Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார் வீரகேசரி இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாக பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவயிலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: தமிழீழத்தை விரைவில் பிரகடணப்படுத்த வேண்டிய தேவையில் புலிகள் இருக்கின்றனர். இதனடிப்படையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி, தமீழழம் பிரகடனம் தொடர்பான அறிவித்தல…

  2. யாழ்.குடாநாட்டிற்கு தொடர்ந்தும் படையெடுத்து செல்லும் ராஜதந்திரிகள் மத்தியில் நோர்வே தூதரும் யாழ் சென்றுள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ள நோர்வே தூதரும் அவரது குழுவினரும் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இதேவேளை குடாநாட்டின் பல்வேறு தரப்புகளையும் குழுவினர் சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர். கடந்த வாரம் பிரிட்டன் துணை தூதர் உள்ளிட்ட குழுவினர் இதே போன்று குடாநாட்டிற்கு சென்று பல்வேறு தரப்பகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். உண்மையான கள யதார்த்தத்தினை கண்டுகொள்ளவே இந்த விஜயங்கள் தொடர்வதாக நம்பப்படுகின்றது. குறிப்பாக மீள்குடியமர்வு முன்னாள் போராளிகளது நிலை என்பவை பற்றியும் குழுவினர் ஆர்வம் காட்டிவருகின்…

  3. பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி ஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார். இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிக்கு அமைவாக எமது அனைவரினதும் பாதுகாப்பு கருதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையினை எமது மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் விசேடமாக நகர் புறங்களிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/54687

  4. விவாதம் தொடர்பாக அனுரவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை! ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார குழு விவாதத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், தலைமைத்துவ விவாதத்திற்கான பிரேரணையை தமது கட்சி எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்விரு விவாதங்களில் முதலில்…

  5. இந்தியாவைச் சுற்றி சுருக்குக்கயிறு போன்ற வியூகம் அமைத்து வரும் சீனா! இலங்கையிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் சீனாவின் செல்வாக்கு யாராலும் கணிப்பிட முடியாதளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சீன இராணுவ பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் கொழும்பு வந்திருந்த அதேவேளை, இந்து சமுத்திரத்தில் உள்ள செஷெல்ஸ் தீவில் கடற்படைத்தளம் ஒன்றை அமைக்கும் முடிவை சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இராணுவ அதிகாரிகளின் பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் மிகவும் முக்கியமானதொரு இராணுவ அதிகாரி. அவரது கொழும்பு வருகை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியதொன்று அல்ல. சீன விமானப்படையைச் சேர்ந்த அவர் இப்போது ஒட்டுமொத்த இராணுவ அதிகாரிகளுக்கும் பிரதித் தலைவராக இருப்பவர். …

    • 4 replies
    • 1.7k views
  6. ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற எமது கட்சியின் கொள்கையில் தேசம் என்பதை தனிநாடு என்ற ரீதியில் சில அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் திரிபுபடுத்திக் கூறி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திங்கட்கிழமை (03) தெரிவித்தார். ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோஷம் எனவும் அது அர்த்தமில்லாது எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'இது அடிப்படையில் நேர்மையில்லாத பிரசாரம். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரு நாடு, ஒரு தேசம் என்பதை வலியுறுத்தி வந்தது. பலாலி வ…

  7. வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு – வடக்கு பாடசாலைகளில் சிசிடிவி : May 1, 2019 வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து உள்ளூர் தீவிராவத அமை…

  8. வாகன புகை பரிசோதனை! உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை இன்று (05) முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர். இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303182

  9. தாஜுதீன் கொலையில் தனது மகனுக்குத் தொடர்பில்லையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்AUG 09, 2015 | 12:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்துடன் தனது மகனுக்குத் தொடர்பிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச தொடர்புபட்ட மும்முனைக் காதல் விவகாரத்தினாலேயே, வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “தாஜுதீன் மரணம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதை வரவேற்கிறேன். ஏனென்றால், எமது பெயரை இதிலிருந்த…

