Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் அரியாலை ஆலயத்தில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பரிசோதனைகள் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 16 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 46 பேருக்கு இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தாவடியைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு முறை பரிசோதனைகள் நடதப்பட்டன என்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் நல்லூர் மருத்து …

    • 3 replies
    • 417 views
  2. இலங்கை கடற்படையினர் 29 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொலனறுவை பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய கடற்படை வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மாத்திரம் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது. http://athavannews.com/30-கடற்படை-வீரர்களுக்கு-கொ/

    • 2 replies
    • 452 views
  3. 200 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அச்சிட்டுள்ளது, 400 பில்லியன் ரூபா வருமானம்| - அம்பலப்படுத்திய சம்பிக்க

    • 3 replies
    • 662 views
  4. ஏப்ரல் 21, ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, வீழ்ந்த உல்லாசப் பயணத்துறை, எழ முடியாமல் தவித்து நிக்கிறது. காத்து வாங்கும் கல்பிட்டி கடற்கரை. எங்கே அவர்கள்? இலங்கை அரசு, சீனா போன்ற பல அரசுகளை கெஞ்சி, பயண தடை அறிவிப்பினை நீக்க சொன்னாலும், யாரும் பெரிதாக வருவதாக இல்லை. இன்னும் மோசமாக, செப்டெம்பர், அக்டோபர், மற்றும் அடுத்த கிறிஸ்மஸ் வரை செய்த பதிவுகளை கான்செல் செய்து பணத்தை திருப்பி பெறுகிறார்கள். தம்புள்ள விகாரையில் ஒருவரை ஒருவர் மோதுவது போல தினமும் அலைமோதும் உல்லாசப்பயணிகள் எங்கே? நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் உல்லாசப்பயணத்தினை நம்பி, வாகனங்களை லீசுக்கு வாங்கியவர்கள் நிலை பெரிய அவலத்துக்கு உரியதாக உள்ளது. சில கிராமங்களில்…

    • 39 replies
    • 4.8k views
  5. யாழ்.மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், வெறும் 360 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை நடாத்தி சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. என கூற முடியுமா? யாழ்.மாவ ட்டம் பாதுகாப்பாக உள்ளதென கூற முடியுமா? மேற்கண்டவாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 லட்சம் வரையிலான மக்கள் வாழ்கின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 360 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அபாய நிலைமை நீ…

    • 5 replies
    • 537 views
  6. (ஆர்.யசி) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுத படைகளை கடமையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பதாக வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் மக்களை அனாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த மாற்று வழிமுறை இல்லையென ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக அதிக இடர்பாடுகளை அரசாங்கம் சந்தித்து வருகின்ற நிலையில் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த முடியாதிருக்க பிரதான காரணம் மக்களின் அனாவசிய செயற்பாடுகள் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொதுமக்களின் மத்தியில் அமைதியை பேணுவதற்காக வழமையாக படையினரை ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு க…

    • 4 replies
    • 399 views
  7. கொரோனா காலப்பகுதியில் மதுபானம், புகைத்தல் கடும் விளைவை ஏற்படுத்தும்- மருத்துவர் காண்டீபன் எச்சரிக்கை by : Litharsan கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் மதுபானம் மற்றும் புகைத்தல் போன்றன விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ சங்கம் இதனைக் கட்டுப்படுத்துமாறும் சுகாதாரப் பரிவினரை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, “ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலைமை நிலவுவதன் காரணமாக ப…

    • 4 replies
    • 1.2k views
  8. LOLC நிறுவனம் மனுஷதெரணவுடன் இணைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு இன்றையதினம் (23) LOLC நிறுவனம் மனுஷதெரணவுடன் இணைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தியிடம் பெறுமதியான சுகாதார பராமரிப்பு பொருட்களை LOLC யாழ்கிளை சிரேஷ்ட முகாமையாளர் திரு.V.R.சுதாகரன் மற்றும் சீலன் -நெல்லியடி கிளை முகாமையளார், சசிகரன்-முகாமையளார் சுண்ணாகம் அவர்களால் கையளிக்கப்பட்டது. நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பாதகமான சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதில் LOLC ஆகிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொரோனா வைரஸ் நம் ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், மனிதாபிமானமுள்ள ஒரு நிறுவனமாக எல்.ஓ.எல்.சி தனது பொறுப்புகளை…

