ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
சமாதான முயற்சிகளுக்கான முன்னாள் அனுசரணையாளரும், நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம், அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு அதிகாரபூர்வமான முறையில் தமது ஆட்சேபனையை வார இறுதியில் நோர்வேயிடம் தெரிவித்திருக்கின்றது. கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரக உயர் அதிகாரியிடம் இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரசின் ஆட்சேபனையை வெளிப்படுத்தியதாக வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தமது ஆட்சேபனையை நோர்வேயிடம் தெரியப்படுத்தியிருந்தது. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் 4' தொலைக்காட்சியில் வெளியான தமிழ் இளைஞர்களை சிறிலங்காப் படையினர் சுட்ட…
-
- 0 replies
- 539 views
-
-
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டமான வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் தி;ட்டப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அபிவிருத்தித் திட்ட பொறுப்புக்களை வட மாகாணசபையில் ஆட்சி பீடமேறும் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 22ம் திகதி வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம், மாகாணசபை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார…
-
- 2 replies
- 700 views
-
-
9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தை நிறுத்தினால் எமக்கு ஆட்சேபனை இல்லை ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு நமது நிருபர் முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரித்து ஒன்பதில் ஒரு பங்கை ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள். சரிசமனாக இராணுவத்தை நிறுத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து உரையாடியபோது இவ் வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில…
-
- 1 reply
- 222 views
-
-
ஜப்பானிய அனைத்துலக வானூர்தி நிலையத்தில் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் விரல் ரேகை நேற்று சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டதுடன், அவர் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். மிக முக்கிய நபர்களுக்கு (விஐபி) வழங்கப்படும் மதிப்பு பிரதமருக்கு ஜப்பானின் நரிட்டா வானூர்தி நிலையத்தில் வழங்கப்படவில்லை என்றும் சாதாரண பயணிகள் பின்பற்றும் நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார் எனவும் அவருடன் வானூர்தியில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்தார். ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் சென்றுள்ளார். கோபேயில் இருந்த ஜப்பானிய ஆலயம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டி …
-
- 0 replies
- 491 views
-
-
புத்தமதத்தை கண்டுகொள்ளாதிருப்பதே ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு காரணம் போலி தெய்வங்களிடம் குறைகளை கூறாமல் புத்த பெருமானை பிரார்த்தனை செய்யுங்கள் என்கிறார் ஞானசாரர் (க.கமலநாதன்) நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு புத்த மதத்தினை கண்டுகொள்ளாமல் இருப்பதே காரணமாகும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அதர்ம ஆட்சி நிலவுகின்றது அதனால்தான் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. எனவே போலி தெய்வங்களிடம் குறைகளை கூறாமல் அனர்த்தம் நேரக்கூடாது என உண்மை தெய்வமான புத்த…
-
- 0 replies
- 160 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானோர் – பரிந்துரைகளை முன்வைக்க குழு நியமனம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் மூவரடங்கிய இந்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1236121
-
- 4 replies
- 360 views
-
-
கோருகிறார் புலிகளின் முன்நாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதவழங்குனருமான KP தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என புலிகளின் முன்நாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதவழங்குனருமான கேபி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று கிளிநொச்சி திருவையாறு செஞ்சோலையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கேபி வட்டுக் கோட்டை தீர்மானம், ஒஸ்லோ உடன்படிக்கை ஆகியவற்றின் மறு வடிவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் என அறிவித்துள்ளார். அவரது ஊடக சந்திப்பு தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில்... http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96684/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 511 views
-
-
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (19). இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு விமான மூலம் சென்னை வந்துள்ளார். விசா முடிந்த பின்னும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில்; சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், முல்லைத்தீவு மாவ…
-
- 0 replies
- 204 views
-
-