    • 0 replies
    • 385 views
  10. பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரமழான் நோன்பு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த கூடாது என சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரமழான் நோன்பை நிறைவு செய்த பின்னர் இரவில் இடம்பெறும் மத நடவடிக்கைகளின் நேரத்தை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது https://newuthayan.…

  11. உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்பவர்களின் உன்னத பணியை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இரத்த தானம் செய்பவர்கள் தினத்தின் கருப்பொருள் ‘கொடையாளர்களுக்கு நன்றி’ என்பதாகும். தேசிய இரத்த கொடையாளர் விழா இன்று (14) காலை 10.00 மணிக்கு கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்ததான நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303724

  12. ஜே.வி.பி.யை உடைத்து அதில் ஒரு பிரிவினரின் வாக்குகளின் மூலம் தமது வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  13. இந்தியா பாதுகாப்பு ரீதியாக சிறிலங்காவில் தங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் Business Standard இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுடனான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளன. ஆனால் அவர்கள் எப்போதும், விடுதலைப் புலிகளின் கொள்கையை பிரபாகரன் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றபோது கூட நன்றாக இருந்தனர். சிறிலங்காவுடன் இருதரப்பு உறவுகளைப் பேணிக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் எந்தக் குழுவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே உதவி வழங்கவில்லை. பாதுகாப்பு ரீதியாக, நாங்கள் சிறிலங்காவில் தங்கியுள்ளோம். அங்கு பாதுகாப்புப் பற்றிய பாரிய கவலைகள் உள்ளன. அவை இந்தியப் பெருங்கடலில் இரு நா…

  14. வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை கடந்த தேர்தல்களில் எமது மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக்காட்டினர். இம்முறையும் அதனை எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். எனினும், தீர்வை நாம் விரைவில் பெற மாபெரும் வெற்றி இம்முறை எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த வெற்றிச் செய்திக்காக சர்வதேச சமூகம் காத்திருக்கின்றது. எனவே, 17ஆம் திகதி காலையிலேயே தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். "தமிழ்…

  15. இனவாத தாக்குதல் – தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாயல்களுக்கு இனவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. முஸ்லிகளின் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாயல்கள் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் செய்திகள் கவலையளிப்பதாகவும் ஊரடங்கு சட்ட நேரத்திலும் பாதுகாப்பு தரப்பினர் வன்செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.http://www.dailyceylon.com/182696/

    • 1 reply
    • 582 views
  16. சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம் எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார். நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற வகையில் ஜனாதிபதி கொண்டிருக்கும் அனுபவங்களுக்கமைய எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் அறிவுரை யாதென மட்டக்களப்பு மாவட்ட இளையோருடனான சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு”கோல்டன் ரிவர்” ஹோட்டலில் நேற்று (22) நடை்பெற்ற இளையோர் அணி சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். இந்தச் சந்…

    • 0 replies
    • 246 views
  17. தென்னிலங்கை அரசியல் சமூகம் நேரடியாகவும் தனது முகவர்கள் மூலமாகவும் வேட்பாளர்களைக் களமிறக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைப் பறிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை எமது மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து தகர்த்தெறிந்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு மகத்தான வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். இதற்காக வடக்கு-கிழக்கு வாழ் சகல தமிழ் மக்களுக்கும் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் குறிப்பாக எனது வெற்றிக்காகவும் பலநூறு இளைஞர்களும் யுவதிகளும் நண்பர்களும் தோழர்களும் கல்விச்சமூகத்தினரும் பொது அமைப்பைச் சேர்ந்தவர்களும் கடுமையாக உழைத்தனர். எனது வெற்றிக்கான …

    • 11 replies
    • 1.1k views
  18. அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார். வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெ…

