ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
சுமந்திரனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு – மன்னாரில் மாவீரர் தின தடை உத்தரவு நீடிப்பு! by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/11/DSC_0600-720x450.jpg ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தினது தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன…
-
- 0 replies
- 342 views
-
-
தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வர திட்டம் கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு – குறிப்பாத தமிழகத்திற்கு சென்றிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட கொறோனா பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக சுமார் 1500 பேர் வரையில் தமிழகத்தில் அவதிப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் குறித்த அறிவிப்பு வெளி…
-
- 0 replies
- 432 views
-
-
வீடுகளிற்கு முன்பாக ஒளிதீபம் ஏற்றுங்கள்- மயூரன் மக்களிடம் கோரிக்கை by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/11/theepam.jpg வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்குமாறு முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாவீரர் தினத்தினை நடாத்துவதில் ஏற்ப்படுத்தப்படும் தடைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் விதத்தில் பேரினவாத அரசு, நீதிமன்றத்தின் ஊடாகவும் படையினர் ஊடாகவும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது. …
-
- 0 replies
- 345 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றுவதை மகிந்த விரும்பவில்லை –மகிநத சமரசிங்க Rajeevan Arasaratnam விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் பகுதியில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றும் முக்கிய நாடொன்றின் வேண்டுகோள்களை அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்ச நிராகரித்தார் என நாடாளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் விவகாரத்திற்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். உலகின் பலம்வாய்ந்த நாடொன்றின் தூதுவர் தலைமையிலான வெளிநாட்டு தூதுவர்கள் குழு ஜனாதிபதி ம…
-
- 3 replies
- 671 views
-
-
மாவீரர் கனவு நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டங்களை தடுக்க முடியாது... தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர்…
-
- 0 replies
- 845 views
-
-
ஆளும் கட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை பாராளுமன்றில் திட்டுவோம்! இப்படியா மக்களிடம் வாக்கு கேட்டீர்கள்? – இராஜாங்கஅமைச்சர் வியாழேந்திரன் சீற்றம் November 22, 202012:43 pm (செங்கலடி நிருபர்) நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளைஅபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசசெயலாக பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை புனித வளனார் பிரதான வீதியானது 1 கி.மீ கிராமிய கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் ஆரம்பநிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.மதகுருமார், மாவட்ட வீதி அபிவிருத்திஅதிகாரசபை பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் குறித்தநிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.இதன் போது கருத்து…
-
- 0 replies
- 369 views
-
-
திவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்க வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது. http://athavannews.com/திவிநெகும-நிதி-மோசடி-பசி-3/
-
- 0 replies
- 347 views
-
-
தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம் தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதாவது தீவகப் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்துவசதிகளை அதிகரித்து அபிவிருத்திக்கான அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் ஊர்காவற்துறை – காரைநகருக்கு இடையிலான பாலத்தினை அமைப்பதற்கும், அராலி – குறிகட்டுவான் இடையிலான வீதியை கார்ப்பெட் வீதியாக மாற்றுவதற்குமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 30 கிலோ மீற்றர் நீளமான அராலி – குற…
-
- 3 replies
- 475 views
- 1 follower
-
-
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காணாமல் ஆக்கப்படுதலை முடிவுக்குகொண்டு வருக: அமெரிக்காவில் தீா்மானம்.! இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாக ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பிராட் ஷெர்மன் மற்றும் ஜேமி ரஸ்கின் ஆகியோர் சபையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பில் நீதி கோரியும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும் 1,300 நாட்களுக்கு மேலாகப் போராடிவரும் காணாமலாக்கப்பட்டோர் உறவுளின் போராட்டம் குறித்தும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தி அரச படைகள் மற்றும் ஏனைய தரப்புக்களின் அச்சுறுத்தல்களையும் துன…
-
- 0 replies
- 786 views
-
-
மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள்- சாள்ஸ் நிர்மலநாதன் – காணொளி மன்னார் நிருபர் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்த…
-
- 2 replies
- 428 views
-
-
கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை கிறிசாந்தினி கிறிஸ்டொபர்- சண்டே டைம்ஸ் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் - டக்லஸ் தேவானந்தா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்புரவு செய்ய தயாரில்லை என கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை ப…
-
- 9 replies
- 1.7k views
-
-