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறிலங்கா அரசு வெற்றிகரமாக தோற்கடித்ததற்காக அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினால் கொழும்பு இலக்கு வைக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
வாக்குப்பெட்டிகளுடன் சென்ற வாகனங்களை மோதி சென்ற வாகனத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் அந்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர். வாக்களிப்பு நிறைவடைந்து வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்சென்றுக்கொண்டிருந்த போதே கடுவலை மேயர் பி.எச். புத்ததாஸவின் வாகனம் அந்த வாகனங்களுடன் மோதியுள்ளது. சிலாபம் வட்டக்கள்ளி என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடனும் அவரது வாகனம் மோதியுள்ளது. இதனால் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10…
-
- 0 replies
- 295 views
-
-
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் சாவு 30 வயதைக் கடந்த ஒரு லட்சம் பேர் தடுப்பூசி பெறவில்லை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு! வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக் காரணமாக இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், கடந்த ஓகஸ்ட் மாதம் 228 பேரும், இந்த மாதம் முதல் 12 நாள்களில் 169 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த வர்களில் அநேகமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களே தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் மூலமாக கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும், உயிரிழப்பையும் தவிர்க்கவோ, குறைக்கவோ கூடியதாக இருக்கும். எனவே அனைவரும் தடுப்பூசி பெற்…
-
- 0 replies
- 335 views
-
-
எதிர்வரும் 30.09.2013. திங்கட்கிழமை புறுக்சலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் பிரான்சு மற்றும் ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் கலந்து கொண்டு பலம் சேர்க்க வேண்டும் என்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக்கொள்கின்றது. தாயகத்தில் நடந்து முடிந்த வடமாகணத் தேர்தலில் தமிழீழ மக்கள் சர்வதேசம் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிகளவிலான வாக்குகளை அளித்து தமது ஆள்மன எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ள ஒர் பலமான வேளையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக தொடர்ந்து தொடர்ந்து சர்வதேசத்தின் கதவுகளை பல வழிகளில் சென்று மிகப்பலமாக தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் உயிரையும், உடமையையும் துச்சமென நின…
-
- 0 replies
- 252 views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிரமதானப் பணிகளில் இராணுவத்தினர் முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையினரால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை இராணுவத்தினரால் குறித்த ஆலயத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வது வழமையாக காணப்படுவதோடு குறித்த பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/…
-
- 1 reply
- 346 views
-
-
நான் வஹாப்வாதி அல்ல. இஸ்லாமில் வஹாப் வாதம் இல்லை. முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கும் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என வினவிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நபி அவர்கள் எனக் கூறியமையால் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது என்றார். நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தப்போகும் குழுவும் தனக்குத் தெரியும் எனவும், எந்தநேரத்திலும் தாக்குதலை மேற்கொள்ள …
-
- 3 replies
- 508 views
-
-
பிரித்தானியாவில் தமிழரின் உரிமையை நோக்கிய TLAP முதலாவது மாநாடு. நேற்றுமுன் தினம் ( 29-09-2009 ) பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர்கள் நலன் பேணும் அமைப்பாக TLAP எனும் புதிய அமைப்பின் முதலாவது மாநாடு சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழர்கள் அல்லாத வேற்று இனத்தவர்களான சட்டத்தரணிகளும் , மனிஉரிமை அமைப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு லண்டனில் உள்ள றெட்லயன் ஸ்குயர் எனும் பகுதியில் அமைந்துள்ள கொன்வே மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 19:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வினை மற்பூட் Mr. Matt Foot ( Human Rights Lawyer, Birnberg, Peirce & Partners ) அவர்கள் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். அதன…
-
- 0 replies
- 849 views
-
-
வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென TNA கோரிக்கை 01 அக்டோபர் 2013 வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைவீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதனையே தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகளவில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினர் படை முகாம்களுக்கு வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியின் பின்னர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்…
-
- 0 replies
- 384 views
-
-
