Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ’20 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது’ நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிலவும் வீடுகளுக்கான நெருக்கடி நிலைக்கு தீர்வாக இவ்வாறு தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்…

  2. இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம …

    • 43 replies
    • 4.9k views
  3. 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை- அரசாங்கம் by : Yuganthini 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையின் முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் யோசனை அரசாங்கத்திடம் கிடையாது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதாயின், அதற்க…

  4. நாட்டில் அன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, நாளொன்றுக்கு 38 உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் கூறியுள்ளது. 2008 முதல் இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் இலங்கை புற்று நோயாளர்களில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். மேலும், புற்றுநோய் நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலையிலும் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். https://www.virakesari.lk/article/90892

  5. ஆசிரியர்களினது விபரங்களை திரட்டும் பொலிஸார் – அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது என தொழிற்சங்கம் குற்றச்சாட்டு பொலிஸார் ஆசிரியர்களினது விபரங்களை திரட்டிவருகின்றனர் என இலங்கை ஆசிரியர் சேவை என்ற தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் விபரங்கள் தொழிற்சங்க ஈடுபாடுகள் அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விபரங்களை பொலிஸார் அதிபர்கள் ஊடாக திரட்டுகி;ன்றனர் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை பொலிஸார் ஆசிரியர்களையும் அதிபர்களையும்அச்சுறுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளரிடம…

  6. தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல் (எம்.நியூட்டன் ) தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டிய தேவையை நாங்கள் உணர்கின்றோம் எனத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் என்பதை உரிமையுடன் கூறிக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார் ஐனநாயக அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் ஒற்றுமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் இனத்தின் விடுதலைக்…

  7. இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களைக் காவுகொள்ளும் இதய நோய்! இலங்கையில் இதயம்சார் நோய் காரணமாக நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பதாக இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17 மில்லியன் பேர் உயிரிழப்பதாகவும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய இந்நோயிலிருந்து பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வருடாந்தம் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச இதய தினம் கொண்டாடப்படுகிறது. தொற்றா நோய்களால் உலகலாவிய ரீதியில் 83 சதவீத மரணம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மரணத்திற்கு பிரதான காரணியாக இருப்பது இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்ப…

  8. திலீபனுக்காக கையொப்பம் இட்டவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களே - டக்ளஸ் பகிரங்க சவால் சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். அவ்வாறான தேவை தனக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “திலீபனை நினைவுகூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூர்வமாக பேசவில்லை. இந்த அரசியல் தலைவர்களை இதுதொடர்பான பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கின்றேன். குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அ…

    • 4 replies
    • 681 views
  9. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இவ்வாறு 10 தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிநீத்துள்ளன…

  10. தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலுக்கே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பா…

    • 49 replies
    • 2.9k views
  11. ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே.! வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் பாரிய அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மட்டக்களப்பு நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஈழவாதியான திலீபனை நினைவு கூருவதற்காக இவ்வாறு கடைகள், அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். எமது நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் …

  12. Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 04:38 - 0 - 51 AddThis Sharing Buttons Share to FacebookFacebookShare to TwitterTwitterShare to WhatsAppWhatsApp பாறுக் ஷிஹான் 2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16 வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் …

  13. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இராணுவத்தின், பொலிஸார் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர். அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தி…

  14. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுத்துள்ளனர். இதன்படி கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள் மற்றும் வீதியோர வியாபாரங்கள் வழமை போன்று இயங்கியது. இதன்போது பொதுமக்கள் வழமை போன்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை…

  15. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடு பூராகவும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக குறித்த உத்தியோகத்தர்கள் கடமை புரிவது இல்லை, எனினும் புற்று நோய் இனங்காணப்பட்ட நோயாளிக்கு குறித்த கதிரியக்க சிகிச்சை அளிக்காவிடில் மீண்டும் ப…

  16. நாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் இரணவில வைத்தியசாலையிலிருந்து தலா ஒருவர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,210 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் 3,360 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 137 பேர் நாடு முழுவதும் உள்ள 05 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 38 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இ…

  17. ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர். சமகால அரசாங்கத…

  18. (நா.தனுஜா) இலங்கைக்கு 15 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உடன்பட்டமைக்குப் பதிலாகவே இந்தியாவினால் அந்த நிதி வழங்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இணைவழி மாநாடொன்று நடைபெற்றது. இதன்போது இருநாடுகளினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. எனினும் அதுகுறித்து வெளியான செய்திகளில் சில பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவைகுறித்த…

  19. (நா.தனுஜா) இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட 21 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டமையைப் பாராட்டியிருக்கும் நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்காவும் ஐரோப்பாவும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கழிவுப்பொருட்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். கழிவுப்பொருட்கள் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் இலங்கையினால் மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கே திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து 263 கழிவுப்பொருள் கொள்கலன்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 21 கொள்கலன்களே இவ்வாறு மீண்டும் திருப்பி அனுப்ப…

  20. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார். இன்றய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம…

  21. சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2019/12/R.Sanakiyan.jpg தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர…

  22. மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது By BATTINEWS MAIN (ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை இலங்கை தமிழ் அரசுக்கட்சி உட்பட பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரம் வாழைச்சேனை செங்கலடி களுவாஞ்சிக்குடி உட்பட பல தமிழ் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போக்கு வரத்துச் சேவைகள் இடம்பெற்றன.உண்ணாவிரதமிழுந்து மரணமாக முன்னாள் விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் திலீபனின் நிவைவு தினத்தை அனுஸ்டிக்க அரசு மறுத்தமையைக் கண்டித்தே இந்த ஹர்த்தால் அனுஸடடிக்கப்படுவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.இது …

  23. இலங்கைக்கு பெருமளவு ஆயுததளபாடங்களை வழங்க இந்தியா திட்டம்-பாதுகாப்பு தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் கடனையும் வழங்குகின்றது இலங்கையின் பாதுகாப்புதுறைக்கு 50மில்லியன் கடனை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்து சமுத்திரபிராந்தியத்திலும் வங்களாவிரிகுடாவிலும் சீனாவின் அபிலாசைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த பகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வருப்படுத்துவதற்கு சனிக்கிழமை உச்சிமாநாட்டில் தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்தியாவின் இலங்இலங்கை பாதுகாப்பு துறையை நோக்கி இந்த சைகை அமைந்துள்ளது என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடனடிப்…

    • 2 replies
    • 467 views
  24. வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ;வவுனியாவில் கடைகளைத் திறக்கக்கோரி பொலிசார் அட்டகாசம் வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார்…

  25. வடக்கில் முழு கதவடைப்பு போராட்டம் – முடங்கியது யாழ்ப்பாணம் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த அழைப்பிற்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள். அதற்கமைய யாழ்ப்பாணத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.