ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உற்பட பல்வேறு கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளன. மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது. முன்னாள் பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் ஆகியோரினால், கால்வாய்களுக்கு அருகில் வழங்கப்பட்ட காணிகள் முற்றிலும் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோடவும் தடையாக உள்ளது. எனவே மன்னார் நகர சபை…
-
- 0 replies
- 239 views
-
-
-என்.ராஜ் யாழில், 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். தற்போது வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மாதங்களுக்குத் தொடரலாம் என வளிமண்டல திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது யாழில், கடந்த இரண்டு நாள்கள் மட்டும் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று 8.30 மணி வரை 55.4 மில்லிமீற்றர் மழை வீ்ச்சியும் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 2 30 மணி வரையில் 22.7 மழைவீழ்ச்சியும் அச்சுவேலிப் பகுதியில் 92.9 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது…
-
- 0 replies
- 274 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூல வரைபிற்கும், வரைபினை வர்த்தமானியில் வெளியிடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 19ம் திருத்தத்தில் பிரதான விடயங்களாக காணப்பட்ட ஜனாதிபதியின் பதவி காலம், பாராளுமன்றத்தின் பதவி காலம், மற்றும் தகவலறியும் உரிமை சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கான மூலவரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்ட மூலவரைபிற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமை…
-
- 0 replies
- 311 views
-
-
இன, மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் வகையில் செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்! இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதற்காக இளைஞர், யுவதிகள் முன்னின்று செயற்பட வேண்டியது அவசியம் என பேராயர் கனேமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறினார். ´அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதால்தான் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனது. இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட அவிசுவாசத்தால் 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது´. நாட்…
-
- 0 replies
- 388 views
-
-
(செ.தேன்மொழி) இனவாதத்தை அடிப்படையாக கொண்டு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் , இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே மாகாணசபை தேர்தல் முறை உருவாக்கப்பட்டது. தற்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதா? இல்லை. எனவே மாகாணசபை முறையை பின்பற்றுவதுடன் , அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.https://www.vi…
-
- 16 replies
- 1.2k views
-
-
சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலினைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதில் தங்க நகைகளை பறிகொடுத்ததாகத் தெரிவித்து 16 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதில் 30 பவுண் நகைகள் களவு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/arti…
-
- 1 reply
- 459 views
-
-
13ஆவது திருத்தம் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- பிரசன்ன ரணவீர இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்த எந்தவொரு இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி, உடுநுவர பிரதேசத்திலுள்ள பித்தளை உற்பத்தியாளர்களைச் சந்திப்பதற்காக துறைசார் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அப்பகுதிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்தார். இந்த வி…
-
- 0 replies
- 316 views
-
-
சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாமைக்கான காரணம்! நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2010 - 2015 காலப்பகுதியில், பிரேமலால் ஜயசேகர - பிரத…
-
- 3 replies
- 738 views
-
-
உலகளாவிய ரீதியில் காணாமல்போன ஊடகவியலாளர்கள் பட்டியலில் பிரகீத்தின் பெயர் முதலிடம் உலகளாவிய ரீதியில் இதுவரையில் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவுகூரப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு (10 Most Urgent) என்ற தலைப்பில் பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அடக்குமுறையை அனுபவித்துவரும் 10 ஊடகவியலாளர்களை உள்ளடக்கி இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்…
-
- 1 reply
- 456 views
-
-
போராளிகளை பதிவு செய்து கப்பல் மூலம் வெளியேற்ற பிரபாகரன் மறுத்தார் – சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமரான அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் – மட்டூரான் தமிழர்களின் தாயகமான வடகிழக்கு மாகாணம் என்பது இன்றும் கட்டுக்கோப்புடன் தமது கலை, கலாசாரத்தினைப் பேணி தமது மொழியுரிமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்படும் மாகாணங்களாகும். கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கங்களே இந்த நாட்டில் தமிழரை ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினை பயன்படுத்தி தமிழ் மக்க…
-
- 0 replies
- 353 views
-
-
ஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது – கனகரஞ்சினி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் கேள்வி: தற்போது புதிய நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் உங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் எதிர்கால திட்டம் என்னவாக அமையும்? பதில்: காலத்திற்குக் காலம் அரசும், ஆட்சியும் மாறிக் கொண்டு தான் இருக்கின்றது. எங்களுக்கான தீர்வு இலங்கை அரசால் ஒருபோதும் கிடைக்காது என்னும் பட்சத்தில் தான் நாங்கள் சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றோம். இந்த ஆட்சி மாற…
-
- 0 replies
- 331 views
-
-
