ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
மணலாறுப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் தாக்குதலை தீவிரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 949 views
-
-
இத்தாலி பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்ப சிறிலங்கா தூதரகம் முயற்சி [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 08:00 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இத்தாலியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்பும் முயற்சியில் அந்நாட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. இத்தாலி மிலானோ நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வினை குழப்பும் முயற்சியிலேயே சிறிலங்கா தூதரகத்துடன் இணைந்து அங்கு வாழும் சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளனர். முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை இறக்கச் செய்யுமாறு இத்தாலிய காவல்துறையினரிடம் சிறிலங்கா தூதரகத்தினரும், சிங்களவர்களும் முறையிட்டுள்ளனர். அவர்களின் முறைப்பாட்டினை பொங்கு தமி…
-
- 0 replies
- 928 views
-
-
ஓட்டோவுக்குள் புகுந்தது பல்சர்! நெல்லியடியில் சம்பவம்! நெல்லியடி நாவலர்மடம் பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் முச்சக்கரவண்டிக்குள் பல்சர் மோட்டார் சைக்கிள் உட்புகுந்து விபத்துக்குள்ளானதில் இரு சாரதிகளும் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 396 views
-
-
வெள்ளி விழாக் காணும் மீறல்கள் புனிதன் - 17-6-08 இம்மாதம் இலங்கைத் தீவின் கடைசி இனக் கலவரம் வெள்ளி விழாக் காண்கிறது. 83 ஜுலைக்கு எத்தனையோ ஆண்டுகளின் முன்னரே அரசியல் கைதிகளிற்கான ஜெனீவா விதிமுறைகள் - மனித உரிமைகள், சித்திரவதை - மீறப் பட்டன. தனி மனித சுதந்திமும் பறிபோயிற்று. இவற்றை எல்லாம் கண்டுகொள்ள இவற்றின் காவலனாகிய ஐக்கிய நாடுகளுக்கு 25 ஆண்டுகள் தேவைப் பட்டது. கடந்த சில வாரங்களில் விரும்பியோ, விரும்பாமலோ, அன்றி நிர்ப்பந்தத்தின் பேரிலோ பொதுமக்கள் பலர் இலங்கைத் தீவில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமிழர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரசியல் ஆய்வாளர்கள் எவருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பொதுமக்கள் சிங்களவர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரச…
-
- 5 replies
- 1.3k views
-
-
இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள இரண்டாவது பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கலதாரி விடுதியில் நாளை தொடக்கம் வரும் 10ம் நாள் வரையான மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், இராணுவ அதிகாரிகள் உரையாற்றவுள்ளனர். சிறிலங்காவில் உள்ள 42 நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 100இற்கும் அதிகமான வெளிநாட்டவர்களும், 150 வரையிலான உள்நாட்டு அழ…
-
- 0 replies
- 588 views
-
-
அரசியல் கைதிகள் புனர்வாழ்வை ஏற்றுக் கொள்ள தயாராகவுள்ளனர் – சுமந்திரன் அரசியல் கைதிகள் புனர்வாழ்வை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படுவதனை தமிழ் அரசியல் கைதிகள் இணங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க தயார் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129813/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 366 views
-
-
27 MAY, 2025 | 02:33 PM (எம்.மனோசித்ரா) அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 4 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சந்திரிக்கா அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலயிருந்தார். எனினும், கடந்த 12ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு முதலாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட போது ஆற்றிய உரை அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் தொடர்பாக சந்திரிக்கா வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அவரது கட்சி உறுப்புரிமையை நீக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை நாடாளுமன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனர்கள்! அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சீனப் பிரதிநிதிகள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த நிலையில் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த சீனப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது, வெறுமனே 20 உறுப்பினர்கள் மாத்திரமே சபையில் பிரசன்னமாகியிருந்த நிலையில் வெற்றிடமாகவிருந்த நாடாளுமன்றத்தை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமது நாட்டில் விவாதம் ஒன்று இடம்பெறும் போது அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிப்பதாக தெரிவித்த அவர்கள்,உங்களது நாட்டில் நாடாளுமன்ற விவாதங்களுக்கு வருவது இதுபோன்ற சிறு தொகையான மக்கள் பிரதிநிதிகளா? என …
-
- 0 replies
- 679 views
-
-
மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு June 7, 2025 10:26 am “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சோ.சேனா…
-
- 0 replies
- 188 views
-
-
சத்திரியன் " விடுதலைப் போராட்ட அமைப்புகள் தமது இலக்கை அடையும் வரையில் ஒருபோதும் ஆயுதக் களைவை மேற்கொள்ளக் கூடாது.' "கடந்த 50 வருடங்களில் ஆயுதக் களைவை மேற்கொண்ட எந்தவொரு விடுதலை அமைப்பாவது சமாதானத்தை அனுபவிக்கும் வரை உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.' இது கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூபாப் புரட்சிக்குத் தலைமை வகித்தவருமான பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கின்ற கருத்தாகும். உலகின் மிகச்சிறந்த புரட்சியாளர்கள் என்று பட்டியலிட்டால் அதில் முக்கியமான இடத்தை பிடெல் காஸ்ட்ரோவுக்கு அவரது எதிரிகள்கூடக் கொடுப்பார்கள். தற்போது தள்ளாத வயதில் நோயுடன் போராடும் அவர் இன்னமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் வேறு ஊடகங்கள் வாயிலாகவும் புரட்சியாளர்களை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
143 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்…
-
- 0 replies
- 307 views
-
-
யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி 10 Jul, 2025 | 05:25 PM யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார். மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்க…
