Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம்உத்தரவு விடுத்துள்ளத. நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து ஆளுனர்களுக்கும் பதவி விலகுமாறு அறிவுறுத்திய உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முன்னாள் ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெளிவுபடுத்துகையில், 13 ஆவது அரசியலமைப்பு திருத்த்தின் படி ஜனாதிபதி தனது விருப்புக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப ஆளுனர்களை நியமிப்பார். ஆளுனர்களின் பதவி காலம் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களை நியமித்த ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் போது குறித்த ஆளுனர்களும் இயல்பாகவே பதவி விலகியவர்களாகக் கருதப்படுவர். எனினும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிர…

    • 0 replies
    • 228 views
  2. நவ சிங்கள ராவய அமைப்பு கலைக்கப்படும் – மாகல்கந்தே சுதந்த தேரர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளமையினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூடிய விரைவில் புதிய பாராளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் ஜனாதிபதியிடமும் எதிர்க்கட்சி தலைவரிட…

  3. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் தெரிவி…

    • 2 replies
    • 497 views
  4. புதிய ஜனா­தி­பதி அர­சியல் கைதி­களை விடு­விப்பார் - அருட்தந்தை சக்­திவேல் (ஆர்.விதுஷா) தமிழ், - முஸ்லிம் மக்­களை தம்­முடன் ஒன்­றி­ணை­யு­மாறு ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ஷ அழைப்பு விடுத்­தமை வர­வேற்­கத்­தக்­கது என்று தெரி­வித்த அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான தேசிய இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர் வண. பிதா சக்­திவேல் புதிய ஜனா­தி­பதி தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்பார் என நம்­பு­வ­தா­கவும் தெரி­வித்தார். ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்த­பாய ராஜ­ பக்ஷ பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து அரசியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான அமைப்பின் நிலைப்­பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனை தெரி­வித்தார். …

  5. இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு விஷேட அழைப்பு விடுத்து இருபக்க அறிக்கையினை வெளியிட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது : தமிழகத்தி…

  6. இலங்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: விடுதலை புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவர் - விரிவான தகவல்கள் 47 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 7வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். வரலாற்ற…

  7. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டில் ஆங்காங்கே சில இனவாதிகளால் எமது சிறுபான்மை சமூகத்தின் இளைஞர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இனவாதத்துக்குத் துணைப்போகும் அனைவருக்கும் எமது எச்சரிக்கை என்றும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது; ஆனால் வெற்றியின் போதையில் அவர்களின் எல்லையைக் கடந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் வெற்றிக்கொண்டாட்டங்களில், சிறுபான்மை மக்கள் வதைக்கப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தீர்கள…

  8. கோத்­தாபயவின் வெற்­றியில் மலை­யக மக்­களை பங்­கா­ளி­யாக்­கி­யது இ.தொ.கா. கோத்­த­பாய ராஜபக் ஷவை மிகப் பெரிய பூச்­சாண்­டி­யாகக் காட்டி அவ­ரது வெற்­றியைத் தடுக்க முனைந்­த­வர் கள் இப்­போது தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள். இந்­நி­லையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­யவின் வெற்­றிக்கு தோள் கொடுத்து மலை­யக மக்­களை வெற்­றியின் பங்­கா­ளர்­க­ளாக்கி இருக்­கின்­றது. இதன் மூலம் எமது மக்கள் பல்­வேறு சாதக விளை­வு­க­ளையும் பெற்றுக் கொள்­வது உறு­தி­யாகும் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையின் தேர்தல் வர­லாற்றில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் மிகவும் மு…

  9. ஜனாதிபதியான மறுநாளே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள கோட்டா! 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார். குறிப்பாக தான் பயணம் செய்யும்போது வீதிகளை மூட வேண்டாம் என்றும் தனது பாதுகாப்பிற்கு இரு வாகனங்கள் இருந்தால் மட்டும் போதும் என்றும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியின் ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இவ்வளவு காலமாக செயற்பட்டுவந்த பல ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 1200ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையினை 200ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் குறைத்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews…

  10. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப் பணம் இழந்தனர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வ…

  11. தர்மத்தைக் காப்பாற்ற யுகம் தோறும் நான் அவதாரம் எடுக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. ஆக, இங்கு தர்மம் என்பது மிகவும் முக்கியமானது. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் தர்மம் பின்பற்றப்பட வேண்டும். இல்லை யேல் அதுவே மிகப்பெரும் பாவமாகும். இதனாலேயே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிறார் இளங்கோ அடிகள். எனினும் அரசியல் பிழைத்ததை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் காண முடிந் தது. இதை நாம் கூறுவதற்காக தேர்தலில் அறம் பிழைத்ததாக யாரும் கருதிவிடக் கூடாது. மாறாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவை நம்பவைத்து தோற் கடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வஞ் சகத்தனத்தையுமே இங்கு நாம் குறிப்பிடுகின் றோம். ஆம்,…

