ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143306 topics in this forum
-
சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் - எம்.கே.சிவாஜிலிங்கம் சிங்கள் பெளத்த ஆட்சியினுடைய உக்கிரமான நிலைப்பாடுதான் 20 வது திருத்த நிறைவேற்றம் எனத் தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் இனப் பிரச்சினைக்கான தீர்வை நேக்கிய பயணத்தை ஒன்றிணைந்து மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137024/1528444377-m-k-sivajilingam-hospitalised-5.jpg 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 20 ஆவது தி…
-
- 0 replies
- 419 views
-
-
20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 20ஆவது அரசியலமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்…
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும். “இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.” இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:- “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறுவது ஆரோக்கியமான செயற்பாடாகும். …
-
- 3 replies
- 1.3k views
-
-
சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் தான் கடத்தப்பட்டதாக, போலியான ஆதாரங்களை உருவாக்கியதாக, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சுவிஸ்-தூதரக-ஊழியருக்கு/
-
- 0 replies
- 437 views
-
-
நாட்டை முடக்குவது குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் இராணுவத்தளபதி! நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெளிவு…
-
- 0 replies
- 303 views
-
-
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு 44 Views வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர…
-
- 0 replies
- 401 views
-
-
சிறீதரன் எம்பியை பேசவிடாமல் குறுக்கே பேசிய சிங்கள எம்பிக்கள்
-
- 0 replies
- 621 views
-
-
இம் மாதம் 19 ஆம் திகதி முதல் கிழக்குக் கடலில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்ற இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2020 நேற்றைய தினம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. எட்டாவது முறையாக நடைத்தப்பட்ட இந்த இருதரப்பு கடற்படை பயிற்சியின் இலங்கை கடற்படையை பிரதிநிதித்து இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு மற்றும் 'சயுர' ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் பங்கேற்றதுடன் இந்திய கடற்படையை பிரதிநிதித்து ஐ.என்.எஸ் கமோர்டா மற்றும் ஐ.என்.எஸ் கில்டான் கப்பல்கள் ஹெலிகாப்டர்களுடன் பங்கேற்றன. இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டு கடற்படை நடவடிக்கை பயிற்சிகள் மூலம் அனுபவங்களை பரிமாறிக்கொள…
-
- 1 reply
- 479 views
-
-
நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தனி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நுறு இருநூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்நிலையில், வைத்தியசாலைக் கட்டமைப்பில் பாரிய நெரிசல் ஏற்படுகின்றது. எனினும், அதிர்ஷ்டவசமாக இன்னும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு உட்படுத்துவதற்கான தேவை ஏற்படவில்லை. கொரோனா தொற்றாளருக்கு 24 மணித்தியாலத்திற்குள் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டு பரிசோதனைகளிலும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டா…
-
- 1 reply
- 405 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பு அடிப்படையில் பிரிட்டன் அரசும் மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் பிரதிநிதிகள், சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும்.…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
அதிக கஷ்டப் பிரதேசமான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தானை அக்குறாணை கிராமங்களில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு குடி நீரை வழங்கும் வகையில் 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார். “அருவி” பெண்கள் வலையமைப்பின் சமூக அபிவிருத்திக்கான சுமார் 7 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்தக் கிணறு அமைப்புப் பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடினமான கற்பாறைகளைக் குடைந்து வெடி வைத்துத் தகர்த்து சுத்தமான நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் 16 அடி விட்டத்தில் இந்தப் பாரிய கிணறு அமைக்கப்படவுள்ளது. …
-
- 3 replies
- 886 views
- 1 follower
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 20ஆவது திருத்தச் சட்டத்தால் ஜனாதிபதியிடம் பாராளுமன்றம் மண்டியிட்டுள்ளதுடன் , நாடு சர்வாதிகார திசையை நோக்கியே நகருமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஏற்படும் பாதகத்தன்மை பற்றி கடந்த காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் பேசினர். அதனை அடிப்படையாக கொண்டுதான் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார்கள். 19ஆவது திருத்தத்தில் சர்வாதிகார போக்குடைய ஜனா…
-
- 1 reply
- 327 views
-
-
பாதுகாப்பு அங்கி அணிந்து பாராளுமன்றம் வந்த ரிஷாட்! விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல் நில…
-
- 3 replies
- 788 views
-
-
கொவிட் 19 தாக்கங்கள் காரணமாக பதுளைக்கு வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 25 பேர், மீண்டும் தத்தமது நாடுகளுக்கு செல்லமுடியாமல்,பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். மீளவும் தத்தமது நாடுகளுக்கு செல்லமுடியாமல், பதுளைப் பகுதியின் எல்ல சுற்றுலா பிரதேச ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களிடமிருந்த பணமும் செலவாகியதினால், பெரும் பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் அன்றாட செலவுகளுக்கும் பணம் இல்லாதுள்ளன. குறிப்பிட்ட வெளிநாட்டாரிடம் பணம் இல்லாததால், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவ் ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. செய்வதறியாமல் நடுத்தெருவில் இருந்துவரும் இவ்வெளிநாட்டு உல்லாசபிரயாணிகளை, எல்லப்பகுதியில் “சீல்”விடுதியிலும்,பிறித…
-
- 0 replies