  19. புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகாSEP 03, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இன்று சந்தித்தார். புதுடெல்லியில் இன்று ஆரம்பமான அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் போதே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. பாஜக ஆதரவு விவேகானந்தா அனைத்துலக நிறுவகம், ரோக்கியோ பவுண்டேசன், அனைத்துலக பௌத்த சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாட்டை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் இதில் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் சிறிலங்கா, தாய்லாந்து, மொங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள…

  20. நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் உண்மையான பின்னணியை ஆராயாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி அவர்களை ஓரம்கட்ட முற்பட்டால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும் என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் எச்சரித்தி ருக்கின்றார். முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் நாட்டில் முஸ்லீம் – சிங்கள இனக் கலவரம் வெடிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை வழங்கியது முஸ்லிம்களே. அவர்களே எமக்கு உதவினார்கள். எனினும் இன்று நடக்கும் விடயங்களை அவதானிக்கையில் இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழும் முஸ்லிம்களும் பிரிவினைவாதிகளாக மாறுவதற்கு வாய்ப…

    • 0 replies
    • 447 views
  21. 23 JUL, 2024 | 01:44 PM ஒரு நாட்டின் குடிமக்களின் மனித வள மூலதன வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய சிறந்த திட்டம் கிராமத்திலும் நகரத்திலும் அமைந்து காணப்படும் பாடசாலைகளை வலுப்படுத்துவதாகும். பிள்ளைகளுக்கு தரமான தரத்திலான சர்வதேச கல்வியை வழங்குவதன் மூலம் ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்மார்ட் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மனித மூலதனத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு பணியாளர்கள் எமது நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்து, அந்நியசெலாவணியை ஈட்டித் தருகின்றனர். Health care given எனும் தொழிற்துறையின் கீழ…

  22. Posted on : 2007-12-07 குப்பைக் கூடைக்குள் இலங்கையை தூக்கிக் கடாசும் சர்வதேச சமூகம் உலக நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பான ஐ.நா.குறித்து தென்னிலங்கை கொடுக்கும் விளக்கங்கள் வியாக்கியானங்கள் நகைப்புக்கிடமானவை. வேடிக்கை விநோதமானவை. அவசரகால மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பிரதிச் செயலாளரை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் "பயங்கரவாதி' எனச் சித்திரிக்கின்றார். நாட்டில் அரச ஆசீர்வாதத்தோடு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமைக்காக ஸேர் ஜோன் ஹோம்ஸ் "பயங்கரவாதிகளின்' பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக, யுத்தத்தில் சிக்கிய சிறுவர்களின் நலனைக் கவனிக்கின்றார் ராதிகா …

  23. 30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள் எங்கு இருந்­தீர்கள், எப்­பி­ர­தே­சத்தில் நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று நாங்கள் கேட்­ட­தில்லை. நீங்கள் யார் என்­ப­த­னை­யெல்லாம் மறந்­து­விட்டு நண்­பர்­க­ளாக, சகோ­த­ரர்­க­ளா­கவே பழ­கினோம் என்று மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்­ப­கு­மார தலை­மையில் மாவட்ட செய­லக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளி­களின் குடும்…

    • 1 reply
    • 1.2k views
  24. Published By: RAJEEBAN 02 AUG, 2024 | 11:28 AM இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவரீதியிலான உதவிகளை வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார். எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கை மரபுசார் மரபுசாராத அச்சுறு…

  25. இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர், வெட்ட வெளியில், கொட்டும் மழையில் 2 நாட்கள் பரிதவித்தனர். அவர்களை போலீஸார் மீட்டு முகாமில் சேர்த்தனர். இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு படகில் தமிழகத்திற்குத் தப்பி வந்தனர். இவர்கள் படகில் வந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார். அப்போது பலத்த மழை கொட்டியது. இரு குழந்தைகளுடன் இந்த 6 பேரும் வெட்ட வெளியில், மழையில் நனைந்தபடி இரு நாட்கள் பரிதவித்தனர். தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் விரைந்து சென்று இவர்களை மீட்டு விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.