ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
விக்னேஸ்வரன் ஒரு பண்பாட்டுத் தோற்றத்தோடு இனமொழி அடையாளத்தோடு நாடாளுமன்றத்தில் தோன்றி ஆற்றி வரும் உரைகள் ஆழமானவை, காரமானவை, அதேநேரம் செறிவானவை என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோரின் நாடாளுமன்ற உரைகள் சிங்கள இனவாதிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக விக்னேஸ்வரனின் தோற்றத்துக்கு அந்த இடத்தில் ஓர் பண்பாட்டு பொலிவும், அரசியல் அழுத்தமும் இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் அவருடைய திருநீறையும் சந்தனப் பொட்டையும் விமர்சிப்பதுண்டு. அந்த மதச் சின்னங்கள் அவரை கிறிஸ்தவ வாக்காளர்களிடம் இருந்து விலக்கி வைக்கின்றன என்று ஒரு அவதானிப்பு உண்டு. …
-
- 8 replies
- 880 views
-
-
த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் எனக் குற்றச்சாட்டு – வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி பறிபோகலாம்? வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவியைத் துஷ்பிரயோகம் செய்கின்றார் எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. வட மாகாணத்தில் ஆளுனர் சார்ள்ஸ் செய்த பணிகளை முன்னிட்டு தற்போதய அரசு அவருக்கு இப் பதவியை வழங்கியிருந்தது. இருப்பினும், பதவியேற்றதிலிருந்து இப் பிரதேசத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் காத்திரமாக எதையும் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆளுனர் சார்ள்ஸ், பல விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார் என ஆளும் கட்சிக்குச் சார்பான அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றமைய…
-
- 0 replies
- 353 views
-
-
யாழ். சிறுமியின் நேர்மையான செயல்! குவியும் பாராட்டுக்கள் யாழில் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியில் கண்டெடுத்த தங்க நகையை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் ஜெகதீஸ் ஜெகதீபா என்ற 12 வயதுச் சிறுமியே இவ்வாறு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மறவன்புலோ மேற்கு பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் நகைப் பெட்டி ஒன்றினை அவதானித்துள்ளார். சிறுமி அதனை திறந்து பார்த்த போது அதனுள் மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் சங்கிலி ஆகியன இருந்துள்ளன. இருப்பினும் சிறுமி அதனை அச்சத்தில் வீட்டுக்கு கொண்டு செல்லாமல் அவ்விடத்திலே…
-
- 8 replies
- 738 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்! ஆகஸ்ட் 30ம் திகதியன்று, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கில் கவனயீர்ப்பு முன்னெடுக்கவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சண்முகம் சரோஜினி தெரிவித்தார். வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “வடக்கில், யாழ். பஸ் நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு எ ஐ.நாவுக்குக் கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம். அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையள…
-
- 39 replies
- 4.5k views
- 1 follower
-
-
20 ஆவது திருத்தச்சட்டம்: உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அதிக நீதியரசர்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிக நீதியரசர்களை நியமிப்பதற்கான திட்டங்களும் இருக்கும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஹலி-எல பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நடவடிக்கையின் நோக்கம் தாமதப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சரவை உபகுழு,19 ஆவது திருத்தம் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்கும், எந்த பிரிவுகளை வைத்துக் கொள்ள வேண்ட…
-
- 1 reply
- 849 views
-
-
(எம்.மனோசித்ரா) மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்புக்களில் கலந்து கொள்ளவும் முடியாது என்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக அழைத்து வருமாறு சபாநாயகரினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது குறித்தும் வாக்களிப்புக்களில் பங்குபற்றுவது குறித்தும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சினால் கோரப்பட்டிருந்த ஆலோசனைக்கமையவே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது…
-
- 3 replies
- 495 views
-
-
வடக்கு மாகாண விவசாயத்திற்கு ராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட இராணுவ கட்டளைத் தளதி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில். வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக நலநோம்பு திட்டங்கள் பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அத்தோடு ராணுவத்தினரால் பிரதானமாக பாதுகாப்பு நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கினை பொறுத்தவர…
-
- 4 replies
- 471 views
-
-
மலையக மக்கள் முன்னணியில் இருந்து, அனுசா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டார்… August 31, 2020 மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலும் இருந்தும் பிரதி பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அனுசா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். (31.08.2020) அன்று அட்டன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி இந்த கருத்தை வெளியிட்டார். மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையி…
-
- 3 replies
- 417 views
-
-