- 353 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளை ஊக்குவித்தல் என்னும் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் மேற்கொள்கின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை அரசுக்கு மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா-மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் பகீரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை (22ம் திகதி பிற்பகல்) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 40வீதம் தமிழர்கள், 37வீதம் முஸ்லிம்கள், 23வீதம் சிங்களவர்கள் உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதம் தமிழர்கள், 23வீதம் முஸ்லிம்கள், அண்ணளவாக (1.10) சிங்க…
-
- 0 replies
- 265 views
-
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேகத்திடமான வாகனம் மீட்பு 16 Views உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலுள்ள நபரொருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ‘வான்’ மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினால் இன்று அட்டானைச்சேனை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் சந்தேகத்தின் பேரில், 2019 ஏப்ரல் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, மொனராகலை சிறைச் சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த ‘வான்’ மீட்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு குறி…
-
- 0 replies
- 166 views
-
-
முன்னாள் வன்னி எம் பி காலமானார் முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று (22.10.2020) மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது. கே.பாலச்சந்திரன் 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே. பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார் வவுனியாவில் வசித்து வந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தகாலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டிருந்தார் 1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். https://www.virakesari…
-
- 1 reply
- 485 views
-
-
அமெரிக்க கொடியுடன் நளின் உரை A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 03:23 சபைக்குள் அமெரிக்க கொடியை தூக்கி காண்பித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான நளின் பண்டார உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான இறுதிநாள் விவாதம், நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அதில், நளின் பண்டார எம்.பி, தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போதே, அமெரிக்காவின் கொடியை காண்பித்து, உரையாற்றிகொண்டிருக்கின்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமரகக-கடயடன-நளன-உர/175-257294
-
- 0 replies
- 749 views
-
-
’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.! அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.” இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று இணைய வழி மூலம் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார். கேள்வி:- 20ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா ஏதேனும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதா.? பதில்:- 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது. இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளின்…
-
- 1 reply
- 479 views
-
-
உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்திக்கொள்ளாதீர்கள் - சீ.வி.விக்னேஸ்வரன் (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது. எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் ந…
-
- 0 replies
- 469 views
-
-
அரசாங்கத்துக்குள் வலுக்கின்றது மோதல்- விமலை தாக்க முயன்றார் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் Rajeevan Arasaratnam October 22, 2020அரசாங்கத்துக்குள் வலுக்கின்றது மோதல்- விமலை தாக்க முயன்றார் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்2020-10-22T00:04:52+05:30 FacebookTwitterMore பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கட்டகொட அமைச்சர் விமல்வீரவன்சவை தாக்க முயன்றார் என தேசிய விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. 20வது திருத்தம் குறித்த கருத்துவேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை குறித்து காணப்படும் விடயம் குறித்து தனது கட்சியான தேசிய விடுதலை முன்னணி அதிருப்…
-
- 1 reply
- 478 views
-
-
ரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டது எப்படி ? இதுவரை வெளிவராத புதிய தகவல்கள் Rajeevan Arasaratnam நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார். அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன் தொடர்பைப் பேணுகின்றார், அவருடன் யார் யார் உள்ளனர்? அவர் எங்கு மறைந்திருக்கின்றார் என்ற விடயங்கள் எவருக்கும் தெரியாதவையாக காணப்பட்டன. இந்தக் கள்ளன்- பொலிஸ் விளையாட்டிற்குக் காரணம் ரிசாத் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதேயாகும். ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு? பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் இதுவரை காலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ மாளிகைகளில் வசித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் விஜேராமா மாளிகையிலும், தற்போதைய பிரதமர் என்ற வகையில் அலரி மாளிகையிலும் மஹிந்த ராஜபக்ச, அவரது மக்களின் திருமண சம்பந்திகள் குடும்பம் என எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பமாக, இரண்டு மாளிகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இருப்பினும், சமீபத்தில், மஹிந்த குடும்பம் அலரி மாளிகையை விட்டு, விஜேராமா மாளிகைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆனால் அவரது மூன்றாவது மகன் றோஹித, மனைவி, மனைவியின் பெற்றோரின் குடும்பம் ஆகியோர் விஜேராமாவுக்கு குடிபெ…
-
- 7 replies
- 1.3k views
-
-
இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Vasudeva-Nanayakkara.jpg நாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “ஜனநாயகம் தான் இன்று முக்கியமாகக் காணப்படுகிறது. எனினும், உலகில் எந்தவொரு நாட்டிலும் முழுமையான ஜனநாகம் இல்லை என்றே கூறவேண்டும். …
-
- 3 replies
- 709 views
-
-
கொரோனா தொற்றினை தடுக்க முகக்கவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது, டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்யவேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது, நேற்று மாத்திரம் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாசையூர் ,சுழிபுரம் சுன்னாகம், அரியாலை மற்றும் கோப்பாய் பகுதியை…
-
- 0 replies
- 301 views
-