ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
தமிழ் மாணவன் முதலிடம் பிடித்தமைக்கு மகிந்தவே காரணமாம் !! தமிழ் மாணவன் முதலிடம் பிடித்தமைக்கு மகிந்தவே காரணமாம் !! வடக்கில் சைனைட் குப்பியை கழுத்தில் மாட்டிச் சென்ற பிள்ளைகள் புத்தகப்பையை சுமக்கும் நிலையை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவே உருவாக்கினார். ஜி.சி.ஈ. உயர்தரத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமைக்கு மகிந்த ராஜபக்சவின் அடித்தளமே காரணம். இவ்வாறு முன்னாள் பொருளாதார அபிவி…
-
- 0 replies
- 362 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 மன்னார் முருங்கனில் மீளக் குடியேறியுள்ள சிங்களவர்கள் தமக்கு மேலதிக காணிகளை வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக் கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. போருக்கு முன்னர் அவர்கள் அங்கு வாழ்ந்தவர்கள் என்று அரசாங்கம் கூறியிருந்தது. தமக்குத் தேவையான காணிகளை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடிப்பதாக வும், இதனால் தாம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதன் காரணமாக தமது நண்பர்களின் வீடுகளிலேயே பலர் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மீளக்குடியேற…
-
- 0 replies
- 592 views
-
-
இலங்கையர்களுக்கு தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் news தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு பல தசாப்தங்களின் பின்னர் சாதி சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. புத்தூர் மற்றும் சுலியா மாவட்டங்களின் குடியிருப்புகளில் வாழும் இலங்கையர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=790543222314688634#sthash.igwUeWTQ.dpuf
-
- 0 replies
- 282 views
-
-
தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை அமைக்க நடவடிக்கை தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை அமைக்க நடவடிக்கை தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை அமைக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் கச்சாய் துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள சாளம்பன் தீவுப்பகுதியில் சுற்றுலா மையத்தை அமைக்க மாகாண முதலமைச்சு அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியை நிர்மாணம…
-
- 0 replies
- 221 views
-
-
லங்காதீப பத்திரிகையின் கண்டுபிடிப்பு வெளிநாட்டுத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிரபாகரனின் `ஈழம்' பற்றி அக்கறையில்லை 1983 ஆம் ஆண்டிலிருந்து காலத்துக்காலம் ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தற்போது சுமார் எட்டு இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையான தமிழ் மக்களிடையே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தக் கால கட்டத்தில் இயங்கி வந்த பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளான இளைஞர்கள், யுவதிகளும் அடங்கியிருந்தனர். இப்பொழுது அவர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். கடந்த 23 வருடங்களாக யுத்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டு வந்த போதிலும் அவர்களால் தனியான தமிழ் நாட்டை அமைக்கும் கொள்கையில் வெற்றி பெற முடியவில்லை…
-
- 6 replies
- 3.2k views
-
-
-எம்.றொசாந்த் வடக்கிலே சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியாத நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையினை எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்இ கடந்த 60 வருடங்களாக இந்த மண்ணிலே சிங்கள அரசு எதனை செய்து வந்ததோ அதனையே இன்றும் செய்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட போத…
-
- 0 replies
- 301 views
-
-
உள்ளூராட்சி தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகு…
-
- 0 replies
- 509 views
-
-
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்கள்! இலங்கையின் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலையான அரசியலில் இருந்து அது வெகு தொலைவில் உள்ளது. அத்துடன் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து கடன் நிவாரணம் பெற வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுவதாக ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் யதார்த்தமாக மாறுவதற்கு பல கட்டங்கள் இருக்கின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவார். ச…
-
- 0 replies
- 140 views
-
-
கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள் பல மில்லியன் டாலர் செலவில் குற்றங்கள் நடந்து முப்பது வருடம் கழிந்த பின் நடக்கும் கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள் நெருக்கடி நிலையை எட்டி விட்டன இவ்வளவும் போதும் நிறுத்து என்று கம்போடியாப் பிரதமர் கூன் சென் ஐநா செயலாளர் நாயகத்தைக் கேட்டுள்ளார். பிரதமரே போர்க் குற்றங்களோடு தொடர்புடையவர். அவர் விசாரணைகளைத் தொடர வேண்டாம் என்று சொல்வதில் தனிப்பட்ட காரணம் இருந்தாலும் பழையதைத் தோண்டுவதால் நாட்டு மக்களின் ஒற்றுமை பாதிக்கப் படுவதாக அவர் சொல்லும் காரணத்தில் ஓரளவு நியாயம் உண்டு. என்றாலும் அவர் சொல்லும் காரணத்திற்காக போர்க் குற்றவாளிகளை விசாரணையின்றித் தப்பிச் செல்ல விடமுடியாது இன அழிப்புப் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் த…
-
- 2 replies
- 649 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர். http://www.puthinappalakai.com/view.php?20140723110939
-
- 21 replies
- 1.8k views
-
-
புனித மக்காவில் இலங்கையர் ஐவர் மரணம் வீரகேசரி இணையம் 11/20/2010 9:51:06 AM இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இம்மரணங்கள் இயற்கையானவை எனவும் அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறையைச் சேர்ந்த இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை. அடையாளங் காணப்பட்ட பின்னர் ஜனாஸாக்களை கூடிய விரைவில் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. ஏற்கனவே காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்து, அவரது ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெர…
-
- 0 replies
- 537 views
-
-
புதிய பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வாரம் நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது. தேசிய பொருளாதார சபை இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார முகாமைத்துவத்தின்போது நாட்டுக்குத் தேவையான துரித மாற்றங்கள் மற்றும் தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. எட்டாவது முறையாக கூடியிருக்கும் தேசிய பொருளாதார சபை நாட்டின் தேசிய பொருளா…
-
- 0 replies
- 415 views
-
-
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து எட்டு தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் படகினையும் மீட்டுள்ளனர். ஒரு படகில் 8 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பினுள் நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை , அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 08 மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். யாழில் 8 தமிழக மீனவர்கள் கைது | Virakesari.lk
-
- 2 replies
- 530 views
-
-
புலிகள் எந்தநேரமும் தாக்கலாம் படையினர் அச்சம் சிறிய படகுகள் மூலம் தரையிறக்கம். திருமலை நகரைக் கைப்பற்றுவதற்கான படை நகர்வை, எந்த நேரமும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மூதூர் - சேருநுவர ஆகிய பகுதிகள் மீது தொடுக்கப்பட்டமை போன்று, அதிரடியாக திருமலை நகர் மீது பாரிய வலிந்த படையெடுப்பொன்ற தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா அரச தரப்பினர் மத்தியில் நிலவுகின்றது. மூன்று நாட்கள் உக்கிர சமர்களை மேற்கொண்டு சிறீலங்கா படையினருக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அதிரடியாக பழைய நிலைகளுக்கு திரும்பியமை, தற்போது அரசாங்கத்தை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பொழிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் தெரியவருகின்றது. தற்போது எமக்கு கிடைத்த யாழ் நகர்பகுதியின் 3.30 மணி நிலவரப்படி முக்கிய இடங்களின் வெள்ளக் காட்சிகள் தங்களின் முன். thx http://www.newjaffna.com/fullview.php?id=MTA3MQ==
-
- 2 replies
- 1.1k views
-
-
"வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருகின்றது. ஜனநாயகத்தை அழித்து மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் இந்த ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி முகம் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம்." - இவ்வாறு சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் சமூகக் கூட்டமைப்பு கொழும்பு சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதில் கருத்துத் தெரிவித்த அனைத்து வகையான மாறுபாடு மற்றும் இனவாதத்திற்கான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டவை வருமாறு: "வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர். தமது உ…
-
- 0 replies
- 385 views
-
-
வடக்கில்... சிறுவர் இல்லங்களுக்கு, தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு ! பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள குழந்தைகள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பின்னால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் தெரிவித்தார். அரசாங்கம் எதிர்க…
-
- 0 replies
- 171 views
-
-