(நா.தனுஜா) காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான பதிலைப் பெற்றுக்கொடுப்பதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவையாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, அத்தகைய கட்டமைப்புக்களை வலுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச காணாமல்போனோர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் காணாமல்போனோரின் உறவினர்களுடனான தமது ஒருமைப்பாட்டை இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வெளிப்படுத்தியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு…
-
- 1 reply
- 408 views
-
-
கனடாவுக்கு விசா - தெற்கே நூதன மோசடி கனடாவுக்கு போக விசா பெற்றுத் தருகிறோம் என்று இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளனர். அதனைப் பார்த்து ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தவர்களிடம் நன்கு பேசி, அவர்களது பாஸ்போட் காப்பிகளை வாங்கி வைத்துக் கொண்டு, உங்கள், உங்கள் பெயரில் வங்கிக்கணக்கிணை ஆரம்பித்து, ஜம்பது இலட்சம் பணத்தை போட்டு வையுங்கள். அதனை காட்டி விசா பெற்று தருவோம். அதன் பின் நீஙகள் அதனை மீளப்பெற்றுக் கொண்டு, கனடா கிளம்பலாம் என்று சொல்லியுள்ளனர். அடடே, பரவாயில்லையே, நல்ல டீல் தானே என்று, பணத்தை கை மாத்தாகவும் வாங்கி, சேமிப்பில் இருந்தும் போட்டு, ஸ்ரேட்மன்ரை அனுப்பி விசாவுக்காக காத்திருக்க... பாஸ்போட், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை உட்பட சகல வேறு விபரங்கள் இவர…
-
- 2 replies
- 626 views
-
-
(நா.தனுஜா) புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு செயன்முறைகள் நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், இதன் காரணமாக வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை உரிய வேளையில் திருப்பிச்செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடுமையாகச் சாடியிருக்கிறார். கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடி நிலையைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மிகப்பாரிய பின்னடைவைச் சந்திக்கும் நிலையேற்பட்டிருக்கிறது. அதேவேளை கடந்த 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட…
-
- 0 replies
- 385 views
-
-
கதிர்காமத்தின் புனிதத்தினை கெடுக்கும் தற்காலிக பசநாயக நிலமே சில வருடங்களுக்கு முன்னர், கண்டியில் உள்ள, ஹோட்டல் ஒன்றுக்கு இரு இளம் பெண்களுடன் வந்த அந்த இளைஞர் மூன்று பேருக்கும் ஒரு சிங்கள் ரூம் வேண்டும் என்று அடம் பிடித்தார். நிர்வாகம் மறுக்கவே, தான் மகிந்தா ராஜபக்சேவின் மகன் என்று சொல்லி, அந்த நிர்வாகத்தினை இணங்க வைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் புனித கதிர்காம முருகன் ஆலயத்துக்கு, தற்காலிக பசநாயக நிலமேயாக நியமனமானார். அவருடைய அருவருக்கத்தக்க செயல் பாடுகள் காரணமாக, புனித கதிர்காம பிரதேசம், தனது புனிதத்தினை இழந்து நிற்கின்றது. ஆலயத்தின் நிருவாகத்தில் உள்ள ஒருவர் தனது அடையாளத்தினை வெளியிடாமல், தனது கவலையினை தெரிவித்துள்ளார். தற்க…
-
- 0 replies
- 511 views
-
-
இந்தியாவே சிறீலங்கா அரசியலை அடிக்கடி மாற்றியது – கொலம்பகே முன்னர் ரணில் அரசை ஆதரித்த இந்தியா, பின்னர் கோத்தபாயவை ஆதரித்தது, பூகோள அரசியல் நெருக்கடிகளால் இந்தியா தனது முடிவை அடிக்கடி மாற்றயதாக சிறீலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் கடற்படை தளபதியுமான அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்த ராஜபக்சா அரசு சீனாவின் பக்கம் செல்லும் நிலைகண்டு பதறிய இந்தியா 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது. ஆனால் புதிய அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு வழங்கியதை தொடர்ந்து இந்தியா மீண்டும் கோத்தபாயாவை ஆதரித்தது. சிறீலங்காவின் …
-
- 0 replies
- 387 views
-
-
-
- 0 replies
- 397 views
-
-
கிழக்கின் பலம் நாம் மட்டுமே – வியாழேந்திரன் இறுமாப்பு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கிழக்கு தமிழர்களுக்கான ஒரே ஒரு பலமான குரல் நாம் மாத்திரமே என்பது எமது மக்களுக்கு நன்றாக தெரியும் என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் துறைநீலாவணையில் இன்று (29) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார். அங்கு மேலும், “2015ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் போதே நாங்கள் முற்போக்கு தமிழர் அமைப்பு என்று சகல போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அது அனைவருக்கும் தெரியும், அதனால் தான் எமது மக்கள் இம்முறை கட்சியை பார்க்காமல் எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றி பெறச் செய்து மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பி வைத்துள்ளார்கள். கடந்த காலங்கள…
-
- 1 reply
- 554 views
-
-
தனிப்பட்ட தேவைக்காக அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடு 2015 க்கு முந்தைய காலத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு குடிமக்களின் உரிமைகளை வலுப்படுத்தவே அரசியலமைப்பு திருத்தம் தேவை என்றும் ஒரு நபரின் நலனுக்காக மாற்றங்கள் செய்யப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார். 20 வது திருத்தம் புதிய நபர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்…
-
- 0 replies
- 491 views
-
-
கெஹலியவின் கருத்து தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்துவரும் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு – யஸ்மின் சூக்கா காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் காணாமற் போனவர்களில் அரைவாசிப்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றார்கள் என அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக அவரிடம் முறையான விளக்கம் கோரப்பட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார். மேலும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது கு…
