Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதுளை - அல் - முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடைசெய்ய செந்தில் தொண்டமான் கோரிக்கை (ஆர்.விதுஷா) பதுளையில் இயங்கும் அல் -முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடைசெய்யவேண்டும் என ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த பல்கலைக்கழகத்தில் இலங்கைக்கு பொருத்தமற்ற முறையில் ஈரானிய கொள்கைகளும் சகல மதங்களையும் பின்பற்றும் மாணவர்களுக்கு அடிப்படை வாதத்துடன் கூடிய இஸ்லாமிய போதைனை பலவந்தமாக போதிக்கப்படுவதாக குறிப்பிட்ட செந்தில் தொண்டமான் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பை சேர்ந்த அரவிந்த குமார் இந்த கற்கை நெறிக்கு அனுசரணையாக செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமை…

    • 1 reply
    • 525 views
  2. உதவி கல்விப் பணிப்பாளர் மொஹமட் அலியர் குறித்து விரிவான விசாரணை.. May 10, 2019 ஐ.எஸ் இயக்கத்துடனான தொடர்புகளை கொண்டிருந்த சந்தேகத்தின் பேரில் கைதான உதவி கல்விப் பணிப்பாளர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமீன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவரும், அவருடன் நிதியை கையாண்டவரும் என சந்தேகிக்கப்படும், மொஹமட் அலியர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் அலியர் காத்தான்குடி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணை இடம்பெறுவத…

  3. சிலாவத்துறை முகாம் அகற்றப்படாது Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, மு.ப. 10:54 Comments - 0 பாதுகாப்பு படையினர் தேசிய பொறுப்பை துறந்துச் செயற்பட தயாரில்லை என தெரிவிக்கும் கடற்படையின் பேச்சாளர் லுதினர் கமான்டர் இசுறு சூரிய பண்டார, சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற தயாரில்லை எனவும் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புத் தரப்பின் சோதனை செயற்பாடுகளுக்கு கடற்படை முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார். மேலும், கடற்கரைகளை பாதுகாப்பதற்கு உபாய மார்க்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாகவும், 24 மணித்தியாலங்களும் கரையோர பாதுக…

  4. பாராளுமன்ற வரைப்படங்களுடன் கைதானவருக்கு விளக்க மறியல் நீடிப்பு.. May 10, 2019 பாராளுமன்றத்தினுள் பிரவேசிப்பதற்கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்கொடை கிரிமெட்டிதென்ன பகுதியில் கைது செய்யப்­பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் உத்தரவு நேற்று நீடிக்கப்பட்டுள்­ளது. பலாங்கொடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர்வு பிறப்பிக்கப்ப்ட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் வீடு கடந்த ஏபரல் 24 ஆம் திகதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.இதன்போது, பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான திட்ட வரைபடம், 2 ரவைகள், 13 சிம் கார்ட்கள் , 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் கடன் …

  5. மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையில் கடந்த 3 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அதனையடுத்து சிற்றுண்டிச் சாலையை ஒப்பந்த அடிப்படையில் நடத்துபவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு முற்படுத்தப்பட்டார். அதற்கமைய சிற்றுண்டிச் சாலை நடத்துனர் வரும் 16 ஆம் த…

  6. கொச்சிக்கடை தேவாலய குண்டுதாரியின் இரு சகோதரர்களும் சகோதரியும் கைது (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு – கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் தற்கொலைக் குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய அலா­ஹுதீன் அஹமட் முவாத் எனும் தற்­கொலைக் குண்­டு­தாரி, கிங்ஸ்­பெரி நட்­சத்­திர ஹோட்­டலில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய மொஹம்மட் முபாரக் மொஹம்மட் அசாம் பய­ணித்த வாக­னத்தில் சென்­றுள்­ளமை விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. குறித்த வேனே கொச்­சிக்­கடை தேவா­ல­யத்­துக்கு அருகில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த போது பாது­காப்பு தரப்­பி­னரால் பின்னர் வெடிக்­க­வைக்­கப்­பட்­ட­தா­கவும் கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு நேற்று தெரி­விக்­கப்­பட்­டது. இது தொ…

  7. 'முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்' (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் அதிக வெளி­நாட்­ட­வர்­களை பலி­யெடுத்த, சங்­கிரில்லா நட்­சத்­திர ஹோட்டலில் இரு தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­துள்­ள­துடன் அதில் முதல் குண்டை தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்­க­ர­வாத குழு­வுக்கு தலைமை வகித்த மொஹம்மட் காசிம் மொஹம்மட் சஹ்ரான் அல்­லது சஹ்ரான் ஹாசிம் அல்­லது அஷ்ஷெய்க் சஹ்ரான் ஹாஷிம் என்­ப­வரே நடத்­தி­யுள்­ள­மையை சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளது. உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.54 மணிக்கு இந்த குண்டை அவர் வெடிக்கச் செய்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் குறித…

  8. (நா.தினுஷா) வெசாக் பண்டிகையின்போது பொதுபலசேனா அமைப்பின பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபலசேனா, அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணத்திரட்டி வீதி போராட்டத்தை முன்னெக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. பிரச்சினையை ஏற்படுத்தி ஞானசார தேரரை விடுதலை செய்ய வைப்பது எமது எதிர்ப்பார்ப்பல்ல. ஆனால் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக அவரின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டது. இன்று ராஜகிரியவில் பொ…

  9. இரத்மலான விமானப்படைத் தளம் அருகே விமானப் பயிற்சிக்கு தடை இரத்மலான விமானப்படைத் தளத்துக்கு அருகில், விமானம் ஓட்டும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்காவில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே, இரத்மலான விமானப்படைத் தளத்தக்கு அருகில் விமானப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானிகள் பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தல், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. கட்டுக்குருந்த விமானப்படை தளத்துக்கு தெற்காக மாத்திரமே, விமானப் பயிற…

