Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப நடவடிக்கை on 03-06-2009 01:16 Published in : செய்திகள், இலங்கை இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் இருப்பவர்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இலங்கையின் மறுவாழ்வு மற்றும் பேரிடர் நிவாரண சேவைத் துறை அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் மற்றும் இதரப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் இலங்கை திரும்ப விரும்புகின்றனர். அவர்களை மீண்டும் இலங்கை அழைத்து வருவதற்கான ந…

  2. 11 வயது இலங்கைச் சிறுவன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் : 09 ஜூலை 2013 11 வயதான இலங்கைச் சிறுவன் ஒருவன் அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியதனால் இவ்வாறு சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஸ்மானியா ஹோபார்ட் முகாமிற்கு அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி புர்க்கே விஜயம் செய்துள்ளார். குறித்த தடுப்பு முகாம் சிறுவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார். 11 வயதான இலங்கைச் சிறுவனை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறி…

  3. ‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?’ தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் திகதி: 08.06.2009 // தமிழீழம் ‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?' தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.06.09) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்குத் தோழர் சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) தலைமை தங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரை வழங்குகிறார். தோழர் தியகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் அன்பு தனசேகரன் (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் நாதிகன் கேசவன் (தமிழ்த் த…

  4. உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீன அமைச்சரின் வருகை அமைந்தது- சந்திரசேகரம் உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீனாவை மட்டுமல்லாது அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிள் அதிகாரப் போக்கையும் எதிர்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இலங்கை மீதான ஏகாதிபத்தியவாதிகளுடைய அழுத்தம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தற்போது புதிய போட்டிய…

    • 3 replies
    • 706 views
  5. வடக்கு மாகாணத்தில் இன்று (16) புதிதாக 55 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு மருத்துவமனையில் 8 பேருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேருக்கும் என 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வளாக மாணவர்கள் 31 பேருக்கு ஏற்கனவே சில நாள்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் போதனா…

  6. 24/06/2009, 10:49 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவிற்கு 804 மில்லியன் ரூபா உதவித்தொகை- ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவில் சிறீலங்கா அராசங்கத்தால் தடுத்து வைத்துள்ள பொதுமக்களை அவர்களது மகிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 804 மில்லியன் ரூபா உதவித்தொகையினை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையம் ஊடாகவே இந்நிதி செயற்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. எனினும் உதவிகள் சிறப்பாக சென்றடைவதற்கு சர்வதேச உதவிநிறுவனங்களுக்கு முறையான அனுமதி கிடைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். pathivu

    • 1 reply
    • 744 views
  7. ஆட்சி மாற்றத்துக்கு உதவினாராம் அஜித் டோவல் மீது பாய்கிறார் கோத்தா கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் வெளி­நாட்­டுச் செய்­தி­யா­ளர் சங்­கத்­தின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முன்­னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் சிவ்­சங்­கர் மேனன் எழு­திய நூல் மிகச் சிறந்­தது. அதில் கூறப்­பட்­டுள்­ளது போன்று, காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான இந்­திய அர­சும் இலங்­கைக்கு மிக­வும் ஆத­ர­வாக இருந்­தது. ஆனால் பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்த பின்­னர்-­அ­ஜித் டோவல் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக நிய­மிக்கப் பட்ட பின்­னர் சீனா விவ­கா­ரம் முன்­ன­ரங் குக்­குக் கொண்டுவரப்­பட்­டது. சீனா­…

  8. மொத்த விற்பனை சந்தையில் இராணுவத்தை ஈடுபடுத்தவும்-சுகாதாரப்பிரிவு பரிந்துரை 9 Views வவுனியா மொத்த வியாபார சந்தையில் இராணுவம் அல்லது விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு சுகாதார பிரிவினரால் வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரபிரிவினர் தெரிவித்தபோது, நாட்டில் சந்தைகளின் மூலமாகவே தொற்று அதிகமாக பரவி வருகின்றது. வவுனியா மொத்தவியாபார சந்தை சிறிய இடமாக இருப்பதுடன், அதிகமான சனநடமாட்டம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. குறித்த பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டாலும் காவல்துரையினரின் அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காத நிலை ஏற்பட்டு…