-
- 0 replies
- 275 views
-
-
“ஆவா” குழுவை அடக்கிவிட்டோம்..! தமிழர்களுக்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை.. பிதற்றுகிறார் விமல் வீரவங்ச.. ஆவா குழுவை வடக்கில் அடக்கியிருக்கிறோம். இதற்கு பின்னரும் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை.? என கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் விமல் வீரவங்ச தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதியின் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளனர் என கூறியுள்ளார். பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அண்மையில் அமொிக்க துாதுவரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் "தமிழ் மக்களை காப்பாற்றுங்கள்.." என கேட்டிருக்கின்றார். ஜனாதிபதி கோட்டபாய தலமையிலான ஆட்சியில் தமிழ் மக்கள் அனைவரு…
-
- 2 replies
- 451 views
-
-
'காணாமல் ஆக்கப்பட்டோர்' என எவரும் இலங்கையில் இல்லை.! "இலங்கையில் 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்' என்று எவரும் இல்லை. அப்படிக் கூறப்படுவோர் போரில் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது தனிப்பட்ட நபர்களினால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று தமிழ்த் தரப்பினர் கூறும் விவகாரத்துடன் அரசுக்கும் இராணுவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களையும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்களையும் புனர்வாழ்வின் பின்னர் அர…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று நடந்த மேலும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இதில் தொகுத்துள்ளோம். யாப்பு கட்சி செயலாளரின் சதி நடவடிக்கையை விலாவாரியாக விபரித்து, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி வாசித்ததும், எம்.எ.சுமந்திரன் குறுக்கிட்டு, கட்சி யாப்பின்படி செயலாளரை மாற்றுவது பொதுச்சபையில், இங்கு மாற்றினால் நீதிமன்றம் செல்லலாம் என்றார். நீதிமன்றம் செல்லலாம் என அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். நம்பிக்கையில்லா பிரேரணை, கூட்ட அட்டணையில் இல்லையென்றும் கூறினார். இருதரப்பிற்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது. இதன்போது, மாவை சேனாதிரா…
-
- 30 replies
- 1.9k views
-
-
அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பே மிகவும் அவசியம்; சபாநாயகர் யாப்பா.! "இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மட்டுமல்லாது நாட்டின் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பு அவசியமாகும். எனவே, புதிய அரசமைப்பை விரைவில் உருவாக்கி ஐக்கியமாக நாட்டைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றத்தில் சகலரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அதனை வரவேற்பேன். அவ்வாறான செயற்பாடுகளை மக்களும் ஆதரிப்பார்கள்." - இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்தும், அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டுவருவது குறித்தும் ஆளும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதித்து வருகின்ற நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு என்ன…
-
- 2 replies
- 502 views
-
-
நுண்கடன், வட்டி சுமையால் ஏற்பட்ட விபரீதம்: இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! நுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துளெ்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக்கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் பழு காரணமாக மனைவி இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம், மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு சிவத்தபோக்கடி கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் குணரத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தற்கொலை செ…
-
- 4 replies
- 530 views
-
-
ஜனாதிபதியின் உத்தரவு – பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய தற்போது 10 பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே இவ்வாறு பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/ஜனாதிபதியின்-உத்தரவ…
-
- 3 replies
- 524 views
-
-
நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானோர் எண்ணிக்கை: அதிர்ச்சியளிக்கும் தகவல்! நாடளாவிய ரீதியில், பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையான ஐந்து இலட்சத்து 33ஆயிரத்து 883 பேர் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வில் வெளிப்படுத்தப்பட்டது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அபாயகரமான ஒளதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றின் தகவல்களின் பிரகாரம், கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் போதைப் பொருள் குற்றங்களுக்காக மொத்தமாக 89 ஆயிரத்து 321பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவருடத்தில் இலங்கையில் மொத்தமாக ஆயிரத்து 741.992 கிலோ ஹெரோயிள் போதைப்பொருளும் …
-
- 1 reply
- 313 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கையானது பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிடார்கள். அதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரண…
-
- 1 reply
- 444 views
-