-
- 1 reply
- 227 views
-
-
மன்னாரில் படை நடவடிக்கை இடம்பெறும் பகுதிகளை அண்மித்த இடங்களில் உள்ள தமது உடைமைகளை எடுப்பதற்காகவும் வயலில் நீர்பாய்ச்சுவதற்காகவும் சென்றவர்களில் ஒருவர், சிறிலங்காப் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 602 views
-
-
இலங்கைக்கு சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர் இன்று (23-07- 2008) மாலை திருகோணமலைக்கு செல்லவுள்ளனர்.திருகோணமலைக்
-
- 3 replies
- 1k views
-
-
சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு: சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ம் திகதி முதல் மே மாதம் 5ம் திகதி வரையில் ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை காவல் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சட்டவிரோத ஆயுத பயன்பாட்டினால் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகளை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு நட…
-
- 0 replies
- 600 views
-
-
சஜித்தின் கூட்டணிக்கு மு.கா ஆதரவு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பொது, தமது சமகி ஜனபலவேகய கட்சிக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட மு.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சமகி ஜனபலவேகய எனும் கூட்டணிக் கட்சிக்கு, தமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குமென்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததன-கடட…
-
- 1 reply
- 396 views
-
-
29 JUL, 2025 | 04:13 PM தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்துவைத்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுகின்றன. 11ஆவது மாவட்டமாக, நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
திருகோணமலையில் 20 வாடிவீடுகள் தீக்கிரை: 40 இலட்டம் ரூபா சொத்து இழப்பு திங்கள், 28 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] திருகோணமலை குச்சவெளிக் கடற்பரைப் பகுதியில் அமைந்துள்ள வாடிவீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு குச்சவெளி சலப்பையாறுப் பகுதியில் அமைந்திருந்த 20 வாடிவீடுகளே இவ்வாறு தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவத்தின் போது வாடிவீடில் தங்கியிருந்த ஒருவருக்கு கடுமையான எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளது. மீன்பிடி உபரணங்களான வலை, படகுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அத்துடன் 40 இலட்சம் ரூபா பெறுமதியில் இப்பகுதியில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சலப்பையாறுப் பகுதியில் உள்ள கடற்கரையில் நீர்கொழும்பிலிருந்து மீன்பிடி தொழில…
-
- 0 replies
- 911 views
-
-
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்ற பின்னர் வாக்குப்பெட்டியை சீல் இடும் பணியைப் பார்க்கச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மகேந்திரலிங்கத்தைத் தாக்கி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 4.30மணியளவில் பெட்டி சீலிடப்படுவதை பார்த்துக்கொண்டிருந்த போது அங்குவந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பிரசாந்தன், அவரது சகோதரன் கரன், உதவியாளர் நித்தி மற்றும் ஒப்பந்தகாரர் சந்திரகுமார் உட்பட சிலர் இந்த அடாவடிச் செயலில் ஈடுபட்டதாக வேட்பாளர் மகேந்திரலிங்கம் தனது முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார். இவர் வாக்குப்பெட்டியை சீல் வைப்பதை பார்…
-
- 0 replies
- 536 views
-
-
1987 ஆம் ஆண்டு இலங்கையில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவுத்தூபியை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலையீட்டில் பெலவத்தையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத் தூபியை சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்திய பிரதமரை அழைத்து திறந்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. திறப்பதற்கு முன்னர் இந்திய பிரதமருக்கான மரியாதை அணிவகுப்பை வழங்கும் பயிற்சிகளில் நேற்று படையினர் ஈடுபட்டிருந்தனர். எவ்வாறாயினும் இந்த நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகளை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய அதிகாரிகள் எம்.கே. நாராயணன், உள்ளிட்டோர் பார்வையிட்டிருந்தனர். இலங்கையில் இந்திய தலையீடுகள்…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக, 30 துப்பாக்கிகள் மீட்பு! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2…
-
-
- 8 replies
- 594 views
- 1 follower
-
-
இலங்கைக்கு காணாமல் போதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு(2008) மட்டும் 200 பேர் உத்தியோக பூர்வமாக காணாமல் போயுள்ளனர் ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வட்டவளையை வசிப்பிடமாகவும் கொண்ட 38 வயதுடைய சண்முகம் காளிதாஸ் என்பவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனவரின் மனைவி செல்வராஜா சுமதி முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். தந்தையான இவர் கடந்த கடந்த மாம் 28ஆம் திகதி காணாமல் போயுள்ளார். ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தங்களது குடும்பம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட்டவளையில் வசித்து வருவதாகவும் சம்பவ தினம் தயார் செய்யப்பட்ட நகைகளை கொழும்பிற்கு ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் கொழும்பிலிருந்து தொலைபேசி மூலமாக வவுனியாவிலிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக …
-
- 0 replies
- 86 views
-
-
[size=4]இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 300 விவாகரத்துகள் இடம்பெறுவதாக மேல்மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. திருமண பந்தத்தில் இணையும் இருவருக்கிடையில் ஏற்படும் புரிந்துணர்வற்ற தன்மையே விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ௭னவும் அந்த ஆய்வின் போது தெரியவந்துள்ளது.[/size] [size=4]திருமணமாகி ஒரு வருடத்துக்குள் பெரும்பாலான விவாகரத்துகள் இடம்பெறுவதாகவும் 18 வயதுக்கு குறைந்த தாய்மார் 3, 892 பேர் இலங்கையில் இருப்பதாகவும் மேல் மாகாண சமூக சேவையாளர் பணிப்பாளர் அனுஷா கோகில பெர்னாண்டோ தெரிவித்தார்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 273 views
-