  9. வன்னியில் ஆயுதங்கள், பணம், நகைகள் தொகை தொகையாக மீட்கப்படுவதனால் புலிகளின் ஆட்டம் என்னவென்பது தற்போது புரிகின்றது. அதுமட்டுமல்லாது புலிகள் ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு முயன்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். தென்னிலங்கை மக்களை தமிழர்கள் அன்று இருண்ட கண்ணாடி கொண்டே பார்த்தனர். எனினும் இன்று அவநம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வீரகேசரி

    • 0 replies
    • 1.5k views
  10. இருள் நிறைந்திருக்கும் பாதையின் ஒளிவீச்சு - ச.ச.முத்து Aug 4, 2013 ஆகஸ்ட் 4, 1987..முன்னறிவித்தல் ஒன்றுடன் அவர் மக்கள்முன் தோன்றியது அன்றுதான்.அதுவும் மிகமுக்கியமான ஒரு காலகட்டத்தில்.தமிழீழத்தின் ஒரு முக்கியபகுதியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுமான வடமராச்சி மீது சற்றுமுன் சில வாரங்களுக்குமுன்னர் தான் சிங்களமுப்படைகளும் பாரிய ஒரு இராணுவநடவடிக்கையை நடாத்தி பலபகுதிகளை கைப்பற்றி இருந்தன. பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இது எல்லாவற்றையும்விட இராணுவ நடவடிக்கையில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் நினைத்துக்கொண்டிருந்த பொழுதில் தான் தமிழர்களின் வரலாற்றில் முதன்முறையான தற்கொடைத்தாக்குதல் மில்லரால் நிகழ்த்தப்பட்டு சிங்களபடைகள் முடங்கிகிடந…

  11. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாதென வலியுறுத்தி இன்று திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=26896

    • 1 reply
    • 392 views
  12. “என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது! June 23, 2021 தான் குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். நீதிமன்றத்தில் எனக்கு அரு…

    • 38 replies
    • 2.3k views
  13. தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த சிலர் வெளியே கடத்திச் செல்வது குறித்து கவனம் செலுத்துமாறு வவுனியா காவல்துறை தலைமை அதிகாரிக்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் அறிவுறுதியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 353 views
  14. வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இதுவரை இதுவரை 137 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம்; அறிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி குருநாகல் மாவட்டத்தில் இருந்து 43 முறைப்பாடுகளும்இ மாத்தளை மாவட்டத்தில் இருந்து 24 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் 28 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் தொடர்பிலான 134 முறைப்பாடு…

    • 0 replies
    • 361 views
  15. சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்லின மக்களின் பங்கேற்புடன் சுவிட்ஸர்லாந்திலும் மே தினப் பேரணி நடைபெற்றது. இதில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியிருந்தனர். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தினையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். இதன்போது விடுதலைப் போராட்டம் தொடர்பான புரட்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. தனித் தமிழீழம் வேண்டும் என்ற கோஷங்களும் எழுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special…

    • 0 replies
    • 298 views
  16. சக்தி டிவி செய்திகள் 6th May 2017, 8PM

  17. யாழ். சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி காயம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சுற்றுச் சுவர் ஏறிப் பாய்ந்து தப்பியோட முற்பட்ட கைதி சுவரிலிருந்து தவறி விழுந்து இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றுமுற்பகல் இடம்பெற்றது. மகிந்தன் என்றழைக்கப்படும் குறித்த கைதிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றங்களில் திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சிறைச்சாலைத் தரப்புத் தெரிவித்தது. “சிறைச்சாலையின் சுற்றுச் சுவர் மிக உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அவர் சுவரின் குறிப்பிட்ட உயரத்துக்கு ஏறிய நிலையில் தவறி விழுந்தார். அதன…

  18. கௌதாரிமுனை காணி பகிர்ந்தளிப்பில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் போலி அரசியலை மக்கள் புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் கௌதாரிமுனை கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்துக்களை பொருட்படுத்தாமல், நூற்றுக்கு மேற்பட்ட கௌதாரிமுனை மக்கள் இன்று(28-07-2021) ஆர்வத்துடன் வயல்காணிகளுக்கு விண்ணப்பம் செய்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை மண்ணித்தலை சிவன்கோவில் முன்னால் இறங்குதுறையடியில் மக்கள் சந்திப்பை நடத்தி, கடலட்டைப் பண்ணைகளையோ வயல்காணிகளையோ பெற்றுக்கொ…

