Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் Sep 11, 20190 வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது காணாமலாக்கப்பட்டவர்களுக்காக யாழில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அந்த அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை.இந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி எதிர்வரும் 14 யாழில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். …

  2. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியுமென அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக இன்று இரவு அமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச அலரி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுற்ற நிலையில் அலரிமாளிகைக்கு வெளியில் நின்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமை…

  3. சவேந்திர சில்வா நியமனம் குறித்து மனித உரிமை பேரவையில் கவலை இலங்கையின் இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது கனடா ஜேர்மனி மொன்டிநீக்ரோ வடமசெடோனியா பிரிட்டன் ஆகியநாடுகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நாடுகளின் சார்பில் பிரிட்டனின் சர்வதேச மனித உரிமைகளிற்கான தூதுவர் ரிட்டா பிரென்ஞ் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றது என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கரிசனையினை பகிர்ந்துகொள்வதா…

  4. வாக்கு வேட்டைக்காக தமிழ் மக்களை பந்தாட இனி எவருக்கும் இடமளிக்கப் போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நாட்டை ஆட்சி செய்த ஆட்சியில் இருக்கின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும், அதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், உண்மையாக செயற்படுகின்ற புதிய முகம் ஒன்று வந்தால், ஆதரவு வழங்க தயார் என்றும் அவர் தெரிவித்தார். என்றபிரைஸ் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி கூடத்தை நேற்று பார்வையிட வந்த ஈ.சரவணபவன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சர்வகட்சி மாநாட்டை நடாத்தி பின்ன…

    • 3 replies
    • 859 views
  5. இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மக்கள் தங்களின் நாட்டிலேயே ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ நடை முறை சாத்தியமான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பான மாநகர மண்டப கட்டிட நிர்மாணம் அரசியல் நோக்கம் கொண்டு செய்யப்படவில்லை.அதில் எவ்வி…

  6. -எஸ்.நிதர்ஷன் தமிழர்கள் சுதந்திரத்துக்காகவே போராடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஆகையால் தமிழர்களின் உரிமைகள் உரித்துகள் வழங்கப்பட்டு, சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறினார். அத்துடன், நாட்டில் தற்போது தேர்தல் வரவிருப்பதால், பலரும் பல தீர்வுகளை முன்வைத்து பொய்களைச் சொல்வார்கள் என்பதால், சரியான முடிவை எடுத்து செயற்பட வேண்டுமெனவும், அவர் கூறினார். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசலை எனும் வேலைத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதியை, நேற்று (09) திறந்து வைத்து உரையாற்…

  7. பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் -வர்த்தமானி வெளியீடு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2140/15 என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் நியமனம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. …

    • 2 replies
    • 705 views
  8. ஜனாதிபதித் தேர்தலுக்கு 17 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாவது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகள் எழுத்து மூலமாகவும் மேலும் இரண்டு அரசியல் காட்சிகள் வாய்மொழி மூலமாகவும் தமக்கு அறிவித்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக ஒருவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பவர்கள் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து கட்சிகளு…

  9. பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சி இடையே விரிசல் அதிகரிப்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இருதரப்புக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தேர்தலில் பொதுச் சின்னத்தில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது. எனினும், அந்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி விருப்பம் வெளியிட்டுள்ளது. இருதர…

  10. காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நவம்பர் மாதம் முதல் 6000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கில் போன்று தெற்கிலும் காணாமல் போனோரின் குடும்பத்திற்கும், பொலிஸ் மற்றும் முப்படைகளின் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/189113/

  11. ரணில், சஜித், கரு இன்று முக்கிய சந்திப்பு அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு, இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஐதேகவின் இந்த மூன்று தலைவர்களும் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுப்பார்கள் என்று பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்த போதும், சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய பிற்போடப்பட்டது. இன்றைய பேச்சுக்களில் தான் பங்கேற்பேன் என்றும், தனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடைய…

  12. இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தபோதும் இலங்கை விவகாரங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இலங்கை இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்…

  13. தென்னிலங்கையிலே யார் வேட்பாளர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் நாடி பிடிக்கிறார்கள். தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதையே நாடி பிடித்துப் பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கூறினார். வரணி இடைக்குறிச்சி மேற்கு நவா சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் இப்போது சின்னச் சின்ன குழுக்களாக சின்னச் சின்ன சமூகங்களாக வேறுபட்டுப் போய் இருக்கிறோம், அதனை அரசாங்கமோ, பேரினவாதிகளோ திட்டமிட்டுச் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் பலமாக ஒற்றுமையாக நின்றால் அவர்களால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. எங்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எல்லாம் மாறி மாறி வந…

  14. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – முரளிதரன் பேச்சு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் என்றும் முரளிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்ய வேண்டும் எனவும் கிரிக்கெட் வீரர்களும் …

  15. ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம். ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது. அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்…

