ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
இனவாதத்துக்கு பதிலடி கொடுக்க ஓரணியாக திரளுங்கள் – அரவிந்தகுமார் நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்ற தேர்தலாகும் எனவே, ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கோருகின்றேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அரவிந்தகுமார் தெரிவித்தார். பதுளையில் இன்று (30) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், நாட்டில் தற்போது இனவாதம் “தலைவிரித்து ஆடுகின்றது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுபான்மையின மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்போம் என வெளிப்படையாக கூறிவருகின்றனர். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு பதிலடி கொடு…
-
- 0 replies
- 343 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுமந்திரன் அறிவுரை.! காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்குகின்ற ஆவணங்களை அவர்களின் உறவுகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி திக்கம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதே ரீதியில் பேச்சு நடத்தி பெற்றுக்கொள்ளப்பட்டதே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் ஆகும். அவர்களால் வழங்கப்படுகின்ற ஆவணம் மரணச் சான்றிதழ் எனத் தெரிவித்து அந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளவிட…
-
- 1 reply
- 604 views
-
-
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வா !!! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளர் யதீந்திரா தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து 20 வருட காலமாக ஒருவரையே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.…
-
- 2 replies
- 730 views
-
-
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் இன்று பிரசவிப்பு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது. பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மூன்று அல…
-
- 7 replies
- 810 views
-
-
சர்வதேச நீதிகோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! சர்வதேச நீதியை கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், “எமது உறவுகளின் நிலையை வெ…
-
- 0 replies
- 362 views
-
-
சவாலின்மையால் தேர்தல் சோம்பலை ஏற்படுத்துகின்றது' நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எவ்வித சவாலுமில்லை என்பதால், இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று (30) நாவலப்பிட்டியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், கடந்த 5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட…
-
- 1 reply
- 481 views
-
-
இலங்கை அரசாங்கத்தை டக்ளஸே காப்பாற்றினார்’ -எஸ்.நிதர்ஷன் “ஜெனிவா சென்று, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், நேற்று (29), மானிப்பாயில் நடைபெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “சிங்கள பகுதிய…
-
- 1 reply
- 514 views
-
-
பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் பலத்திற்காக கண்ணீர் வடித்த ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கவில்லை என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்காக மேடையில் கண்ணீர் வடிக்கும் சிலர் நாட்டில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் போது, பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று துயரப்படும் போது கண்ணீர் வடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 72 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனால் பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=131589
-
- 2 replies
- 565 views
-
-
ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது – இரா.சாணக்கியன் ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில், சிங்களப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முயற்சியை, அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது. அதனோர் அங்கமாகவே, தொல்பொருள…
-
- 2 replies
- 538 views
-
-
தோல்வியின் விளிம்பில் த.தே.கூ.: ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியின் விளிம்பில் நிற்பதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளினுடைய பெயர்களைக் கூறுவதனூடாக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என நினைப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதற்காகத்தான், ஜனநாயகப் போராளிகளை வைத்து ஊடக சந்திப்புக்களை கூட்டமைப்பினர் நடத்துகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் …
-
- 3 replies
- 1.1k views
-
-
முன்னணிக்கு ஆதரவளிக்க வடக்கின் ஐந்து பொது அமைப்புக்கள் முடிவு; யாழ்ப்பாணத்தில் நேற்று அறிவிப்பு July 30, 2020 நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கம், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு அகிய அமைப்புக்களே ஆதரவை தெரிவித்துள்ளன. http://…
-
- 1 reply
- 470 views
-
-
அரசாங்கத்தை அமைக்க உதவுங்கள் அமைச்சரவையில் இணைந்து கொள்ளுங்கள்- தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சம்பிக்க அழைப்பு July 30, 2020 நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு கரம்கொடுங்கள் முஸ்லீம் மற்றும் மலையககட்சிகளை போல அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆங்கில நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் ஒற்றையாட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்சவுடன் இணைந்து போட்டியிடுகின்றவர்கள் ஜனநாயக சக்திகள் இல்லை என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க மகிந…
-
- 1 reply
- 640 views
-
-
புலிகளை அழிக்க உதவிய போது வழங்கிய வாக்குறுதியை மீறிய இலங்கை அரசாங்கத்தை என்ன செய்யப்போகின்றது இந்தியா.? விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எழுப்பினார். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் …
