ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரத்து 261 குடும்பங்கள் வீடின்றி நிர்க்கதி - 52 குடும்பங்கள் சிறுவர்களை தலைமைத்துவமாக கொண்டுள்ளன ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் 1 இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் சர்வதேச நாடுகளின் துணையுடன் தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டிருந்தது. முப்பது ஆண்டுகால போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இன அழிப்புத் தீவிரமடைந்தது. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் பல்லாயிரம் போ் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 315 views
-
-
அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கும், தனது அனுமதி தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீனாவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வொசிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா…
-
- 1 reply
- 791 views
-
-
யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள் சிறிலங்காவில் அடைக்கலம் கோரியுள்ள ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று குடியமர்த்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.…
-
- 13 replies
- 1.8k views
-
-
இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழி பேசுவோராக மாற வேண்டும் என்ற முயற்சி முஸ்லிம் சமூகத்தில் துப்பரவாக இல்லை. இஸ்லாம் மார்க்கத்தின் சட்டதிட்டங்களை அறியவே அரபு மொழியை படிக்க வேண்டியுள்ளது. வைத்திய துறையை கற்கும் மாணவனுக்கு ஆங்கில அறிவு இல்லாவிட்டால் அவனால் ஒரு வைத்தியனாக வர முடிய முடியாது. ஆங்கில அறிவு இல்லாத ஒரு டொக்டரை சிங்கள, தமிழ் சமூகத்தில் காட்ட முடியுமா? அப்படியிருந்தால் அது நகைப்புக்கிடமானதாக இருக்கும். காரணம் அதிகமான வைத்திய அடிப்படைகள் ஆங்கிலத்திலேயே உள்ளன. அது போல் அரபு மொழி என்பது குர்ஆனின் மொழி. குர் ஆனை புரிய வேண்டுமாயின் அரபு மொழி அறிவு அவசியமாகும். …
-
- 7 replies
- 2.2k views
-
-
புராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு! திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேசத்தின் கன்னியா-நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்திலேயே இந்த புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் திணைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்தார். கண்டுபடிக்கப்பட்ட மயானமானது சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்று கணிக்க கூடியவாறு காணப்படுவதாக அவர் தெரிவித்தார். தற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார். குறித்த மயானத்தில் இரண்டு கல்லறைகள் தோண்டிய நிலையில் இருந்தன. இவை பு…
-
- 3 replies
- 886 views
-
-
சீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019 உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சீனப்பிரஜைகள் சுற்றுலாவுக்கென இலங்கைக்கு பயணம் செய்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு சீனா முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இவ்வாறு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சீனப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது #சீனா …
-
- 0 replies
- 860 views
-
-
3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர். சிறிலங்கா காவல்துறையினருடன், 3000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார். …
-
- 2 replies
- 648 views
-
-
பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண முன்னெச்சரிக்கையை தளர்த்துவதற்கு, இன்னும் காலம் தேவைப்படுவதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் உள்ள ஐ.நா மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. திட்டமிட்ட தாக்குதல்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்தச் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார். இதன்போது, ஈஸ்டர் ஞாய…
-
- 0 replies
- 275 views
-
-
சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக, கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை அடுத்து, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதற்கமைய கேரள மாநில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநில கரையோர காவல் நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களில் காவல்துறை தலைவர்களுக்கே, இதுபற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எச்சரிக்கைகள் வழக்கமானதே என்ற போதும், இம்முறை தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவலும் இடம்பெற்றுள்ளதால், சந்தேகத்துக்க…
-
- 0 replies
- 247 views
-
-
எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் இந்த விசாரணைகள் நிறைவடைந்தது. இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைக்காத நிலையில், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் பங்கு தொடர்பான துல்லியமான விபரங்களை இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை என்று கூறப்…
-
- 0 replies
- 321 views
-
-
ஐபிசி தமிழின் வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி தாயகத்தையும், தாயகம் சார்ந்த நிகழ்வுகளையும் புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு வழங்கிவருகின்றது. இந்நிலையில் வணக்கம் தாய்நாடு நிகழ்வின் இந்த பகுதி ஈழத்தமிழர்களுக்கு மறக்க முடியாத வடுவான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் துயர்மிகு 10 ஆண்டு நினைவுதினத்தை முள்ளிவாய்க்காலிலிருந்து வழங்கியிருக்கின்றது. இது தொடர்பான முழுமையான காணொளி.. https://www.ibctamil.com/srilanka/80/120727?ref=imp-news
