Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு உள்ள அடிப்படை உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று புதன்கிழமை தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் கடிதமொன்றினைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது : 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்…

    • 2 replies
    • 803 views
  2. கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்டவருமான முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்தார். இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியோடு, வீடு உடைப்பதற்கு வந்தவர்கள் தாம் கிளிநொச்சி பொலிஸாரின் ஒத்துழைப்புடனே உடைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்த அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற அனுமதி இன்றி எந்த தனிநபரும் எவரினது வீடுகள் மற்றும் கட்டங்களை உடைக்க முடியாது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும்…

  3. கூட்டமைப்புக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் அச்சங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிருவாகச் செயலாளர் குமாரசாமி அருணாசலம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும், “நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை; தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை …

  4. தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி – ரிஷாட் by : Vithushagan பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருது தெரிவித்த அவர் ”குருநாகல் மாவ…

    • 0 replies
    • 360 views
  5. பிரேமதாஸ யுகத்திற்கு மீண்டும் பயணிக்க மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை அனைத்து இன மக்களும் பயம் சந்தேகமின்றி வாழ கூடிய உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கு தாமரை மொட்டிற்கு வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (21) மாலை கண்டி பாததும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு பொருத்தமான அரசியலமைப்பில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கான சக்தி கொண்ட ஒரே…

    • 0 replies
    • 415 views
  6. ஆயுள் தண்டனை கைதி கண்ணதாசனை விடுவித்து கட்டளை! – விசாரணை நியாயமற்றது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளியும், யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் முன்னாள் விரிவுரையாளருமான கண்ணதாசனை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) கட்டளை வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்த்து கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 13ம் திகதி வழக்கு வ…

  7. பேராசிரியர் ஹூல் உள்ளிட்ட நால்வரை நாளை நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை ( எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் நாளை 23 ஆம் திகதி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு, குறித்த நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி கே.கணேஷயோகனின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகளான தனுஷன் கணேஷயோகன், அனுஷா ராமன், அச்சினி ரணசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஆர். சிவேந்ரன் முன் வைத்த விஷேட விளக்கங்களை ஆராய்ந்தே வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி டி.எப்.எச். குணவர்தன, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளார…

  8. சிறீ காந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன் July 22, 2020 “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் பொது வெளியில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், கட்சியின் ஊடக பேச் சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில் தெரிவித்ததாவது; “சிறீகாந்தா தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விட்டிருக்கினறார். அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொதுவெளியில் நடுநிலை…

    • 22 replies
    • 1.9k views
  9. பிறப்புச் சான்றிதழில்... இனி இந்த விடயங்கள், உள்ளக்கப்படாது! பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தாய் – தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இணையம் ஊடாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காணிப் பதிவு சான்றிதழையும் இணையத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்பட…

  10. பெற்றோரின் திருமண விபரங்களை நீக்கி டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை! பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெற்றோரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் இலங்கையர் என குறிப்பிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிறப்புச் சான்றிதழ்களில் பெற்றோர் திருமணமானவர்களா அல்லது திருமணமாகாதவர்களா என்ற விடயம் உள்…

    • 6 replies
    • 993 views
  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன – மஹிந்த! சஜித் பிரேமதாஸ நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2005ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டில் முப்பது வருடங்கள் காணப்பட்ட சிவில் யுத்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். அதன் பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டின் அனைத்து மாகாணத்திற்கும் ஒரே முறையில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம். அதிவேக நெடுஞ்சாலைகள் உட்…

  12. இராணுவத்தின் சொற்படியே தலையாட்டுகின்றது பேரவை – மாணவர் ஒன்றியம் அதிருப்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கு.குருபரன் மீதான நடவடிக்கை தொடர்பில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது தனது சுயாதீனத்தை இழந்து நிற்கின்ற…

    • 1 reply
    • 487 views
  13. STF, புலனாய்வுப் பிரிவினர் மற்றுத் தமது ஆதரவாளர்கள் சகிதம் முன்னாள் போராளிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடைய வீடுகளுக்குச் சென்று சுமந்திரன் அவர்களுக்கு மிரட்டல்கள் விடுத்து வருவதாக பிரபல சர்வதேச மனித உரிமை ஆர்வலர் ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்: கிருபாகரன் வெளியிட்ட தகவலை உறுதி செய்வதற்காக நாங்கள் சுமந்திரனை தொர்புகொள்ள முற்பட்டபோதும், அவர் எமது தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/251503?ref=rightsidebar