    • 22 replies
    • 1.3k views
  19. போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தளர்வு நிலையை அடைந்திருந்த சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு செயலணிகள் உடனடியாக மீண்டும் விழிப்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 478 views
  20. விடிவு காண்கிறது மறிச்சுக்கட்டி 1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால், முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அந்த பிரதேசங்களை நீக்கி, வனப் பாதுகாப்பு பிரதேசப் பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி செயலாளர் பி.பிஅபேயகோன் இணக்கம் தெரிவித்தார். முசலி பிரதேசத்தில் மாவில்லு வனப் பாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட மாநாடொன்று , ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) காலை நடைபெற்றபோது, ஜனாதிபதி செயலாளர் இந்த இணக்கத்தை வெளியிட்டார். முஸ்லிம் இயக்களின் கூட்டமை…

  21. வடமராட்சி கிழக்கை ஹெலியிலிருந்தவாறே பார்வையிட்டார் ரணில் வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தே­சத்தை உலங்கு வானூர்­தி­யில் வட்­ட­ம­டித்­துப் பார்­வை­யிட்­டார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க, வட­ம­ராட்­சிக்கு நேற்­றுக் காலை பய­ணம் மேற்­கொண்­டார். பருத்­தித்­துறை துறை­மு­கத்­தின் கட்டுமா­னப் பணி­களை அவர் பார்­வை­யிட்­டார். 8 பில்­லி­யன் ரூபா செல­வில் 500 பட­கு­களை ஒரே நேரத்­தில் நிறுத்­தக் கூடி­ய­தாக இந்­தத் துறை­மு­கம் அமைக்­கப்­ப­டு­கி­றது. இதன் பின்­னர் மணல்­காட்­டுப் பகு­தி­யைச் சென்று தலைமை அமைச்சர் பார்­வை­யிட்­டார். அங்­கி­ருந்து உலங்­கு­வா­னூர்­தி­யில் புறப்­பட்ட தலைமை அமைச்­ச…

  22. மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானப்படை வீரர் பரிதாபமாக பலி நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கை அடுத்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டடிருந்த விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காலி நெலுவ பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 27 ரக ஹெலிகொப்டரில் பயணித்த விமானப்படை வீரர் தவறி வெள்ளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யபரத்ன என்ற 37 வயதுடைய இலங்கை விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். http:…

    • 5 replies
    • 500 views
  23. வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட 9920 மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் விழா நடைபெற்றது இதில் பசில் ராஜபக்ஷ, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட அரச உயரதிகாரிகளிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார். இந்த வைபவத்தில் ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, காவல்துறை இயக்குனர் ஜி.ஏ.சந்திரசிறி, ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி, காவல்துறை உயரதிகாரிகள், வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எச்.எம்.கே.ஹேரத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தின்போது வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப் பட்டியலின்படி, 1474 குடும்ப…

  24. நாட்டின் மூலச் சட்­டத்தை மீறி விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தற்­போ­தைய தலைவர் கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நா­த­னுடன் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருக்கும் ஜனா­தி­பதி உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் பல­ருக்கும் எதி­ராக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். தடை செய்­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத இயக்­கத்­தி­ன­ருடன் ஜனா­தி­பதி எவ்­வாறு ஒன்­றாக நின்று படம் பிடிக்க முடியும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட இயக்­க­மல்ல. அவர்­க­ளுடன் அர­சியல் ரீதி­யாக தொடர்­பு­களை வைத்­தி­ருப்­பது என்­பது தவ­றான கருத்தோ விட­யமோ அல்ல. ஆகவே அர­சாங்கம் புனர்­வாழ்வு அளிக…

  25. ஜப்பான் பயணித்தார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு ஜப்பான் நோக்கிப் பயணமானாதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 10 நாள் விஜயமாக ஜப்பான் பயணிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் யோஷித்த ராஜபக்ஷவையும் இவ் விஜயத்தின் போது அழைத்துச்சென்றுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச்சொந்தமான விமானத்தில் நேற்றிரவு 7.15 மணியளவில் 9 பேரடங்கிய குழுவினருடன் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, மஹிந்தராஜபக்ஷவின் ஜப்பான் விஜயத்துடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவினரும் வேறொரு விமானத்தில் பயணித்துள்ளதாகவும் குறித்த குழுவில் பியால் நிஷாந்தவும் பயணித்துள்ளமை க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.