ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
"நீல உடை" அணிந்த... யாழ். மாநகரசபை ஊழியர்கள், மீண்டும் பணியில். நல்லூர் மகோற்சவ திருவிழாக்களின் போது, நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நல்லூர் மஹோற்சவம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆலய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் தற்போது …
-
- 0 replies
- 253 views
-
-
'நெஞ்சு கொதிக்கும் அளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும், ஓராயிரம் செய்திகள் வருகின்றன இலங்கைத் தமிழர் படும் அவதிகள் பற்றி' நெஞ்சு கொதிக்கிறது மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'நெஞ்சு கொதிக்கும் அளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும், ஓராயிரம் செய்திகள் வருகின்றன இலங்கைத் தமிழர் படும் அவதிகள் பற்றி' என்று 1958 ஆம் ஆண்டே குறிப்பிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், உலகில் தமிழர்கள் எங்கு பாதிப்புக்கு உள்ளானாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு என்ற கருத்தையும் நமக்கு வழிகாட்டியாக விட்டுச் சென்றுள்ளார். தமிழர் நலன் காக்க குரல் கொடுக்கும் அரசு பேரறிஞர் அண்ணா அவர்களின் கரு பொருளாதாரத் தடை கோரினோம் இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை வித…
-
- 1 reply
- 503 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த யுத்த சூனிய வலயம் என்ற ஆவணப்படத்தை திரையிட்ட மனித உரிமை செயற்பாட்டளர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய - கோலாலம்பூர் பகுதியில் குறித்த ஆவணப்படத்தை திரையிட்ட மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் மீதே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=93214&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 498 views
-
-
தமிழீழ மாணவர் எழுச்சி நாள், நோர்வே ஒஸ்லோ நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் இளையோர் நடுவத்தின் ஆரம்ப நாளாகவும் இது அமையபெற்றிருந்தது. நிகழ்வினை முல்லை நிசாந்தன் தொகுத்து வழங்க, பொதுச்சுடறேற்றலைத் தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வின் பொதுச்சுடரினை சட்டவாளர் ஸ்டெஇனர் ஸ்டென்வாக் ஏற்றிவைக்க, தியாகி பொன்.சிவகுமாரனின் திருவுருவபடத்திற்க்கான மலர்மாலையினை நோர்வே தமிழ் இளையோர் நடுவ இணைப்பாளர் திரு. மேனன் அணிவித்து ஈகைச்சுடரினையும் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து, இதே நாளில் வீரச்சாவினை தழுவிய மாவீரர்களான லெப்.கேணல் அன்பு/அம்மா, லெப்.கேணல் சாள்ஸ், லெப்.கேணல் டேவிட் ஆகியோரின் …
-
- 0 replies
- 724 views
-
-
இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில் - ஆக்கபூர்வமாக - துணிச்சலாக - பகிரங்கமாக - அச்சம் இன்றி - ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று எனக்கு உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் பெருமிதம் வெளிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
"இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 289 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங் கியிருக்கின்ற செட்டிக்குளத்தில் உள்ள மனிக்பாம் முகாமில் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சர்வதேசமனிதாபிமான அமைப்புகள்சுட்டிக்காட்டுகி
-
- 1 reply
- 655 views
-
-
Posted on : 2007-06-09 "படுமுட்டாள்தனமான நடவடிக்கை!' பல தரப்பிலும் இப்படித்தான் விமர்சனம் கொழும்பு தங்குமிட விடுதிகளில் இருந்து ஈழத் தமிழர் களைப் பலவந்தமாக வெளியேற்றும் இலங்கைப் பாதுகாப் புத் தரப்பினரின் அடாவடித் தனமான நடவடிக்கைக்கு எதி ராக உயர்நீதிமன்றமே இடைக்காலத் தடை விதித்து விட்டிருக் கின்றது. இவ்விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவான பச்சாதாப உணர்வு இனம், மொழி, மதம் கடந்து இலங்கைத்தீவு முழு வதும் ஒரே சமயத்தில் பீறிட்டுப் பிறந்திருப்பதையும் உணர முடிகின்றது. இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு அரசின் பாதுகாப்புத்துறை மேற்கொண்ட தீர்மானம் குறித்து இலங்கை யின் எந்தத் தரப்பிலிருந்தும் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்தத் தலைவர்களிடமிருந்தும் வந்த ஒரே கணிப்பு இது தான்: ""இது …
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுக்கள், வான் தாக்குதல்கள் இடப்பெயர்வுகள் மத்தியில் மாணவர்கள் உயர்தரத்தேர்வுக்கு தோற்றிக் கொண்டிருப்பது சவாலான விடயம் என்று கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 559 views
-
-
