ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
மட்டக்களப்பில் 1500 ஏக்கர் மேச்சல் தரை காணி பறிபோவதை தடுத்து நிறுத்தினார் சாணக்கியன்! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல் தரை காணிகள் 1500 ஏக்கரை சிங்கள மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளார். மட்டக்களப்பு எல்லை பகுதியான மயித்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்படவிருந்தது. கிழக்கு மாகாண ஆளுநர், மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்திடம் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணிகளை கோரியிருந்தார். அதன் முதல் கட்டமாக 15…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கை குறித்த சிறப்பு நிகழ்வுகளை மனித உரிமைகள் பேரவை நடத்த வேண்டும்: ஜெனீவாவில் கோரிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்த்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்று ஜெனீவாவில் கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்ட…
-
- 2 replies
- 363 views
-
-
மாகாண சபைகள் குறித்து டில்லி தீர்மானிக்க முடியாது! ஜனாதிபதியே தீர்மானிப்பார்; சரத் வீரசேகர மாகாண சபைகள் விவகாரம் என்பது இலங்கையின் உள்விவகாரம் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் அல்லர் எனவும் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- “நாங்கள் மாகாண சபைகளைத் தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிட முடியாது. நாங்கள் சுதந்திரம் மற்றும் இறைமை மிக்க நாடு. இந்தியா எங்கள் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது. இந்திய – இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேய…
-
- 0 replies
- 407 views
-
-
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 27ஆம் திகதி அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அன…
-
- 1 reply
- 602 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் 05 ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொவிட் 19ஐ கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பாராட்டப்பட்டது. முறையான திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் கொவிட் 19ஐ முறியடித்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடுகளினதும் கொவிட் 19 நிலைமைகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருடனான இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆசியான் நாடுகள் இலங்கையுடன் கொண…
-
- 0 replies
- 498 views
-
-
வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இ…
-
- 4 replies
- 800 views
-
-
(எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு ( The Catholic Expression ) என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களின் போது நீதி நிர்வாகத்தின் போது மறைக்கப்பட்ட காரணிகள் குறித்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சிரந்த.ஆர்.அன்டனி அமர…
-
- 0 replies
- 347 views
-
-
(நா.தனுஜா) 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 647 views
-
-
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத் கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடினர். யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு கோத்தாபய அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்தது இதன் காரணமாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தனர். இவ்வாறு இனைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் தம…
-
- 0 replies
- 378 views
-
-
மாகாண சபை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். மாகாண சபை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம், அது குறித்து எமது ஜனாதிபதியே முடிவு செய்வார். வெளிநாடு தலைவர்களுக்கு இந்த விசயத்தில் அக்கறை தேவையில்லை என்று ஆனந்த வீரசேகர எம்பி தெரிவித்துள்ளார். இலங்கை இநதிய ஒப்பந்தப்படி, புலிகளின் ஆயுதங்களை இந்திய பறித்திருக்க வேண்டும். அந்த நிபந்தனையை இந்தியா ஒரு போதும் நிறைவேற்றவில்லை.... ஆகவே இந்த ஒப்பந்தம் தானாகவே செயல் இழந்து விட்டது. (இலங்கை படைகள் தான் அதை செய்தன என்று சொல்ல வாறார்). மகிந்தவின் வழமையான செயலான, அல்லக்கைகளை கிளப்பி விடும் வேலை நடக்கின்றது. மோடி என்ன, மோடி.... இந்திராகாந்தியில் இருந்து பார்த்துக் கொண்டுதான் வாறம்.... டெல்லி வாலாக்களே.... நம்ம பக…
-
- 4 replies
- 887 views
-
-
ஐ.எஸ். குறித்து எச்சரித்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளவில்லை – விஜயதாச by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Wijeyadasa.jpg ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து தான் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால், பயங்கரவாத தாக்குதல்கள் தடுத்திருக்கலாம் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்த அவர், குறித்த தாக்குதலை தடுப்பது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற …
-
- 0 replies
- 374 views
-
-
ரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது- அநுர by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/anura.jpg ஊழலுக்கு எதிரான செயலகம், (ஏ.சி.சி.எஸ்) தேசிய செயற்குழுவின் (என்.இ.சி) அனுமதியுடன் நிறுவப்பட்டது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தின் முன் நேற்று (திங்கட்கிழமை) சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, …
-
- 0 replies
- 595 views
-
-
புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் குண்டுகள் வெடித்ததா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவு ஏற்கனவே வழங்கிய தகவலைகளை தவிர வேறு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை புலனாய்வு பிரிவு தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது நாட்டின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பூஜித் ஜயசுந்தர, நேற்று (29) ஐந்தாவது முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார். இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் முதலாவதாக அவரிடம், ´உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரே இரவில் திட்டமிடப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என வினவினார். ´ஐயா, சஹ்ரானும் அவ…
-
- 0 replies
- 577 views
-
-
சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (30) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் த…
-
- 1 reply
- 478 views
-
-
இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து Bharati September 30, 2020இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து2020-09-30T12:30:27+05:30 இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். சமூக நீதிக்கான தேசிய இயக்கம் , 20ஆம் திருத்தத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து, அந்த அமைப்பு இன்று கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடாத்திய ஊடக சந்திப்பில…
-
- 0 replies
- 678 views
-
-
மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை’ அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார். “13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமை…
-
- 7 replies
- 1.7k views
-
-
இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது - சம்பந்தர்.! “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும்,அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ஒருபோதும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.” இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்க…
-
- 5 replies
- 1k views
-
-
ஓரணியில் தமிழ் உறவுகள் ; அடக்கியாள நினைக்காதீர்;சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன." - இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியக் க…
-
- 4 replies
- 592 views
-
-
தேர்தல் பின்னடைவுக்கு கல்முனை விவகாரமும் ஒருகாரணம்: கல்முனை நேர்காணலில் த.தே.கூ.பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. DicksithSeptember 30, 2020 இருபதாவது திருத்தம் என்பது ஜனநாயகத்திலிருந்து விலகி எதிர்த்திசையில் அதாவது சர்வாதிகாரப்போக்கில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். அது நாட்டிற்கு நல்லதல்ல. எனவே அதனை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கிறோம். அதற்காக நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன்.இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன்.திரு சுமந்திரன் நேற்றுமுன்தினம் கல்முனைக்கு விஜயம்செய்தபோது கல்முனைநெற் இணையத்தள ஏற்பாட்டில் நேர்காணலை மேற்கொள்ளமுடிந்தது. அந் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்களை இங…
-
- 13 replies
- 1k views
-
-
கொடுத்த வாக்குறுதியை நாமல் நிறைவேற்றவில்லை ; ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்ட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச நிறைவேற்றவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 29.09.2020 நேற்று இடம்பெற்ற நிலையில் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை…
-
- 0 replies
- 558 views
-
-
மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்- பிரதமர் நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்த…
-
- 3 replies
- 691 views
-
-
திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதர…
-
- 2 replies
- 652 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமது கடமையைச் செய்யவில்லை; ஜெனீவாவில் நிஷா பீரிஸ் குற்றச்சாட்டு – காணொளி நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பீரிஸ் குற்றஞ்சாட்டினார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் இரண்டாவது வாரத்தில் ஐ.…
-
- 0 replies
- 310 views
-
-
இணைய வழிக் கலந்துரையாடல் (Zoom Meeting) புதிய இந்தியா குழுமம் (New India Forum) அமைப்பின் அனுசரணையுடன் ''இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்'' என்ற தலைப்பில் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை, ஒக்ரோபர் 4ம் திகதி இந்திய நேரம் 5.00 பிப (5.00 pm) அளவில் இணைய வழிக் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்குவார். வடமாகாணமுன்னைநாள் முதலமைச்சரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான கௌரவ விக்கினேஸ்வரன் அவர்களும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னைநாள் துணைத் தூதுவர் திரு நடராஜன் அவர்களும் சிறப்புரைகளை வழங்குவர். Zoom id - 813 8895 9933.
-
- 0 replies
- 445 views
-
-
மக்களுக்கு வாழவே முடியாத இந்நிலையில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை- சஜித் by : Yuganthini மக்களுக்கு வாழவே முடியாத இந்த காலத்தில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து இந்த அரசாங்கத்தால் தப்பித்துக் கொள்ள முடியாது. நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மனித வளமும், யானை வளமும் அழிவடைந்து வருகிறது. இந்த இரண்டு வளங்களையும் ஒரு சரியான திட்டமிடலின் ஊடாக மட்டுமே காப்பாற்ற முடியும். இதற்கு துரிதமாக தீர்வொன…
-
- 0 replies
- 503 views
-