ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
மனோ கணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதனால் அவர்கள் தமிழ்க் கட்சிகளை பிரதிநித்துவப் படுத்துகின்ற தமிழ் வேட்பாளர்களுக…
-
- 0 replies
- 397 views
-
-
சிங்கள, பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெறுகிறது: 1983 ஜூலை சூழல் நிலவுகிறது- சி.வி. by : Litharsan நிறைவேற்று ஜனாதிபதி தெரிவுக்காக கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலின் ஊடாக சிங்கள, பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுக் காணப்படுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் ஜுலை, 23ஆம் திகதி முக்கியமானது எனவும் அப்போதிருந்த சூழல் இப்போது நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதன் நினைவு வாரம் இன்று (வியாழக்கிழமை) தொ…
-
- 0 replies
- 390 views
-
-
வன்முறைக்கு வன்முறைதான் பதிலடி: ஓமல்பே சோபித தேரர்.! "வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்குக் கறுப்பு ஜுலை ஓர் சாட்சி." - இவ்வாறு தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கறுப்பு ஜுலைக் கலவரத்தின் 37ஆவது நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "1983ஆம் ஆண்டு அரங்கேறிய கறுப்பு ஜுலை இனக்கலவரத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசுமே முழுப்பொறுப்பு. யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இராணுவத்தினரைக் குறிவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாகவே கொழும்பி…
-
- 3 replies
- 988 views
-
-
ஹக்கீமின் கொட்டத்தை அடக்குவோம் - ஞானசார தேரர் உலகில் பௌத்தர்களுக்கென உள்ள ஒரே ஒரு நாடு இலங்கை மாத்திரமாகும். இதனை பௌத்த நாடாக நிரூபிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதனை நாம் நீண்ட காலமாக கூறி வருகிறோம். இதனை நாம் கூறும் போது எம்மவர்களே எங்களை அடிப்படைவாதிகளாக கூறினர். தற்போது ஹக்கீம் தலைமையிலான குழு அம்பாறையை முஸ்லிம்களது மாவட்டமாக பிரகடனம் செய்துள்ளார்கள். இப்போது யார் அடிப்படை வாதிகள் என நேற்று பொதுபல சேனாவின் தலைமை காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஞானசார தேரர் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்.. அம்பாறை முஸ்லிம்களது பூர்வீக மாவட்டமல்ல. இப்போது சனத்தொகையில் வேண்டும் என்றால் அவர்கள் கூடுதலாக இருக்கலாம். தீக்…
-
- 0 replies
- 481 views
-
-
STF, புலனாய்வுப் பிரிவினர் மற்றுத் தமது ஆதரவாளர்கள் சகிதம் முன்னாள் போராளிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடைய வீடுகளுக்குச் சென்று சுமந்திரன் அவர்களுக்கு மிரட்டல்கள் விடுத்து வருவதாக பிரபல சர்வதேச மனித உரிமை ஆர்வலர் ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்: கிருபாகரன் வெளியிட்ட தகவலை உறுதி செய்வதற்காக நாங்கள் சுமந்திரனை தொர்புகொள்ள முற்பட்டபோதும், அவர் எமது தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/251503?ref=rightsidebar
-
- 33 replies
- 2.4k views
- 1 follower
-
-
அவளுக்கு ஒரு வாக்கு தேர்தல் பிரச்சாரம் யாழில் ஆரம்பம் July 23, 2020 அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. வடமாகாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் பெண்களின் கூட்டினைவில் ஆரம்பமானது. குறித்த பிரச்சார பணி குறித்து செயற்பாட்டாளர்களான எஸ். தீபா. ஜ.நாகநந்தினி, சஹானா, லயன் ஆனந்தி ஆகியோர் குறிப்பிடுகையில், “பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டும். எமது உரிமை குறித்து பெண்களால் தான் பேச முடியும். எந்தக் கட்சி என்று நாம் குறிப்பிடவில்லை. ஆனால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூன்று விருப்பு வாக்கு…
-
- 0 replies
- 501 views
-
-
கதிர்காமத்தில் 17வருடகால அன்னதானம், விசேட பஸ்சேவைகள் நிறுத்தம்! July 23, 2020 கதிர்காம ஆடிவேல்விழாவையொட்டி கடந்த 17வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் நாட்டின் கொரோனா சூழ்நிலைகருதி இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதானசபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். கடந்த 17வருடகாலமாக இந்து கலாசார திணைக்களத்தின் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரால் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுவந்தன. அதில் பல இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் பசியாறிவந்தனர். ஆனால் இம்முறை அதனை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லை ஆதலால் அது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறோம் என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். இதேவேளை இந்து யாத்திரீகர்…