  12. பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததும், பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படுமென, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ராஜகிரிய பிரதேசத்தில் இன்று (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய தேரர், சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும், இந்த நாட்டுக்கு இப்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள …

    • 4 replies
    • 875 views
  13. புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் மேற்கண்டவ…

  14. (நா.தனுஜா) எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததும், சற்றும் தாமதிக்காமல் சூட்கேஸுடன் வெளியேறினார். அவ்வாறு செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது என்ன செய்கின்றார்? பிரதமர் என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உரிமை அவருக்கில்லை. அரசியல் இராஜதந்திரம…

  15. இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பின்பற்றும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனாவின் கடற்கலங்கள் எதனையும் கோத்தபாய ராஜபக்ச தனது நாட்டிற்குள்அனுமதிக்கமாட்டார் என புதுடில்லி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாகயிருந்தவேளை மூத்த ராஜபக்ச சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தமை குறித்து இந்தியா கடும் சீற்றமடைந்தது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தொட…

    • 11 replies
    • 907 views
  16. (எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் மினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.virakesa…

    • 5 replies
    • 917 views
  17. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ, கண்டி ஸ்ரீ தலதமாளிகைக்கு, நாளை (20) காலை விஜயம் செய்து, மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இதன்போது அவர், மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரரையும் கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கத் தேரரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து அவர், ராமக்ஞ நிக்காயவின் மஹாநாயக்க தேரரையும் கெட்டம்பே ராஜோபவனாராம விஹாரையின் விஹாராதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மலையகம்/ஜனதபத-கடட-தலதமளககக-நள-வஜயம/76-241217

    • 0 replies
    • 416 views
  18. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந் நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/69284

    • 0 replies
    • 654 views
  19. முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் சற்று முன் தனது 88வது வயதில் காலமானார். இவர் உடல்நலக் குறைவுக் காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/69280

    • 0 replies
    • 473 views
  20. சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே…

  21. தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும், தமிழர்களும் முஸ்லிம்களும், இந்நாட்டிலேயே வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கிப் பிடித்துக்கொண்டு, வெவ்வேறு நாட்டவர்களைப் போன்று பயணிக்க இந்நாட்டுக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் பயணிக்க முடியாதென்று சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கை எங்கள் தாய்நாடு. நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள், கல்விக் கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நாம் காட்ட வேண்டும். வழியைத் தேடவும் வேண்டும்” என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தனது பேஸ்புக்கில் கணக்க…

    • 0 replies
    • 878 views
  22. அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் இராஜினாமா 12:06 am November 19, 2019 0 206 Views ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக ரணவக்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டது முதல் இடம்பெற்றுவரும் அமைச்சர்களின் இராஜினாமா தொடரிலேயே அமைச்சர் சம்பிக்கவும் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/192614/

    • 1 reply
    • 569 views
  23. -க. அகரன் எதிர்வரும் காலங்களில் இளைஞர் - யுவதிகளை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்த ஈழவர் ஜனநாயக முண்ணனியின் தலைவர் க. துஷ்யந்தன், அவர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து, தமிழ் - சிங்கள மக்களிடையே சகோதர ஒற்றுமையை உருவாக்கி, தமக்கு இருக்கின்ற அடிப்படை, தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார். வவுனியாவில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடனான சந்திப்பின் போது, விரிவாக பேசியிருந்ததாகவும் அதற்கு பசில் சாதகமான பதில்களை தமக்கு வழங்கியிருந்தா…

    • 3 replies
    • 542 views
  24. ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். “தமிழ் அரசுக்கட்சியினர் இவ்வளவு தூரம் குத்திடியடிச்சும் 13 இலட்சம் வாக்குகளால் கோட்டாபய வெற்றி பெற்றுள்ளார். நீங்க…

  25. இலங்கை நேரம் காலை 08:00 இன் போது: சஜித் பிரேமதாச 9,99,720 (48.69%) கோட்டாபய 9,12,534 (44.44%) அனுரகுமார 66,054 (3.22%) சிவாஜிலிங்கம் 8,566 (0.42%) ஏனையவை 66,467 (3.24%)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.