ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142960 topics in this forum
-
மட்டக்களப்பு சந்திவெளி பாலையடித்தோணா பிரதேசத்தில் நாக கன்னி ஆலயமொன்று இனந்தெரியாக நபர்களால் தீவைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பாலையடித்தோணா கடலூர் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேச மக்கள் ஏறாவூரப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தீப்பற்றியதில் ஆலயம் முற்றாக எரிந்துள்ளதாகவும் பழமையும் தொன்மையுமான இவ் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இந்து மக்களுக்கு பெரும் கவலையளிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலயம் தொடர்பாக பிரதேசத்தில் இரு குழுக்கிடையே மோதல் நிலை காணப்பட்டதாகும் அதன் காரணமாக ஆலயத்திற்கு தீ…
-
- 1 reply
- 627 views
-
-
எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் தடை! சனி, 05 மார்ச் 2011 01:08 வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் எம்.ஜி.ஆர் இன் சிலையை மீண்டும் வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் இன் சிலையொன்று ஏற்கனவே இங்கு இருந்தது. யுத்த காலத்தில் இது முற்றாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. வல்வெட்டித்துறை - தொண்டமானாறு வீதியில் இருந்த இந்தச் சிலையை திருத்தி மீண்டும் நிறுவுவதற்கு இந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மன்றத்தினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதைச் செய்ய விடாமல் இந்தப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் தடுத்துள்ளனர். tamilcnn
-
- 2 replies
- 1.6k views
-
-
வடமராட்சி தமிழரான ஜேர்மன் செனட்டர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகையாழ். அரச அதிபருடன் 2011-03-12 21:02:49 பிரபல தொழில் அதிபரும் ஜேர்மன் நாட்டின் ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சரும் (செனட்டர்) இலங்கையருமான ஐயன் கிருகரன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். பிரபல தொழில் அதிபரும் ஜேர்மன் நாட்டின் ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சரும் (செனட்டர்) இலங்கையருமான ஐயன் கிருகரன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வருகைதந்துள்ள அமைச்சர் கிருகரன் நேற்று யாழ். அரச அதிபர் மற்றும் யாழ்.வர்த்தக தொழில் துறை சார்ந்த பலரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். பருத்தித்துறையில் ப…
-
- 0 replies
- 1k views
-
-
பிந்தி அனுப்பும் சாட்சியங்களையும் விசாரணைக்குழு ஏற்றுக் கொள்ளும்! – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அறிவிப்பு. [sunday 2014-11-02 08:00] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், அமைத்துள்ள விசாரணை குழுவின் முன் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படும் கால எல்லை கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. எனினும் பிந்திக்கிடைக்கும் சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பிப்புக்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று விசாரணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் என்பவற்றை உரிய முறைக்கு கொண்டு வர இன்னும் இரண்டு மாதங்களாவது செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் சமர்ப்பி…
-
- 1 reply
- 285 views
-
-
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரி சைப்ரஸில் ஆர்ப்பாட்டம் 19 மார்ச் 2011 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரி சைப்ரஸில் ஆர்ப்பாட்டம் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரி சைப்ரஸ் நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாற்பது இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உச்ச நீதிமன்றம் குறித்த நபரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட் போதிலும் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது 15 மாதங்களாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப…
-
- 0 replies
- 866 views
-
-
ஆயுத பலமோ பண பலமோ இல்லாத எம்மால் வன்முறை ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது சமூகத்தின் முன் தீர்வுக்காக இருக்கின்ற ஒரே ஆயுதம் அஹிம்சைதான். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 8 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளை தவறென வெளிப்படையாகவே ரவிராஜ் தெரிவித்து வந்தார். அத்தோடு இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை நேரடிய…
-
- 0 replies
- 143 views
-
-
இலங்கையிலிருந்து வெளியேறும் ஜப்பான் நிறுவனங்கள் ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி(Mitsubishi) நிறுவனங்கள் இலங்கையிலுள்ள தமது அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. மிட்சுபிஷி நிறுவனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகம் எதிர்வரும் மார்ச் மாதம் மூடப்படவுள்ளதுடன் தாய்சே நிறுவனத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அயல் நாடுகளின் பிரதிநிதிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கையிலிருந்து-வெளியேறும்-ஜப்பான்-நிறு…