-
- 0 replies
- 470 views
-
-
தமிழ் அரசியலில் ஒற்றுமை இல்லாது போய் விட்டது எஸ்.றொசேரியன் லெம்பேட் “தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது வாக்குச் சீட்டுத்தான். எனவே அதை நாம் முறையாகப் பயன்படுத்தி தகுதியான பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றோம். 'கொரோனா' வைரஸ் நோயின் தாக்கமும், அச்சமும் நிறைந்த இக்கால கட்டத்தில் இந்தத் தேர…
-
- 0 replies
- 436 views
-
-
(எம்.மனோசித்ரா) கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு உள்ள அடிப்படை உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று புதன்கிழமை தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் கடிதமொன்றினைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது : 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்…
-
- 2 replies
- 798 views
-
-
கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்டவருமான முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்தார். இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியோடு, வீடு உடைப்பதற்கு வந்தவர்கள் தாம் கிளிநொச்சி பொலிஸாரின் ஒத்துழைப்புடனே உடைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்த அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற அனுமதி இன்றி எந்த தனிநபரும் எவரினது வீடுகள் மற்றும் கட்டங்களை உடைக்க முடியாது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும்…
-
- 1 reply
- 536 views
-
-
நிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்பு வகித்த ரூபனை பாராளுமன்றம் அனுப்பி திருமலையை காப்பாற்றுங்கள்: விக்னேஸ்வரன் July 22, 2020 ஒரு நிழல் அரசின் மிக முக்கியமான பதவிகள் பொறுப்புக்களை வகித்து சாதனைகள் பலவற்றை செய்த விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து திருகோணமலை மாவட்டத்தை காப்பாற்றுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் திருகோணமலை மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம் திருகோணமலை நகரத்தில், 3ம் கட்டையடியில் நேற்று புதன்கிழமை நடைபெ…
-
- 0 replies
- 516 views
-
-
சிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று என்று. நாங்கள் பல மாவட்டங்களில் எங்களது சொந்த நிதியினைக்கொண்டு பல நற்குண மன்றங்களை உருவாக்கி அதனூடாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். நற்குண மன்றத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஆங்கிலம் கணனிக்கல்வி, தையல், அழகுக்கலை , சமையல்கலை, விவசாயம் போன்றவற்றிற்கான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். எமக்கு நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் தான் அம்மன்றம் உருவாக்கமுடியாத நிலை ஏற்பட்டது. எனினும் இம்முறை தேர்தலில் முத்தையா பிரபாகரன் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் கட்டாயம் இம்மாவட்டத்தில் 6 நற்குண மன்றங்களை உருவாக்குவோம் என முத்தையா பிரபாகரனின் சகோதரரும் விளையாட்டு வீரருமான முத…
-
- 0 replies
- 444 views
-
-
கூட்டமைப்புக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் அச்சங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிருவாகச் செயலாளர் குமாரசாமி அருணாசலம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும், “நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை; தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை …
-
- 0 replies
- 378 views
-
-
தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி – ரிஷாட் by : Vithushagan பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருது தெரிவித்த அவர் ”குருநாகல் மாவ…
-
- 0 replies
- 355 views
-
-
பிரேமதாஸ யுகத்திற்கு மீண்டும் பயணிக்க மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை அனைத்து இன மக்களும் பயம் சந்தேகமின்றி வாழ கூடிய உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கு தாமரை மொட்டிற்கு வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (21) மாலை கண்டி பாததும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு பொருத்தமான அரசியலமைப்பில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கான சக்தி கொண்ட ஒரே…
-
- 0 replies
- 408 views
-
-