-
- 3 replies
- 816 views
-
-
(வீரகேசரி) விடுதலைப்புலிகள் ஆட்சிசெய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள்தான் ஆளவேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்றையதினம் -29- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய தேர்தல் தொடர்பாக புரிந்துணர்வு கடிதம் ஒன்றை தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவிடம் கடந்த இருமாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் வைத்து வழங்கியிருந்தோம். அது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்ச…
-
- 3 replies
- 850 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சார்பற்ற செயலகம் உட்பட பல அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி…
-
- 3 replies
- 707 views
-
-
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை தாமதப்படுத்த ஐ.தே.க தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்தமைக்காக கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட பலர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் கட்சியுடன் இணைந்து நேர்மையாக செயற்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தாமதப்படுத்தியுள்ளது. கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர். …
-
- 0 replies
- 399 views
-
-
‘யாழ். மக்களின் பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்’ -எஸ்.நிதர்ஷன் யாழ். மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தேவைகள் மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார். யாழுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார், அமைச்சர் வாசுதேவவின் யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்த…
-
- 0 replies
- 452 views
-
-
பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரிசாட் எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதலுக்கு தனது பணம் செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் முற்றாக நிராகரித்துள்ளார். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டதாக தெரிவித்தே சில ஊடகங்கள் இன்றைய தினம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. எனினும் இது அப்பட்டமான பொய். தேர்தல் நெருங்குகின்ற நேரம் பார்த்து இவ்வாறான ஒரு பொய்யினைச் சொல்வதன் ஊடாக, தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை …
-
- 1 reply
- 456 views
-
-
சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது என சாடியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். நேற்று (28) மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக திரு.சுமந்திரன் அவர்களின் அறிக்கைகளும், பத்திரிகைச் செய்திகளும் எமக்கு அதிர்ச்சி தருவ…
-
- 18 replies
- 1.5k views
-
-
அரசியல் தீர்மானப்பிரகாரம் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்கிறது குரல் அற்றவர்களின் குரல்.! சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் எவருமே அரசியல் தீர்மானப்பிரகாரம் விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட அமைக்கப்பட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் தம்மால் பெருமளவு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்றது. இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்ட…
-
- 10 replies
- 866 views
-
-
அரசாங்கத்துக்கு நெருக்கமாக செயற்பட்டால்தான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும் – கருணா தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் ஊடாகதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியுமென முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்கள்பில் தற்போது பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மக்கள் யாருக்கு வாக்களிப்பதென்ற குழப்பத்தில் இருக்கின்றனர். நீங்கள் குழப்பமடையாமல…
-
- 2 replies
- 436 views
-
-
அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம் அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமற்போகவும் அவர்களில் பலர் கொலை செய்யப்படவும் காரணமாக இருந்தவர்கள் தற்போது தமிழர்களை மீட்பவர்கள் போலவும் தீர்வு பெற்றுத் தரப் போகின்றோம் எனக் கூறியும…
-
- 2 replies
- 573 views
-
-
இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை ஜூலை 31 முதல் தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை ஜூலை 31 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் நாடுகளில் தங்குமிட வசதிகளை இழந்துள்ளனர் என்றும் மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டிய நிலையில் சுமார் 6,000 முதல் 8,000 பேர் இருப்பதாகவும் வெளிவிவகார ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அந்தவகையில் முதலாவது விமானப் பயணம் ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 1 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். குறித்த இரு திகதிகளில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இரண்டு வ…
-
- 0 replies
- 284 views
-
-
யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக, யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த ஒல்லியார்களுக்கு 31 ஆம் திகதி மீண்டும் பாிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கை…
-
- 0 replies
- 394 views
-
-
முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழம்; வடக்கு ஆளுநர் தெரவிப்பு July 28, 2020 பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில்அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியே முறைபின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார்பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியை வடமாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் இன்று வைபவரீதியாகத் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக…
-
- 2 replies
- 596 views
-