வடமாகாணசபையின் நிலைப்பாடு தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானத்தினால் முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார் என அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார். கொழும்பில் மாற்று திறனாளிகளுக்கு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தொர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சரை பார்த்து முழு நாடும் இன்று பிரம்மித்து போயிருக்கின்றது. கடந்த காலத்தில் அவரை பார்த்து கேலி செய்தவர்கள் எல்லாம் இப்பொழுது வாயடைத்து போயுள்ளனர். காரணம் விக்னேஸ்வரன் தனது மாகாண சபையில் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட போது தயக்கமின்றி விசாரணை குழுவை அமைத்து அறிக்கை…
-
- 0 replies
- 271 views
-
-
இலங்கைக்கு... விஜயம் மேற்கொள்கின்றார், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் குறித்த விஜயம் அமைய உள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கையில் தங்கிருப்பார் எனவும் இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம் தான், இந்தியாவும் இலங்கையும் பலதரப்பட்ட பிரச்…
-
- 0 replies
- 297 views
-
-
தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதனையும் எதிர்ப்போம் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதற்கெதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். அந்நிலைப்பாட்டில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக எவரும் செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. இது தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஏற்பாடு செய்த “பெளத்த பக்தி கீதம்” இசைக்கும் நி…
-
- 0 replies
- 246 views
-
-
வடமாகாணத்தின்... புதிய ஆளுநராக, ஜீவன் தியாகராஜா நியமனம்? வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றி வருகின்ற நிலையில் ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய அவர் தற்போது வகிக்கும் பதவியை இராஜினாமா செய்து வட மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1243607
-
- 4 replies
- 981 views
-
-
போராட்டங்களை நடாத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற தகவல்கள் போலியானவை எனத் தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமாவு நடைபெறும் காலப்பகுதியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பாதாகை இடுதல், கறுப்பு கொடியிடல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 653 views
-
-
மலேசியாவில் 100 இற்கு மேற்பட்ட தமிழீழ தமிழர்கள் சட்ட ரீதியற்ற முறையில் இருப்பதாக அவர்களை தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது மலேசிய அரசு. தடுத்து வைக்கப்பட்ட இம் மக்கள் தாயகத்தில் யுத்த சூழல்களால் இடம்பெயர்ந்து அங்கு வந்தவர்கள். இவர்கள் உத்தியோக பூர்வ ரீதியாக மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு அனுமதி கோரி பல தடவைகள் விண்ணப்பித்தாலும் மலேசிய அதிகாரிகள் அதற்கு அனுமதியளிக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தில் தம்மை அகதி தஞ்சம் வேண்டி பதிவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தடுத்து வைக்கபட்டோரில் 06 பேர் உண்ணா நோன்பு இருந்து வருகின்றனர். இந்த விடயமாக மலேசியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர் திரு கனகராசா அவர்கள் தெரிவிக்…
-
- 0 replies
- 405 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய பிளேக், கடந்தவாரம் வொசிங்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். செரன்டிபிடி எனப்படும், சிறிலங்காவில் பணியாற்றிய அமெரிக்க தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அங்கம் வகிக்கும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக், …
-
- 0 replies
- 591 views
-
-
இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளை இடைநிறுத்த வேண்டும் – விமல் கட்சி பரிந்துரை இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு கூடியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்தார். மேலும் புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சிமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளின் மாகாண சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவ்வாறு மாற்றப்படும் அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்பு…
-
- 1 reply
- 339 views
-
-
சிங்கப்பூர் எதிர்கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபல வர்த்தகருமாகிய பல்தெவ் நாயிடு வயது 47, இவர் கடந்த செப்டெம்பர் 22 ம் திகதி சிங்கபூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆயுத தரகராக கடமை ஆற்றினார் என்ற அமெரிக்காவின் தகவல்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தற்போது ஆறு வகையான குற்ற சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதில் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்கியமை, இராணுவ தொழில் நுட்பங்களை வழங்கியமை ஆகியனவும் உள்ளடங்கும். இந்த இரு விடயங்களையும் அமெரிக்காவில் விசாரணை செய்ய அமெரிக்கா கோரியுள்ளது. எனவே அமெரிக்காவில் இந்த வழக்கை திரு நாயிடு எதிர்கொ…
-
- 0 replies
- 620 views
-