  14. அரசுக்கு விருப்பம் இல்லாத தீர்வை தமிழ்க் கூட்டமைப்பு கேட்க முடியாது: மைத்திரி.! தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதற்காக அரசு விரும்பாத தீர்வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்க முடியாது." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட முதன்மை வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி வழியில் தீர்வு கேட்டு பிரிவினையை ஏற்படுத்த முயல்வதை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார். சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தே…

    • 1 reply
    • 480 views
  15. ஜனாதிபதி கோட்டா தலைமையிலான ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்ததை இரத்து செய்தால் பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும் என்றும் ஆகவே 13 ஆவது திருத்தம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப்பின் திருத்தம் ஊடாக அதிகார பகிர்வை வழங்குவதாக கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள கூடியது…

  16. ஸ்மார்ட் லாம்ப்க்கு தடை காேரிய வழக்கு தள்ளுபடி! யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (21) தள்ளுபடி செய்தது. மனுதாரரின் மனுவில் உள்ள குறைபாடு, எழுத்தாணை மனுவுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பாக திருப்தியின்மை மற்றும் மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான நோக்கம் போன்றவற்றால் இந்த எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளையிட்டார். யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்குக் தடை விதிக…

    • 2 replies
    • 744 views
  17. நாம் கடந்த நான்கரை வருடங்களில் மக்களை ஏமாற்றவில்லை அதிகாரத்தை பயன்படுத்தி மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. எனவே, பொதுத்தேர்தல் மூலம் எமது கரங்களை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி தோட்டத்தில் இன்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஆட்சியின்போது அனைத்து தோட்டங்களுக்கும் சேவைகளை வழங்கியிருந்தேன். மேலும் பல திட்டங்களையும் முன்னெடுக்கவிருந்த நில…

    • 0 replies
    • 535 views
  18. “ரிஷாட்டை அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால் மற்றவர்களின் உரிமைகளை மீறுவதாக அமையும்” by : Jeyachandran Vithushan ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ரிஷாட் பாதியுதீனை அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நேற்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத…

    • 0 replies
    • 423 views
  19. பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன் by : Litharsan சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் ‘இரத்த ஆறு ஓடும்’ என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநி…

  20. மீனவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய கடற்படை! துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று (21) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் மன்னார் பாலத்தடி கடற்கரையில் மீனவர்கள் ஒன்று திறண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர். இதுகுறித்து தெரியவருவதாவது, “மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை காவலரனில் இன்று காலை மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிய அனுமத…

  21. ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பை கைவிடுமாறு அமெரிக்க எம்முடன் பேரம் பேசியது; மணிவண்ணன் பகிர் தகவல் July 21, 2020 கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அதனைப் பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்த போது யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், பகிஷ்கரிப்பு கோரிக்கையைக் கைவிடுமாறு தம்மைச் சந்தித்து கோரிக்கைவிடுத்ததாக அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார். யாழ். திருநெல்வேலியிலுள்ள ‘திண்ணை’ விடுதிலில் தன்னையும், முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் செல்வராஜா கஜேந்திரனையும் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஜனாதிபதித் தேர்தலைக் கைவிடுமாறு தம்மை வ…

  22. தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமே இந்த கொரோனா காலம்- கருணா விடுத்துள்ள வேண்டுகோள் தற்போதுள்ள கொரோனா காலத்தை தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு, கொரோனா அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களை விட அதிகளவான பிள்ளைகளை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பெரிய நீலாவணை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், அம்பாறை மாவட்டத்தில் நான் போட்டியிடுவதற்கு பிரதான க…

  23. 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை – விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சஜித் இந்த உறுதிமொழியை வழங்கினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமாக அணுகும் அதேவேளை, சட்டத்திற்கும் கொள்கைக்கும் அமைவாகவே நாடொன்றை நிர்வகிக்க வேண்டும். அதுமாத்திர…

  24. கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைத்து கடற்படையினரும் குணமடைந்தனர்! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து, அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 06 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2730 ஆக பதிவாகியுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்ப…

  25. ஆங்கிலேயரின் தொற்று நோய் கட்டுப்படுத்தல் சட்டமே இங்கு உள்ளது சுகாதார அமைச்சரினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும். எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொரோனா கட்டுப்படுத்தலுக்கு பிரயோசனமாக அமையாது” இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். மேலும், “தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது 1981ம் ஆண்டு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொற்று நோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டமாகும். இந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது பரிச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.