Sri Lanka's President Rajapakse cancels his Oxford Union visit over "security concerns". Channel 4 News last night revealed new footage of an alleged massacre of Tamil prisoners in Sri Lanka. President Mahinda Rajapakse was due to speak on Thursday at the Oxford Union. However, the Union issued a statement today cancelling his visit "due to security concerns". "Due to security concerns surrounding Mr Rajapakse's visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address," the statement read. The Union added that it maintained a "politi…
-
- 72 replies
- 7.2k views
-
-
மஹிந்தோதய திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்பவியல் ஆய்வுகூட கல்வி முறைமையில் மேல்மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு இடமளிக்காமல் மத்திய கல்வியமைச்சு இனவாதத்துடன் செயல்படுகின்றது. இது சம்பந்தமாக மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்தவுடன் கடிதம் மூலமும் நேரடியாகவும் எனது கண்டனத்தை தெரிவித்த போதும், வேறு நோக்கங்களை முன்வைத்து தனது இனவாதத்தை வெளிப்படுத்துகின்றார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது, இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைந்திருப்பது கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளின் நலனைக் கருத்திற் கொண்டேயாகும். அதேபோல் பொருளாதா அபிவிருத்…
-
- 0 replies
- 303 views
-
-
வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார். வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வசந்த முதலிகே சிறையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியதையும் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அரசாங்கமே செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். https://athavannews.com/2022/1303040
-
- 0 replies
- 322 views
-
-
பளை, பூநகரியிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடப்பெயர்வு [வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 20:39 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்திய எறிகணை வீச்சு மற்றும் கிபிர் விமானங்களின் குண்டுத்தாக்குதல் காரணமாக பூநகரி மற்றும் பளைப் பிரதேசங்களைச் சேர்ந்த 3,351 குடும்பங்களைச் சேர்ந்த 15,100-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். பளை மற்றும் பூநகரி பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் ஜெயபுரம் மற்றும் கிளிநொச்சி, முல்லை மாவட்டத்தில் தங்கியுள்ளனர். http://www.eelampage.com/?cn=28284 நலன்புரி நிலையங்களில் தங்கி உள்ளவர்களை விட உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் தமக்கான பதிவுகளை மேற்கொள்ளாவிடில் தமது …
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வருகிறார் செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2010 07:28 பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார். எதிர்வரும் 18ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ள கதிர்காமர் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காகவே அவர் சிறிலங்கா வரவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடி தோன்றியுள்ளது. இதன் காரணமாக பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் தனது சிறிலங்காவுக்கான பயணத்…
-
- 0 replies
- 584 views
-
-
ஊடகங்கள் பக்கச் சார்பான செய்திகளை வெளியிடுவதுடன் ஏனையவற்றை இருட்டடிப்பு செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டுகின்றார். யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவூட்டும் கருத்தரங்கு ஒன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டதனால் கடந்த காலங்களில் மக்கள் கசப்பான நிலையை எதிர்கொண்டதாகவும் எனவே அவ்வாறான நிலை மீண்டும் எழுந்துவிடக் கூடாதாம் என ஊடகவியலாளர்களிடம் முதலைக் கண்ணீர் வடித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=760973319411503571
-
- 0 replies
- 277 views
-
-
மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம், பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை, அப்பகுதியிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும் மன்னாரில் உள்ள முஸ்லிம்களின் பள்ளி வாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச தனியார் போக்குவரத்து…
-
- 1 reply
- 198 views
-
-
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் பொதுமன்னிப்புக் காலத்திற்குள் சரணடையாத சேவையிலிருந்து தப்பியோடிய கடற்படையினரை கைது செய்வதற்கென நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா கடற்படை அதிகாரி சோமதிலக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். சேவையை விட்டுச் சென்றமைக்காக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை என்பதால் இந்தக் காலப்பகுதியில் சேவையில் இணைந்து கொள்வதே மதிநுட்பமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். puthinam.com
-
- 1 reply
- 952 views
-