 views
-
-
. குமாரசாமிதான் என் கணவர் - நடிகை குட்டி ராதிகா பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி என்னைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது எனக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது, என்று கன்னட நடிகை குட்டி ராதிகா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் குமாரசாமி. இந்த நிலையில் அவரது கேரக்டருக்கே பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடி பேட்டி. இயற்கை படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. அடிப்படையில் இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று இவர் க…
-
- 22 replies
- 3.5k views
- 1 follower
-
-
துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த பின் இனி எப்ப ஓரளவுக்கேனும் நல்ல தமிழ் படம் பார்க்கலாம் என்று இருந்த எனக்கு கும்கி படம் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. இன்று TMT இணையம் மூலம் கும்கி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சினிமாத்தன காட்சிகள் தவிர்ந்த (கிளைமாக்ஸில் யானைக்கு கிடைக்கும் முடிவு) மிச்ச காட்சிகள் எல்லாம் அப்படியே மனசை அள்ளும் காட்சிகள். தமிழகத்தின் காடுகளுக்குள் இன்றும் மரணித்துப் போகாமல் இருக்கும் மனிதர்களின் இயற்கையுடனான பின்னிப் பிணைந்த வாழ்க்கையையும், அவர்களின் நம்பிக்கைகளையும் அதை அவர்கள் காப்பாற்ற முயலும் முரட்டுத்தனத்தையும் அழகாக காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவில் யானையை இந…
-
- 57 replies
- 4.7k views
-
-
குயில்களின் சொந்தக்காரி மப்றூக் இந்திய பின்னணிப்பாடகி பி.சுசீலா ஒரு தடவை தெலுங்குத் திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்றுசேர்ந்து இசையமைக்க, பாடலைப் பாடகர் முழுமையாகப் பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுவே அப்போதிருந்த முறைமையாகும். சுசீலாவைப் பாட வைக்கும் இசையமைப்பாளர் வந்திருந்தார். பாடல் இடம்பெறும் திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சுசீலா பாடப்போகும் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் என்று அனைவரும் ஒலிப்பதிவு செய்யுமிடத்தில் கூடியிருந்தனர். இசையமைப்பாளர்…
-
- 0 replies
- 383 views
-
-
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…
-
- 1 reply
- 835 views
-