வவு. வைத்தியசாலை சிற்றூழியர்கள் போராட்டம்! வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்களால் ஆர்ப்பாட்டமும், பணிபுறக்கணிப்பும் இன்று (02) முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் காலை 10 மணிவரை இடம்பெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது, “தமது பணி நடவடிக்கைகளிற்கு இடையூறு ஏற்பட்டுத்தும் வகையில் கைவிரல் அடையாள நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனை தவிர்த்து பழையமுறையின்படியே தாங்கள் கையொப்பம் இடுவதற்கான செயற்பாட்டை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன், தமது கோரிக்கை நிறைவேறாவிடில் போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரிந்திருந்தனர்.” ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச சட்டங்கள் அ…
-
- 0 replies
- 380 views
-
-
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூரில் விசேட பூஜை! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனினால் இன்று (புதன்கிழமை) காலை ருத்திராபிஷேகமும் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன், ‘ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒரு முக்கியமான பூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம். இது முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்திருக்கிறது.…
-
- 5 replies
- 617 views
-
-
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்- இலஞ்சம் வழங்கினால் நிராகரிப்பு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்படுவதற்கு காரணமாக அமையும் என கூறப…
-
- 0 replies
- 310 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை – அங்கஜன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை என யாழ். மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் சார்பில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், 13 ஆவது திருத்த சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் வந்தால் ஒழிய, அதனை முழுமையாக மாற்றுவதற்கு எந்த தரப்பினரும் பேசவில்லை. 13 ஆவது திருத்தத்தை அமுல…
-
- 3 replies
- 563 views
-
-
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரயிலை இயக்குவதில்லை என்ற முடிவு கைவிடப்பட்டது! UPDATE 02: சீன தயாரிப்பிலான தரமற்ற ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில் சேவைகளில் இருந்து விலகுவதற்கு மேற்கொண்டிருந்த தீர்மானத்தை ரயில் சாரதிகள் கைவிட்டுள்ளனர். ரயில் திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. இதேவேளை, நாட்டில் சீன தயாரிப்பிலான 100 ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவை தரமற்றது எனவும் ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ————————————————————————————————————————————————————————————————————————————– UPDATE 01: சீனாவிலிருந்…
-
- 1 reply
- 430 views
-
-
சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது 20ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரைவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் சட்டமூலத்திற்கான பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதனிடையே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நிபுணர் குழுவ…
-
- 4 replies
- 650 views
-
-
14 இலங்கையர்கள் குறித்து சிவப்பு அறிவிப்பு வெளியிட்டது இன்ரர்போல்! வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிலிருந்து (Interpol) சிவப்பு அறிவிப்புகளை இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டுவரும் நிலையில் வெளிநாடுகளுக்குத் தப்பித்துள்ள அவர்கள், கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பித்து வருக்கிறார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக இந்த 14 பேர் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். …
-
- 2 replies
- 433 views
-
-
அமெரிக்காவின் தடை: கொழும்பு துறைமுக நகரை நிர்மாணிக்கும் சீன நிறுவனத்துக்கும் சிக்கல்! தென்சீனக் கடலில் செயற்கைத் தீவை உருவாக்கி இராணுவமயமாக்கலுக்கு உதவிய குற்றச்சாட்டில் 24 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைக்கு இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்துள்ளது. இவ்வாறு தடையை எதிர்கொள்ளும் 24 சீன நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ள சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனியின் (China Harbour Engineering Company-CHEC) தாய் நிறுவனமான சீனா கொம்யூனிகேஷன்ஸ் கென்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியும் (China Communications Construction Company-CCCC) உள்ளடங்குகிறது. இந்த நிறுவனமே ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம் போன்றவற…
-
- 0 replies
- 232 views
-
-
ஆம். தமிழ் தான் முதல்மொழி மகாவம்சத்தில் சொல்லப்படுபவை நிரூபிக்கக்கூடியவை அல்ல. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர். பிரபாகரனுக்கு மக்களை பலிக்கடாக்களாக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இவ்வாறு பல்வேறு துணிச்சலான பதில்களை ‘டெரன’ செய்தியாளருடனான நேர்காணலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அளித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு: ஊடகவியாளர் : பாராளுமன்றத்தில் கன்னி உரையிலேயே உங்களுக்கு என்ன நடந்தது? விக்னேஸ்வரன் : எம்.பிக்கள் அதனை கேட்டு குழப்பமடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தெளிவொன்று இ…
-
- 6 replies
- 598 views
-
-
கொழும்பில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட 14 கடற்படையினரை எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டு கொழும்பு விசேட நீதிமன்றத்தில் கடற்படையினருக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2008ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். …
-
- 0 replies
- 405 views
-
-
மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது, மின்னர் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர். http://www.battinews.com/2020/09/27.html
-
- 7 replies
- 820 views
-
-
-
- 0 replies
- 727 views
- 1 follower
-
-
அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன. கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/
-
- 22 replies
- 1.8k views
-