பேராசிரியர் ஹூல் உள்ளிட்ட நால்வரை நாளை நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை ( எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் நாளை 23 ஆம் திகதி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு, குறித்த நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி கே.கணேஷயோகனின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகளான தனுஷன் கணேஷயோகன், அனுஷா ராமன், அச்சினி ரணசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஆர். சிவேந்ரன் முன் வைத்த விஷேட விளக்கங்களை ஆராய்ந்தே வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி டி.எப்.எச். குணவர்தன, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளார…
-
- 1 reply
- 457 views
-
-
ஸ்மார்ட் லாம்ப்க்கு தடை காேரிய வழக்கு தள்ளுபடி! யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (21) தள்ளுபடி செய்தது. மனுதாரரின் மனுவில் உள்ள குறைபாடு, எழுத்தாணை மனுவுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பாக திருப்தியின்மை மற்றும் மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான நோக்கம் போன்றவற்றால் இந்த எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளையிட்டார். யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்குக் தடை விதிக…
-
- 2 replies
- 736 views
-
-
தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை..! சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் வாய்மூடி அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று அதில் குறிப்பிடப்பட்டு…
-
- 10 replies
- 1.2k views
-
-
பிறப்புச் சான்றிதழில்... இனி இந்த விடயங்கள், உள்ளக்கப்படாது! பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தாய் – தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இணையம் ஊடாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காணிப் பதிவு சான்றிதழையும் இணையத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்பட…
-
- 0 replies
- 381 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன – மஹிந்த! சஜித் பிரேமதாஸ நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2005ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டில் முப்பது வருடங்கள் காணப்பட்ட சிவில் யுத்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். அதன் பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டின் அனைத்து மாகாணத்திற்கும் ஒரே முறையில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம். அதிவேக நெடுஞ்சாலைகள் உட்…
-
- 0 replies
- 407 views
-
-
பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன் by : Litharsan சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் ‘இரத்த ஆறு ஓடும்’ என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநி…
-
- 8 replies
- 833 views
-
-
இராணுவத்தின் சொற்படியே தலையாட்டுகின்றது பேரவை – மாணவர் ஒன்றியம் அதிருப்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கு.குருபரன் மீதான நடவடிக்கை தொடர்பில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது தனது சுயாதீனத்தை இழந்து நிற்கின்ற…
-
- 1 reply
- 477 views
-
-
ஜனாதிபதி கோட்டா தலைமையிலான ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்ததை இரத்து செய்தால் பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும் என்றும் ஆகவே 13 ஆவது திருத்தம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப்பின் திருத்தம் ஊடாக அதிகார பகிர்வை வழங்குவதாக கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள கூடியது…
-
- 2 replies
- 697 views
-
-
தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமே இந்த கொரோனா காலம்- கருணா விடுத்துள்ள வேண்டுகோள் தற்போதுள்ள கொரோனா காலத்தை தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு, கொரோனா அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களை விட அதிகளவான பிள்ளைகளை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பெரிய நீலாவணை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், அம்பாறை மாவட்டத்தில் நான் போட்டியிடுவதற்கு பிரதான க…
-
- 7 replies
- 698 views
-
-
அரசுக்கு விருப்பம் இல்லாத தீர்வை தமிழ்க் கூட்டமைப்பு கேட்க முடியாது: மைத்திரி.! தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதற்காக அரசு விரும்பாத தீர்வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்க முடியாது." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட முதன்மை வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி வழியில் தீர்வு கேட்டு பிரிவினையை ஏற்படுத்த முயல்வதை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார். சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தே…
-
- 1 reply
- 476 views
-