    • 1 reply
    • 539 views
  9. (எம்.எப்.எம்.பஸீர்) வெலிசறை பகுதியில் உள்ள கடற்படை முகாம் ஒன்றினை முடக்கி தனிமைப்படுத்தியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். நேற்றையதினம் பொலன்னறுவை - புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, அவர் சேவையாற்றிய குறித்த வெலிசறை கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி குறித்த கடற்படை வீரர், பொலன்னறுவை - புலஸ்திகம பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளதுடன், அதனையடுத்து அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின்…

    • 0 replies
    • 389 views
  10. யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் தனிமைப்படுத்துமாறு உத்தரவு கொழும்பில் கோரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றிவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இவ்வாறு உத்தரவிட்டார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு -12 பகுதியிலிருந்து 8 பேர் பாரவூர்தியில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்த…

    • 0 replies
    • 335 views
  11. சட்டங்கள் மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. நாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்த அவர் மேலும் கூறியதாவது; அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவ துறையிலுள்ள சிரேஷ்ட ப…

    • 0 replies
    • 382 views
  12. அமைச்சரவையின் ஒரு மாத கொடுப்பனவு கொவிட்- 19 நிதியத்துக்கு கொவிட்- 19 நிதியத்துக்காக, அமைச்சரவையின் ஒரு மாத கொடுப்பனவை அன்பளிப்பு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அமைச்சர் மஹிந்த அமரவீரவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம், எரிபொருள் விநியோக முனையத்தில் கடமையாற்றும் சேவையாளர் சபையினரும் தமது ஒரு நாள் கொடுப்பனவை கொவிட்-19 நிதியத்துக்கு வழங்கியுள்ளனர். http://www.tami…

    • 1 reply
    • 662 views
  13. பாகிஸ்தானில் சிக்கியுள்ள இலங்கையர்களை அங்கிருந்து அழைத்துவர முடிந்தால், கொழும்பு உட்பட்ட மாவட்டங்களில் சிக்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கு ஏன் தடையுள்ளது என கருணா தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நடவடிக்கையை அரசாங்கம் செய்யுமிடத்து அவர்களைது சொந்த மாவட்டங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்திவிட்டு வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கலாம் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “தற்போது நாட்டில…

    • 2 replies
    • 441 views
  14. தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியே” – சிறிதரன் by : Jeyachandran Vithushan தேர்தலுக்காக இந்த நாடு திறந்து விடப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்றையதினம் பேருந்தில் அழைத்துவரப்பட்டு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை…

    • 1 reply
    • 353 views
  15. பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை குற்றம் சாட்ட முடியாது.! முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22) மதியம் தனது கட்சி ஆதரவாளர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் , உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பந்தம…

    • 5 replies
    • 1.2k views
  16. இலங்கையில் கொரோனாவை எதிர்த்து போராட களமிறங்கும் இந்திய இராணுவம் Report us Murali 51 minutes ago இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதவும் வகையில் இந்திய இராணுவம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுண…

    • 17 replies
    • 1.3k views
  17. சுதந்திர வர்த்தக வலயங்களிலுள்ள 217 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30,269 பணியாளர்கள், தற்போதைய நிலையில், வேலை இழந்துள்ள நிலையில் பணியாளர்களின் நலன்கருதி, 217 தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று, தொழிற்றுறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா, விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் பரிந்துரைக்கு அமைவாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேற்படி தொழிற்சாலைகளின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார். ஊரடங்குச்சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுவதால், தொழிற்சாலைகளின் பணிகளைத் தொடர விரும்பும் நிறுவனங்களுக்கு, அனுமதி வழங்குவதற்கு அரசாங்கத்தால் அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. அந்தத…

