Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 445 பட்டதாரிகளுக்கு மட்டு’வில் நியமனம்! வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று (27) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனமே மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 445 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன. https://newuthayan.com/445-பட்டதாரிகளுக்கு-மட்டுவ/

  2. புலிகள் யாழ்ப்பாணத்தை வென்றெடுப்பதனை பாகிஸ்தான் உதவியினாலேயேதடுக்க முடிந்தது என புதிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு மிகவும் முக்கியமான நாடுகள். ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினருக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த இடமளிக்ககூடாது.மேற்குலகு சார்ந்த வெளியுறவு கொள்கையில் இருந்து விலகுவதற்கான காலம் கனிந்திருக்கின்றது.தெற்காசியாவும் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. இரண்டும் எமது நண்பர்கள். மிகவும் நெருக்கடியான காலங்களில் அவை இரண்டும் எமக்கு உதவியுள்ளன.யுத்த காலத்தில் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை…

    • 0 replies
    • 343 views
  3. குடிநீர் இன்றி தவிக்கும் தென் தமிழீழத்தின் சாளம்பஞ்சேனை தென் தமிழீழம் , மட்டக்களப்பு – கிரான் புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர். குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்ற…

  4. கட்டுநாயக்க விமான நிலையம் அடுத்த மாத இறுதியில் திறக்கப்படுமா? இந்திய நிலைமையால் குழப்பம் August 28, 2020 எதிர்வரும் மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர வேகமாக பரவி வருகின்றது. இதுவே விமான நிலையத்தைத் திறக்காமல் இருப்பதற்கான பிரதான காரணம் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய விமான நிலையம் கால வரையின்றி தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். …

  5. துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதற்காக கொண்டுவருகிறோம்? விளக்குகின்றார் சி.வீ.கே.சிவஞானம் August 28, 2020 சி.வி.கே.சிவஞானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூடவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. நாளைய கூட்டத்தில் இந்தப் பிரேரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே. சிவஞானம், கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, யாழ் மேயர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் …

  6. சந்நிதி முருகனுக்கு காவடி, அங்கப்பிரதட்சணம், கற்பூரச் சட்டி எடுக்கத் தடை வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. இதனால் நேற்று(வியாழக்கிழமை) ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன. தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பெரும் திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. ஆலயத்துக்கு வருகைதரும் …

  7. மைத்திரிக்கு தயாராகும் இத்த கயிறு ரணில் புண்ணியத்தில் கிடைத்தது ஜனாதிபதி பதவி. ஒரு ஜனாதிபதி பதவி நாட்டின் உயர் பதவி. அதன் பின்னர் கவுரவமாக ஓய்வு எடுப்பதே சிறப்பானது. தோல்வியினை தாங்காத மகிந்தா, மீண்டும் பதவிக்கு வரும் திட்டத்தில், குருநாகல் மாவட்டத்தில் போட்டி இட்டு வென்று எம்பி ஆனார். மைத்திரி ஓய்வு எடுத்தாலும், ஆசை யாரை விட்டது. தான் ஒரு மகிந்தா என்ற நினைப்பில், மகிந்தா போலவே, சுதந்திர கட்சி தலைமை பதவியில் இருந்தாலும், பாய்ந்து, மகிந்தா கட்சியில் போட்டி இட்டு, இம்முறை மகிந்தா புண்ணியத்தில் எம்பி ஆகியுள்ளார். வரவுள்ள புதிய அரசியல் அமைப்பில், துணை பிரதமர் பதவி நிலை ஒன்றினை உருவாக்கி, தனக்கு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். …

  8. இழுத்தடிப்பு மூலம் அபிலாசைகளை நீர்த்து போக செய்ய முடியாது – கஜேந்திரன் தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனது நாடாளுமன்ற கன்னியுரையில் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (27) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “1833ம் ஆண்டு பிரித்தானியர்களால் நிர்வாக …

  9. குடிநீர் இன்றி கஷ்டப்படும் கிராமம் – கையேந்தும் நிலை! தீர்ப்பது யார்? மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர். குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் செ…

  10. கிழக்கின் தொல்பொருள் செயலணியில் மேலும் நால்வர் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் 4 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டு, அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது. இந்த செயலணியில், மல்வத்து – அஸ்கிரிய பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுனே சுமங்கல தேரர் மற்றும் அம்பன்வெல்லே ஶ்ரீ சுமங்கல தேரர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் ஏற்கனவே 12 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த நால்வரையும் இணைத்து அந்த செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1…

  11. சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்ற அவையிலே மும்மொழிகளிலும் பேசுகிறார்!

