Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா- சிறிலங்கா முடிவு Mஇராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன. வொசிங்டனில் நடந்த உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இரண்டு நாடுகளும் இதனைத் தெரிவித்துள்ளன. “ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பின் அடிப்படையில், அமெரிக்கா-சிறிலங்கா பங்குடமை கலந்துரையாடல் மே 6ஆம் நாள் வொசிங்டனில் நடைபெற்றது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் டேவிட் ஹாலே ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. …

  2. பௌத்தகொடிகளும், வெசாக் கூடுகளும் கல்முனையை சூழ்ந்தன.. May 18, 2019 புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற்று வருகின்றது. கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்க ரத்ண தேரர் மகிழ்ச்சியுடன் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார். அதாவது விசேடமாக தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக சேர்ந்து இப்பிரதேசத்தில் இந்நாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையா…

    • 2 replies
    • 481 views
  3. இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ; வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஆளுநர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். …

    • 2 replies
    • 382 views
  4. உப்பில்லா கஞ்சியுடன், முள்ளிவாய்கால் நினைவேந்தல்… May 18, 2019 ஈழப் போரில் இறுதியில் முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்த தமிழ் மக்களின் 10 வது ஆண்டு நினைவேந்தல் தினமான இன்று சனிக்கிழமை (18) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரனையில் முள்ளிவாய்கால் மண்னில் இறுதி யுத்தத்தின் போது உண்ட உப்பில்லா கஞ்சியானது அவ் மக்களை நினைவுபடுத்தும் முகமாக மன்னாரில் வழங்கப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவக்குற்பட்ட பள்ளமடு பகுதியில் பொது மக்கள் அனைவருக்கும் குறித்த கஞ்சியானது வழங்கப்பட்டதுடன் பாதிக்கபட்ட மக்கள் நினைவாக மன்னார் சாந்திபுரம் பாடசாலை மற்றும் ஈச்சலவாக்கை பொது மண்டபம் ப…

    • 3 replies
    • 869 views
  5. இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவ…

  6. ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார் ஜனாதிபதி? பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வொன்று வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அச்சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருடனும் நீண்ட நேரம் கலந்துரையாடல…

  7. காத்தான்குடியில் முகாம் அமைக்க இராணுவம் திட்டம்! தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தபட்டு வந்த காணிகளில் இராணுவ முகாம்களை அமைப்போம் என இராணுவத் தளபதி லெப்.மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு காத்தான்குடியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமானதெனக் கூறப்படும் முகாமில் மனோநிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “காத்தான்குடியில் பல ஏக்கர் காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கின்றேன். இங்கு தவறான புரிதலொன்று ஏற்பட்டிருக்கின்றது. இது…

    • 4 replies
    • 626 views
  8. May 19, 2019 இலங்கையில் செயற்படுகின்ற முக்கிய சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள்; நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்படப் 11 இணையத்தளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் சிலவற்றினை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #இணையத்தளங்கள் #சைபர்தாக்குதல் #cyberattack #websites http://globaltamilnews.net/2019/122233/

  9. இலங்கையில் பௌத்த குடும்பங்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம் குடும்பங்களில் பிறப்பு வீதம் அதிகமாக இருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பெரமுன அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பவித்ரா வன்னியாராச்சி ஊடாக அறிவுரை வழங்கியுள்ளார் லண்டன், ஹவுன்ஸ்லோவில் கடந்த 40 வருடங்களாக குடியிருப்பதாக தெரிவிக்கும் கடும்போக்குவாத தேரர். நேற்றிரவு (18) லண்டனில் பவித்ரா வன்னியாராச்சி தமது கட்சி உறுப்பினர்களுடன் நடாத்திய சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்ததுடன் சராசரியாக முஸ்லிம் குடும்பம் ஒன்றில் ஆறு குழந்தைகள் பிறப்பதாகவும் அதுவே பௌத்த குடும்பத்தில் 1.5 அளவே இருப்பதாகவும் தெரிவித்ததுடன் பௌத்த நாடாகாக இருந்த ஆப்கனிஸ்தான் நாளடைவில் முஸ்லிம் நாடாக மாறியது போல இலங்கையும் …

    • 0 replies
    • 377 views
  10. ”பத்தாண்டுகள் நிறைவில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியிருக்கிறது ” - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (நா.தனுஜா) இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை வெளியிட்டிருக்கின்றது. முப்பது வருட யுத்தம் 2009 மே மாதம் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கல் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுவூட்ட…

  11. (இராஜதுரை ஹஷான்) இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கபட்டவர்களும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடன் விசேட சலுகைகளை பெற்றவர்களே பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய படைவீரர் தின நிகழ்வினை முன்னிட்டு மாஹரகம நகரில் ஸ்தாபிக்கப்பட்ட படைவீரர் உருவ சிலைக்கு மேரியாதை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு தமது அரசியல் ரீதியான ஆதரவினை வழங்கிய அமைச்சர் ரிஷாத் பதியுதீ…