கோப்பாயில் மாவீரர் நாள் கடைப்பிடிக்க துப்பரவு செய்த காணியை ஆக்கிரமித்தது இராணுவம் கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் கடைப்பிடித்த காணியில் இராணுவம் திடீரென முகாம் அமைத்து அப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதி இராணுவத்தினரின் நிரந்தர இராணுவ முகாம் உள்ளமையால் அதன் அருகில் உள்ள ஒரு காணியில், துயிலும் இல்ல மாதிரி அமைத்து ஆண்டுதோறும் மாவீரர்களை அஞ்சலித்த நிலையில், இந்த ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு துப்பரவு செய்யப்பட்ட காணியில் இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நி…
-
- 0 replies
- 377 views
-
-
மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்… November 21, 2020 கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையில் கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ள முடியாதா பேரினவாதிகள் கூச்சல் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன் தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால், கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கிற்காக முன்னிலை…
-
- 3 replies
- 1k views
-
-
கோட்டா ஆட்சியில் இருக்கும் வரைக்கும் மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை! - ஆளுங்கட்சி திட்டவட்டம்.! கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும்வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது." - இவ்வாறு ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- "சில தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாய…
-
- 4 replies
- 626 views
-
-
பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்! போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நேற்று(20) நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு, https://newuthayan.com/பிரசாத்-பெர்னாண்டோவை-பிட/
-
- 15 replies
- 1.7k views
-
-
மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல் 26 Views தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் – மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு வடமாகாணசபை அவைத்தலைவர் சிவிகே சிவஞானம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் சிவிகே சிவஞானம், உதயன் பத்திரிகை குழும தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்கினேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பாக…
-
- 1 reply
- 407 views
-
-
கொரோனா: தமிழரின் வாழ்வியலில் தடுப்பு முறைகள் இயல்பாகவே உள்ளது 39 Views நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. எல். எம். நக்பரின் சிந்தனையில், முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தலைமையிலான நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கூட்டு முயற்சியில் கொரோனா தொற்று பரம்பலுக்கு எதிரான விழிப்பூட்டல் நிகழ்வு பாண்டிருப்பில் நடைபெற்றது. நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கல்முனை செயற்பாட்டாளர் அ. கமலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் கல்முனை வடக்கு பிரிவு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ், பாண்டிருப்பு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. ஆர். அப்துல் ஹாபில், வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ எம்…
-
- 0 replies
- 499 views
-
-
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்…
-
- 47 replies
- 6.2k views
- 1 follower
-
-
கல்முனை பிரதேச செயலகம் பற்றி மு.கா.தலைவர் ஹக்கீம் November 21, 2020 இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையின் பின்னர் சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய கட்சிகளும் இணைந்து பிரதேச செயலக விவகாரத்தில் முடிவுக்கு வருவது தான் சாலச் சிறந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது வெள்ளிக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்…
-
- 2 replies
- 974 views
-
-
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசனிற்கு தமிழரசுக்கட்சி வாழ்த்து பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட வானதி ஸ்ரீனிவாசனிற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வட.மாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக முன்னெடுத்த நீண்டகால விடுதலைப் போராட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக பெண்களே உள்ளனர்.எமது மக்களிற்கான, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுடைய மறுவாழ்விற்கு தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கையை எதிர்பார்த்தவர்களாக நாம் உள்ளோம்.அத்தோடு இலங்கை தமிழ் மக்களின் அரசியல…
-
- 2 replies
- 632 views
-
-
அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன் November 21, 2020 இலட்சியத்திற்காக பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “விடுதலைப் புலிகளில் இருந்து மரணித்த வீர மறவர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர் வரும் 27 ஆம் திகதி இடம் பெற இரு…
-
- 0 replies
- 400 views
-
-
சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்றிரவு (20.11.2020) மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் வாயிற்கதவிலிருந்த பாம்பு ஒன்று, அவரின் கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டதையடுத்து, அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/94876
-
- 52 replies
- 6.3k views
-
-
அம்பாந்தோட்டையில் சீனா பாரிய முதலீடு – புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது 36 Views உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென்ஹொங் ஆகியோர் காணொளி மூலம் இணைந்…
-
- 2 replies
- 1k views
-