Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296023

  2. சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா JUN 19, 2015 | 10:59by கி.தவசீலன்in செய்திகள் சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வரும் 29ஆம் நாள் பீஜிங்கில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்து கொள்வது த…

    • 0 replies
    • 356 views
  3. ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் March 28, 2024 உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர். டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்க…

  4. கனடாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தனை ஏஜின்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியாணிஸ் அழைத்து தமிழர் அவலங்கள் தொடர்பாக விவாதித்தார். மேலும் வாசிக்க

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே வந்துள்ளனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனைக் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சிறிலங்கா பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்பதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐரோப்பிய விஜயத்தின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப…

  6. தமிழரசுக் கட்சி வழக்கு ஏப்ரல் 24 க்கு ஒத்திவைப்பு – எதிராளிகள் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம் April 5, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் கோரியமையை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கி அந்தத் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். திருகோணமலை மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஏழு எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் தமது தரப்பு ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை எழுத்தில் சமர்ப்பித்தார். ஏனைய எதிராளிகள் தம…

    • 1 reply
    • 250 views
  7. இனவாதிகளினால் தமிழர்களின் அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகிறது – யோகராஜன் தமிழர்களுடைய அரசியல் உரிமை பற்றி தெரியாத இனவாதிகளினால் இனப் பிரச்சினை தீர்வு இழுத்தடிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தூதுக் குழுவினர் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக அமைச்சரும் ஜாதிகஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெவித்தே மேற்படி கருத்தினை யோகராஜன் தெவித்துள்ளார். அவர் மேலும் கேருத்து தெரிவிக்கும் போது, அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து சொல்வதற்கு உமை இருப்பதைப…

  8. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிப்பொத்ததானை சதாம் நகரின் மீள்குடியேற்ற கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் நேற்று வெள்ளிக்கிழமை(03) திறந்து வைக்கப்பட்டது. சீ.டி.சி நிறுவனத்தின் தலைவர் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் மௌலவி முகம்மட் நஸீர், பள்ளிவாசலை திறந்து வைத்தார். இந்நிகழ்வு, முள்ளிப் பொத்தானை அல் மஸ்ஜிதுல் ஸலா ஜூம் ஆப் பள்ளி வாயல் தலைவர் வீ.அமீர் முகம்மட் தலைமையில் இடம்பெற்றது. குவைத் நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதி பங்களிப்புடன் சீ.டி.சி நிறுவனத்தின் அனுசரணையுடனும் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. மீள் குடியமர்த்தப்பட்டு சுமார் 20 வருடங்களின் பின்னரே பள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilm…

    • 0 replies
    • 231 views
  9. அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்ற போதும் அது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்காமையினால் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதில் சட்டச்சிக்கல்கள் நிலவுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  10. டக்ளஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி வேட்புமனுத் தாக்கல்Jul 10, 2015 யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. டக்ளஸ் தேவானந்தாவை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வேட்புமனுவில் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற, முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன், புதுமுகமாக ஆசிரியர் இரா.செல்வவடிவேல் இடம்பெற்றுள்ளார். ஈபிடிபி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்- டக்ளஸ் தேவானந்தா முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) பசுபதி சீவரத்தினம் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் (ரங்கன்) சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் (…

  11. தேசியப் பட்டியலில் றோ உளவாளியாம்! - விலகிக் கொண்டார் நளின் டி சில்வா[Wednesday 2015-07-15 19:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகி கொண்டுள்ளதாக பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் இருப்பதன் காரணமாகவே தான் அதில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் றோ அமைப்பு மற்றும் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்புகள் இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன எனவும் நளின் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெ…

    • 1 reply
    • 374 views
  12. ஏமாற்றாதே ஏமாறாதே... என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் என்ற சினிமாப் படத்தில் வரும் பாடல் வரிகளாகும். நம்ப நட, நம்பி நடவாதே என்ற பழமொழியைப் புதுப்பித்து கவிஞர் வாலி கொடுத்த புதுவடிவமே மேற்போந்த பாடலாகும். ஏமாற்றுதல் மிக மோசமான கொடுஞ்செயல். அதிலும் நம்ப வைத்து ஏமாற்றுதல் என்பது நம்பிக்கைத் துரோகம் என்பதன் பாற்பட்டதாகும். நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் ஏழு பிறப்புக்கும் தங்கள் பாவத்தை கழுவாய் செய்ய மாட்டார்கள் என்று சமயதத்துவங்கள் கூறிநின்றாலும் இன்னமும் நம்பவைத்து ஏமாற்றுகின்ற நாடகங்கள் மனித சமூகத்தில் நடக்கவே செய்கிறது. அதிலும் ஏமாற்றுகின்ற வடிவங்கள் வேறுபட்டவையாக இருப்பதுதான் விசித்திரம். இப் போதெல்லாம் ஏமா…

  13. தேர்தலுக்கு பின்னர் தங்களின் கொள்கைகளையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்கின்ற கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் போச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போதைக்கு கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. இந்த முறை தேர்தலில் பிரதமானமாக இரண்டு விடயங்களை கூட்டமைப்பு முன்னிலைப்படுத்துகிறது. நீண்டகாலமாக தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வு, மற்றையது காணாமல் போனோர், அரசியல் கைதிகள் போன்றோருக்கான தீர்வும் மீள்குடியேற்றமும். இந்த விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கின்ற கட்சியுடன் கூட்டணி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.http://www.pathivu.…