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மண்டைதீவு சந்திக்கருகில் இன்று மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூவரும் காரில் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றது. வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்துள்ளானது என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. சம்பவத…

  13. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, அடுத்த தொழிற்கட்சி அரசாங்கம், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த முன்னின்று செயற்படும் என்றும் அதன் தலைவர் ஜெரமி கோர்பின் குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாய் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு தொழிற்கட்சி தலைவர் விடுத்துள்ள செய்தியில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. …

  14. றிசாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மன்னார் தமிழரசு கட்சியினர் ஆதரவு May 19, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழராசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பாகவும் எவ்வாறு பாராளுமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்வது தொடர…

    • 1 reply
    • 414 views
  15. ஈஸ்டர் தாக்­குதல் ; உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு! ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு அர­சாங்கம் இது­வரை 119.3 மில்­லியன் ரூபாவை நஷ்­ட­ஈ­டாக வழங்­கி­யுள்­ளது. நீர்­கொ­ழும்பு, கட்­டு­வாப்­பிட்­டிய தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 86மில்­லியன் ரூபாவும் கொழும்பு கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 12.1மில்­லியன் ரூபாவும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்­துக்கு 21.2மில்­லியன் ரூபாவும…

  16. இராணுவத்தின் பாதுகாப்பில், கிளிநொச்சி பிள்ளையார்… May 18, 2019 இராணுவத்தின் பாதுகாப்புடன் தேர் ஏறி வீதி உலா வந்தார் கிளிநொச்சி நகர பிள்ளையார். நகர பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இன்று தேர் திருவிழா காலை ஒன்பது மணிக்கு பிள்யைார் தேர் ஏறி வீதி உலா வந்த போது இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இராணுவத்தின் பவல் வாகனம் ஒன்றும், ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #கிளிநொச்சி #பிள்ளையார் #kilinochchi http://globaltamilnews.net/2019/122109/a

  17. முள்ளிவாய்க்கால் பேரழிவு – மே 18 பிரகடனம்… May 18, 2019 தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து -மே 18 பிரகடனம் தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து என் மே 18 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம்தோறும் மே மாதம் 18 ம் திகதி தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது அந்தவகையில் இம்முறை தமிழினப் …

  18. 30 ஆண்டுகால போர் - முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது? 11 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 30 ஆண்டுகாலம் நடைபெற்ற போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்…

  19. முள்ளிவாய்க்கால் - 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது? ரஞ்ஜன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை.) இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகு…

    • 1 reply
    • 710 views
  20. கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக கு…

  21. மே 18: இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின் முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் ஜெயவனிதா ரன்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான பெரும்பாலான தமிழர்கள், அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்ப…

  22. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு இன்று ! தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் குருக்கள், கன்னியர்கள், இந்து மத குருக்கள், பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இக் காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் இலங்கை மற்றும் புலம்பெயர் மக்கள் வாழும் பிர…

  23. இலங்கை உள்நாட்டுப் போர்: போரின் இறுதியில் காணாமல் போன பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன? எலைன் ஜூங், லூசி அடாமு, சுவாமிநாதன் நட்ராஜன் பிபிசி இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் பத்து ஆண்டுகளாகிறது. தங்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போரின்போது இழந்த பல்லாயிரக்கணக்கானோர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்த கட்டுரையில் பாதிரியார் பிரான்சிஸின் கதையை பார்ப்போம். சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் உயிரிழப்பிற்கு வித்திட்ட 26 ஆண்டுகள் நடைபெற்ற இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முடிவடைந்தது. இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு தனி நாடு கோருவதை முதலாக கொண்டு இலங்கை அரசுப்படை…

  24. நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. ”நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர்” என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று (வியாழக்கிழமை) கிடைத்தது. அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர், ஆளுநரின் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கடிதம் குறித்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் குறித்த…

    • 6 replies
    • 1.3k views
  25. முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு மீட்பு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி கடற்கரையில் வளர்மதி கடற்தொழிலாளர் சங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றில் கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஓய்வு மண்டபம் அமைத்துக்கொடுப்பதற்கு பெரண்டீனா நிறுவனம் வேலைகளைச் செய்து வந்துள்ளது. இந்நிலையில் மலசலக்கூடம் அமைத்து அதற்கான அத்திவாரங்கள் இட்டுவிட்டு மலசலக்கூடத்திற்கான குழியினை தோண்டும் போது குறித்த எலும்புக்கூடு ஒன்றினை தொழிலாளர்கள் இனம் கண்டுள்ளார்கள். விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடை மற்றும் குப்பி,கைக்குண்டுகள் என்பன அருகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.