  16. -க. அகரன் மதுபோதையில் கடமைசெய்யும் பொலிஸாரைப் பிடித்து கொடுத்தால், தமக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவார்களேயானால் எத்தனையோ பொலிஸாரைக் காட்டிகொடுப்போமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூறன் தெரிவித்தார். வவுனியாவில், நேற்று (08) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், அதிகளவான விபத்துகள் இந்த மாவட்டத்திலே அல்லது மாகாணத்திலே இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் இங்கு சாரதி பயிற்சி நிலையங்கள் சரியான முறையிலே இயங்குவதில்லையெனவும் கூறினார். சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுகொள்வதற்கான பரிசோதனையில் சித்தி பெறுவதற்கு, 5 ஆயிரம் ரூபாய் தருமாறு சாரதி பயிற்சி நிலையங்க…

    • 0 replies
    • 399 views
  17. கிளிநொச்சியில் 51 வீடுகளைக்கொண்ட 4 மாதிரி கிராமங்களை மக்களிடம் கையளித்தார் சஜித் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் 51 வீடுகளைக்கொண்ட 4 மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது அமைச்சரினால் நான்கு மாதிரி கிராம்களும் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அமைச்சரினால் 1 இலட்சம் பெறுமதியான கடன் 25 ப…

  18. (தி.சோபிதன்) ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாச முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச கண்காட்சியையும் பார்வையிட்டார். இதன் போது அங்கு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒருவரின் தாயார் சஜித் பிரேமதாசவுடன் பேசுவதற்காக அவரை நெருங்க முற்பட்டிருந…

    • 0 replies
    • 291 views
  19. -எஸ்.நிதர்ஷன் வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படுமெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர், இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அங்கு தொடர்ந்துரைத்த அவ்வியக்கத்தினர், தேசிய மக்கள் சக்தியால், நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லையெனவும் இது இறுதியான வரைபல்ல எனவும் தெரிவித்தனர். நாட்டில், அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடி…

    • 10 replies
    • 1.5k views
  20. கோத்தாவின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டிய முரளிதரன் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில், சிறிலங்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து, கோத்தா தரப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல்வாதி அல்லாத துறை சார் வல்லுனர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். அதனை அடிப்படையாக கொண்டே வியத்மக என்ற துறைசார் வல்லுனர்களின் அமைப்பை உருவாக்கி பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த அமைப்பின் ஏற்பாட்டில…

  21. தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்குமாகாண சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர்மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சரியான தெரிவுகள் அறிவிக்கப்படவில்லை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பமான முடிவுகளே உள்ளது. சரியான தெரிவுகள் அறிவிக்கப்பட பின்னரே எமது முடிவுகள் வெளிவரும் குறிப்பாக தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய குறிப்பாக தமிழ்த்தேசிய இனம் தன்னுடைய கலை கலாச்சாரம் நிலம் மதம் அரசியல் உரிமை என்பனவற்றை கட்டமைப்…

    • 0 replies
    • 221 views
  22. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் (லியோ நிரோஷ தர்ஷன்) உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம். மேலும் நிலையான பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை கண்காணிக்கும் யோசனையை சிறப்பு அந்தஸ்துள்ள அமைப்புகள் கூட்டத்தொடரில் வலியுறுத்தவும் உள்ளன. அதேபோன்று இந்த கூட்டத்தொடரின் போது சவேந்திர சில்வாவின் நியமனம் உள்ளிட்ட இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டுப்பேர் கொண்ட நிபுணர் குழுவின் கூட்டறிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்…

  23. நியா­ய­மான தீர்வை வலி­யு­றுத்தும் பொறுப்பு இந்­தி­யா­விற்கு உள்­ளது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (நா.தனுஜா) ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை அவர்­க­ளது நாட்டின் உள்­ளக விவ­கா­ர­மாகும். ஆனால் இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடக்கு, கிழக்கில் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று இணங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே தமிழர் பிரச்­சினை தொடர்பில் நியா­ய­மான உரிய தீர்வை வழங்­கு­வ­தற்­கான அழுத்­தத்தை பிர­யோ­கிக்க வேண்­டிய தார்­மீக பொறுப்பு தற்­போதும் இந்­தி­யா­விற்கு உண்டு. ஆகவே ஜம்மு – காஷ்மீர் விவ­கா­ரத்­தையும் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு…

    • 2 replies
    • 559 views
  24. “அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாநகர மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது. நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை கட்டியெழுப்பப்பும் மாபெரும் திட்டம்…

    • 13 replies
    • 1.2k views
  25. (ஆர்.யசி) தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத அரசாங்கம் பாணின் விலையை உயர்த்திவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த அரசாங்கத்தின் ஆடையை எமது ஆட்சியில் கலட்டி எறிவோம், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் எமது பயணத்தை ஆரம்பிப்போம் என்றும் கூறினார். சுகததாச உள்ளகர அரங்கில் இன்று இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றவது கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை எவரதும் தனிப்பட்ட முடிவு அல்ல. இங்கு கூடியுள்ள அனைவரதும் ஒன்றிணைந்த முடிவாகும். ஆகவே அவரை வெற்றிபெறச்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். த…

    • 0 replies
    • 286 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.