  10. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் – இராணுவத்தின் தேடுதலின் விளைவா? யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த இடைநிறுத்த உத்தரவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும், பதவி நீக்கும் அதிகாரங்கள் சிறிலங்கா அதிபருக்கு இருப்பதாக, மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்த நிலையில் புதிய தகுதிவாய்ந்த …

  11. ஊடகங்களின் கழுத்தை நெரிக்கிறது சிறிலங்கா அரசு சிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகள் தொடர்பான படங்களை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாலக கலுவெவ, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இதுபற்றி அறிவித்துள்ளார். இந்தப் படங்களை காணும் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப அஞ்சுகின்றனர் என்பதால், கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகளை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். அத்துடன் காவல்…

  12. ஆறு வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்த ஷங்ரி லா குண்டுதாரிகள் ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது ஆறு வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டனர். குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், மற்றும் தற்கொலைக் குண்டுதாரியான இல்ஹாம் அகமட் ஆகியோர், கல்கிசை, லக்கி பிளாசா, கொள்ளுப்பிட்டி, தெமட்டகொட மகாவில கார்டன், கொச்சிக்கடை, படல்கும்புர, பிபிலை ஆகிய இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்தனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் உறு…

    • 0 replies
    • 309 views
  13. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்க…

    • 4 replies
    • 1.1k views
  14. நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் காரணம் காட்டி கிழக்கு ஆளுனர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆளுனர் பதவிநிலைக்கு எதிரான நாளைய ஹர்த்தால் அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே. "வேண்டுமென்றே துவேஷ உணர்வுகள் திணிக்கப்படுவதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள்." அதேபோல், "திட்டமிட்டு இனவாதம் வளர்க்கப்படுகிறது என்றால் தேர்தல் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்." ஒரு சிலரது அரசியல் தேவைகளுக்காக ஒட்டுமொத்த கிழக்கு மக்களையும் இன்றைய கருத்தாலுக்கு அழைத்திருப்பதை அரசியல் திணிப்பாகவே நாங்கள் கருதுகின்றோம். எந்தவித அடிப்படையும் இல்லாமல் இனவாதச் செயற்படுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த அப்பாவி தமிழ்மக்கள…

    • 1 reply
    • 976 views
  15. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித்தலைவர் எனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இந்த செய்தியினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இந்நிலையில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பி, அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/55625

    • 3 replies
    • 1.1k views
  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் , வாழைக்குலை திருட்டுகள் அதிகரித்துள்ளதாக வாழைக்குலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோப்பாய் , நீர்வேலி பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் இரவில் ஊடுருவும் திருடர்கள் அங்குள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்கின்றனர். …

  17. பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இடமளிக்காதிருப்போம் – சாய்ந்தமருதில் ஜனாதிபதி பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதம் உலகில் எங்குமே வெற்றிபெற்றதில்லை என்றும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இலங்கையரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க கூடாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாணத்தின் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்…

    • 4 replies
    • 628 views
  18. May 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கைத் தீவையே உலுக்கிய குண்டு வெடிப்புகள் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றுள்ளது. எட்டு இடங்களில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்புக்களில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களும் உள்ள…

    • 1 reply
    • 849 views
  19. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) எந்தவொரு காலத்திலும் இடம்பெறாத அளவு ரூபாவின் வீழ்ச்சி இந்த 4 வருடகங்களிலே ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் சுற்றுலா துறையினர் நாட்டுக்கு வருவதை நிறுத்தி பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வரும் வழியையே ஏற்படுத்தி இருக்கின்றது என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபார பண்ட அறவீடுகள் கட்டளைச்சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் அமைதியான சூழல் இருந்துள்ள நிலையிலும் 2009, 2014 காலப்பகுதியில் இருந்த 9 வீத பொருளாதார அபிவிருத்தியைவிட தற்போது 3.2வீதமாக பொருள…

  20. (நா.தினுஷா) தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் பொதுபல சேன சுட்டிக்காட்டியுள்ளது. ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடைய…

  21. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று வியாழக்கிழமை முதன்முறையாக பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஆலய வளாகத்தில் இன்று காலை பிரார்த்தனை நடத்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆலய பங்கு மக்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி …

  22. May 9, 2019 கடந்த 03 ம் திகதி வெள்ளிக்கிழமை படையினர் யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பழைய புகைப்படத்தை வைத்திருந்தனர் என்பதற்காகவும், மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனின் படத்தை வைத்திருந்தார் என்பதற்காகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளரையும், சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இப்புகைப்படங்கள் இருந்தமைக்காக கைது செய்வது அற்பத்தனமான நடவடிக்கை ஆகும். ஆயுதங்களைத் தேட வந்தவர…

  23. May 9, 2019 சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சிறீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது. இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. #SLFP #SLPP http://globaltamilnews.net/2019/121185/

  24. நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது May 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. நாவாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்று, கைக் கிளிப்புகள் உள்பட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. தப்பி ஓடிய இருவர் தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #jaffna #arrest #weapons #n…

  25. முல்லைத்தீவில் புலிகளின் ஆவணங்களைத் தேடி அகழ்வு : May 8, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது. இதன்போது நீதிமன்ற பதிவாளர் மற்றும் காவல்துறையினர் , படையினர் ,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்இபிரதேச செயலக அதிகாரிகள் ,கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் குறித்த காணிப்பகுதியில் தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும…

    • 3 replies
    • 872 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.