"பட்டினி போட்டு சரணடைய வைக்க முடியாது!" - சுப.தமிழ்ச்செல்வன் சூடு பறக்கும் பேட்டி... "ஈழ விடுதலைப் போராட்டம் என்பது எமது தேசியத் தலைவர் பிரபாகரனால் ஒரு கைத்துப்பாக்கியோடு துவங்கி வைக்கப்பட்டது. நீதியான, நியாயமான விடுதலைப் போரை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்து, பலம் கொண்ட ஒரு போராளி அமைப்பாக இதை வளர்த்தெடுத்திருக்கிறார். ஈழவிடுதலையின் தீரத்தில் இதுவரை 18,842 மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக் கிறார்கள். இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் போராளிகள் ஈழ விடுதலை நெருப்பை நெஞ்சில் சுமந்தபடி ஆயுதங்க ளோடு நிற்கிறார்கள், களத்தில்! விடுதலைப் புலிகள் அமைப்பு துவங்கப்பட்ட இந்த முப்பதாண்டுகளில் கடந்துவந்த பாதைகளையும் சோதனையான காலங்களையும் தியாகங்களால் நீந்திக் கடந்திருக்கிறோம். எமது த…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றஞ்சாட்டிப் பதவி பறிக்கும் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தனது பணிகளை முடித்துக்கொண்டுவிட்டால் கூட அதனை விசாரணைக்காக அழைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்று ஓய்வுபெற்ற நீதியரசரான சி வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். பிரதம நீதியரசரின் விவகாரம் குறித்த வழக்கு ஒன்று குறித்து விசாரணைக்கு வருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அது குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த அந்த தெரிவுக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள், தமது தெரிவுக்குழுவின் விசாரணைகள் முடிந்து, அது குறித்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றம் ''தெரிவுக்குழு உ…
-
- 0 replies
- 399 views
-
-
"பண்டோரா" ஆவணங்களில்.... சிக்கிய, நிருபமா ராஜபக்ச.... டுபாய்க்கு பறந்தார் ! முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். பண்டோரா வெளியிட்ட உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275295
-
- 1 reply
- 245 views
-
-
"தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து தெற்கு மக்கள், தெற்கு அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்ம்" விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில விடயங்களில் அரசாங்கத்துடன் இணைந்தே தமது மாகாணசபை செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்பதன் மூலம்…
-
- 0 replies
- 485 views
-
-
"பதவியை வழங்க அவர் முட்டாளும் அல்ல வாய்ப்பை நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல" (லியோ நிரோஷ தர்ஷன்) தலைமை பதவியை வழங்குவதற்கு அவர் முட்டாளும் அல்ல அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சோடிக்கப்பட்ட பொய்யாக பல கருத்துக்கள் உலாவுவதாகவும் குறிப்பிட்டார். சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை தருவதாக கூறியதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு வழங்குவதற்கு அவர்கள் முட்டாள்களும் அல்ல. அதே போன்று அவ்வாறானதொரு வாய்ப்பு வரும் போது நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
-
- 0 replies
- 320 views
-
-
"பயங்கரவாத ஒழிப்பும் அரசின் தீர்வுத்திட்டமும்" -தவச்செல்வன்- தீர்வுத்திட்டம் ஒன்றை அரசு முன்வைக்கப் போவதாக கூறப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. பதட்டமடையத் தொடங்கியுள்ளது. மறு புறத்தில் டக்ளஸ் தேவானந்தா ஏமாற்றப்பட்டு விடுவோமோ என ஆதங்கப்படத் தொடங்கியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணசபைத் திட்டத்தை அரசு முன் வைக்கும் எனவும், இதன்போது மாகாண முதல் அமைச்சராக டக்ளசே இருப்பார் எனவும் மகிந்தர் ஏற்கவே டக்ளசிடம் ஒரு விருந்துபசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை பூரணமாக நம்பிய டக்ளஸ் தேவானந்தா தானே வடக்கு, கிழக்கின் முதலமைச்சர் என கற்பனை பண்ணியதும் அல்லாமல், அதை வெளிப்படையாகவும் ஊடகங்களிற்கு கூறமுற்பட்டார். வடக்கு கிழக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்படாமல் தானே முதல்வராக இருப்பேன் எனவும்,…
-
- 0 replies
- 845 views
-
-
"பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் 158 தமிழர்கள்" இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விவாதமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனடிப்படையில், 103 கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இப்படியான கைதிகளில், 14 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், ஆன…
-
- 0 replies
- 269 views
-
-
"பயங்கரவாதத் தடைச் சட்டம்" குறித்து.. பிரித்தானியா கவலை! பயங்கரவாதத் தடைச் சட்டப் பயன்பாடு குறித்த தகவல்கள் தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளிற்கான மதிப்பிற்கு முரணான விடயம் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1295794