  18. ஈழத்துக் கலையுலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் 85வது வயதில் பிரான்சில் இன்று காலமானார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார். 1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ஏ.ரகுநாதன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர்இ 1947ம் ஆண்டு அங்கேயே தனது நாடகத்தை அரங்கேறினார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் நாடகக்கலையை பயின்ற இவருக்கு தேரோட்டி மகன் நாடகம் பெரும் புகழ் ஈட்டிக்கொடுத்தது. பல மேடை நாடகங்களில் நடித்த இவர் கடமையின் எல்லை என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலாக நடித்திருந்தார். ஈழத்தின் நான்காவது திரைப்படமான நிர்மலாவை இ இவரே தயா…

  19. பொதுத் தேர்தல் பிரசாரத்தில், வேட்பாளர்களின் விருப்பு இல்லகத்தில் அல்லாது, யானை சின்னத்தை மட்டும் பயன்படுத்தி பிரசாரத்தை முன்னெடுக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார் என சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமாக யானைச் சின்னம், கட்சி ஆரம்பிக்கப்பட்ட 1947ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து சகல தேர்தல்களிலும் களமிறக்கப்பட்டுள்ளது. ஆகையால், மக்களிடத்திலும் வாக்காளர்கள் மத்தியிலும் அச்சின்னத்தை புதித…

    • 1 reply
    • 398 views
  20. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இரு வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளனர். அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிட்ஸ், பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சரா ஹுல்டன் ஆகியோரே ஹக்கீமுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர். நாட்டின் தற்போதைய சமூக, அரசியல் சூழ்நிலை, சிறுபான்மையினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள், கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியம், பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதில் ஏனைய நாடுகளிலிருந்து பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவம் என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டன. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹக்கீ…

    • 0 replies
    • 373 views
  21. (செ.தேன்மொழி) கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தளர்த்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்க்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவித்திருக்கும் இலவச மருத்துவ சேவைக்கான மக்கள் இயக்கம், குறுகிய அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினால் நாட்டு மக்களும், சுகாதார பிரிவினரும் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் நிலான் பெர்ண்னாடோ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொற்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உலக…

    • 0 replies
    • 264 views
  22. (ஆர்.யசி) "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் நாட்டில் நிலவுகின்ற நிலையில் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 40 சதவீதமளவில் உள்ள வயோதிப வாக்களர்கள் குறித்து அதிகளவில் சிந்திக்க வேண்டும் என தெரிவிக்கும் பெபரல் அமைப்பு, அரசியல் அமைப்பு, அதிகாரம் என்பவற்றை விடவும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் சிந்திக்கவேண்டும் எனவும் சகல அரசியல் தரப்பையும் வலியுறுத்துகின்றது. தற்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் இது குறித்து பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறுகையில், பொதுத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது காலதாமதம் ஏற்படுமா என்ற கேள்விக்கு மத்தியிலும் அரசியல் நெருக்கடிகளை…

    • 0 replies
    • 296 views
  23. (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இறுதியாக அடையாளம் காணப்பட்ட பிலியந்தலை மற்றும் கொழும்பு 12 - பண்டாரநாயக்க மாவத்தை தொற்றாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிய விதம் குறித்து தெளிவான எந்த சான்றுகளும் சுகாதார, பாதுகாப்புப் பிரிவினரால் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது. இந் நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் அதி ஆபத்தான நிலைமையாக கருதப்படும் சமூகப் பரவல் நிலைமையை நோக்கி இலங்கை பயணிக்கின்றதா என்ற சந்தேகமும் சுகாதார அதிகாரிகளிடம் தற்போது எழுந்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கையில் சமூக பரவல் நிலைமை உள்ளதாக இதுவரை எந்த உறுதியான சான்றுகளும் கிடைக்கவில்லை என சு…

    • 0 replies
    • 370 views
  24. கரு ஜயசூரிய தலைமையில் நாளை கூடுகின்றது அரசியலமைப்பு சபை! by : Jeyachandran Vithushan முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (வியாழக்கிழமை) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. 8 வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடமபெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கரு-ஜயசூரிய-தலைமையில்-நா/

    • 2 replies
    • 519 views
  25. நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது. குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும். சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து, ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்று…

    • 1 reply
    • 469 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.