    • 20 replies
    • 2.6k views
  12. மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. குறித்த யானையின் புகைப்படத்தை வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். எனினும் இந்த யானை நீரில் குளித்து விட்டு வந்த பின்னர் வெள்ளை நிறம் இல்லாமல் போயுள்ளதுடன், சாதாரண யானையாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களி மண் அல்லது ஏதாவது ஒரு பொருளை யானை தனது உடலில் பூசிக் கொண்டமையினால் இவ்வாறு அது வெள்ளை யானையாக காட்சியளித்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கை காடுகளில் வெள்ளை யானை வாழ்வது தொடர்பிலான தகவல்கள் உள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.tamilwin.com/community/01/…

    • 14 replies
    • 1.9k views
  13. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பயங்கரவாதிகள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதில் பொதுமக்கள் உயிரிழந்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் தெரிவித்திருந்தார். எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பதிவொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பி…

  14. பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய ஆவா வினோதன் உட்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (27) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் – பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில் ஆவா வாள்வெட்டுக் குழுவின் வினோதன் உட்பட 6 பேர் கூடியுள்ளனர் என்று இரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பி்ரகாரம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆவா வினோதன் இணுவிலைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 5 பேரும் கைதடியைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் வழக்கு நிலுவைளோ அல்லது பிடியாணையோ இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். என…

  15. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் மீண்டும் சபையில் எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்தனர். தமிழ் மொழிபேசும் தமிழினம் இந்த பூமியின் பூர்வீக உரித்துடையவர்களா? இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? தேசத்துரோக கருத்துக்களை முன்வைத்து சபையில் உரையாற்றிய வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை உடனடியாக சபையை விட்டு வெளியேற்றுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் போர்க்கொடி தூக்கினர். பாராளுமன்ற அமர்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடிய வேளையில் ஆரம்பத்திலேயே சபையில் சர்ச்சை வெடித்தது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக…

    • 8 replies
    • 999 views
  16. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம் August 27, 2020 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது. பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். http://th…

  17. கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் தொடர்ந்தும் முயற்சி செய்வேன்! எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாக தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவ…

  18. ’விக்னேஸ்வரன் கூறிய உண்மையால் கூட்டமைப்பு மௌனித்து விட்டது’ க. அகரன் “வரலாற்றை திரிவுபடுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள், விக்னேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாது கூச்சலிட்டு வருகின்றனர் ” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேர்தல் நிறைவடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக செய…

  19. நிரந்தர நியமனம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தி நேற்று (27) நுவரெலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன் இவர்களை ஆசிரியர்களாக உள்வாங்குவது என தீர்மானிக்கப்பட்டு இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவர்கள் கொட்டகலை யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய கல்லூரிகளில் தங்களுடைய பயிற்சிகளை 2018 ஆம் ஆண்டு நிறைவு செய்து கொண்டார்கள். அப்படி நிறைவுசெய…

    • 0 replies
    • 321 views
  20. அரசாங்கத்தைப் பாதுகாக்கவே சர்வதேசம் முற்பட்டுள்ளது- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கி அரசாங்கத்தைப் பாதுகாக்கவே சர்வதேசம் முற்பட்டுள்ளது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பாக சர்வதேசம் நீதி பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தாங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்…

    • 0 replies
    • 267 views
  21. விக்னேஸ்வரனுக்கு விரும்பியதைச் சொல்ல உரிமை உண்டு' நாடாளுமன்றத்துக்குள் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஆற்றிய உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனைக் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/விக்னேஸ்வரனுக்கு-விரும்பியதைச்-சொல்ல-உர…

  22. அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார். ´பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு. அவ்விதமான தீர்வை வழங்க அரசாங்கம் முன் வந்தால் அதற்கு பூரண ஒத்துழைப்புகளையும் வழங்குவோம். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் அதிக அக்கறையுடன் செ…

    • 0 replies
    • 339 views
  23. சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா கிழக்கில் தேரர்கள் அடங்கிய செயலணி? – சார்ள்ஸ் கேள்வி தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா தமிழர்கள் இல்லாத கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணி அமைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இடம்பெற்று வரும் விவாதத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக கிழக்கு …

  24. சாம்பல்தீவு களப்பு தொடர்பாக அரசாங்க அதிபருடன் முக்கிய கலந்துரையாடல்..! திருகோணமலையில், 360 ஏக்கர் நிலப்பரப்பை வனப்பகுதியாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரித்துள்ளமை தொடர்பில், திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் ச. குகதாசன் ஆகியோருக்கும் இடையே திருகோணமலைக் கச்சேரியில் நேற்று (26.08.2020)சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, தமிழ் மக்கள் பலரது உறுதியுடன் கூடிய காணிகள் உள்ளடங்குவதாகவும், எனினும் குறித்த காணிகளில் எவரும் எந்தவொரு வேலையையும் செய்யக்கூடாதென அரசாங்கம் தடை விதித்துள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த தடையை நீக்கி, தத்தம் காணிகளில் தாம் விரும்பும் பணி…

  25. யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் இன்று? யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் பெரும்பாலும் இன்று (27) இடம்பெறலாம் என பல்கலைக்கழகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் எப்ரல் மாதம் 30ஆம் திகதி, துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை தெரிவு செய்யும் வரை பேராசிரியர் க.கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் வெற்றிடத்திற்காக ஆறுபேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூன்றுபேர் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.