-
- 1 reply
- 214 views
-
-
சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப்போர் கிட்டத்தட்ட முற்றுப்பெறும் நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் இன்னொருபுறத்தில் போர் என்ற பெயரில் தற்போதைய அரசு தமிழ் இனத்தைக் களைவதன்மூலம் மிகப்பெரிய மனித அவலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு "த சன்டே இந்தியன்" இதழின் பிரதம ஆசிரியர் அரிந்தம் செளத்ரி அவர்கள் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தனது ஆய்வில் குறிப்பிட்டிருப்பவை வருமாறு:- வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இனப்படுகொலை. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான போரில் இன்று 250,000 தமிழர்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றார
-
- 0 replies
- 933 views
-
-
பா.கிருபாகரன், டிட்டோ குகன்: பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருக்காமை தொடர்பில் ஆராய்வதற்காக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் இடைநிறுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று மேற்படி சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா பேச ஆரம்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரோசி கருணாநாயக்கவே முதலில் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் பற்றி ஒழுக்கப் பிரச்சினை கிளப்பினார். ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ரவி கருணாநாயக…
-
- 1 reply
- 423 views
-
-
Posted on : 2007-06-07 "பரதேசி'களின் பிடியில் கொழும்பு அரச நிர்வாகம் அமெரிக்காவும் இலங்கையும் இந்த வருடத்தில் தமக்குள் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் பாதுகாப்பு சேவைகள் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி நாடாளுமன்றத்தில் கோரியிருக்கின்றது ஜே. வி. பி. தங்களை சிவப்பு வர்ணக் கோட்பாட்டைப் பிரதி பலிக்கும் இடதுசாரிகளாக அடையாளப்படுத்தும் ஜே. வி. பியினர், அதை உறுதிப்படுத்துவதற்காகவேனும
-
- 0 replies
- 1.3k views
-
-
"பலாலி விமான சேவையை முன்னெடுக்க இந்திய விமான நிறுவனங்கள் குறித்து ஆராய்கிறோம்" இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் பலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவையை முன்னெடுக்க முடியுமான சில இந்திய விமான சேவை நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்து தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற பீம்ஸ் டெக் கூட்டுறவு மாநாட்டு அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; இந்த பீம்ஸ் டெக் அமைப்பின் முக்கிய நோக்கமாக மக்களுக்கிடையிலான தொடர்பே காணப்பட…
-
- 0 replies
- 257 views
-
-
2010-09-19 12:34:26 [views = 1112] "அண்ணன் சுவிஸ்ல தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை" அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது. எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி வடிவேலு பாணியில் அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை. எமது இனத்தின்…
-
- 11 replies
- 2.9k views
-
-
"பழைய சம்பவங்களை மறந்து விட்டதா இந்தியா?" – கேள்வி எழுப்பும் சிங்களத் தேசியவாதிகள் [ திங்கட்கிழமை, 23 மே 2011, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை இந்தியா ‘பணிய வைக்கும்‘ காரியத்தை மேற்கொள்வதாக சிங்களத் தேசியவாதிகள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவு பற்ற…
-
- 2 replies
- 939 views
-
-
"பாதீட்டில் ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடுகளை எதிர்ப்போம்" (நா.தனுஜா) எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், அவரது அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிராக வாக்களிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஒன்றிணைந்தே பதவியில் அமர்த்தினோம். அவருடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுத்ததுடன், நாட்டில் பல்வேறு மாற்றங்களையும் மேற்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் கடந்த ஒக்டோபர் மாதம் எமக்கும், அவருக்கும் எதிராக இருந்த அரசியல் அணியுடன் இணைந்து இந்…
-
- 0 replies
- 196 views
-
-
சிறிலங்கா வான்படைக்கான மிக் வானூர்தி கொள்வனவில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரின் நெருங்கிய உறவினரால உதயங்க வீரதுங்க ஆகியோர் எத்தகைய முறைகேடுகளைச் செய்தனர் என்று சிங்கள வார ஏடான "ஞாயிறு இருதின" அம்லப்படுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 936 views
-