-
- 0 replies
- 287 views
-
-
பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம் தொலைபேசி ஊடாக பணிப்புரை விடுத்தார்கள். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் குற்றமிழைக்காதவர்கள் என இனம்காணப்பட்டவர்களை விடுக்குமாறு, மூன்று…
-
- 1 reply
- 929 views
-
-
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை கோரிய போதும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் கடந்த 12-03-2019 அன்று தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் மாவட்டத்தில் கடந்த 2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட அபிவிருத்திப் பணிகள் என்ன? அவற்றுக்கான கேள்விக் கோரல் எந்த பத்திரிகைகளில் எந்த திகதியில் கோரப்பட்டது? எத்தனை விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? என்பன கோரப்பட்டது. ஆனால் இவற்றுக்கு உரிய காலத்தில் எந்த பதிலையும் வழங்காத மாவட்டச் …
-
- 1 reply
- 679 views
-
-
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் ஊடகங்களால் முஸ்லிம் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும் ஊடகங்கள் உதவ வேண்டும் என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் ஜம்இய்யதுல் உலாமா சபையினரின் ஊடக சந்திப்பு , யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர். https://newuthayan.com/story/15/யாழ்ப்பாண-முஸ்லிம்களின்.html
-
- 4 replies
- 1k views
-
-
வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கிருந்து வெளியேறினார். சுமார் 5 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியு ள்ளார். 2014 -2015ம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப் பட்டிருந்தது.. இந்தநிலையில் இடம்பெற்றுள்ள மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 10 மணியள வில் அமைச்சர் அங்கு ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.. https://www.ibctamil.com/srilanka/80/1…
-
- 0 replies
- 864 views
-
-
விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். https://www.ibctamil.com/s…
-
- 6 replies
- 1.5k views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இன்று இடம்பெற்றது. https://www.ibctamil.com/srilanka/80/120372
-
- 3 replies
- 1.1k views
-
-
சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும், திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார். ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில்…
-
- 8 replies
- 1.3k views
-
-
சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை Editorial / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, பி.ப. 06:32 Comments - 0 இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தொடர்ந்ததான அச்சுறுத்தல் நிலைமை மாறி, நாடும் நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தளர்த்துமாறும், பிரதமர் கோரினார். இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடனான சந்திப்பொன்று, அலர…
-
- 2 replies
- 745 views
-
-
சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது - டக்ளஸ் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந…
-
- 0 replies
- 494 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தர் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் 3 பேர் கைது மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதோடு , மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சி.ஜ.டியினர் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமைமுடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் காணாமல் போனார். இந்நிலையில் கடந்த வருடம் வவுணதீவு இரு பொலிஸார் து…
-
- 0 replies
- 750 views
-
-
“நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்” May 24, 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியைப் பெறுவதற்கு மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பெற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய தங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய மக்களுக்கு தொடர்ந்து …
-
- 7 replies
- 732 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. அத்துடன் இதற்கான நிதியும் சட்டவிரோதமாகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றது என ஆசுமாரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மட்டககளப்பு மாவட்டத்தில் மூன்று கல்வி வலயங்கள் இருக்கின்றன அவற்றில் காத்தான்குடி கல்வி வயத்தில் புதிதாக 5 பாடசாலைகள் உட்பட மொத்தம் 8 பாடசாலைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த…
-
- 1 reply
- 536 views
-
-
ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அதற்கமைய, 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். https://www.newsfirst.lk/tamil/2019/05/24/ஏப்ரல்-21-தாக்குதல்-சந்தேக/
-
- 1 reply
- 325 views
-
-
இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர். தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள். அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்ற…
-
- 5 replies
- 914 views
-