-
- 0 replies
- 273 views
-
-
மீனவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சியே -வைகோ தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி ரத்து செய்வார் என்று கூறியிருப்பது ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சியே என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச ரத்து செய்வார் என்று வெளியான செய்தி தொடர்பில் வினாவியபோதே வைகோ இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - சில காலங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் கடத்தி வந்தவர்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை ஆனால் அப்பாவியான 5 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசை ராஜபக்ச தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிற…
-
- 0 replies
- 686 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் நீதியான சமூகத்திற்கான இயக்கத்தின் தலைவர் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த பி;ன்னர் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாததுடன் கடும் மௌனத்தை கடைப்பிடிப்பது அரசியல் வட்டாரங்களில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஜனநாயகக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ஏற்பாட்டின் கீழ் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்-டிரான் அலஸின் தந்தையின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சர் நி…
-
- 0 replies
- 300 views
-
-
திணைக்கள அதிகாரிகளுடன் – டெனீஸ்வரன் இன்று சந்திப்பு!! வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்கு வரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சுக்குரிய திணைக்களத் தலைவர்கள், வேறு எந்தவொரு அமைச்சர்களினதும் உத்தரவுகளை ஏற்றுச் செயற்பட வேண்டாம் என்று மாகாணசபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் வர்த்தகவாணிப அமைச்சின் கடிதத் தலைப்பில், அமைச்சர் எனக் குறிப்பிட்டு அவரால்…
-
- 2 replies
- 526 views
-
-
உதவி வழங்கும் சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் உறுதி மொழிகள் எதனையும் இம்முறை வழங்கப்போவதில்லை என சிறிலங்காவின் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களின் மாநாடு எதிர்வரும் 29 ஆம் நாள் காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மாநாடு தொடர்பாக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். "மகிந்த சிந்தனையின் கீழான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனவும் தெரிவித்த ஜெயசுந்தர, "நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக உறுதி மொழிகளை வழங்குவது இம்முறை இடம்பெறப் போவதில்லை…
-
- 0 replies
- 837 views
-
-
கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷை விசாரணை செய்யும் இராணுவம்! வெள்ளி, 08 ஏப்ரல் 2011 09:02 தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் என அழைக்கப்படும் தம்பிராசா துரைசிங்கம் என்பவரை இராணுவத்தினர் விசாரணை செய்கின்ற காணொளி மனித உரிமை கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குனர் பிரேட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் இராணுவத்தினரால் தடுத்து வைத்திருக்கப்பட்டது தொடர்பான காணொளி 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக…
-
- 26 replies
- 3.8k views
-
-
புலம்பும் அமைச்சர்கள் - ஒரே பார்வையில்:- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பாரிய நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமைச்சர் சுசில்பிரேமஜயந்த சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை …
-
- 0 replies
- 718 views
-
-
இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி கண்டனம் - ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றே தீருவோம் மஹிந்த சபதம். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர நார்வே நாடு முயற்சி மேற்கொண்டது. பல முறை இரு தரப்பிலும் அமைதிப் பேச்சு நடந்தும் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதனால் உள்நாட்டுப் போர் நீறு பூத்த நெருப்பாக கனன்று வருவதுடன், அவ்வப்போது இந்த நெருப்பு கொழுந்து விட்டு எரியவும் செய்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி ஆகியவை அதிக அளவில…
-
- 3 replies
- 1.7k views
-
-
கோட்டைக்கல்லாற்றில் விபத்து மூவர் படுகாயம்! Posted by admin On April 14th, 2011 at 11:02 pm / களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று இரவு 7.45 மணியளவில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றை வான் ஒன்று முந்திச்செல்ல முற்பட்டபோது முச்சக்கர வண்டியை வான் இழுத்துச்சென்று விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியில் சென்ற சிறுமி ஒருவரும் அவரது தாயாரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தோர் பெரியகல்லாற…
-
- 0 replies
- 566 views
-
-
இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். அதேவேளை, தற்போதைய நிலையி…
-
- 2 replies
- 533 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு காலை ஏற்றப்பட்ட இலங்கை தேசியக் கொடி இனந்தெரியாதோரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இது பற்றி பதில் துணை வேந்தர், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இலங்கையின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை காலை பதில் துணைவேந்தரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது
-
- 45 replies
- 6k views
-
-
சிறிலங்கா போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கிறது என்ற ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து இந்திய பொதுவுடமைக் கட்சி [CPI] போன்ற தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் மத்திய அரசியல் கட்சிகள்கூட இந்திய அரசாங்கத்தினைச் சாடிக் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இதுவிடயம் தொடர்பாக மௌனம் காக்கின்றன. போரின் இறுதிநாட்களில் 2009ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்ற அதே காலப்பகுதியில் சிறிலங்காவில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பாக இந்தக் கட்சிகள் கத்திக் குளறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது சிறிலங்கா போர்க்…
-
- 0 replies
- 786 views
-
-
மோஹான் பீரீஸ் இன் வாயை மூடிய அமெரிக்க தூதுவர் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்திய விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீஸ் இற்கும் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீசிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மோஹான் பீரீஸ் ஐ.நாவின் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்தால் விசனமடைந்த அமெரிக்கத் தூதுவர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
–வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையிலிருந்து (06) மழை பெய்துவருகின்ற நிலையில் வெள்ளம் தேங்கி நிற்க முடியாதவாறு கடலைச் சென்றடைவதுடன், வெள்ளநீர் வடிந்தோட மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க, திங்கட்கிழமை (08) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 17.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் நவகிரி ஆற்றுப்பகுதியில் 65.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தும்பங்கேணிப் பிரதேசத்தில் 19.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வாகனேரிப் பிரதேசத்தில் 7.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உன்னிச்சைப் பகுதியில் 53.0 மில்லிமீற்றர் மழ…
-
- 0 replies
- 311 views
-
-
மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்கு கிடையாது இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் முரண்பட்டு நாட்டை அழிவுக்குள்ளாக்கியது போதும். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார். இன்றைய மாணவர்கள் எமது எதிர்காலத் தலைவர்களாவர். அவர்கள் எதிர்…
-
- 0 replies
- 268 views
-
-
ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை! Published By: Digital Desk 5 12 Apr, 2023 | 10:56 AM சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது. முதற்கட்டமாக இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரத…
-
- 85 replies
- 5.8k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளிக்கவில்லையென்பதனால் அங்கத்துவ நாடுகளிடம் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கொண்ட நாடுகளை நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அதி தீவிர கவனம் எடுக்குமாறு பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அங்கத்துவ நாடுகளின் பதில் தமக்கு தேவை என்றும் பான் கி மூன் கூறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் நேர்ஸ்கி கூறியுள்ளார். Eelanatham.Net
-
- 0 replies
- 1.6k views
-
-
புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்? Dec 12, 2014 | 15:59 by கார்வண்ணன் போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது. “குற்றச்செயல்களின் வீதம் மிக அதிகமாக உள்ளது. யாழ்.நகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான மிதிவண்டிகள் திருடப்படுகின்றன. 70 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது. பெரும்பாலும், தமிழரல்லாத சிறிலங்கா காவல்துறையினர், இதுகுறித்து கண்டும் காணாமல் இருக்கின்றனர். சிறைச்சாலையில் இ…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
பயணிகளின் உயிருடன் ஓட்டப் பந்தயம் நடத்திய தனியார், இ.போ.ச பஸ்கள் வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று 06 மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றும் வவுனியாவிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானீச்சூர் பகுதியிலிருந்து வேப்பங்குளம் 6 ம் ஒழுங்கை வரை போட்டி போட்டுக்கொண்டு வீதியில் சமமாக சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ…
-
- 0 replies
- 323 views
-