    • 0 replies
    • 473 views
  14. வவுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடுவீடாகச் செல்கின்ற இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், திருமணமாகாத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசாருக்கோ கிராமசேவை அதிகாரிக்கோ அல்லது கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கோ அறிவிக்கப்படாமல் இராணுவத்தினரால் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் இருப்பவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் திரட்டப்படுவதுடன் திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் பிரதேச பொலிஸார் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் த…

  15. சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் தாக்குதலுக்கு இலக்காயிருக்கும் அநுராதபுரம்: ஐ.தே.க. சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச அரசின் ஆட்சிக்காலத்திலேயே அனுராதபுரம் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது..விபரங்களுக்கு

    • 3 replies
    • 3.4k views
  16. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது. சீன இராணுவத்தின் அதிகாரிகளுக்கான பிரதித் தலைவர் ஜெனரல் மா ஹிசியாவோரியன் தலைமையிலான உயர் மட்டக்குழுவே கொழும்பு வந்துள்ளது. ஜெனரல் மா ஹிசியாவோரியன் கடந்த ஆறு மாதங்களில் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். சிறிலங்காவுக்கு நிபுணத்துவப் பயற்சிகள், போர் ஒத்திகைகள், மேலதிக இராணுவ உதவிகளை ஊக்குவிப்பதே இந்தக் குழுவினது பயணத்தின் நோக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் உயர் மட்ட இராணுவக் குழுவினர் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை இன்று சந்தித்து பேசவுள்ளது. இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் க…

  17. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும் மனித உரிமை செயட்பட்டளருமான சின்னமணி கோகிலவாணி ,கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் செல்வன் விமல் , மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றும் போது ;- விடுதலை போராட்டத்திற்கு இம் மண் பெரும்பாலான இளைஞர், யுவதிகளை பெரும் தியாகங்களை செய்திருகின்றனர், எம் மக்கள் சொத்து உடமைகளையு…

    • 1 reply
    • 493 views
  18. (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்க…

  19. திங்கள் 29-10-2007 18:15 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் - மன்னார் முன்னரங்க நிலைகளில் மோதல் யாழ் முகமாலை, மற்றும் மன்னார் முன்னரங்க நிலைகளில் தமது படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று காலை மோதல்கள் இடம்பெற்றிருப்பாதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியிருக்கின்றார். இந்த மோதல்களின்போது தமது படைத் தரப்பில் இருவர் காயமடைந்திருப்பதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் நால்வர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது. எனினும், சிறீலங்காப் படையினரின் இந்தக்கூற்று தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும், சுயாதீனா வட்டாரங்களில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  20. வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட எல்லா விடயங்களும் உண்மையானவையா என்பதை கண்டறிவதற்காக இன்னொரு ஆணைக் குழு தேவையென்று எவரும் கேட்க மாட்டார்கள். அதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழு அரசிற்கும் படைத்தரப்பிற்கும் எதிராக அல்லது பாதகமாகவும் தனது அறிக்கையை தயாரிக்க முடியாது. அவ்வாறானதொரு அறிக்கை வெளியிடப்படுமாக இருந்தால், நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெற்றவர்களுக்கு நடந்தது என்ன? விசாரணை வேண்டும். பக்க சார்பற்ற ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோசங்கள்…

  21. வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர் சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினசை, கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார். ஐ.நா உதவசிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, நி…

  22. யாழ். முகமாலையில் சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.2k views
  23. (ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி சிறப்புரையை நிகழ்த்தினார். இதில் அவர் கூறுகையில். இந்த பிரச்சினை இலங்கையின் பிரச்சினை அல்ல இது சர்வதேச …

  24. கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 நவம்பர் 2007 ( 11:23 ) இலங்கை அரசு அளித்த தகவலின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கை பிரதமர் விகரமனாயகே கடந்த வாரத்தில்இ விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளில் தென் இந்திய கடலோரப்பகுதியில் சில ஈடுபட்டு வருவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்இ இலங்கை பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து இந்திய தூதர் தினகர் அஸ்தானா பேட்டியளித்துள்ளார். அதில், இதுபோன்ற தகவல்கள் தங்களுக்கு வரவில்லை என்றும், எனினும் இலங்கை அரசு அளித்துள்ள தகவலின்படி, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் …

  25. களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு சந்தியில் அமைந்துள்ள பலசரக்கு கடைகள், உணவகங்கள் என்பவற்றை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் முற்றுகையிட்டு பரிசோதனை செய்தனர். இவ்வாறு சோதனை செய்த போது அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பான (சோடா) வகைகளை பரிசோதனை செய்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பான சோடா போத்தல் ஒன்றினுள் எலியின் மலம் காணப்பட்டது. இதே போன்ற இன்னு மொரு சோடாபோத்தலில் நுளம்புகள் காணப்பட்டன. பொது சுகாதார பரிசோத கர்களான எஸ். யோகேஸ்வரன் (களுவாஞ்சிகுடி பிரிவு), கே. இளங்கோவன் (களுதா வளை பிரிவு), கே. சிவசுதன் (செட்டி பாளையம் பிரிவு) ஆகியோர் களுவாஞ்சிகுடி போலீசாரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.