ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
பிரித்தானியாவில் புதிய அகதிகள் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்படுகின்ற விண்ணப்பதாரிகள் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி குடிவரவுத் திணைக்களத்தினால் தன்னிச்சையாக நாடுகடத்தப்பட முடியும். இது அகதி அந்தஸ்த்துக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள ஈழ அகதிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறான அகதிகள் மீண்டும் சிறிலங்காவுக்கு சென்றால் உயிராபத்து காணப்படுகின்ற நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படுவது ஆபத்தானதாகும். எனினும் புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்பதால், ஈழ அகதிகக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே அகதிகளை விரைவாக நாடுகடத்த குடிவரவுத் திணைக்களத்தின…
-
- 4 replies
- 521 views
-
-
05 JUN, 2024 | 04:31 PM பொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச்சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம்…
-
- 8 replies
- 641 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு நகரப்பகுதியிலும் மற்றும் தண்ணீரூற்று பகுதியிலும் இரண்டு இளைஞர்கள் வெள்ளைவானில் வந்தவர்களினால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முள்ளியவளைப்பகுதியில் இளைஞர் ஒருவரை வெள்ளைவானில் வந்தவர்கள் கடத்திசென்றுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவு தண்ணீரூற்று பகுதிகளில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் இளைஞர்களை குறிவைத்து அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர்களின் காண்காணிப்பின் கீழ் செயற்படும் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் தமிழ்இளைஞர்கள் முகவர்களாக செயற்பட்டு இவ்வாறான இளைஞர்களின் கடத்தலுக்கு உடந்தையாக காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்க…
-
- 0 replies
- 662 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் பாலத்தடிச்சேனை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தபோது, அந்தப் பகுதி மக்கள் கூட்டம் நடத்துவதானால் தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட்டமைப்பினர் பதில் அளிக்கவேண்டும் என்று கேட்டு இருந்தனர் முதலில் அதற்கு உடன்பட்டவர்கள். பின்னர் கூட்டம் ஆரம்பமாக முன்னர் இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒரு வேட்பாளர் விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளார் அதனை அறிவிப்பதற்காக கூட்டம் தான் என்று கூறியுள்ளார். அதனால் அங்கு நின்ற மக்கள் இங்கு கூட்டத்துக்கு அனுமதி எடுக்கும் போது சொன்னது ஒன்று இப்போ கூட்டம் வேறு நோக்கம் என்றால் இங்கு கூட்டம் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று அதனை எதிர்த்து மக்கள் …
-
- 0 replies
- 296 views
-
-
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென மகிந்தவிரும்புகின்றார்- கோத்தபாய இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிட முடியாததன் காரணமாக நான் போட்டியிட வேண்டுமென விரும்புகின்றார் எனவும் தெரிவி;த்துள்ளார். இந்தியாவின் த வீக்கின் லக்ஸ்மி சுப்பிரமணியத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள தலைவர் மகிந்த ராஜபக்ச எனினும் அரசமைப்பின் 19 வது திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது இதன் காரணமாக அவர் நான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றார…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதான விடயத்தை அவர் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்…
-
-
- 37 replies
- 3.2k views
- 1 follower
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 09:14.22 PM GMT ] இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் அமைப்பும் இந்த எதிர்பாராத போட்டிக்கு காரணமாக இருக்கின்றது ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் தலைமைத்துவமும் ஒரு காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கமாக இருந்தவர்கள் என்பதுதான் இவர்கள் யார் என்பதை காட்டி கொடுக்கின்றது. முதலாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர், அதை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு.சம்பந்தன் …
-
- 6 replies
- 609 views
-
-
இன்றைய தினமும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். அதன்படி இன்று இரவு ஒன்பது மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தபடும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை வட மேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று மாலை நான்கு மணிக்கு தளர்த்தபட்டு மீண்டும் ஆறுமணியிலிருந்து அமுலுக்கு வருகிறது. நேறைய தினம் இலங்கையின் வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சகல சமூகத் தளங்களும் முடக்கப்பட்டுள்ளமை …
-
- 0 replies
- 395 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக நாம் விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுக்கள் நடத்த வருமாறு மகிந்த எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் பேச்சுக்கள்- ஆலோசனைகளை நாம் விரும்பவில்லை. செயற்பாடுகளையே விரும்புகிறோம். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் பொலிஸில் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே படகில் தங்கள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியும். சில காலமாக இல்லாமல் இருந்த இந்தப் பதிவு நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்திருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். பதிவு நடவடிக்கைகளால் பெரும் நேரவிரயம் ஏற்படுவதால் , இன்று நெடுந்தீவில் இருந்து படகு தாமதமாகவே புறப்பட்டுள்ளது.இதனால் பலரும் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பஸ்ஸைத் தவற விட்டு பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களை இடையூறுகளுக்குள் தள்ளும் இந்தப் பதிவு நடைமுறையைப் பொலிஸார் கைவிடவேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர். http://www.saritham.com/?p=47089
-
- 1 reply
- 577 views
-
-
எம் விதியை நாம் வரைவோம்: சுமந்திரன் இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எம் விதியை நாம் வரைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பில், வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வே…
-
- 17 replies
- 1.5k views
-
-
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது தைப்பொங்கல் திருநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது தைப்பொங்கல் திருநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமன் தெரிவித்துள்ளார். மேலும் தைப்பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ இறைவனை வேண்டி நிற்பதாக அவரது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி, பிரதமர் மன்மோகன்சிங், உப ஜனாதிபதி ஹமீட் அன்சாரி ஆகியோர் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர். தைப்பொங்கள் திருநாள் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், தேசத்துக்கு வளங…
-
- 1 reply
- 982 views
-
-
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரமதர் ரணிலுக்கு, அனுப்பிய விசேட அறிவிப்பு ஒன்றின் ஊடாகவே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தனது சகோதரியுமான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசன் ஊடாகவே மஹிந்த இதனை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரதமர், பொலிஸ் விசாரணைகளில் தான் தலையிடமுடியாது எனவும், முடிந்தால் ஜனாதிபதியிடம் இக்கோரிக்கையினை முன்வைக்குமாறும் தெரிவித்துள்ளார். நிதி மோசடி சம்பந்தமான பல வழக்குகள் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால், மஹிந்த ராஜபக்ஷ …
-
- 0 replies
- 698 views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.6k views
-
-
நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகிய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு உட்பட முழுமையான அனைத்துக் காட்சிகளும் thx http://newjaffna.com
-
- 0 replies
- 667 views
-
-
வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டில் நாகர்கள் உருவாக்கிய கிணறு, நாகர்கல் கண்டுபிடிப்பு! [Thursday 2015-09-03 19:00] மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாக அரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு மற்றும் நாகக்கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சி.பத்மநாதன், மற்றும் தொல்லியல் ஆய்வுக்குழுவினரால், வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகையில், இலங்கையின் பூர்வீக குடிய…
-
- 0 replies
- 569 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊட…
-
-
- 14 replies
- 772 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 728 views
-
-
ரொபர்ட் ஓ பிளக் இலங்கைக்கு திடீர் விஜயம் வெகு விரைவில்! அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் பதினொராம் திகதி கொழும்பு வருகிறார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும்..., அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வோஷிங்ரன் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிளேக் கொழும்பு வருகிறார். அவரது இந்த அவசர பயணத்தின் பின்னணி குறித்து உடனடியாக விவரம் வெளிவரவில்லை. எனினும் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை உ…
-
- 2 replies
- 1.2k views
-
-
Colombo to Jaffna கீரிமலை கேணி... @17.00 டில்க்கோ மூனா, திலகராஜ் தலை காட்டுறார்.
-
- 0 replies
- 635 views
-
-
பொது வேட்பாளரை ஒருவரை முன்னிறுத்தியிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேச்சு நடத்தியிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுவேட்பாளர் என்பது என்னைப் பொறுத்தவரை திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புக்களும், கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஓற்றையாட்சிக்குள் 13ம் திருத்தச் சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயற்பட்டவர்கள். குறிப்பாக விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன்,…
-
-
- 7 replies
- 645 views
- 1 follower
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான சிறிலங்கா அரச தலைவர் ஆணைய விசாரணைக் குழுவின் விசாரணைகளில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபச்கவின் அலுவலகம் தலையிடுவதாக அந்த விசாரணைகளைக் கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 945 views
-
-
அரசியலில் இருந்து மஹிந்த விரைவில் ஓய்வு? [ திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2015, 03:53.26 AM GMT ] எதிர்வரும் காலத்தினுள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி ஓய்வு பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆயத்தமாக இருக்கின்றார் எனவும், மீண்டும் தேர்தல் மேடையில் ஏறுவதற்கு விரும்பவில்லை எனவும் அவருக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல்களுக்காக புதிய முன்னணியில் போட்டியிடுவதற்காக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டமையினால் அம் முயற்சி தோல்வியடைந்துள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய முன்னணி அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது, …
-
- 0 replies
- 434 views
-
-
“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ” Published by T. Saranya on 2019-06-26 09:37:04 முகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச அலுவலகங்களுக்கு அண்மையில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் பெண்கள் சேலையும் ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பியிருந்தனர். இதனையடுத்தே பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று புதிய அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். …
-
- 0 replies
- 622 views
-
-
மட்டக்களப்பு தேர்தல் மக்களின் கண்களில் மண்தூவும் நடவடிக்கை - ஐ.தே.க [Wednesday December 26 2007 12:07:03 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அவசர அவசரமாக நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது மக்களின் கண்களில் மண்ணை தூவும் நடவடிக்கையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை. அங்கு மோதல்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் மக்களுக்கு அளித்துள்ள நத்தார் பரிசே மாவிலை அதிகரிப்பாகும். மாவிலை அதிகரிப்பின் மூலம் மக்களின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்…
-
- 0 replies
- 618 views
-